Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 2

 மண்டபம் சொந்தங்களால் நிரம்பி இருந்தது. காந்திமதி சொந்தங்களை மதிப்பவள் அல்ல. ஆனால் இப்படிதான் தனது வசதியை காட்ட வேண்டி இருந்தது. அதனால் அனைவரையும் அழைத்திருந்தாள். அவள் நினைத்தது போலவே சொந்தங்கள் அவளை புகழ ஆரம்பித்தது. 

"இந்த பொண்ணை ஏன் மருமகளா கொண்டு வர? நம்ம கந்தவேலோட சின்ன பொண்ணு உன் பையனுக்கு பொருத்தமா இருப்பா. இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் கூட சரியா இருக்கும்." ஊரிலிருந்து வந்திருந்த காந்திமதியின் அண்ணி காமாட்சி கல்யாணத்தின் கடைசி நிமிடங்களில் வந்து காந்திமதியிடம் உரு போட்டுக் கொண்டிருந்தாள்.

காந்திமதிக்கும் மனது சஞ்சலப்பட்டது. கந்தவேல் ஊரில் பணமுள்ளவன். அவனது மகளும் வசதியில் வளர்ந்தவள். இந்த வீட்டை ஆள சரியான ஆள் என்று நினைத்தாள்.

"கெட்டி மேளம். கெட்டி மேளம்." என்று சத்தம் கேட்டது. காந்திமதி திரும்பிப் பார்த்தாள். தங்க தாலி செயினை சங்கவியின் கழுத்தில் அணிவித்தான் ஆதீரன்.

'என் வீட்டுக்குதானே வர போறா? இரண்டே வாரத்துல துண்டை காணோம் துணியை காணோம்ன்னு ஓட வைக்கிறேன் இவளை.' என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

உறவுகள் மண்டபத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் அருகே அமர்ந்திருந்தாள் சங்கவி. 

"என்னோட கையாளாகாதனத்தால உன்னை இதுல சிக்க வச்சிட்டேனே அம்மா." என்று கண் கலங்கினார் அப்பா மோகன்.

"அழாதிங்கப்பா. குடும்பம்ன்னா அதில் இருக்கும் எல்லோரும்தானே சமமா பாரத்தை சுமக்கணும்? எனக்கு எந்த பிரச்சனையும் இல்லப்பா." என்றாள். ஆனால் அவளின் உள்ளம் எவ்வளவு பயந்திருந்தது என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

"இங்கே என்னடி பண்றா?" ஆதீரனின் அதட்டல் குரலில் பயந்து நடுங்கியவள் அவசரமாக எழுந்து நின்றாள்.

"அ. அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தேன்." என்றாள்.

அவளது திணறல் அவனை என்னவோ செய்தது. ஆனால் "உங்க அக்காவுக்கு சொல்லி தந்தது போலவே உனக்கும் ஓடி போறது பத்தி சொல்லி தராங்களா?" எனக் கேட்டான். விஷமாக இருந்தது அவனின் வார்த்தைகள். கத்தியின் முனையாய் காயப்படுத்தியது அவனின் பார்வை.

"இ. இல்ல." என்றவள் அவனருகே ஓடி வந்து நின்றாள். தாலி கழுத்தில் ஏறும் வரை இல்லாத பயம் இப்போது வந்து சேர்ந்திருந்தது. இந்த தாலிக்கு உண்மையிலேயே சக்தி இருக்கிறதா என நினைத்து பயந்து மனதுக்குள் அழுதாள்.

"போகலாம் வா." அவளின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

சங்கவி தன் பெற்றோரை திரும்பி திரும்பி பார்த்தாள். இந்த குளமாய் இருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

காரின் முன் சீட்டில் அவளை தள்ளி, கதவை அடைத்தான். காரை எடுத்தான்.

"ஆரம்பிக்கும் முன்னாடியே அழாதே. உன் அழுகை எனக்கு டைம் பாஸ்ஸா இருக்கணும். நீ அழறதை பார்த்தா இப்பவே சலிச்சிடும் போல‌." என்றான் கிண்டலாக.

சங்கவி தனது கீழ் உதட்டை இறுக்கமாக கடித்துக் கொண்டாள். அழுகையை அடக்க முற்பட்டாள். அழுந்த கடித்ததில் பல் பட்டு உதடு காயமாகி ரத்தம் கசிந்தது. 

காரை ஓட்டியபடியே அவளின் வேதனையை ரசித்தான் ஆதீரன். 

'என் தங்கச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதீ. உனக்கும் அவளை பிடிக்கணும்." குந்தவியின் கொஞ்சல் நினைவில் வந்தது. வெறுப்பு அதிகரித்தது. 

"ஐயோ லாரி.." சங்கவி பதறி கத்தினாள்.

சுய நினைவுக்கு மீண்டவன் சட்டென்று காரை வளைத்தான். சுதாரித்து காரின் வேகத்தை குறைத்தவன் மீண்டும் சாலையை நோக்கி காரை திருப்பி ஓட்டினான்.

கொஞ்சம் தவறியிருந்தாலும் காரை லாரியில் விட்டிருப்பான். குந்தவியின் நினைவு வந்ததற்காக தன்னையே திட்டிக் கொண்டான்.

காரை தொட்டும் தொடாமல் போனது லாரி. 

அப்போதுதான் தன்னிடம் சரண் புகுந்திருந்த சங்கவியை கவனித்தான். பயத்தில் இரு கண்களையும் மூடியிருந்தவள் தன் வளையணிந்த இடது கரத்தால் அவனின் சட்டையை இறுக்கமாக பற்றியிருந்தாள். அவளின் வலது கரம் அவனை அணைத்திருந்தது.

அவளின் இதய துடிப்பை அவனால் உணர முடிந்தது. அவளின் கேசத்தில் இருந்து வீசிய வாசம் அவனது நாசியில் நுழைந்து அவனை ஏதோ செய்தது.

'நம்ம கல்யாணத்துக்கு பிறகு நீ என் தங்கச்சியையும் பொறுப்பாக பார்த்துக்கணும். அவளுக்கு நீதான் முதல் பிரதர்.' குந்தவியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்ததும் தன் மீதிருந்தவளை பிடித்து தள்ளினான். காரின் ஜன்னல் கண்ணாடியில் அவளின் தலை டொம்மென்று மோதியிருந்தது. அதே வேகத்தில் நெற்றியில் வீங்கி விட்டது. 

சங்கவி தடுமாறி நேராய் எழுந்து அமர்ந்தாள்.‌ நெற்றியை தேய்த்துக் கொண்டாள். வலித்தது. ஆனால் அழுவதற்கு பயமாக இருந்தது.

"உன்னோட கை நல்லாருக்கா?" கோபமாக கேட்டவனை திரும்பி பார்த்தவள் "ம்" என்றாள்.

"அப்படின்னா அந்த சீட் பெல்டை போடு." எச்சரித்தான்.

சங்கவி சீட் பெல்டை போட முயன்றாள். ஆனால் போட தெரியவில்லை. போன வாரம் வரையில் அக்காவிடம் சென்று தலை பின்னிக் கொண்டவள் இவள். 

சீட் பெல்டை போட தெரியாமல் போராடிக் கொண்டிருந்தாள். சாலையின் ஓரமாக காரை நிறுத்தியவன் அவளின் கைகளை அகற்றி விட்டு சீட் பெல்டை லாக் செய்தான். அவளின் மூச்சுக் காற்று அவனின் கழுத்தில் மோதியது. கொஞ்சமாக திரும்பிப் பார்த்தான். அவளின் இதழ்களில் இருந்து வந்தது ரத்த வாடை. சிவந்திருந்த அதரங்கள் அவனை இன்னும் அருகில் வர சொல்லி இழுத்தது.

'வேணாம்.' மனதின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவளின் கழுத்தை பற்றினான். அவளின் இதழ்களில் தன் இதழ் பதித்தான். 

சங்கவிக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. மூச்சும் கூட வரவில்லை. அவனின் வலது கரம் அவளின் கரத்தை வருடி இடைக்கு வந்து சேர்ந்தது. இடுப்பில் யார் தொட்டாலும் கூச்சத்தில் கத்தி விடுவாள். அது அவளது பலவீனம் என்று கூட சொல்லலாம். இப்போதும் அவன் இடுப்பில் கரம் பதித்த பிறகுதான் புத்தி தெளிந்தவளானாள். அவனை பிடித்து தள்ளினாள்.

கண்ணீர் மடமடவென்று கொட்டியது. "நீ. நீ." வார்த்தைகள் கூட வர மறுத்தது.

திணறியவள் அழுகையின் விம்மல்களை மென்று விழுங்கி விட்டு "நீ. நீங்க என் அக்காவை லவ் பண்ணிங்கதானே? எப்படி முடியுது உங்களால? அதுவும் இவ்வளவு சீக்கிரமா? அவ ஓடி பண்ணது தப்புதான். அவ காதல் தப்புதான். ஆனா நீங்க உண்மையாதானே காதலிச்சிங்க? அவளை பழி வாங்க என்னை கல்யாணம் பண்ணிட்டிங்க. உங்க வீட்டுல உள்ள வேலைக்காரங்களோடு நானும் ஒரு வேலைக்காரியா இருக்க போறேன். அப்புறம் ஏன் என்னை தொடுறிங்க?" கேட்டு முடித்தவளின் முகத்தில் விழுந்தது அறை.

"இவ்வளவு பேச உனக்கு உரிமை கிடையாது"

நரநரவென பற்களை அரைத்தான். அவனின் முகத்தில் இருந்த கோபத்தை கண்டு பயந்து தனது இருக்கையோடு ஒண்டினாள் சங்கவி. தான் பேசியிருக்க கூடாது என்று புரிந்துக் கொண்டாள்.

அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவளின் கையில் கிள்ளினான். அழுத்தமாக கிள்ளினான். வலியில் கத்தினாள் சங்கவி. 

"ஐயோ. என்னை விடுங்க. ப்ளீஸ்.." கதறினாள். 

அவளை மீண்டும் தள்ளினான். ஆனால் இம்முறை சீட் பெல்ட் இருந்ததால் அவளால் தூரமாக விழ முடியவில்லை. 

தேம்பியபடி கையை பார்த்தாள். அவனின் நகம் ஆழமாக பதிந்திருந்தது. கிள்ளிய இடத்திலிருந்து ரத்தமும் வந்தது. ஏற்கனவே வாங்கிய அடியில் முகமும் வலித்தது.

"லாஸ்ட் வார்னிங் தரேன். இனி நான் சொல்லாம நீ பேசினா உன்னை அதே இடத்துல கொன்னு புதைச்சிடுவேன்." விரல் நீட்டி எச்சரித்தான்.

சங்கவி சரியென்று தலையசைத்தாள்.

வீட்டின் முன் வந்து நின்றது கார். இறங்கியவன் அவளை கண்டுக் கொள்ளாமல் போய் விட்டான்.

சங்கவி சீட் பெல்டை கழட்ட தெரியாமல் அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டின் கதவை தாண்ட இருந்த நேரத்தில்தான் சங்கவியின் நினைவு வந்தது அவனுக்கு. திரும்பி பார்த்தான். அவள் காரின் ஜன்னல் கதவை தட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் சத்தம் அவனுக்கு மெல்லமாகதான் கேட்டது. 

காரின் அருகே வந்து கதவை திறந்தான்.

"என்ன?" அதட்டினான்.

பயத்தில் எச்சில் விழுங்கினாள். முகத்தில் வீக்கம் இருந்த இடங்களை தவிர வேறு எங்கும் ரத்த ஓட்டமே இல்லை. கண்களில் நிரம்பி நின்றிருந்த கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் வீழ்வேன் என்று அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

"சீ.ட் பெல்ட்." சொல்லி முடிக்கும் முன் அழுகை வந்து விட்டது. அவளை பற்றி முழுதாய் தெரிந்தவன் எவனும் அவளை அதட்ட கூட மாட்டான். ஆனால் இவனோ எமனாயிற்றே? 

சீட் பெல்டை விடுவித்தான். அதே இடத்தில் நின்றான். அவளின் தவிப்பை பார்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது.

இவன் நகராமல் அவளாலும் கீழே இறங்க முடியவில்லை. இவனின் முகம் பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

அவளின் கன்மம் தொட்டான். அவன் அறைந்த இடம் எரிந்தது. முகம் சுளித்தாள். கையை காயத்தின் மீது வைத்து தேய்த்தான். வலியில் துடித்தவள் அழுகையை உதடு தாண்ட விடாமல் விழுங்கினாள்.

"குட். இப்படிதான் இருக்கணும்." என்றவன் விலகி நின்றான்.

தாரை தாரையாய் வழியும் கண்ணீரோடு இறங்கி நின்றாள். அவனின் பின்னால் நடந்தாள். 

இரண்டடுக்கு வீடு. கேட்டில் காவல் காத்துக் கொண்டிருந்தான் காவல்காரன். வீடு அமைதியாக இருந்தது. 

தோட்டங்களில் இருந்த அழகு தாவர மரங்களுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மனிதன் சங்கவியை ஒருதரம் திரும்பிப் பார்த்தான். 

ஆதீரனின் நிழல் போல நடந்தாள் சங்கவி. வீட்டிற்கு செல்ல இருந்த ஐந்து படிகளையும் ஏறி முடிப்பதற்குள் மூன்று முறை தடுமாறி விட்டாள்.

ஹால் சோஃபாவில் கால் மீது கால் போட்டபடி அமர்ந்திருந்த காந்திமதி மகனை பார்த்தாள். பின்னர் மருமகள் புறம் திரும்பினாள்.

வீட்டுக்குள் வந்த பிறகு சங்கவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

காந்திமதி எழுந்து வந்தாள்.

ஆதீரன் தன் கழுத்தின் மாலையை அவிழ்த்து தூர எறிந்து விட்டு சோஃபாவில் விழுந்தான்.

"இந்த நகையெல்லாம் கழட்டுடி." காந்திமதியின் உத்தரவில் அவசரமாக நகைகளை கழட்டினாள் சங்கவி. கைகள் இரண்டும் கடகடவென நடுங்கிக் கொண்டிருந்தது.

அவள் கழட்டிய வேகத்தில் வளையல் ஒன்று தரையில் விழுந்து உருண்டோடியது. 

அதே நேரத்தில் அவளின் கன்னத்தில் விசையோடு இறங்கியது காந்திமதியின் கை.

"பிச்சைக்கார நாயே. போய் அதை எடுத்து வாடி." மருமகளை பிடித்து வளையலை நோக்கி தள்ளினாள்.

கீழே விழுந்து எழுந்த சங்கவி வளையலை எடுத்து வந்து மாமியாரிடம் தந்தாள். 

"சா. சாரி அத்தை." மீண்டும் விழுந்தது அடி.

"மேடம்ன்னு கூப்பிடுடி." என்றாள் அவள்.

சங்கவி சரியென்று தலையசைத்தாள். ஓரக்கண்ணால் கணவனை பார்த்தாள். இங்கே நடப்பதற்கும் தனக்கும் நடுவே எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல படுத்திருந்தான் அவன்.

கடைசி சொட்டு மூக்குத்தி வரை அனைத்து நகைகளையும் வாங்கிக் கொண்டாள்‌ காந்திமதி.

"ஏய். பவளம்." இவளின் அழைப்பிற்கு ஓடி வந்தாள் வேலைக்காரி. நாற்பதை தொடும் வயது அவளுக்கு.

"உன் சேலை ஒன்னை கொண்டு வா." 

பவளம் கொண்டு வந்து தந்த சேலையை‌ சங்கவியின் முகத்தில் விட்டெறிந்தாள் காந்திமதி.

"இதை கட்டிட்டு வா." என்றாள்.

சேலையோடு தடுமாறினாள். எந்த அறையில் புகுவதென்று தெரியவில்லை.

"பவளம் இவளை உன் ரூமுக்கு கூட்டிப் போ."

பத்து நிமிடத்தில் சேலையை மடித்து எடுத்துக் கொண்டு வந்தாள் சங்கவி.

பட்டுப் புடவையை பிடுங்கிக் கொண்ட காந்திமதி "பிச்சைக்காரிக்கு பட்டு எதுக்கு? இனி இப்படிதான் இருக்க போற. இந்த வீட்டை கூட்டுறதும் துடைக்கிறதுதான் உன் வேலை. புரிஞ்சதாடி?" என்று அவளின் தலைமுடியை பற்றியபடி கேட்டாள்.

"சரிங்க. அ. மேடம்." என்றாள் கண்களில் நீர் வழிய.

தொடரும்.. நாளையிலிருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் அப்டேட் ஆகும் நட்புக்களே..

Post a Comment

0 Comments