Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 4

 தன் அருகில் வந்து நின்ற காரை வெறித்தாள் குந்தவி.

"ரேட்?" எனக் கேட்டான் காரின் கண்ணாடியை கீழே இறக்கிய அவன்.

மௌனமாய் நின்றாள் இவள்.

"ஃபைவ் தவுசன்.?" சந்தேகமாக கேட்டான்.

அவன் கேட்பது குந்தவியின் மூளையில் பதியவே இல்லை.

"பிப்டி தவுசன்.!" என்றவனின் பார்வை அவளின் மேனியில் ஊர்ந்தது.

"நாட் தட் மச்.. மை வால்யூ இஸ் ஜீரோ. கிவ் மீ பைவ் ஹன்ட்ரட்.!" என்றவள் காரை நெருங்கினாள்.

அதிசயப்பட்டான் அவன். உள்ளே அமர்ந்தபடியே அவளுக்காக கதவை திறந்து விட்டான். இயந்திரம் போல ஏறி அமர்ந்தாள்.

குளித்து முழுதாய் ஒரு வாரம் ஆகி விட்டிருந்தது. மேனியிலிருந்து வாசம் வந்துக் கொண்டிருந்தது. அவனை விட்டு ஓரம் தள்ளி அமர்ந்தாள்.

"நேட்டிவ் ப்ளேஸ்?" 

"தமிழ்நாடு.!" என்றவள் காரின் வெளியே வெறித்தாள்.

"ஐ நோ டமிழ்.!" என்றவனின் புறம் திரும்பவில்லை. செய்தித்தாள் இன்னமும் கைகளில் அதே போலதான் கசங்கி கிடந்தது.

"பீலிங் அப்செட்?" 

"நோ.." என்றவள் சற்று நேரம் தடுமாறி விட்டு "யா.. யெஸ்.. ஐ மேட் எ பேட் சாய்ஸ்.." என்றாள் கரகரத்த குரலில்.

"யூ கேன் ஸ்பீக் இன் டமிழ்.. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட்.!" என்றவன் நகரத்தை விட்டு வெளியே செல்லும் பாதையில் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"என் காதல் காலி. என் குடும்பம் காலி. என் வாழ்க்கையும் காலி.!" என்றவள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

"டூ யூ வான்ட் டிஸ்யூ பேப்பர்?" என்றவன் எங்கிருந்தோ அதை எடுத்து தந்தான்.

விழிகள் கலங்கி விட்டதை அதன் பிறகுதான் உணர்ந்தாள் குந்தவி. விழிகளை துடைத்துக் கொண்டாள்.

சாலையோரம் இருந்த ஹோட்டல் ஒன்றினுள் நுழைந்தது கார். பிரமாண்டமான ஹோட்டல் அது. அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரத்தை கொண்டிருந்தது. அவன் காரை நிறுத்தியதும் அருகில் வந்தான் பணியாள் ஒருவன். அவனிடம் காரின் சாவியை பெற்றுக் கொண்டான்.

கசங்கிய தாளை இறுக்கமாக பற்றியிருந்த குந்தவி அங்கிருந்த பிரமாண்டத்தில் மனது லயிக்காமல் இறங்கி நின்றாள். அவளின் அருகே வந்தான் அவன்.

அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான். அவளை ஓரமாக நிற்க வைத்து விட்டு சென்றவன் நிமிடத்திற்குள் சாவியோடு வந்தான்.

"லெட்ஸ் கோ.!" என்றவன் அவளுக்கு முன்னால் நடந்தான்.

ஐந்தாம் மாடியில் லிஃப்ட் நின்றபிறகு ஏதோ ஒரு திசையில் நடந்தான். அறை ஒன்றின் கதவை திறந்தான்.

"பாத்ரூம்.." என்று கையை காட்டினான். 

தலையசைத்தவள் குளியலறைக்கு நடந்தாள். 

'ஏன் சாகல நான்? நொடிக்கு நொடி இந்த யோசனைதான் வர போகுது.. நீ நிச்சயம் செத்துடுவ குந்தவி. அந்த சாவை சில நொடிகள் தள்ளிப் போட்டு என்ன செய்ய போற?' என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

காதலன் வேண்டுமா தங்கை வேண்டுமா என்றுக் கேட்டால் யோசிக்காமல் தங்கை என்று சொல்லுவாள். அவளைதான் இப்போது காவு தந்திருக்கிறாள். 

"இன்னும் ஒரு மாசம்.. ஒரு வாரம்.. யாருக்கு தெரியும், சங்கவி இப்பவே கூட செத்திருக்கலாம். அவளை முழுசா புதைச்சிட்டேன்.. வாழ்க்கையில நான் பண்ண ஒரே ஒரு தப்பு ஆதீரனை காதலிச்சதுதான்!" என்று நெற்றியில் ஒரு முறை அடித்துக் கொண்டாள். 

நேரம் நகர்ந்தது. ஈர தலையை துவட்டிக் கொண்டாள். உடம்பிலிருந்த ஈரத்தையும் துண்டால் ஒற்றி எடுத்தவள் தூவாலை ஒன்றை உடம்பில் சுற்றியபடி வெளியே வந்தாள். 

படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் இவளை கண்டதும் சட்டென்று நேராக எழுந்து அமர்ந்தான். கண்களில் அவ்வளவு ஆச்சரியம் இருந்தது அவனுக்கு.

"பியூட்டிபுல்.!" என்றான் மயங்கிய குரலில்.

அவனின் கால் அருகே சுடிதார் செட் ஒன்று கிடந்தது. எப்போது வாங்கி வந்தான் என்று தெரியவில்லை. 

கட்டிலில் அமர்ந்திருந்தவன் யோசனை வந்தது போல அவசரமாக புறங்கையால் தனது கீழ் உதட்டை துடைத்துக் கொண்டான். நல்ல வேளையாக ஈரம் இல்லை. இப்படியொரு அழகை அவன் பார்த்ததே இல்லை என்று சொல்லலாம். வெண்சங்கு கழுத்தில் உருண்டுக் கொண்டிருந்த அந்த ஓரிரு நீர் துளிகள் மீது பொறாமை வந்தது. இளமையை மறைத்த தூவாலையின் மீது கோபம் வந்தது. அவளின் கைகளையும், கால்களையும் பொறுமையாக ரசித்தான். சுண்ணாம்பு சிலையை இப்படி வடிக்க முடியுமா? இல்லை தங்க சிலையை இப்படி செதுக்க முடியுமா? என்று குழம்பினான். 

கனவில் வரும் தேவதை போலிருந்தாள். அவன் தன் வாலிபத்தில் ரசித்த நாட்டியக்காரியை விடவும் பேரழகு. அவனின் விடலை பருவத்தை திரும்ப கொண்டு வந்து விட்டாள் அவள். பள்ளியில் வந்த காதல் ஆசை, கல்லூரியில் வந்த ஆசை காதல், பல பெண்களை கடக்கும்போது வரும் சபலம் என்று அனைத்தும் ஒன்றிணைந்து வந்து விட்டது.

மனதுக்குள் இதை விடவும் காதல் உருவாகுமா? மூளைக்குள் இதை விடவும் அதிக ஆசை உண்டாகுமா என்று குழம்பி தவித்து விட்டான்.

கதவை பார்த்தாள். சாத்தியிருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தவள் கட்டிலின் அருகில் விளக்கிற்கான ஸ்விட்ச் போர்டை கண்டாள். அருகில் சென்றவள் விளக்கை அணைக்க முயல, "டோன்ட்.. ப்ளீஸ்.." என்று கெஞ்சலாக ஒலித்தது அவனது குரல்.

நாக்கின் ஓரத்தை வெகு நேரமாக கடித்துக் கொண்டிருந்தாள். இப்போது இவனது கெஞ்சலை கண்டதும் அவளையும் மீறி பற்கள் அழுந்தியது. அழுந்திய இடத்தில் இருந்து வந்த ரத்தம் அவளின் நாக்கிற்கு புது ருசியை தந்தது.

கையை பின்னுக்கு இழுத்தவள் ஓரடி தள்ளி நின்றாள். இந்த பக்கம் அமர்ந்திருந்தவன் அந்த பக்கம் திரும்பினான். அந்த பக்கமாக வந்து மண்டியிட்டபடி அவளின் தலை முதல் கால் வரை பார்த்தான். அருகில் வர சொல்லி கண் சைகை காட்டினான். முடுக்கி விட்ட இயந்திர பொம்மையை போல ஓரடி முன்னால் நகர்ந்து நின்றாள். அவளின் கழுத்துக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட இடத்தில் நேர் கோடாய் நின்றது அவனின் கண்கள். மிடறு விழுங்கியவன் "ஆர் யூ ஆன் ஏஞ்சல்?" எனக் கேட்டான்.

புன்னகையையும், சிந்தனையையும் தொலைத்த முகத்தோடு இருந்தவள் இல்லையென்று தலையசைத்தாள். 

அவளை முதல் முறை காண்கையில் சிறு துளியாய் உருவாகி இருந்த பரவசம் இப்போது உடல் முழுக்க, அவனின் மனம் முழுக்க வியாபித்து இருந்தது. கண்டறிய முடியாத ஒரு உணர்ச்சியின் பிரவாகத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான். 

அவளின் கையை பற்றினான். அவளை‌ தன்னருகே இழுத்தான். அவளின் தோளின் மீது உதடு பதித்தான். இரும்பில் வடித்த பொம்மையாக நின்றிருந்தவளுக்கு ஒரு உணர்வும் உண்டாகவில்லை. அது அவனுக்கு தேவைப்படவும் இல்லை. ஆராதிக்க தொடங்கியவனுக்கு சிலையின் உணர்வுகளை பற்றி என்ன கவலை?

"மை காட்.!" என்று முனகியவன், அவளின் கழுத்தில் முகம் பதித்தான். மூச்சை இழுத்து விட்டான். அவனின் ஈர உதடுகள் அவளது கழுத்தில் முத்தங்களை பதிக்க ஆரம்பித்து இருந்தது.

வசதிக்கேற்றார் போல தேடியோடிக் கொண்டிருந்த அவனின் கரங்களை விலக்கவில்லை அவள். தூவாலை தானாய் கழன்று காலடியில் விழுந்தது.

விவரம் வந்த பிறகு குளியலறை தவிர வேறு எங்கும் ஆடையின்றி நின்றதில்லை. மூன்று வருடங்கள் உருகி உருகி காதலித்தவனின் கரங்களை கூட அனாவசியமாய் தன் மேனியில் உலாவ விட்டதில்லை.

யார் எவன் என்றே தெரியாதவனின் முன்னால் விபசாரியாய் நிற்பது கூட அவளின் அறிவில் தவறென்று உறைக்கவில்லை. 

அவளை இழுத்து கட்டிலில் கிடத்தினான். அவளின் நெற்றியில் முத்தத்தை கொடுக்க ஆரம்பித்தான். பல ஜென்மமாய் ஆசைப்பட்ட பொருளை தேடி தேடி அலைந்து கண்டறிந்தது போல சுகிக்க‌ ஆரம்பித்தான். அவளை மொத்தமாய் தனக்குள் கரைய செய்ய நினைத்தான். அவளை முழுதாய் களவாட ஆசைப்பட்டான்.

எத்தனை முத்தங்கள்.. எண்ணவே முடியவில்லை அந்த அறைக்கு ஒளி தந்துக் கொண்டிருந்த விளக்கால். 

அவனின் முனகல் நிற்கவே இல்லை. அவனின் உதடுகள் அவளின் மேனியை விட்டு நீங்கவேயில்லை.

"மை டிரஸர் ஐலேண்ட்.." என்றபடியே அவளின் கன்னம் முதல் கழுத்து வரை அழுத்தமாக முத்தங்களை பதித்து, அவளின் மேனியில் செந்நிற முத்த முத்திரைகளை வரைய ஆரம்பித்தான்.

வலிக்கிறதா, ருசிக்கின்றதா என்று எதுவும் புரியவில்லை குந்தவிக்கு. 

அரை மணி நேரம் கடந்திருக்கும். தனது எண்ணங்களின் பிடியிலிருந்து இரண்டு நொடிகள் வெளியே வந்தாள். அவளின் பாதத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தவன் பார்வையில் தெரிந்தான். அவனின் முத்தங்கள் அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்பே அவளின் உடைந்த நெஞ்சம் அவளை தனக்குள் இழுத்துக் கொண்டது. 

காண கிடைக்காதா பூவோ? காட்டில் விளைந்த நிலவோ? கத்தரி பூவின் தேனோ? கரைகளே இல்லாத கன்னி கடலோ? என்ன நினைத்து அவளை ஆட்கொண்டு இருந்தானோ.. தெரியவில்லை. அவனின் ஆசைகள் அவனுக்கே விளங்கவில்லை. நொடி நேரம் ஓய்வெடுப்போம் என்றும் தோன்றவில்லை. 

'சாரி சங்கவி.. அக்கா தப்பு பண்ணிட்டேன்..' என்றுத் தங்கையிடம் மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தவளின் இதழில் வந்து பதிந்தது அவனின் உதடுகள். அவனுடையது அவசரமா வேகமா என்று அவனுக்கே சந்தேகம்தான்.

முத்தம் பற்றிய நினைவு இல்லை அவளுக்கு. அவனால் அவளின் தனி உலகை விட்டு வெளியே கொண்டு வரவே முடியவில்லை. அதை அறிந்திருந்தும் தன் ஆசையை நிறைவேற்றும் வேகத்தில்தான் இருந்தான் அவன்.

அவன் இதழ்களின் சுவை தெரியவில்லைதான். ஆனால் தனக்குள் வலியை உணர்ந்தாள். முகம் சுளித்தாள். கண்களை இறுக்க மூடினாள். "ம்மா.!" என்று வலி மிகுந்த குரல் அவள் அறியாமலேயே வெளி வந்தது.

அவனின் மொத்த ஆசையும் அப்படியே நின்றுப் போனது. அவளை விலக்கவும் முடியவில்லை. மேற்கொண்டு தொடரவும் முடியவில்லை.

"வெர்ஜின்?" என்றுக் கேட்டவனிடம் சந்தேகத்தை விடவும் சொல்ல முடியாத ஒரு வித குற்ற உணர்வே மேலோங்கி இருந்தது.‌ அவள் இத்தொழிலை செய்யவில்லை, தான்தான் தவறாய் அழைத்து வந்துள்ளோம் என்ற உணர்வு அவனின் இதயத்திற்கும் சேர்த்து வருத்தத்தை தந்தது.

"ம்ம்.!" என்றவளின் மூடிய விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை கண்டான். அரை நிமிடம் அப்படியேதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் அடித்த சோக அலை அவனை தனக்குள் இழுக்க முயன்றது. முகத்தை மெள்ள கீழிறக்கினான். அவளின் கன்னத்தோடு தன் கன்னம் பதித்தான். அவளின் காது மடல் மீது முத்தமிட்டவன் "ஐ யம் சாரி.!" என்றான் கெஞ்சலாக. 

அவனின் விழிகளில் உருவாகி இருந்த கண்ணீரை அவள் காணவில்லை. அவளின் கண்ணீரோடு அது கலந்ததையும் அறியவில்லை. 

"இ. இட்ஸ் ஓகே.. ப்ளீஸ்.. கன்டினியூ.." என்றவளின் கூந்தலில் நுழைந்தது அவனின் ஒரு கரம். 

அவளின் இமைகள் இரண்டின் மீதும் முத்தமிட்டவன் "யூ ஆர் கார்ஜியஸ்.!" என்றான்.

***

சங்கவி கன்னத்தை பிடித்தபடி தரை பார்த்தாள். 

"சீக்கிரம் இதை சுத்தம் செய்டி.!" என்று அவளை தள்ளினாள் காந்திமதி.

சங்கவி சுற்றும் முற்றும் பார்த்தாள். துடைப்பம் இருக்கும் இடம் நினைவுக்கு வந்ததும் அங்கிருந்து நகர முயன்றாள்.

"நில்லுடி. தப்பு நீதானே செஞ்ச.. கிளாஸை கையில எடுடி. அப்பதான் உனக்கு புத்தி வரும்.!" என்றாள் மாமியார்.

'சைக்கோ.. சுத்தமான சைக்கோ.. பாவம் அக்கா. நல்லவேளை அவ ஓடி போனா..' என்று நினைத்தவள் தயங்கியபடி தரையில் மண்டியிட்டாள். சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை வலது கரத்தால் சேகரித்து இடது கரத்தில் வைத்தாள். பார்த்து பத்திரமாகதான் எடுத்தாள். ஆனாலும் கூட அவளின் கைகளை நான்கைந்து முறை அறுத்து விட்டது கண்ணாடி துண்டுகள். அவ்விடத்தில் அவளின் ரத்த பொட்டுகள் விழுந்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாதது போல தொலைக்காட்சிக்கு பார்வையை திருப்பினான் ஆதீரன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments