Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 8

 கைபேசி அதிர்ந்தது. கண்களை திறந்தான் அவன். கைபேசியின் திரையைப் பார்த்தான். மணி அதிகாலை ஐந்தாகி இருந்தது.

கண்களை தேய்த்துக் கொண்டவன் தன் மேல் கை ஒன்று பதிவது உணர்ந்து திரும்பினான். குந்தவி தன்னை மறந்த உறக்கத்தில் இருந்தாள். அவளின் உறங்கும் முகத்தை ஐந்து நொடிகள் உற்றுப் பார்த்தவன் தன்னை மறந்தான்.

அவளின் கன்னம் மறைத்து கழுத்தில் பாய்ந்துக் கொண்டிருந்த கேசமெனும் நதியை நகர்த்தி விட்டான். அவனின் தீண்டலை உணர்ந்ததாலோ என்னவோ அவளின் இதழில் புன்னகை மலர்ந்தது. உயிர் நிறைவது போலிருந்தது அவனுக்கு.

இருவரும் இரவு தூங்கியபோது மணி பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது. அவள் வாயே பேசவில்லை. இவனும் பேசவில்லை. ஓரிரவில் ஓராயிரம் முத்தங்களை தந்திருப்பான். அவளின் மனதை மட்டும்தான் அவனால் படிக்க முடியாமல் போனது. ஆனால் அவளின் மேனியுடைய ஒவ்வொரு அங்குலத்தையும் மனப்பாடம் செய்து விட்டான்.  அவளது கூந்தலில் இருந்த முடிகளின் எண்ணிக்கையை மட்டும்தான் எண்ணவில்லை அவன். ஆனாலும் அந்த கூந்தலின் நிறத்தையும், மென்மையையும் கூட தனது நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டான்.

முன் இரவின் நினைவில் இருந்தவன் கைபேசியின் மறு அதிர்வில் திரும்பினான்.

அப்பா அழைத்திருந்தார். இவளை விட்டு விலகி நகர்ந்தான். 

கட்டிலை விட்டு கீழே இறங்கியவன்  ஜன்னலின் அருகே வந்து நின்றான். அழைப்பேற்று கைபேசியை காதில் வைத்தான்.

"ஹலோ டாடி.." என்றவனின் குரல் மென்மையாக ஒலித்தது.

"வேர் ஆர் யூ? வென் ஆர் யூ கம்மிங் ஹோம்?" எதிர்முனையில் காரமாக ஒலித்தது தந்தையின் குரல்.

"ஆன் தி வே!" என்றவன் ஃப்ளைட் டிக்கெட்டை எங்கே வைத்தோம் என்று யோசித்துப் பார்த்துக் கொண்டான்.

"டோன்ட் டெஸ்ட் மை பேசண்ட்.. யூ ஆர் மேக்கிங்.." என்று கத்த ஆரம்பித்தவரை மேற்கொண்டு பேச விடாமல் "டேடி.. ஐ ஸ்வேர்.. ஐயம் கம்மிங்.." என்றான். இணைப்பையும் துண்டித்துக் கொண்டான்.

அவசரமாக குளித்து உடை மாற்றியவன் தனது பொருட்களை சேகரித்தான். கண்டுக் கொண்ட தேவதை கண்ட நொடியே விலகி செல்வது அவனுக்கு வருத்தத்தை தந்தது. மனமேயில்லாமல் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

ஆதிரனின் வீட்டின் முன் வந்து நின்றது ஆட்டோ. இறங்கிய சங்கவி எதிரே இருந்த வீட்டை தயக்கமாக பார்த்தாள். 

கேட்டில் உறங்காமல் இருந்த காவலாளி ஆதீரனுக்கு அழைத்து விசயத்தை சொன்னார். சங்கவி ஏதும் கேட்காமலேயே அவளுக்காக கேட்டை திறந்து விட்டார் அவர்.

தயங்கியபடியே உள்ளே நடந்தாள் அவள்.

வீட்டின் கதவை தட்ட நினைத்து கையை ஓங்கினாள். அதே நேரத்தில் கதவு திறந்தது.

"வா.." என்ற ஆதீரன் அமைதியாக உள்ளே நடந்தான். அவனை தொடர்ந்து வந்தவள் "உனக்கு இங்கே என்னடி வேலை?" என்ற காந்திமதியின் அதட்டலில் நின்றாள்.

"அம்மா.." மகனின் பேச்சை காதில் வாங்காத காந்திமதி "உன்னை ஜெயிலுக்கு அனுப்பியவ இவ.." என்றாள்.

சங்கவியின் கழுத்தில் இருந்த கட்டும், கண்களில் இருந்த கண்ணீரும் ஆதீரனை இளக செய்தது.

"இவக்கிட்ட இருந்த தாலியை வாங்கிக்கிட்டேன்ம்மா!" என்று தன் பாக்கெட்டில் இருந்ததை எடுத்துக் காட்டியவன் "அவ உடனே போயிடுவா!" என்றான்.

மகனின் கையிலிருந்த சங்கிலி அவளுக்கு சிறு மகிழ்ச்சியை தந்தது. கடைசியாக வந்துள்ளவள் சீக்கிரம் போய் தொலையட்டும் என்று நினைத்து அமைதியாகிக் கொண்டாள்.

"வா.!" என்ற ஆதீரன் தனது அறைக்கு நடந்தான். 

அறையின் இருக்கை ஒன்றில் அமர்ந்தவன் தன் முன் இருந்த இருக்கையை நோக்கி கை காட்டினான்.

அமராமல் தலையசைத்தவள் கையை கூப்பியபடி அவனின் முன் மண்டியிட்டாள். அவனின் காலை பற்றியவள் "ஹெல்ப் பண்ணுங்க.!" என்றாள்.

புரியாமல் விழித்தவனிடம் "எங்க அப்பா கிரிட்டிக்கல் கன்டிஷன்ல இருக்காங்க.. ஐம்பது அறுபது லட்சம் தேவைப்படுது.!" என்றாள் அழுகையோடு.

எதிரில் இருந்தவனுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. தன் காலை பிடித்திருந்தவளை ஆத்திரத்தோடு பார்த்தான். வேகமாக காலை உதறினான். அவன் உதறியதில் ஓரடி பின் தள்ளி விழுந்தாள்.

"பணத்துக்காக வந்திருக்கியா? என்கிட்ட எந்த பணம் இல்லாம இருக்கு? அப்புறம் ஏன் உன் அக்கா என்னை விட்டுப் போனா?" என்றுப் பாய்ந்து வந்து அவளின் தலை முடியை பற்றியபடி கேட்டான்.

அழுதாள் சங்கவி. 

"எங்க அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்காரு.." அழுகையோடு சொன்னவளை வெறுப்போடு பார்த்தவன் "பணத்துக்காகதான் நீ இங்கே வந்திருக்க.? ஐ மீன் பிச்சை எடுக்க வந்திருக்க.. ரைட்? இல்லன்னா போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி இருப்ப.. இப்ப மட்டும் ஏன் இங்கே வந்த? மறுபடியும் போய் அங்கேயே கம்ப்ளைண்ட் செய்ய வேண்டியதுதானே? உங்க அப்பாவோட ஆபரேசனுக்கு தேவையான பணத்தை அவங்களே கூட ஏற்பாடு பண்ணி தருவாங்களே!" என்றான் நக்கலாக.

சங்கவி கண்களை துடைத்தாள். ஆனாலும் கண்ணீர் நின்றபாடில்லை. 

இங்கே வரும் முன் ஸ்டேசனுக்குதான் சென்றிருந்தாள். ஆனால் இவள் போன நேரம் அங்கே சக்தி இல்லை. இவள் செல்லும் முன் அவள் டெல்லி புறப்பட்டு விட்டிருந்தாள். வனஜாவிடம் கேட்கலாம் என்றால் அவளும் வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள். அவளது வீட்டு அட்ரஸையும் தேடி போனாள் சங்கவி. ஆனால் இவளின் நேரமோ என்னவோ இவள் சென்ற நேரத்தில் வனஜாவின் கிராமத்து பாட்டி இறந்து விட்டிருக்க, இவள் ஆட்டோவில் சென்று இறங்கும் ஒரு நிமிடம் முன்பு அவள் கிராமத்திற்கு கிளம்பி விட்டாள்.

கையும் காலும் ஓடாத நிலையில் அவளின் பண தேவைக்கு ஆதாரமாக தோன்றியது இவன் ஒருவன்தான். நிமிடம் கூட யோசிக்காமல் இங்கே வந்து விட்டாள்.

அம்மா இறந்த துக்கத்தை கூட அனுசரிக்க முடியாமல் இங்கே வந்து இவன் காலில் விழுந்துக் கொண்டிருந்தாள்.

"தப்புதான்.. ஆனா நான் கம்ப்ளைண்ட் தரல.. அப்பாதான் தந்துட்டாரு.." அழுதவளின் கன்னம் பற்றியவன் "கழுத்தை நெரிச்சான்னு நீதானடி சொன்ன?" எனக் கேட்டான். அவனின் பிடிமானத்தில் தாடை தனியாய் பெயர்ந்து வந்து விடும் போல இருந்தது.

"பயமா இருந்தது.." வலியோடு தடுமாறி சொன்னாள்.

"பயமா இருக்குன்னா இங்கே ஏன் இருக்க? கிளம்பி போ.." என்றவன் அவளை பின்னால் தள்ளினான். 

தரையில் விழுந்தவள் அங்கேயே சுருண்டாள். முகத்தை மூடிக் கொண்டு விம்மியழுதாள்.

ஆதீரன் கோபத்தோடு அங்கும் இங்குமாக நடந்தான்.

"எழுந்து ஓடிடு.. என் தாலியை வாங்கிக்கிட்டேன் நான். இனி உனக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல.." என்றான்.

எழுந்து அமர்ந்தவள் "எங்க அப்பாவை காப்பாத்தி கொடுங்க.. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கறேன்.." என்றாள்.

சிரித்தான் அவன்.

"ஆனா நான் ஏன் காப்பாத்தி தரணும்?" என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "ஏனா உங்களாலதான் எங்க வீடு அடமானத்துக்கு போச்சி. இல்லன்னா நான் அதை வச்சி எங்க அப்பாவை இன்னைக்கு காப்பாத்தி இருப்பேன். எங்களோட மொத்த சேவிங்ஸையும் உங்களாலதான் தொலைச்சோம். என் அம்மாவோட மொத்த நகைகளையும் உங்களாலதான் வித்தோம்.. ஒரே வாரத்துல எங்களை நிர்மூலமாக்கியது நீங்கதானே? இப்ப கூட பதிலா கேட்டு வரல. நீங்க சொன்ன மாதிரி பிச்சையா கேட்டுதான் வந்திருக்கேன். எங்க அப்பாவை காப்பாத்துங்க ப்ளீஸ்!" என்றாள் கையை கூப்பியபடி.

அவளுக்கு தெரியும் அவனிடம் அடாவடியாக கேட்டாலோ, அல்லது நீதி நியாயப்படி கேட்டாலோ ஒற்றை ரூபாய் கூட வராது என்று. அவளுக்கு தன் தன்மானத்தை விடவும், தனது சுய சிந்தனையை விடவும் அப்பாதான் முக்கியமாக இருந்தார். ஏற்கனவே அக்காவை தொலைத்தாயிற்று. அம்மாவை காலனுக்கு தந்தாயிற்று. தந்தையையும் இழக்க விரும்பவில்லை. தன் உயிரை தந்து கூட தந்தையின் உயிரை காப்பாற்றி தர தயாராக இருந்தாள்.

அவளின் கெஞ்சல் அவனுக்கு பிடித்திருந்தது. குந்தவியால் காயம்பட்டிருந்த மனதுக்கு இப்போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

"இப்படிதான் சொல்வ.. ஆனா மறுபடியும் போலிஸ்க்கு போவ.."

நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"நேத்து நைட் நான் செஞ்சது தப்புதான்.. ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.. இனி போலிஸ்க்கு போக மாட்டேன்.." என்றவளின் அருகே குனிந்தவன் அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான்.

"உன்னை நம்பலாமா?" எனக் கேட்டான்.

"ம்.." என்றவளிடம் "ம் இல்ல.. நம்பலாம்ன்னு சொல்லு.." என்றான்.

"சத்தியமா நம்பலாம்.." என்று குலுங்கி அழுதவள் "டைம் ஆகிட்டு இருக்கு. தயவுசெஞ்சி ஹெல்ப் பண்ணுங்க.." என்றாள்.

தன் சட்டை பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து தரையில் போட்டான். "எடுத்து உன் கழுத்துல போட்டுக்க.. உன் அக்கா திரும்பி வரும்வரை உன்னை பிடிச்சி வைக்கதான் இது. மத்தபடி நீ எனக்கு பொண்டாட்டி கிடையாது.. புரிஞ்சதா? உன் அக்கா திரும்பி வந்தா தப்பு என் மேல இல்ல, உன் மேலதான்னு நீ சொல்லணும்.. நீதான் அவளோட தப்புக்கு பிராயச்சித்தமா இப்படி மேரேஜ் செஞ்சதாகவும், உன்னை நான் பொண்டாட்டியா கடைசி வரை ஏத்துக்கவே இல்லன்னும் சொல்லணும். சரியா?" எனக் கேட்டான்.

'ஊர்ல உனக்கு வேற ஆம்பளையா இல்லையா அக்கா? எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்ச, எதுக்கு இவனை காதலிச்ச?' என்று மனதுக்குள் கேட்டவள் "சரி.. நீங்க சொல்றபடி கேட்கிறேன்!" என்றாள்.

'எங்க அப்பா குணமாகட்டும்.. அப்புறம் இருக்குடா உனக்கு.. உன்னை கத்தியால குத்தி கொல்ல தைரியம் இல்லன்னாலும் உன் சாப்பாட்டுலயாவது விசம் வச்சி கொல்ல போறேன். நீ துடிதுடிச்சி சாவதை பார்த்து சந்தோசப்பட போறேன்.!' என்று நினைத்தாள்.

"தாலி.." அவன் கண்களை காட்டியதும் அவனின் காலடியில் கிடந்த தாலியை கைகளில் எடுத்தாள். நெஞ்சத்தை இரும்பாக்கிக் கொண்டு கழுத்தில் அணிந்தாள். 

எழுந்து நின்றான் அவன்.

"முன்ன அழுதது போலவே கொஞ்ச நேரத்துக்கு என் காலை பிடிச்சி அழு. என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும் வரை அழு.!" என்றான்.

வறண்ட தொண்டையில் வெறும் காற்றை விழுங்கினாள். தொண்டை குழியில் ஆயிரம் கத்திகளை இறக்கியது போல வலித்தது.

"ப்ளீஸ்.." என்றவள் அவனின் காலில் தலை சாய்த்தாள். "அப்பா.. எங்க அப்பாவை காப்பாத்துங்க.." என்றாள்.

எதிரே இருந்த சுவற்றை வெறித்தபடி முதுகின் பின்னால் கைகளை கட்டிக் கொண்டான். மேலே வரும் சூரியனை பார்த்துக் கொண்டிருந்தான்.

தொலைபேசியின் அழைப்புச் சத்தத்தில் எழுந்தாள் குந்தவி. இருக்கும் இடம் எதுவென்று புரிந்துக் கொள்ளவே சில நொடிகள் பிடித்தது. நடந்தது அனைத்தும் நினைவில் வந்தது. நெற்றியை பிடித்துக் கொண்டாள். அருகில் உறங்கியவனை தேடினாள். காணவில்லை.

லாரியில் பாய பயந்து, மரணத்தை நொடி நொடியாக தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் இவன் வந்திருந்தான். சொரணையற்று நின்றிருந்தவள் அவன் காட்டிய பணத்தை காட்டியதும் ஒரு பாட்டில் விஷம் வாங்க எவ்வளவு ரூபாய் ஆகும் என்று கணக்கிட்டுப் பார்த்தாள்‌. பிறகுதான் இவன் வண்டியில் ஏறியிருந்தாள்.

விடாமல் ஒலித்த போனின் ரிசீவரை எடுத்து காதில் வைத்தாள்.

ரூம் சர்வீஸ் என்று பேசினார்கள். சாப்பிட எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் இவள்.

சோகத்தோடு நிமிர்ந்தவள் "ஐநூறுதானே கேட்டேன்.? அதை கூட தராம போயிட்டானே.." என்று மனம் வருந்தினாள்.

'ஹோட்டல் மாடிக்கு போய் துப்பட்டாவால கண்ணை கட்டிக்கிட்டு அங்கிருந்து கீழே குதிச்சிடலாம்..' என்று முடிவெடுத்து எழுந்து நின்றாள். 

எதிரில் இருந்த ஆளுயர கண்ணாடியில் அவளை விடவும் அவனின் உதட்டின் தடம்தான் அதிகம் தெரிந்தது. இரவு எதுவும் உணர்வில் இல்லை. ஆனால் இப்போது அனைத்தும் அப்படியே புரிந்தது. அவளின் மொத்த ஆன்மாவும் கூட அனைத்தையும் உணர்ந்தது போலிருந்தது. தலையை சிலுப்பிக் கொண்டாள்.

"முடிஞ்ச வாழ்க்கையில் இது மட்டும்தான் கேடா?" என நினைத்தவள் குளிக்க நினைத்து மேஜையின் மீதிருந்த சுடிதாரை எடுத்தாள். இவள் இழுத்த விசையில் சுடிதாரின் கீழேயிருந்த சில பண கட்டுக்கள் தரையில் விழுந்தன. பணத்தோடு வைக்கப்பட்டிருந்த கடிதமும் கீழே விழுந்து அவளின் காலடியில் சரண் புகுந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

அடுத்த நான்கைந்து நாட்களுக்கு எபி வராது நட்புக்களே

Post a Comment

0 Comments