Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 17

 அது முத்தமே இல்லை வதை என்று சங்கவிக்கு மட்டும்தான் தெரியும். முத்தத்திற்கான ஒரு அறிகுறியை கூட அவளால் அறிய முடியவில்லை.

முதல் நொடியே மூச்சை எடுத்து விட்டான். அது மட்டும் உண்மை. அவனின் இடது கரத்தில் சிக்கியிருந்த அவளின் இரு கரங்களும் இரத்த ஓட்டம் இன்றி வெளிற ஆரம்பித்து விட்டன. அவளின் பின்னங்கழுத்தை மலை பாம்பு போல வளைத்திருந்த அவனின் வலது கரம் அவளை அசைய கூட விடவில்லை.

முழுமையாக அவனிடம் சிக்கிக் கொண்டாள். முத்தம் போல தரப்படும் இந்த தண்டனை, முத்தமிடுவது போல செய்யும் இந்த சித்திரவதை எதற்கென்று அவளுக்கு புரியவில்லை. 

இரண்டு உதடுகளுமே வலித்தது. பயத்தில் மூடியிருந்த அவளின் விழிகள் அவன் முத்தமிடும் வேகம் கண்டு மேலும் இறுகிக் கொண்டன.

'நான் என்னடா பாவம் பண்ணேன்? எதுக்குடா இப்படி டிசைன் டிசைனா டார்ச்சர் பண்ற?' மனதுக்குள் நினைத்தவளுக்கு இயலாமையின் இரட்டை பிறவியான கண்ணீரும் உடன் சேர்ந்து வந்தது.

உண்மையில் நேரம் எவ்வளவு சென்றதோ? ஆனால் அவளுக்கு நொடியும் யுகமாகதான் சென்றது.

அவளை விட்டு விலகி அமர்ந்தான் ஆதீரன். ஆனால் அவளின் நாசிக்குள் இன்னமும் அவனின் வாசம்தான் குடிக் கொண்டிருந்தது.

விழிகளை மூடியபடி சிலையாக அமர்ந்திருந்தவளை கர்வத்தோடு பார்த்தான். அவளின் உதட்டில் இருந்த குட்டி குட்டி காயங்கள் அவனுக்கு நிம்மதியை தந்தன. 

'இப்ப தெரிஞ்சிக்க வருண்.. இவ யாரோட சொத்துன்னு.. இவளை என்ன வேணா செய்வேன் நான். உன் மர மண்டைக்கு இன்னைக்கு இது புரியும்..' என்று மனதோடு சொல்லிக் கொண்டான்.

"உனக்கு இன்னும் முத்தம் வேணுமா?" கேலியாக கேட்டான். "என்னை பிடிக்காம கட்டிக்கிட்டன்னு நினைச்சேன்.." சந்தேகமாக கேட்டான். அதில் சந்தேகத்தை விட நக்கல்தான் அதிகம் இருந்தது.

விழிகளை திறந்தாள். இவ்வளவு நேரமும் மூடியிருந்த அந்த விழிகளில் பாதுகாப்பாக இருந்த கண்ணீர் இப்போது விழிகளால் கை விடப்பட்டு கீழே சிந்தியது. சிவந்த கண்களா, சிந்தியா கண்ணீரா எதுவென்று தெரியவில்லை. ஆனால் அவனுக்குள் குற்ற உணர்வு உண்டானது. ஆனால் அதை பொருட்படுத்துவானா?

வலித்த கைகளை அசைத்தாள். சீட் பெல்டை கழட்டினாள். விழிகளை துடைத்துக் கொண்டாள்.

"லிப்டுக்கு தேங்க்ஸ்.." என்றவள் அவனின் முகத்தை பார்க்காமல் கீழே இறங்கினாள். 

அவள் காரின் கதவை சாத்துகையில்தான் அவளது நடுங்கும் கரத்தை கவனித்தான் ஆதீரன்.

அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் இவன் தலையை பிடித்தபடி கீழே குனிந்தான்.

"உனக்கு என்னதான் ஆச்சி ஆதீ? எதுக்கு இப்படி பைத்தியக்காரன் போல நடந்துக்கற?" என்றுத் தன்னையே கேட்டுக்கொண்டான்.

எப்போதும் குந்தவியைதான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனையும் மீறி ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்தை அடிப்படையாக வைத்து சங்கவியை நெருங்கிக் கொண்டிருந்தான்.

சங்கவியின் கண்ணீர் அவனுக்குள் நிறைய விஷயங்களைச் சொல்லிச் சென்றது. அவனுக்கும்தான் புரிந்து இருந்தது அனைத்தும். ஆனால் மனம் ஆடும் ஆட்டத்தை தடுக்க முடியவில்லையே.

நினைத்து நினைத்து மருக பிடிக்காமல் தனது அலுவலகம் நோக்கி கிளம்பினான். 

சங்கவி தலைகுனிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள். வழக்கம் போல கதை பேசியபடி அமர்ந்து இருந்தனர் வருணும் காந்திமதியும்.

இவளை கண்டதும் காந்திமதி சந்தேகத்தோடு எழுந்து நின்றாள். 

"வெட்ட போற ஆடு போல எதுக்குடி தலை குனிஞ்சி இருக்க?" சந்தேகமாக கேட்டபடி அருகே வந்த காந்திமதி இவளின் தாடையை பற்றி நிமிர்த்தினாள்.

கொழுந்து விட்டு எரிந்தது கோபம். தன் முன் இருப்பவளை கொல்ல தோன்றியது.

"ஆதி எங்கே?" சந்தேகமாக கேட்டாள்.

"என்னை வாசல்ல விட்டுட்டு கிளம்பிட்டாரு.." தயங்கி சொன்னாள்.

'ஓ.. வாசல் வரைக்கும் வந்து விட்டுட்டு போறானா அவன்?' பற்களை கடித்தாள் காந்திமதி.

வருண் அமர்ந்தபடியே தனது சித்தியின் தோளை தாண்டி சங்கவியைப் பார்த்தான். அவளின் இதழ்களை பார்த்தவனுக்கு மூச்சே நின்று விட்டது. நடந்ததை அவனால் யூகிக்க முடிந்தது. ஆதீரனின் எண்ணமும் தெளிவாக புரிந்தது. 

'ஆதீ.. மனுசனா அவன்? எனக்காக அவனோட பொண்டாட்டியை பழி வாங்குவானா? பாவம் இந்த பொண்ணு..' என்று நினைத்தான். காலையில் ஆதீரனோடு தான் பேசியது தவறோ என்றெண்ணினான்.

அவளின் கண்ணீர் காய்ந்த கன்னங்கள் இவனுக்கு மட்டும்தான் தெரிந்ததே தவிர காந்திமதிக்கு தெரியவே இல்லை. தெரிந்தாலும் அதன் அர்த்தம் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு மனதில்லை.

வேலைக்காரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. காந்திமதி தனது கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று பயங்கரமாக யோசித்தாள்.

வருணை நினைத்துப் பார்த்தாள். 

"நீ போய் உன் வேலையை பாரு.." என்று மருமகளை அனுப்பி வைத்தவள் வருணின் அருகே வந்து அமர்ந்தாள்.

சங்கவி இவர்கள் இருவருக்கும் காப்பியை போட்டு வந்து தந்தாள். 

சங்கவியின் நிலைக்கு காரணமாகி விட்டோமே என்ற கவலையில் இருந்த வருணிடம் "வருண் என் ரூம் கப்போர்ட்ல கால்வலி தைலம் இருக்கும். எடுத்துட்டு வரியா? ரொம்ப வலிக்குது கால்.." என்று முகம் சுணங்கினாள் காந்திமதி.

"சரி பெரியம்மா.." என்றவன் காலி காப்பி கப்பை மேஜையின் மீது வைத்து விட்டு எழுந்தான். படிகளேறினான்.

அவன் தன் பார்வையை விட்டு மறைந்ததும் சமையலறை நோக்கி வேகமாக நடந்தாள் காந்திமதி.

"போய் கொஞ்சம் துளசி இலை பறிச்சிட்டு வா.." என்று பாத்திரங்கள் விளக்கிக் கொண்டிருந்த சங்கவியை விரட்டினாள். சரியென தலையசைத்துவிட்டு தோட்டத்திற்கு கிளம்பினாள் அவள்.

தோட்டத்தில் பார்த்து பார்த்து நல்ல இலைகளாக பறித்துக் கொண்டு திரும்பி வந்தாள் சங்கவி.

சமையலறைக்குள் நுழைந்தவளை "அடியேய்.." என அழைத்தாள் காந்திமதி. 

"சொல்லுங்க மேடம்.." என்று காந்தமதியை பார்த்தபடி அடியெடுத்து வைத்தவள் அடுத்த நொடியே "அம்மா.." என கதறினாள்.

பெரியம்மாவுக்கு கால்வலி  மருந்தை எடுத்துக் கொண்டு கீழே வந்த வருண் சங்கவியின் கதறலில் அதிர்ந்து நின்றான்.

பழுக்க காய்ந்த கரண்டி ஒன்றை சமையல் கட்டின் படியிலேயே போட்டு வைத்திருந்தாள் காந்திமதி. சங்கவி அங்கே வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் இந்த வேலையை பார்த்திருந்தாள். இதை வருண் அறியவில்லை. தரை பார்த்து நடந்த சங்கவி சமையலறைக்குள் நுழையும் நேரத்தில் அவளை அழைத்து தலை நிமிர வைத்திருந்தாள் காந்தமதி.

சங்கவியின் அலறல் கேட்டு அதிர்ந்து நின்றவன் வேகமாக ஓடி வந்தான்.

அருகே இருந்த சுவரில் முதுகு சாய்ந்து நின்றிருந்தாள் சங்கவி. அவளின் காலில் சூடுப்பட்ட இடம் தீப்பிழம்பு போல சிவந்திருந்தது.

"நான்தான் கரண்டியை கை தவறி கீழே போட்டுட்டேன்.. நீயாவது பார்த்து வர கூடாதா?" என்று திட்டினாள் காந்திமதி.

அவளின் குற்றச்சாட்டு கண்டு எரிச்சலாக இருந்தது வருணுக்கு. பெரியம்மா வேண்டுமென்றே இப்படி செய்துள்ளாள் என்றும் அவனால் யூகிக்க முடிந்தது. ஒரு அப்பாவி பெண்ணை அம்மாவும் மகனும் எதற்கு இப்படி சித்திரவதை செய்கிறார்கள் என்று கோபமாக வந்தது.

பதறும் உடலை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை அவளுக்கு. கத்தி அழவும் தெம்பில்லை. இதழ்களை இறுக்க மூடியபடி மௌனமாய் அழுதவளுக்கு கண்ணீர் மட்டும் ஆறாக ஓடியது. அவளின் முதல் கதறலிலேயே வீட்டிலிருந்த மற்ற வேலையாட்கள் ஓடி வந்து விட்டனர். சமையல்கட்டின் வாசலில் நின்றபடி சங்கவியை பரிதாபத்தோடு பார்த்தனர்.

பெரியம்மாவை முறைத்தபடியே சென்று சமையல் மேடையை துடைக்கும் துணியை எடுத்து வந்தான். கீழே கிடந்த கரண்டியை எடுத்து சிங்கில் போட்டான். தண்ணீர் பாதி நிரம்பி இருந்த சிங் கரண்டி விழுந்ததும் "ஸ்ஸ்ஸ்" என்று புகையை வெளியிட்டது.

சங்கவியின் அருகே வந்தான். ஒற்றை காலால் நின்றபடி மறுகாலின் வலியை அனுபவித்துக் கொண்டிருந்தவளின் தோளை பற்றினான். தயக்கத்தோடு நிமிர்ந்தவளின் இடுப்போடு தன் கை வளைத்து தூக்கினான்.

"எ.. என்ன பண்றிங்க?" தடுமாறி கேட்டவளுக்கு பதில் தராதவன், அருகில் இருந்த குளியலறைக்கு அவளை தூக்கிச் சென்றான்.

"எல்லோரும் போய் உங்க வேலையை பாருங்க.." வேலைக்காரர்களை விரட்டினாள் காந்திமதி.

சங்கவியை ஷவரின் கீழே நிற்க வைத்த வருண் பைப்பை திருகி விட்டான். தண்ணீர் கொட்டிய இடத்தில் அவளின் கால் பாதத்தை நீட்டினான்.

தண்ணீர் பட்டதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனாலும் வலி குறையவில்லை. 

"சாரி.." என்றவன் அவளை வெளியே அழைத்து வந்தான்.

"ஹாஸ்பிடல் போகலாமா?" எனக் கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.

"மருந்து போட்டா சரியா போயிடும்.." 

மருத்துவமனை செல்ல பயமாக இருந்தது. அங்கே சென்றால் காயம் எப்படி உண்டானது என்று கேள்வி எழும். அவர்களுக்கு உண்மை தெரிந்தால் போலில் வழக்காக இது மாறி விடும். பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையின் நிலை அதோகதிதான் என்றெண்ணி பயந்தாள். 

வீட்டிலிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளின் காலுக்கு மருந்து போட்டு விட்டான் வருண். 

***

வெள்ளை புகை பரவிக் கொண்டிருந்தது. புகையின் நடுவே தேவதை போல நடந்து வந்தாள் அவள்‌. பார்த்த நொடி புல்லரித்துப் போனது அவனுக்கு.

அவளின் முகத்தை ரசித்தான். அருகே சென்று அவளை அணைத்தான்.

"ஐ மிஸ் யூ கேர்ள்.." என்றவன் அவசரமாக அவளின் முகத்தில் முத்தமிட்டான். அவனின் கைகளின் பிடியில் இருந்த அவளின் தலை பஞ்சு போல இருந்தது. அவளின் கூந்தலையும், தலையையும் உணர விரும்பியவன் கைகளை இறுக்கினான். அப்போதும் பஞ்சு போலதான் இருந்தது. தான் அணைத்திருந்தது தலையணை என்று அவனுக்கு புரியவில்லை.

"இது எனக்கும் வீடு.. என்னை என் மொழி பேச கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது. அருகாணிக்கு பேரன்தானே நீங்க? அஞ்சலையப்பன்ங்கற பேரை அலெக்ஸ்ன்னு மாத்தினா இந்த நாடு வேணா ஏமாறும். நான் ஏமாற மாட்டேன்.."

"செட் அப்.. மை நேம் இஸ் அலெக்ஸ்.. சோ கால் மீ அலெக்ஸ்.. அன்ட் திஸ் இஸ் யுவர் ஹவுஸ் ஆல்சோ. பட் யூ ஆர் மை வொய்ப். சோ டேக் மை வேர்ட்ஸ். டூ வாட் ஐ சே.." 

தாய் தந்தையரின் சண்டையில் கண் விழித்த அவன் தனது தேவதை வந்த கனவு கலைந்துப் போன சோகத்தில் ஆழ்ந்தான். அவள் மேனியின் மென்மையை கிறுக்கு போல விரும்பியது இவனின் உடல். அவளோடு இருந்த படுக்கைக்கு மீண்டும் செல்ல ஆசைக்கொண்டது உயிர்.

மேஜை மீது அனாதையாக கிடந்த போனை எடுத்தான். எந்த அழைப்பும் வந்திருக்கவில்லை. பார்த்த கண்கள் பூத்து விட்டது. அவள் எப்போது அழைப்பாள் என்று புரியவில்லை.

விபச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆரம்பித்தவள் தான் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த வேலையை விட்டு விட வேண்டும் மனதோடு கெஞ்சினான். அவளின் முதல் கஸ்டமராக இருந்த தானே அவளின் கடைசி கஸ்டமராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினான். 

அப்பா அவசரமாக அழைக்காமல் இருந்திருக்கலாம், தானாவது அவளிடம் முழுதாய் பேசிவிட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தான். நிச்சயம் அழைப்பாள் என்று நம்பினான். அதனால்தான் அங்கிருந்து புறப்பட்டான். 

பணமோ, வேறு எதுவோ அவளின் தேவை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றி வைக்க தயாராக இருந்தான். ஆனால் அவள்தான் அழைக்கவேயில்லை. 

அவளின் நினைவில் பித்து பிடிக்காதது ஒன்றேதான் குறை. 

தந்தை வீட்டை விட்டு வெளியேறியதும் தாயை தேடி வந்தான்.

"மாம்.. ஐ வாண்ட் டூ கோ டூ இன்டியா.." என்றான்.

அம்மா ஆச்சரியமாக பார்த்தாள்.

"அன்ட்.. ஐ வாண்ட் டூ லியர்ன் தமிழ்.. ப்ளீஸ் டீச் மீ.." என்றான் அம்மாவின் தாடையை பிடித்து கொஞ்சியபடி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments