Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 27

 மாலையில் வீடு வருகையில் ரோஜா கட்டுகள் ஒன்றை வாங்கி வந்தான் ஆதீரன். நேராய் சங்கவியின் அறைக்குதான் சென்றான். அவளை காணவில்லை. 

தனது அறைக்கு வந்தான். அங்கேயிருந்த தன் அக்காவின் புகைப்படத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சங்கவி. 

இவனை கண்டதும் எழுந்து நின்றாள். போட்டோ ஆல்பத்தை அவசரமாக இருந்த இடத்தில் வைத்தாள்.

"சாரி.." என்றாள்.

"பரவால்ல.. உனக்கு வேணும்ன்னா வச்சிக்க.." 

நிமிர்ந்தாள். உண்மையை சொல்கிறானா என்று சந்தேகமாக வந்தது. அவசரமாக ஆல்பத்தை எடுத்துக் கொண்டாள்.

"தேங்க்ஸ்.." ஆல்பத்தை கட்டிட்ட நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொன்னவள் அங்கிருந்து புறப்பட்டாள். 

அவள் தன்னை தாண்டும் முன் அவளின் கைப்பற்றினான் ஆதீரன். திகிலோடு நிமிர்ந்தாள். அவளின் பயத்தை காணும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு வலித்தது.

"இ.. இது உனக்காக.." தனது இடது கையில் மறைத்து வைத்திருந்த ரோஜா பூங்கொத்தை நீட்டினான்.

ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள். "எனக்கா?" கட்டுப் போட்டிருந்த தனது வலது கையால் தன் பக்கம் சுட்டி காட்டி கேட்டாள்.

ஆமென்று தலையசைத்தான் அவன்.

"ஏ.. ஏன்?"

பெருமூச்சோடு அவளின் இடது கையில் பூங்கொத்தை திணித்தான்.

"நான் உனக்கு செஞ்ச சேதாரத்துக்கு என் உயிரையே தந்தாலும் ஈடாகாது. இது ஏதோ என்னால முடிஞ்சது.. வாங்கிக்க.." 

பூங்கொத்தை தந்தவன் அவளை தாண்டி சென்று விட்டான். இவளோ பூக்களை பார்த்தபடி சமைத்து நின்றாள். திரும்பி பார்த்தான்.

"வேறு ஏதாவது வேணுமா?" என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே அவளின் வீட்டு சாவியை கொண்டு வந்து தந்தான்.

பூங்கொத்தையும் கட்டிடபட்ட கையையும் மாறி மாறி பார்த்தவள் பூங்கொத்தை நெஞ்சோடு அணைத்தபடி இடது கையினை நீட்டினாள். அந்த சாவியை வாங்க அவள் காட்டிய ஆர்வம் கண்டு அவனுக்கு இதழ் விரிந்தது.

"தேங்க்ஸ்.." அவசரமாக சொன்னாள்.

"உங்க அப்பாவை வேற ஹாஸ்பிட்டல் மாத்த போறேன் சங்கவி.." என்றவனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள். நொடியில் கண்கள் கலங்கி விட்டது.

மறுப்பாக தலையசைத்தவன் "நீ நினைக்கும்படி இல்ல. ஹாஸ்பிட்டல்ஸை ஒப்பீடு செஞ்சி பார்த்தேன். இந்த ஹாஸ்பிட்டல்ல ஆபரேஷன் வேணா சிறப்பு. ஆனா அதன் பிறகான கவனிப்பு கொஞ்சம் சரியில்லன்னு தோணுது. அதனால்தான் வேற நல்ல ஹாஸ்பிட்டல் மாத்தலாம்ன்னு இருக்கேன்.."

"தே.. தேங்க்ஸ்.." இதை தவிர வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு. அவள் அணைத்திருந்த பூங்கொத்தினை பார்த்தான். பூக்கள் தங்களின் மெல்லிதழ்களால் அவளின் கழுத்தை உரசிக் கொண்டிருந்தன. அந்த கழுத்தை பார்த்தவனுக்கு அதற்கு முன் அவளை நெருங்கியது நினைவுக்கு வந்தது.

குந்தவியை கூட இவ்வளவு நெருங்கியது இல்லை. அணைத்தாலே பெரிய விசயம். கன்னத்தை தீண்டிய உதடுகளை நகர கூட விட்டதில்லை.

நினைக்க நினைக்க என்னவோ போல இருந்தது. எண்ணமெனும் அரக்கனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் சோர்ந்தவன் அவளை பார்க்காமல் திரும்பிக் கொண்டான்.

தனது அறையின் மேஜை மீது ஆல்பத்தையும் பூங்கொத்தையும் வைத்தாள் சங்கவி. 

வீட்டின் சாவியை பத்திரப்படுத்திக் கொண்டாள். 

இரண்டு வாரங்கள் சென்றது. தினமும் பூங்கொத்து வாங்கி வந்தான் ஆதீரன். அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். ஆனால் அந்த பூங்கொத்து கூட அவளின் வலியை சுமந்து இருந்ததை அப்போது அறியாமல் போய் விட்டான் அவன். அவளே சொல்லியிருக்கலாமோ? 

அவளின் கை கட்டுகள் பிரிக்கப்பட்டது. பாதத்தின் சூடு குணமானது. யாரின் உதவியும் இல்லாமல் நடமாட ஆரம்பித்தாள். 

அவளின் தந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்றினான் ஆதீரன். அவள் நாள் முழுக்க அங்கேயே தந்தையின் அருகில் இருந்தாலும் ஏதும் கேட்கவில்லை அவன். 

கைபேசி ஒன்றை வாங்கி தந்தான். அதில் அவள் தனது குடும்ப புகைப்படத்தை முன்படமாக வைத்தது கண்டு மனம் வருந்தினான். 

காந்திமதியின் வழக்கு விசாரணைக்கு வர இருந்தது.

"நாளைக்கு பெரியம்மா கேஸ்.. இழுத்தடிக்காம அவங்களை சீக்கிரம் திருத்தி அனுப்பணும்.." என்று கேலி செய்தான் வருண்.

அவனின் முன்னால் அமர்ந்திருந்த சங்கவிக்கு அவனை கண்டு ஆச்சரியமாக இருந்தது. தானாய் இருந்தால் அம்மா என்ன தவறு செய்தாலும் ஜெயிலுக்கு அனுப்பியிருக்க மாட்டோம் என்றும் தோன்றியது. அதே நேரத்தில் காந்திமதியின் மீதும் கோபம் வந்தது.

"சார்.." வாசல் காப்போன் வந்து ஆதீரனை அழைத்தான்.

திரும்பி பார்த்தவனிடம் "உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க.." என்றான்.

"யார்?"

"சொல்லல.. உங்களை நேர்ல பார்த்து பேசணும்ன்னு சொன்னாங்க.." 

"வர சொல்லுங்க.." என்றான் குழப்பத்தோடு.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு நடுத்தர வயதையுடைய மனிதர் ஒருவர் உள்ளே வந்தார்.

"நீங்க?"

"காத்தவராயன்.." என்றவர் இரண்டடி தள்ளி நின்றார்.

அவரை எங்கேயும் பார்த்தது போல தோன்றவில்லை. ஆனால் அவரை அறிந்தது போலவும் இருந்தது. ஒன்றும் புரியவில்லை ஆதீரனுக்கு.

"நான் காந்திமதியின் பாய் பிரெண்ட்.." அவர் சொன்னது கேட்டு வருண் அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.

"என்னா பிரெண்டு?" என்றான் தன்னையும் மீறி.

ஆதிரனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அதையும் மீறி விழிகள் கலங்கியது. இப்படியொரு ஆளை அவன் எதிர்பார்க்கவில்லை.

"நானும் அவளும் ரொம்ப வருசமா லவ் பண்றோம். ஆனா உனக்காகதான் அவ என்னை ஒதுக்கி வச்சா. இப்ப அவ ஜெயில்ல இருக்கா.." என்றார் எதிரில் நின்றிருந்தவர்.

ஆதீரன் கீழுதட்டை கடித்தான். கோபம் வந்தது. வலியும் வந்தது.

"அவ உனக்காக எவ்வளவோ செஞ்சா. ஆனா அத்தனையும் உடைச்சிட்ட நீ. அவளை விட்டுடு. அவளை நான் என்னோடு கூட்டி போயிடுறேன். அவ இனி உன் பாதையில் எப்போதும் குறுக்க வரவே மாட்டா.‌. அவளை வெளியே எடுக்க எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டேன் நான். நீ ஒருத்தனும் குறுக்க வராம இருந்தா அதுவே போதும்.." 

வருண் திறந்த வாயை மூடவில்லை.

"சாரி.. அவங்க என் மனைவியை கொல்ல பார்த்திருக்காங்க. அவங்களுக்கு தண்டனை கிடைக்கும். நான் வாங்கி தருவேன்." இயந்திர குரலில் சொன்னான் ஆதீரன்.

"அவளை எனக்காக ஒரே ஒரு முறை மன்னிச்சி விட்டுடு. நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன்."

"இந்த வயசுல இப்படியொரு லவ்வா?" அதிர்ச்சியாக இருந்தது வருணுக்கு.

"நான் அவளுக்காக எதையும் செய்வேன்." என்று வருணிடம் ஒருமுறை நினைவு படுத்தினார்.

ஆதீரன் குழப்பத்தில் உறைந்து நின்றான்.

காத்தவராயன் மூவரையும் மாறி மாறி பார்த்தார். தனது பின்பக்க பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்தார். சங்கவிக்கு குறி வைத்தார்.

அதிர்ச்சியோடு அவரை முறைத்தான் ஆதீரன். சங்கவிக்கு உடம்பு நடுங்கியது. தனக்கு மட்டும் ஏன் விதி விடாமல் துரத்துகிறது என்று கலங்கினாள்.

வருண் அமைதியாய் கையை மேலே தூக்கிக் கொண்டான்.

"எனக்கு உங்களை கொல்வது குறிக்கோள் இல்ல. அவ எனக்கு பத்திரமா வேணும். நீ குறுக்க வராம இருந்தா போதும். என்ன சொல்ற? நீ எந்த பக்கமும் மூவ் ஆக முடியாது. நான் நினைச்சா இவளை எப்படி வேணாலும் கொல்வேன். யாருக்கும் சேதாரம் ஆக வேண்டாம்ன்னு நினைக்கிறேன் நான். தூர நில்லு." காத்தவராயன் காந்திமதியின் கையாட்டி பொம்மை போல சொன்னார்.

ஆதீரன் பதில் தரவில்லை.

"நீ என்னை நம்பலாம். அவளை இந்த ஒரு முறை விட்டுடு. அவ மறுபடி உன் ஆயுசுக்கும் உன்னை தேடி வர மாட்டா. அவ எந்த பிரச்சனையும் செய்யாத மாதிரி நான் பார்த்துக்கறேன்.." 

ஆதீரன் சிலை போலவே நின்றான்.

துப்பாக்கியின் திசையை மாற்றினார். ஆதீரனை குறி வைத்தது துப்பாக்கி.

"உன்னை கொன்னுட்டா அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. உன்னையெல்லாம் ரொம்ப வருசம் முன்னாடியே கொன்னிருக்கணும்.." அவரின் வார்த்தையிலிருந்த வெறுப்பு அவனின் நெஞ்சத்தில் கசப்பாய் விழுந்தது.

"வேண்டாம்.." அவசரமாக சொன்னாள் சங்கவி.

ஆதீரன் நிமிரவும் இல்லை. அந்த துப்பாக்கியின் குண்டு தலைக்குள் இறங்கினாலும் கூட அவன் வருந்தபோவதில்லை.

"அவரை விட்டுடுங்க. நாங்க குறுக்க வரல.." கெஞ்சினாள் சங்கவி.

தலை குனிந்த வண்ணம் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான் ஆதீரன்.

பதட்டத்தில் இருந்தாள். 

"குட்.." துப்பாக்கியை கீழே இறங்கினார் காத்தவராயன்.

"அவளை நீங்க யாரும் இனி டிஸ்டர்ப் பண்ண கூடாது‌ மீறி யாராவது நெருங்கினா தயவு தாட்சணை பார்க்க மாட்டேன்.."

அவர் வந்த வழியில் திரும்பி நடந்தார்.

ஆதீரன் அமர்ந்த இடத்திலேயே பொத்தென்று விழுந்தான். சங்கவியும் வருணும் அவசரமாக அவரிடம் ஓடினர். 

"ஆதீ.." வருண் அவனின் தோளை உலுக்கினான்.

"என் அம்மாவோட காதலன்.. கேட்கும்போதே எவ்வளவு அருமையா இருக்கு இல்ல?" கசப்பாக கேட்டான்.

"அவங்க வாழ்க்கை.." என்ற வருணை திரும்பி பார்த்து முறைத்தவன் "ரகசிய காதலன்!? அவன் என்னையே கொல்லுவேன்னு சொல்றான். இது சரியா?" எனக் கேட்டான் கோபத்தோடு.

சங்கவியை திரும்பி பார்த்தான்.

"அவன் என்னை கொன்னிருந்தா எனக்கு எவ்வளவோ நிம்மதி. இப்படி துரோகத்தை தாங்குவதுக்கு பதிலா நிம்மதியா செத்து போகலாம். நீ ஏன் அப்படி சொன்ன?" என்று திட்டினான்.

சங்கவியும் அதே கேள்வியைதான் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஆபத்து என்றதும் தானாய் பதறி விட்டது மனம். 

"போதும் நிறுத்து. அவங்க இனி உங்க லைஃப் பக்கம் வர கூடாது. இதைதானே எதிர்பார்த்த? அவர்தான் வர விட மாட்டேன்னு சொல்லிட்டார் இல்ல? அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை?" என கேட்ட வருண் அவனை எழுப்பி நிறுத்தினான்.

"நீ போய் இவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா.." சங்கவியை அனுப்பியவன் ஆதீரனை இழுத்து வந்து சோபாவில் தள்ளினான்.

"அதிர்ச்சியாதான் இருக்கு எனக்கும். ஆனா நாம எதை மாத்த முடியும்?" என கேட்டவன் சங்கவி கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை இவனிடம் நீட்டினான். 

"சீக்கிரம் மனசு ஆறிடும்.. தண்ணியை குடி.." என்றான்.

விழிகளை இறுக்க மூடிய ஆதீரனுக்கு காத்தவராயனின் முகம்தான் கண் முன் வந்து நின்றது. கோபத்தில் நரம்புகள் தானாய் முறுக்கேறியது. அதன் விளைவாய் கையிலிருந்த கண்ணாடி குவளை தூள் தூளாக சிதறியது.

"ம்ப்ச்.." நெற்றியில் அடித்துக் கொண்டான் வருண்.

"எவர்சில்வர் உனக்கு கிடைக்கலையா?" என்று சங்கவியிடம் கேட்டான்.

ஆனால் அவள் அதற்கு முன்பே ஆதீரனை நெருங்கி அவனின் கையை பிடித்து விட்டாள்.

"ஏன் இப்படி பண்றிங்க?" கண்கள் கலங்க கேட்டவளின் முகத்தை விழிகளை நகர்த்தாமல் வெறித்தான் ஆதீரன்.

"கையை திறங்க.. அந்த டம்ளரை கீழே விடுங்க.." கெஞ்சியவள் அவனின் மடங்கிய  விரல்களை திறக்க முயற்சித்தாள். புடவை முந்தானையால் அவனின் கையை தாண்டி வழியும் ரத்தத்தை துடைத்து விட்டாள்.

"என் அம்மாவுக்கு வேற ஒருத்தரோடு அஃபேர் இருக்கு சங்கவி.." உணர்ச்சிகளை தொலைத்த குரலில் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். விழிகள் கலங்கி இருந்தது அவனுக்கு.

"ப.. பரவால்ல விடுங்க.." என்றாள். அதை தவிர வேறு என்ன சமாதானம் சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை.

அவனுக்கு இதயம் வலித்தது. ஆனால் அதை மறக்கும் அளவுக்கு அவனின் பின்னந்தலையில் ஒரு அடியை விட்டான் வருண்.

"வாடா.. வந்து முதல்ல இந்த கையை சரி பண்ணுடா. அப்புறம் பீல் பண்ணி தொலைவ.." என்று எரிந்து விழுந்தான்.

ஆதீரன் அசையாமல் இருந்தான்.

"இப்ப நீ எழுந்து வரலன்னா உன் சங்குலயே மிதிப்பேன் நான். மரியாதையா வந்துடு.." அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான் வருண்.

அவனின் கையிலிருந்த கண்ணாடி துண்டுகளை பிரித்து எரிந்து விட்டு தண்ணீரில் கையை சுத்தம் செய்துக் கொண்டு வெளியே வந்தான் வருண்.

"நாங்க ஹாஸ்பிட்டல் போறோம். நீ இரு சங்கவி.." வருண் சொன்னது கேட்டு அவசரமாக நகர்ந்தான் ஆதீரன்.

"வேணாம்.." என்றவனுக்கு சங்கவியின் நேரே துப்பாக்கி நீட்டப்பட்ட காட்சி கண்ணில் வந்தது.

"டாக்டரை இங்கேயே வர சொல்லு.." என்றவன் ரத்த கறையான முந்தானையை பார்த்துக் கொண்டிருந்த சங்கவியின் முகத்தை பார்த்தபடி வந்து இருக்கையில் அமர்ந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments