Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 28

  ஆதீரனின் கையிலிருந்த குட்டி குட்டி கண்ணாடி துண்டுகளும் வெளியே எடுக்கப்பட்டு கட்டு போடப்பட்டது.

"உங்களை நீங்களே வதைச்சிக்கறது ஹீரோயிசம் கிடையாது தம்பி. கொஞ்சமாவது புத்தியோடு இருக்க பாருங்க.." என்ற டாக்டர் அவனுக்கான மாத்திரை மருந்துகளை தந்து விட்டு கிளம்பினார்.

"இப்பதான் அவ கை நல்லாச்சி. இப்ப நீ இப்படி பண்ணி வச்சிருக்க.." என்று சலித்து கொண்டான் வருண்.

இன்று இரவும் அவன் ஆதீரனின் அறையில்தான் உறங்கினான்.

"வந்தவன் பொய் சொல்லியிருப்பானோ?" சந்தேகத்தோடு கேட்டான் ஆதீரன் இரவு விளக்கை வெறித்தபடி.

"எனக்கு அப்படி தோணல. அவன் கண்ணை பார்த்தா பொய் சொல்ற மாதிரியே தோணல.. நீ இதை நினைக்காத விடு. இது டேக் இட் ஈசி கிடையாதுதான். ஆனால் லீவ் இட்.." என்றவன் உறங்க முயன்றான்.

ஆதீரனுக்குதான் உறக்கமே வரவில்லை. விடிய விடிய புரண்டுக் கொண்டிருந்தான்.

குந்தவி தன் முன் இருந்த நிறுவனத்தை அதே ஏக்கத்தோடு பார்த்தாள். நிறுவனத்தின் வெளி சுவர்களை விரல்களால் வருடியவள் பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். அதே வேலையில் அவளின் அருகில் வந்து நின்றது கார் ஒன்று.

உள்ளேயிருந்து பணியாட்கள் சிலர் ஓடி வந்தனர். காரில் உள்ளவன் இறங்கும் முன்பே வணக்கத்தை வைத்தனர்.

குந்தவிக்கு தயக்கமாக இருந்தது‌. வராமல் இருந்திருக்கலாமோ என்று நினைத்தாள். ஆனால் பளீர் புன்னகையோடு காரிலிருந்து இறங்கியவனை இங்கே எதிர்ப்பாரக்கவில்லை அவள். 

இவன் பிழைத்திருப்பான் என்று கூட அன்று அவள் நம்பவில்லை. அத்தனை வெட்டுக்கள் வாங்கிய பிறகும் அவன் பிழைத்து வந்தது அவளுக்கும் கூட சந்தோசத்தையே தந்தது.

அனைவருக்கும் வணக்கத்தை வைத்து விட்டு உள்ளே நடக்க இருந்தவன் உறுத்தலாக திரும்பி பார்த்தான். குந்தவி அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பியிருந்தாள் அப்போது.

"ம்.. எக்ஸ்க்யூஸ்மி.." அவனது குரலில் திரும்பி பார்த்தாள்.

அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்ணிலிருந்த கண்ணாடியை கழட்டி விட்டு அவளை நெருங்கினான்.

"ஹாய்.. அந்த தேவதை நீங்கதானே? சாரி அன்னைக்கு அவசரத்துல உங்க பேர் கூட கேட்க முடியாம போச்சி.." என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.

"அவசரம்!?" அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது அவன் சொன்னது கேட்டு. அவன் தலையில் இருந்த காயம் கூட இன்னமும் ஆறாதது போல தெரிந்தது. முகத்தில் சோர்வு தெரிந்தது. ஆனால் அன்று பார்த்தது போலவேதான் சிரித்த முகத்தோடு இருந்தான்.

"உயிரை காப்பாத்திக்கிற அவசரம்.." என்று பல்லை இளித்தவன் "நான் யஷ்வந்த் மனோகர்.. நீங்க?" என்று கையை நீட்டினான்.

மூளைக்குள் எங்கோ மின்னல் வெட்டியது. இவனை சந்தித்தது அவளுக்கு பிடித்து இருந்தது‌.

"குந்தவி.." என்று கையை நீட்டினாள். மென்மையாக பற்றி குலுக்கினான்.

"அன்னைக்கு செஞ்ச ஹெல்ப்க்கு தேங்க்ஸ்.."

குழப்பமாக விழிகளை உருட்டினாள்.

"நான் எதுவும் செய்யல.."

"துணைக்கு இருந்திங்களே.. அதுவே பெரிய விசயம்.. நீங்க இல்லன்னா எனக்கு தைரியம் விட்டு போயிருக்கும்.." என்றவன் நிறுவனத்தை திரும்பி பார்த்தான்.

"இங்கே ஏன்?"

"வேலை கேட்டு வந்தேன்.." 

அவனால் நம்ப முடியவில்லை.

"உண்மையாவா?" 

ஆமென்று தலையசைத்தவளை ஆச்சரியம் தீராமல்‌ பார்த்தவன் "என்ன வேலை வேணும்?" எனக் கேட்டான்.

"தரை துடைக்கும் வேலை தந்தாலும் சம்மதம்.." 

கலகலவென நகைத்தான் யஷ்வந்த்.

"காமெடியா இருக்கு.." என்றவன் அவளின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டான்.

"படிச்ச பொண்ணு மாதிரி இருக்கிங்க.."

"பி.பி.ஏ முடிச்சிருக்கேன். ஆனா சர்டிபிகேட் என்கிட்ட இல்ல.." என்று கையை விரித்தவளை பரிதாபமாக பார்த்தான் அவன்.

"சர்டிபிகேட் இல்லன்னா.. வீடு எரிஞ்சி போச்சா? இல்ல வீட்டை விட்டு ஓடி வந்துட்டிங்களா?" என்றவன் குழப்பத்தோடு இடம் வலமாக தலையசைத்தான். "ஓடி வந்திருந்தா சர்டிபிகேட்ஸை எடுத்துட்டு வந்திருப்பிங்களே.." என்றான் தனக்குதானே.

குந்தவிக்கு மனம் கனத்தது. அதையாவது செய்து இருக்கலாம் என்று இன்று தோன்றியது.

"நான் தரேன் வேலை‌. இதுக்கு முன்னாடி என்ன வேலை பார்த்துட்டு இருந்திங்கன்னு சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி தரேன்.." என்றவன் அவளருகே இருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.

"ஒரு பைனான்ஸ் நிறுவனத்துல எம்.டிக்கு பர்சனல் அஸிஸ்டென்டா மூன்றரை வருசம் வேலை பார்த்தேன்.." என்றவளை ஆச்சரியத்தோடு பார்த்தவன் "அப்புறம் ஏன் இங்கே தரை துடைக்கும் வேலை?" எனக் கேட்டான் சந்தேகமாக.

தலை குனிந்தாள். "எந்த சர்டிபிகேட்டும் இல்லன்னா வேற எந்த வேலை கிடைக்கும்?" என்றாள் சோகமாக.

அவளின் முகத்திலிருந்த சோகம் அவனுக்கு வருத்தத்தை தந்தது.

"நான் நாளைக்கு கூப்பிடுறேன்.. உங்க போன் நம்பர்.." என கேட்டவன் முகம் சுளித்தான்.

"இல்லன்னுதான் அன்னைக்கே சொன்னிங்களே.." என்றவன் காரை திறந்தான். கைபேசி ஒன்றை எடுத்து வந்தான்.

"இதை வச்சிக்கங்க.."

திகைத்து போனவள் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

அவளின் கையை பற்றி போனை வைத்தான்.

"இது நான் கேம் விளையாட யூஸ் பண்ற போன். பரவால்ல நீங்க எடுத்துக்க.. நான் நாளைக்கு போன் பண்றேன். அதுக்குள்ள யாரும் கூப்பிட மாட்டாங்க.. அதையும் மீறி ஏதாவது கால் வந்தா யஷ்வந்தோட வேற நம்பருக்கு கூப்பிடுங்கன்னு சொல்லிடுங்க.." என்றவன் எதிரே இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

அவனின் முதுகை வெறித்து நின்றவள் போன் சிணுங்கிய சத்தம் கேட்டு துள்ளி விழுந்தாள். போனை பார்த்தாள். அவன்தான் அழைத்திருந்தான். நம்பரை பார்த்த உடன் அறிய முடிந்தது. அனிச்சையாக உதட்டை கடித்தாள். 

அவள் செயல்திறன் மறந்து நின்ற வேளையில் திரும்பி வந்தான் யஷ்வந்த். அவளின் கையில் இருந்த போனை எடுத்தவன் "அந்த நம்பருக்கு கூப்பிடு.." என்று சொல்லிவிட்டு வைத்தான்.

குந்தவியின் முகம் பார்த்தவன் குழப்பத்தோடே போனை அவளின் கையில் திணித்தான். கை கடிகாரத்தை பார்த்தபடி அங்கிருந்து திரும்பி நடந்தான்.

காந்திமதி கோர்டை விட்டு வெளியே வந்தாள். அவள் மீதான வழக்கு தள்ளுபடியாகி விட்டது. ஏன் எப்படியென்று புரியவில்லை. எதிர்கட்சி வக்கீலின் வாதம் சரியாக அமையவில்லை. அவர் தந்த சாட்சி எதிலும் சரியான அளவில் உண்மையில்லை என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மகனை அவள் பார்க்கவேயில்லை. அவன் ஏன் தன் மீதான கோபத்தை சட்டென்று குறைத்துக் கொண்டான் என்றும் தெரியவில்லை.

வீட்டிற்கு சென்று கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தவள் சாலையில் சென்ற கால்டாக்சியை கை காட்டி தடுத்து நிறுத்தவிருந்த நேரத்தில் அவளருகே வந்து நின்றது ஒரு கார்.

காரில் இருந்தவனை கண்டு ஆச்சரியத்தில் விழிகளை திறந்தாள் காந்திமதி.

"காத்தவராயா.."

"வண்டியில் ஏறு.."

ஏறி அமர்ந்தவள் "என் வீட்டுக்கு போ.." என்றாள். ஆனால் கார் வளைந்து எதிர்திசையில் சென்றது.

"என்ன பண்ற நீ?"

"செட்டப்.. இனி நீ வாய் பேசினா நான் மனுசனாவே இருக்க மாட்டேன். கொஞ்சம் விட்டிருந்தா ஜெயிலுக்கு போயிருப்ப. உன்னை வெளியே கொண்டு வருவதற்குள்ள எனக்கு ஜீவனே போயிடுச்சி. என் பீலிங்ஸ் பத்தியெல்லாம் உனக்கு ஏதாவது புரியுதா?" என்று கடுகடுத்தார் அவர்.

"நடந்ததை விடு. இப்ப வீட்டு பக்கம் திரும்பு.."

"நோ.. இனி நீ எப்பவும் என் கண்ணை விட்டு மறைய போறது இல்ல. நானும் உன்னை உன் வீட்டுக்கு அனுப்ப போறது இல்ல.." என்றவர் காரின் வேகத்தை கூட்டினார்.

காந்திமதி அலுப்போடு நெற்றியை தேய்த்தாள்.

"என்னால ஆதீயை விட்டு இருக்க முடியாது.."

"போதும் உன் நடிப்பு.." என்று திட்டியவரிடம் "இன்னொரு முறை இப்படி சொல்லாத. அவன் மேல் நான் வச்ச பாசம் உனக்கு புரியாது.." என்று கத்தினாள் அவள். 

"எனக்கு அந்த கருமம் தேவை கிடையாது. என்னால இனி அவனோடு உன்னை விட முடியாது. அவனையெல்லாம் அப்பவே கொன்னிருக்கணும்.." என்றவர் காந்திமதியை எரிச்சலோடு பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். அவர் சொன்னது கேட்டு காந்திமதிக்கு சிரிப்புதான் வந்தது.

மாலை வேளையில் மருத்துவமனையின் முன்னால் காரை நிறுத்தினான் ஆதீரன். கட்டுப்போட்டிருந்த கை ஸ்டியரிங்கில் பதிந்து இருந்தது. வலித்தது. ஆனால் அதை பொருட்படுத்தவில்லை. 

சங்கவியின் தந்தை சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் அறைக்கு வந்தான். கதவை மெள்ள தள்ளினான். தன் தந்தையின் அருகில் தலை சாய்ந்து உறங்கி போயிருந்தாள் சங்கவி.

அருகில் வந்தவள் அவளின் மூடிய விழிகளை பார்த்தபடி இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

அவர் இன்னமும் கண் விழிக்கவில்லை. ஆதீரன் அளவுக்கு அதிகமாகவே பணத்தை கட்டி வைத்திருந்தான். எப்படியாவது அவர் எழுந்து விட்டால் போதும் என்று இருந்தது அவனுக்கு.

"அக்கா, இந்தா ரோஜா.. என் காலேஜ் பக்கத்துல வித்துட்டு இருந்தாங்க. உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்.." சங்கவி வாங்கி வந்த ரோஜாக்களை முகர்ந்த குந்தவி "தேங்க் யூ சவி. நான் நாளைக்கு வச்சிக்கறேன் இதை.." என்றாள் முகம் கொள்ளா புன்னகையோடு.

இரவில் தன் தலைமுடியில் இருந்த சிக்கலை எடுத்து விட்ட குந்தவியிடம் "உனக்கு ஆதீ மாம்ஸை எவ்வளவு பிடிக்கும்?" என்று விளையாட்டாக கேட்டாள் சங்கவி.

"எவ்வளவுன்னு எப்படி சொல்றது? உன்னை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு பிடிக்கும் அவரையும்.."

சங்கவி அக்காவிடமிருந்து விலகினாள். அக்காவின் முகத்தை ஏமாற்றத்தோடு பார்த்தாள்.

"நான்தான் உன் பர்ஸ்ட் பிரியாரிட்டின்னு நினைச்சேன்.."

குந்தவி தங்கையின் தோளை அணைத்தாள்.

"ஆமா. நீதான் எனக்கு பர்ஸ்ட். ஆனா நீதான் அளவு கேட்டியே அதனால் சொன்னேன். உன்னை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு பிடிக்கும்.."

"ஆனா எனக்கு மாம்ஸை பார்த்து கொஞ்சம் பொறாமையா இருக்கு.." தங்கை சொன்னது கேட்டு சிரித்தாள் குந்தவி.

"அக்கா எனக்கு ஒரே ஒரு டவுட்.. அவர் ஏன் என்கிட்டவெல்லாம் நார்மலா கூட பேச மாட்டேங்கிறாரு.? அன்னைக்கு கேட்டேன், என் அக்காவை நீங்க நல்லா பார்த்துப்பிங்களான்னு? பதிலே சொல்லல. சும்மா ஒரு குட்டி சிரிப்பு. அதை தவிர வேற எதுவும் இல்ல. நீ நிஜமா அந்த ஆளை மேனேஜ் பண்ணுவியா?" சந்தேகத்தோடு கேட்டாள்.

தங்கையின் தோளில் தட்டினாள் குந்தவி.

"அந்த ஆள்ன்னு சொல்றது என்ன பழக்கம்? அவர் உன்னோடு பேசலையேன்னு நீ பீல் பண்ற.. நானெல்லாம் கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டாரான்னு நினைக்கிறேன். அவர் பேச ஆரம்பிச்சாவே ஒரே லவ்தான். எனக்கே சலிக்கும். அவ்வளவு பேசுவாரு.." என்று சொன்ன அக்காவை நம்பவே முடியவில்லை சங்கவியால். அக்கா நலமாய் இருந்தால் போதும் என்று நினைத்தவளுக்கு அந்த உம்மணாமூஞ்சி மாம்ஸை பற்றி பெரியதாக கவலை தோன்றவில்லை.

அக்காவை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தவளை தோளில் தட்டி எழுப்பினர் யாரோ. விழித்து பார்த்தாள். அக்கா இல்லை. அப்பா மருத்துவமனை இருக்கையில் இருந்தார். தோள் தட்டிய ஜீவனை திரும்பி பார்த்தாள். ஆதீரன்தான் நின்றுக் கொண்டிருந்தான்.

"ரொம்ப லேட்டாயிடுச்சி சங்கவி.." என்றான் தன் கைக் கடிகாரத்தை அவளிடம் காட்டியபடி.

முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள். அப்பாவின் முகத்தை சற்று நேரம் பார்த்தாள்.

வெளியே நடந்தாள். 

"சங்கவி.." அவள் வெளியே செல்லும் முன் அழைத்து நிறுத்தினான். திரும்பினாள்.

"டிரெஸ்ஸை சரி பண்ணிக்க.." என்றவன் அவளின் முகத்தை பார்த்தபடி வெளியே நடந்தான். கொட்டாவி விட்டபடியே உடையை நோட்டம் விட்டாள். புடவை நெஞ்சோரத்திலும் இடுப்போரத்திலும் விலகி இருந்தது. நெற்றியில் அடித்துக் கொண்டாள். முழுதாய் மறைக்கும்படி சரி செய்துக் கொண்டாள்.

கதவை திறக்க இருந்தவள் தயங்கி நின்றாள். 'பார்த்திருப்பாரோ?' என்று யோசித்தவளுக்கு கலக்கமாக இருந்தது. 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments