Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 31

 யஷ்வந்த் கைப்பிடித்து இழுத்துச் சென்ற பெண்ணை அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

"சார்.. கையை விடுங்க. நானே வரேன்.." பணியாளர்களின் பார்வையை காண முடியாமல் சொன்னாள் குந்தவி.

"யஷ்வந்த்ன்னு கூப்பிடுங்க.." என்றவன் அவள் கேட்டுக் கொண்டதை பற்றிக் கண்டுக் கொள்ளவில்லை‌.

ஆபிஸின் வெளியே கார் தயாராய் காத்து நின்றது.

"ஏறுங்க.." என்றான்.

அவனை விசித்திரமாக பார்த்தவள் "இல்ல பரவால்ல. எனக்கு லிஃப்ட் வேணாம். நான் பஸ்ல போறேன்.." என்றாள்.

"என்ன இருந்தாலும் நீங்க என் உயிரை காப்பாத்தி தந்தவங்க. ஏறுங்க.." என்றவன் அவளுக்காக கதவையும் திறந்து விட்டான்.

மனதில் கொஞ்சம் பயமாக இருந்தது குந்தவிக்கு. தயக்கத்தோடு காருக்குள் அமர்ந்தாள்.

கார் பயணப்பட்டது. குந்தவி அவனை யோசனையோடு பார்த்தாள்.

"சைட் அடிக்கிறங்களா? அவ்வளவு ஹேண்டசமா இருக்கேனா?" இவள் புறம் திரும்பி ஒற்றை கண்ணடித்து கேட்டான்.

திகைப்போடு பார்வையை திருப்பிக் கொண்டவள் "இல்ல.." என்றாள் அவசரமாக.

தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன் "நீங்க ரொம்ப க்யூட்.." என்றான்.

ஏன் காரில் ஏறினோம் என்றிருந்தது அவளுக்கு.

காரின் பயண பாதை வேறாக இருப்பதை கண்டவள் "சார்.. ரூட் இது இல்ல.." என்றாள்.

"ஆமா இது இல்ல.." என்றவனை பயத்தோடு பார்த்தவள் "எங்கே கூட்டிப் போறிங்க?" எனக் கேட்டாள்.

"உங்களை கடத்திட்டு போய் தேவதை சந்தையில் விற்க போறேன்.(அவ்வ்வ்.. கான்செப்ட் செமையா இருக்கு இல்ல.? அடுத்த கதைக்கு தேவதை சந்தையை வைத்து கன்டென்ட் ரெடி பண்ணிட வேண்டியதுதான்.)." 

அவன் சொன்னதை கேட்டு மேலும் பயந்து போனாள்.

அவள் மேலே கேட்கும் முன் கேட் ஒன்றினுள் நுழைந்தது கார். வீடு ஒன்றின் முன்னால் நின்றது.

"இறங்குங்க.." என்றான்.

தயக்கத்தோடு இறங்கியவள் தன் முன் இருந்த அந்த மாளிகையை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"இது எங்க வீடுதான்.." என்றவன் முன்னால் நடந்தான்.

"சார் இங்கே எதுக்கு.?" நின்ற இடத்திலிருந்தே கேட்டாள்.

திரும்பி‌ பார்த்தவன் அவளருகே வந்தான். அவளின் கையை பற்றினான். 

"எங்க வீட்டுல நிறைய காலி ரூம்ஸ் இருக்கு. எக்ஸ்ட்ரா சாப்பாடு இருக்கு. நீங்க தனி வீடு தேட தேவையில்ல.." என்றான்.

அதிர்ச்சியோடு கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள் "நான் போறேன்.." என்று திரும்பினாள்.

அவசரமாய் ஓடி அவளை மறித்தவன் "ஏன் இந்த அவசரம்.? இந்த வீட்டுல என் அப்பா அம்மா, சித்தப்பா சித்தி, அக்கா, தம்பிகள், அண்ணன், தங்கைகள் உண்டு.. உங்களுக்கும் துணையா இருக்கும்.." என்றான்.

குந்தவிக்கு பயமாக இருந்தது. ஒருவேளை சூர்யாவை காரணம் காட்டி இவன் ஏதாவது செய்கிறானோ என்று சந்தேகித்தாள். ஆனால் சூர்யாவுக்கும் இவளுக்கும் நடந்தது இவனுக்கு தெரியாதே என்றும் அவளே யோசித்தாள்.

குழப்பத்தோடு அவனை பார்த்தவள் "எனக்கு ஏன் ஹெல்ப் பண்றிங்க?" எனக் கேட்டாள்.

'எல்லாம் என் அத்தை பெத்த முத்து ரத்தினத்துக்காகதான்..' என நினைத்தவன் "நீங்க என் உயிரை காப்பாத்தி தந்ததுக்கு.." என்றான்.

குந்தவி விழிகளை சுழற்றினாள். இதையே எத்தனை முறை சொல்வான் என்றிருந்தது.

"இவ்வளவு பெரிய சிட்டியில் தனியா இருப்பதை விடவும் எங்க வீட்டுல இருக்கலாம் நீங்க. உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா வீட்டு வாடகைக்கு செலவு பண்ற பணத்தை எனக்கே கொடுங்க.. அன்னைக்கு நீங்க எனக்கு துணை நின்னதுக்கு உதவியா என்னால முடிஞ்சது இது.." என்றான்.

தயங்கினாள். சூர்யா மீண்டும் இந்தியா வந்தால் இங்கேதான் வருவான் என்று தெரியும். அவனின் முன் நிற்க தயக்கமாக இருந்தது. அதே சமயம் அவனை பார்க்க வேண்டும் என்றும் இருந்தது. தன் மனதையே அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

"ஆரத்தி ஏதும் எடுக்கணுமா?" அவனின் கேள்வியில் நிமிர்ந்தவள்  இல்லையென்று தலையசைத்தாள்.

அவளை இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தான். அவள் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பு அறையை விட இங்கே இருந்த ஹால் பெரியதாக இருந்தது.

ஆளாளும் அவரவர் வேலையில் இருந்தனர்.

குந்தவியை அழைத்துக் கொண்டு அறை ஒன்றிற்கு போனான். பெண்கள் இருவரிடம் புடவைகளின் டிசைனை காண்பித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

"மம்மி.. சித்தி.." இவனின் அழைப்பில் திரும்பினர் இருவரும்.

குந்தவியையும் அவளின் கைப்பற்றி இருந்த யஷ்வந்தையும் சந்தேகமாக பார்த்தாள் யஷ்வந்தின் தாயார் ரூபிகா.

"யார் இந்த பொண்ணு?" மராத்தியில் கேட்டாள் யஷ்வந்தின் சித்தி சுவிக்ஷா.

"என் பிரெண்ட்.." என்றவனை இருவரும் சந்தேக கண்களோடு பார்த்தனர்.

"என்ன பிரெண்ட்? இத்தனை நாளா எனக்கு கூட தெரியலையே.." ரூபிகா தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கேட்டாள்.

குந்தவிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இப்படியே திரும்பி ஓடிவிட்டாள் ஆகுமென்று தோன்றியது.

"அன்னைக்கு எனக்கு வெட்டுப்பட்டபோது ஒரு பொண்ணு ஹெல்ப் பண்ணான்னு சொன்னேன் இல்லையா? அது இவதான்.. இவ வீட்டுல இவளுக்கு பிடிக்காத மீசைக்கார முறைமாமனுக்கு கட்டாய கல்யாணம் செய்ய இருந்ததால போன வாரத்துல வீட்டை விட்டு ஓடி வந்துட்டாளாம். நம்ம ஆபிஸ்லதான் வேலைக்கு சேர்ந்திருக்கா. இங்கே எங்காவது வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு கேட்டா. நான்தான் இங்கே கூட்டி வந்தேன்.." 

அவன் பேசும் பொய்யை ஆச்சரியம் தீராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவி. அவனின் மீசைக்கார முறைமாமன் என்ற உதாரணத்தில் ஆதீரன் வந்து போனான்.

"ரொம்ப லட்சணமான பொண்ணா இருக்கா.." என்று மராத்தியில் சொன்னபடி அருகே வந்த சுவிக்ஷா குந்தவியை தலை முதல் கால் வரை அளந்தாள்.

"எங்க பையன் உயிரை காப்பாத்தியதுக்கு தேங்க்ஸ்.." என்றாள் ரூபிகா.

"தேங்க்ஸ் சொன்னா மட்டும் போதாது. இங்கே தங்க போற இவளுக்கு நீங்க உங்க சப்போர்டையும் தரணும்.." என்ற யஷ்வந்திடம் இருவரும் சரியென்று தலையசைத்தனர்.

சங்கவி தன் முன் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள். இடது கையில் ரோஜா பூங்கொத்தை வைத்திருந்தான். தினமும் வாங்கி வந்து தருவதுதான். இன்று ஏனோ ரோஜா பூங்கொத்தில் ஒற்றை மஞ்சள் ரோஜா கலந்திருந்தது.

பூங்கொத்திற்காக கையை நீட்டினாள். தயக்கத்தோடு பூங்கொத்தை பார்த்தவன் அவளின் முன்னால் அமர்ந்தான்.

"குந்தவி.. சாரி சங்கவி.." என்றவனை குழப்பத்தோடு பார்த்தாள் அவள்.

"சங்கவி.. ஐயம் சாரி. இதுவரை நான் உனக்கு செஞ்ச எல்லா கொடுமைக்கும் சாரி. உனக்கு என்னை பிடிக்கலன்னா நீ போயிடலாம். நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்.." என்றவன் சற்று தயங்கி விட்டு "உனக்கு என்னை பிடிச்சிருந்தா, இல்லன்னா இனி வரும் காலத்தில் பிடிக்கும்ன்னு ஒரு நம்பிக்கை இருந்தா இங்கேயே இருக்கலாம். உனக்கு எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோ. இரண்டு முறையும் உன் விருப்பம் இல்லாமதான் இந்த தாலி உன் கழுத்துக்கு வந்து சேர்ந்தது. அதுக்காக சாரி. ஆனா எனக்கு ஒரு சான்ஸ் தரணும்ன்னு நீ நினைச்சா கண்டிப்பா நான் நன்றிக்கடன் பட்டவனா இருப்பேன். என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னை ஹேப்பி வச்சிப்பேன். உன் அக்காவுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறேன். உனக்கு செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் செய்ய நினைக்கிறேன்.." என்றான்.

சங்கவி தரை பார்த்தாள். யோசித்தாள். அவனின் கழுத்தில் தூக்கு கயிறு இருந்தபோது ஏன் பதறினோம், அவனுக்கு நேரே துப்பாக்கி நீட்டப்பட்டபோது எப்படி பதறினோம் என்று நினைத்துப் பார்த்தாள். மன்னித்தல் நிம்மதி தருமென்றால் தான் ஏன் அதை செய்ய கூடாது என்று நினைத்தாள். அக்காவின் நிமிர்ந்தவள் தனது வலது கையை நீட்டினாள். 

முகம் முழுக்க புன்னகை பரவியது அவனுக்கு. பூங்கொத்தை அவளின் கையில் திணித்தான். வாங்கி கொண்டவளை பாய்ந்து அணைத்தான். சங்கவி அதிர்ந்து போனாள்.

"தேங்க்ஸ் சங்கவி.." என்றான் அணைத்தபடியே. அவளை அணைத்திருப்பது மிகவும் வித்தியாசம் தோன்றியது அவனுக்கு. மிகவும் புதிதாக, மிகவும் சரியாக, மிகவும் இனிதாக தோன்றியது. இந்த அணைப்பு தந்த உணர்ச்சிகளை அவனால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

பூங்கொத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டிருந்தவள் மறுகையால் அவனின் முதுகில் தட்டி தந்தாள்.

அவளின் வாசமும் கூட பிடித்திருந்தது. அன்று தனதறையில் தன்னை மறந்தது போலவே இன்றும் வேறு ஒரு உலகிற்குள் நுழைந்தான். 

அவளை விட்டு விலகினான். இன்னும் ஒரு நொடி இணைந்திருந்தாலும் அன்று போலவே இன்றும் ஏதாவது செய்து விடுவோம் என்று தோன்றியது அவனுக்கு. ஆனாலும் அவளுடைய கன்னத்தில் சிறு முத்தம் பதித்தான்.

அதிர்ந்தவள் சிவந்த கன்னங்களோடு தலை குனிந்துக் கொண்டாள்.

இந்த வெட்கத்தின் ஆரம்பமும் தான் எடுத்து வைத்த அடியும் எப்படிப்பட்ட சித்திரவதைகளை கொண்டு வந்து விட போகிறது என்று அறிந்திருந்தால் நிச்சயம் அவள் இன்று இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாள்.

அவளின் சிவந்த கன்னங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. குந்தவியை போலவே வெட்கப்படுவதாக நினைத்தான்.

அவளை சோதிக்க விரும்பாமல் எழுந்துக் கொண்டான்.

"உனக்கு ஏதாவது வேணுமா சங்கவி?"

வேண்டாமென தலையசைத்தவளின் பின்னங்கழுத்தை பார்த்தவன் பொங்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே நடந்தான்.

ஊட்டி மலையின் ஒரு தேயிலை தோட்டத்தின் மத்தியில் இருந்த வீடு அது.  ஆளூயர காம்பவுண்டின் மீது கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டு இருந்தது. காலை பொழுதில் அழகாய் இருந்தது அந்த வீடு. அவ்வீட்டின் வாசலில் இருந்த வேட்டை நாய் ஒன்று கேட்டின் மீது வந்தமர்ந்த காக்கையை குரைத்து விரட்டிக் கொண்டிருந்தது.

பனி பெய்த தோட்டத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் காந்திமதி. அவளருகே வந்து நின்ற காத்தவராயன் அவளின் கையில் காப்பி கோப்பையை தந்தார். 

"தேங்க்ஸ்.." என்றவள் காப்பியை ருசிக்க ஆரம்பித்தாள். அவளின் முதுகை அணைத்துக் கொண்டார் காத்தவராயன். அவளது தோளில் தன் முகம் பதித்தவர் "நீ ரொம்ப ப்யூட்டி.." என்றார்.

புன்னகைத்தவள் தனது காப்பியை அவரின் உதட்டில் வைத்தாள். ஒரு விழுங்கு குடித்தார்.

"சர்க்கரை கொஞ்சம் கம்மியா இருக்குன்னு தோணுது.." என்றார் குறையாக.

"எனக்கு சரியா இருக்கு.." என்றவள் மீண்டும் காப்பியை குடித்தாள்.

"ரொம்ப குளிருது.." என்றவளின் வயிற்றை சுற்றியது அவரின் கரங்கள். அவளின் கழுத்தில் இன்னும் கொஞ்சம் சேர்ந்து புதைந்தது அவரின் முகம்.

"இங்கேயே இருந்துடு மதி.. இல்லன்னா நான் உடைஞ்சி போயிடுவேன்.."

"என் பையனை விட்டுட்டு என்னால இருக்க முடியாது.." என்றவள் வெளியே இருந்த ஈரத்தை விட்டு பார்வையை திருப்பவில்லை.

"நீ போக கூடாது. இல்லன்னா நான் அவனை கொன்னுடுவேன்.. நிஜமா.. என் துப்பாக்கியோடு ஆறு புல்லட்டும் அவன் தலைக்குள்ளதான் இறங்கும். நான் பொய் சொல்லல.."

"அவனுக்கு ஏதாவது ஆச்சின்னா அப்புறம் நான் உயிரோடு இருக்க மாட்டேன்.." என்றவளை விட்டு விலகினார். அவளை தன் பக்கம் திருப்பினார். அவள் வைத்திருந்த காப்பி கோப்பை கீழே விழுந்தது. அவரின் கால் மீதே விழுந்தது. ஆனால் அவர்தான் அதை கண்டுக் கொள்ளும் நிலையில் இல்லை.

"அவனுக்காக உயிரை விட போறியா? அப்படின்னா நான் செத்தா பரவாயில்லையா?"

அவளின் முகத்தில் திகில் பரவியது. 

"இப்படி சொல்லாத காத்தவராயா.." பதற்றமாக சொன்னாள்.

"நானா அவனா.. உன் முன்னாடி நான் தர போற ஆப்சன் இதுதான். உனக்காக நான் எத்தனை வருசம் காத்து இருந்தேன்னு நினைச்சி பாரு. உன் பையன் குழந்தை இல்ல.. அவனுக்கு நீ தேவையில்ல. ஆனா எனக்கு நீ எப்போதும் தேவை.." என்றார் கண்டிப்புடன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments