Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 44

 "காத்தவராயா.." மயங்கி விழுந்தவரின் அருகே மண்டியிட்டு அவரின் தோளை பற்றி உலுக்கினாள் காந்திமதி.


"என்ன ஆச்சி உனக்கு?"


"ஏதோ விஷ பூச்சி கடிச்சிடுச்சி போல.." ஒரு பக்கத்துக் கழுத்தைப் பற்றிக் கொண்டார். 


"ஐயயோ.. இப்ப என்ன பண்றது.? சீக்கிரம் எழுந்து வா. ஹாஸ்பிட்டல் போகலாம்.." அவரின் கைப்பிடித்து இழுத்தாள்.


"நடக்க முடியல உட்கார முடியலன்னுதான் விழுந்து கிடக்குறேன். எப்படிடி ஹாஸ்பிட்டல் போக மட்டும் வருவேன்.?" எரிச்சலாக கேட்டார்.


"அப்படின்னா இனி என்ன செய்றது.? பூச்சிக் கடியை எப்படி சரி பண்றது.?" பதறியபடி கேட்டாள்.


"நடு காட்டுல என்ன செய்ய முடியும்? எதுவும் பண்ண முடியாது. செத்து வேணா போகலாம் நான்‌‌.." என்றார் வருத்தமாக.


"அப்படி சொல்லாத காத்தவராயா.. நீ இல்லன்னா நான் என்ன செய்வேன்.?" அப்பாவியாக கேட்டவளை அடிக்கண்களால் பார்த்தவர் "நான் செத்த பிறகு நாய் நரி வந்து என் பாடியை இழுத்துட்டு போயிடும். அட்லீஸ்ட் நான் செத்த இடத்திலாவது ஒரு காட்டுப் பூ பறிச்சி வச்சிட்டு போ.." என்றார்.


"எனக்கு பயமா இருக்கு. இப்படி சொல்லாதே.." என்றவள் குலுங்கி அழுதாள்.


"நெஞ்சு வலிக்குது.." ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டார்.


"ப்ளீஸ் எழு..‌ நாம போகலாம்‌.. காட்டை விட்டு வெளியே போனா எதாவது வண்டி கிடைக்கும். நாம தப்பிச்சிடலாம்.." என்றாள்.


"முடியல மதி.. உன் கழுத்துல தாலி ஏதாவது கட்டியிருந்தா கூட 'நான் செத்த பிறகும் நீ பூவும் பொட்டுமா இருக்கணும்'ன்னு வசனமாவது பேசி இருப்பேன். இப்ப அதை கூட சொல்ல முடியல.." திக்கி திணறிச் சொன்னார்.


காந்திமதியின் அழுகை கூடியது.


"நீ இல்லன்னா நானும் செத்துடுவேன் காத்தவராயா.."


"அப்படிதான் செத்து போ மதி..‌ இத்தனை வருசம் இருந்தும் சேர்ந்து வாழ விடல நீ. இப்ப சேர்ந்தாவது சாகலாம்.."


"நேத்து நான் அப்படி பேசியதாலதான் ஆக்ஸிடென்ட் ஆச்சி.. எல்லாம் என் தப்புதான்.." நெற்றியில் அடித்துக் கொண்டு அழுதாள்.


"கண்ணுல தெரியறதெல்லாம் மங்கலா தெரியுது.. தலைக்குள்ள சம்மட்டி தூக்கி அடிக்கற மாதிரி இருக்கு.." அப்படியும் இப்படியுமாக புரண்டபடி புலம்பினார்.


"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. பிழைச்சிடு.."


இடம் வலமாக தலையசைத்தவர் "சாக போறேன்.. இப்பவாவது உண்மையை சொல்லு மதி.. உன் பையன் நிஜமாவே எனக்கு பிறக்கலையா.?" எனக் கேட்டார்.


அவரின் வாயில் இருந்து ஜொள் ஒழுகியது. காந்திமதி மேலும் பதறிப்போனாள். கதறி கதறி அழுதாள்.


"சத்தியமா இல்ல காத்தவராயா.. அவன் உன் பையன் இல்ல.. உன் பையனா இருந்திருந்தா நான் ஏன் உன்னையும் அவனையும் பிரிச்சி வச்சிருக்க போறேன்.?" அழுகையோடு கேட்டாள்.


"யார் அவன்.? என்ன நடந்துச்சின்னாவது சொல்லு.. கடைசி ஆசை மதி‌‌.." கண்கள் சொருக மயங்கியபடியே கேட்டார்.


அவரின் கன்னங்களை தட்டிக் கொண்டிருந்தவள் அழுதபடியே நடந்தது அனைத்தையும் சொன்னாள்.


ஜன்னல் வழியே தங்களை பார்த்த இளைஞனை பரிதாபமாக பார்த்தாள் யவனா. தாரணியை விட்டு அகலவில்லை அவனது கண்கள். அவனின் கண்கள் கலங்கியது. யவனா பார்வையை தாழ்த்திக் கொண்டாள். ஏனோ அவனை பார்க்க முடியவில்லை. அவன் கண்கள் காட்டிய வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.


"போலாம் தாரணி.." யஷ்வந்த் அழைத்தான். மறுப்பாக தலையசைத்தாள் அவள்.


"என் அப்பா என் மேல கோபமா இருக்காரு.." என்றாள் அழுகையோடு.


"கொன்னுடுவேன் உன்னை.. வீட்டுல சொல்லாம ஓடி வந்தது நீ. நீ செஞ்ச தப்புக்கு உன்னை பொன்னூஞ்சல்ல வச்சி தாலாட்டவா செய்வாங்க.?" என்று எரிந்து விழுந்தான்.


தாரணி கன்னங்களோடும் கண்ணீரோடு வீட்டைப் பார்த்தாள். அவளை கூட்டி வந்து காருக்குள் தள்ளினான் யஷ்வந்த்.


"போலாம்.." என்றான் தங்கைகளிடம். யவனா வீட்டுக்குள் இருந்த இளைஞனை கடைசி முறையாக பார்த்தாள்.


அங்கிருந்த இரு வாகனங்களும் புறப்பட்டுப் போனது. வழியெங்கும் தாரணி அழுதுக்கொண்டே இருந்தாள்.


"எனக்கு காது வலிக்குது.." யஷ்வந்த் எரிந்து விழுந்தான்.


"என் அப்பா கடைசி வரை என்னோடு பேச மாட்டாறோன்னு பயமா இருக்குங்க.. அண்ணன் பாவம். அம்மா தலையில் வேற அடிப்பட்டு இருக்கு.." என்றவள் அதற்கு காரணம் தன் அப்பாவாக இருக்கலாம் என்பதை சொல்லாமல் விட்டு விட்டாள்.


"கொஞ்ச‌ நாள்ல சமாதானம் ஆகிடுவாங்க.. நீ தண்ணியை குடி.." என்று பாட்டிலை நீட்டினான்.


வாங்க மறுத்தவள் ஜன்னலில் தலை சாய்த்தாள். விழிகள் நிறுத்தாமல் அடைமழையாய் கண்ணீரை கொட்டின. 


"சனியனே.. தப்பையும் நீ பண்ணிட்டு இப்ப அழவும் செய்றியா.? சாவடிச்சிடுவேன் உன்னை.." காட்டு கத்தல் கத்தினான்.‌‌ தங்கைகள் இருவரும் காதுகளை பொத்திக் கொண்டனர்.


"பாவம் அண்ணா.. அண்ணி பாவம்.." மனம் பொறுக்க முடியாமல் தர்ஷினியே சொல்லி விட்டாள்.


"நீ வாயை மூடு.. இவளுக்கு என் மேல நம்பிக்கை இல்ல.. வேற எவளையாவது அங்கே மடக்கிட்டிங்களான்னு என்கிட்டயே கேட்டவளாச்சே.." என்றவன் அவளின் பொடனியில் அடித்தான்.


விம்மினாள் தாரணி. 


"சத்தம் வந்தா கொலை பண்ணிடுவேன். மரியாதையா வாயை மூடு.." என்று அதட்டிக் கொண்டிருந்தவனுக்கு தனியாய் சிக்கும்போது இவள் நம்மை எவ்வளவு தூரம் வைத்து செய்வாளோ என நினைத்து சற்று கவலையாக இருந்தது.


யவனாவுக்கும் தர்ஷினிக்கும் இவன் புது அண்ணனாக தெரிந்தான். தங்களிடம் அன்பை வாரி வழங்குபவன் பொண்டாட்டியை இப்படி நடத்துகிறானே என்று வருத்தமாக இருந்தது.


"அழாதிங்க அண்ணி.. உங்க குடும்பத்தோடு சமாதானம் ஆகும். நாங்க கூட சமாதானம் செஞ்சி வைக்கிறோம்.." என்றாள் தர்ஷினி.


ஆனால் அவள் எங்கே இவர்களின் பேச்சை கேட்டாள். அவள் பாட்டுக்கு அழுதுக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அனைவருக்குமே சலித்து விட்டது. தாரணி அழுதே மயங்கி விட்டாள். அதன்பிறகுதான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.


"என்ன இருந்தாலும் அண்ணி பாவம்.." என்ற யவனாவிடம் "இவங்களை விட அவங்க குடும்பம்தான் பாவம்.. பாசமா வளர்த்திய பொண்ணு சொல்லாம கொள்ளாம ஓடிட்டாளேன்னு கோபம் அவங்களுக்கு. அண்ணியை போல நான் ஓடியிருந்தா அப்பா என்னை கொன்னு புதைச்சிட்டுதான் அடுத்த வேலை பார்த்திருப்பாரு.." என்றாள் தர்ஷினி.


"அவர் உன்னை அறைய கூட மாட்டாரு.‌ ஏனா அதுக்கு நான் விட மாட்டேன்.." என்ற யஷ்வந்த் வழியில் இருந்த தாபா ஒன்றின் முன் காரை நிறுத்தினான். 


"சாப்பிட்டுக்கலாமா.?" எனக் கேட்டவனுக்கு பதிலை கூட சொல்லாமல் தங்கைகள் இருவரும் இறங்கி ஓடினார்கள்.


மயங்கியிருந்த மனைவியை கவலையாக பார்த்த யஷ்வந்த் அவளின் தோளை தொட்டு உலுக்கினான். அசையாமல் இருந்தாள். அவளின் தலையை இந்த பக்கமாக திருப்பினான். சிவந்து இருந்தது இதழ்கள். அழுகையின் விம்மலை அடக்க நினைத்து அதிகம் கடித்து விட்டிருந்தாள் போல.


கட்டை விரலால் அவளின் இதழை வருடியவன் அருகில் சென்று மென்மையாக இதழ் பதித்தான். உதடுகள் மோதிக் கொண்டபோது மனதுக்குள் பூரான் ஓடியது. இதயத்தின் துடிப்பு இரு மடங்கானது.


"ஒரு லாங் கிஸ் பண்ணிப் பார்த்தா என்ன.?" தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன் அவளின் பின்னங்கழுத்தை வலது கையால் சுற்றினான்.


யவனாவும் தர்ஷினியும் எதிரெதிராக அமர்ந்தனர். தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்தனர். பாடிகார்ட்ஸ் தள்ளியிருந்த டேபிளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.


"அண்ணா எங்கே இன்னும் காணம்.." சாலைப் புறம் திரும்ப முயன்ற யவனாவிடம் "அங்கே பார்க்காதே.." என்று எச்சரித்தாள் தர்ஷினி.


ஆனால் அவள் பார்த்துவிட்டாள். நெற்றியை பிடித்தபடி கதை குனிந்தாள்.


"நடு ரோட்டுல மானத்தை வாங்கிட்டாரு.." என்று முனகினாள். தான் செய்துக் கொண்டிருக்கும் அலும்பலை காரின் முன் ஜன்னல் வழியே வெளியே இருப்போரும் பார்ப்பார்கள் என்பதை கவனிக்காமல் போய் விட்டான் யஷ்வந்த்.


கொடுக்க கொடுக்க இனித்துக் கொண்டேயிருந்தது முத்தம். பெற பெற ஆசையின் அளவை பெருக செய்துக் கொண்டேயிருந்தது முத்தம்.


கனவில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் தாரணி. காதலனுடனான முதல் முத்தம் கனவிலும் சுவையாய் இருந்தது. முகம் முழுக்க பூரிப்பு வந்து சேர்ந்தது. ஆனால் அதுவும் சற்று நேரத்தில் மறைந்துப் போனது‌. சாலையில் ஹாரன் அடித்துச் சென்ற லாரியால் கனவிலிருந்து விழித்தவள் எதிரே இருந்தவனை கண்டு பயந்துப் போனாள். அவனை தள்ளி விட்டாள். அவளின் தள்ளலில் இந்த பக்க ஜன்னல் கண்ணாடியின் மீது வந்து விழுந்தான் யஷ்வந்த்.


"என்ன பண்ணிங்க?" என்றவள் அவசரமாக தனது உடைகளை கவனித்தாள்.


"ஆத்தா தாயே.. நான் என்னவோ உன்னை ரேப் பண்ண மாதிரியே சீனை போடுற.. சும்மா ஒரு கிஸ் தந்தேன்.." என்றவனை முறைத்தவள் "யாரை கேட்டு என் கிஸ்ஸை திருடினிங்க.?" என்றாள்.


"இதெல்லாம் தேவை கிடையாது. கிஸ் நல்லா இருந்ததா இல்லையா.? அதை மட்டும் சொல்லு.." என்றான் விரலை நீட்டி.


எட்டி அவனின் தலையில் கொட்டு வைத்தாள். "நல்லாவே இருந்தாலும் முதல்ல என்கிட்ட பர்மிஷன் கேட்கணும்.." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.


"இங்கே என்ன பண்றோம்.?" என்றாள் குழப்பமாக.


"சாப்பிடலாம்ன்னு காரை நிறுத்தினேன்.." 


உதட்டை துடைத்தபடி கீழே இறங்கினாள்.


"மனசாட்சி இல்லாதவ.." முனகியபடியே மறுப்பக்கம் இறங்கினான். இருவரும் சேர்ந்து தாபாவுக்குள் நுழைந்தனர்.


காந்திமதியின் கன்னத்தில் பளீரென அறை விழுந்தது. அழுது சலித்த கண்களோடு, கன்னத்தை பிடித்தபடி காத்தவராயனை பார்த்தாள். எழுந்து உட்கார்ந்து இருந்தார். கண்கள் இரண்டும் சிவந்துப் போயிருந்தன. முகம் முழுக்க கோபம் கொப்பளித்தது.


அவளின் சடையை பற்றியவர் தன்னருகே இழுத்தார். நெஞ்சில் வந்து விழுந்தவளின் தாடையை பற்றி நிமிர்த்தினார்.


நிமிர்ந்தாள் அவள். தாடையை பற்றியிருந்த கை மறுபடியும் ஒரு அறையை தந்தது.


காந்திமதி பயத்தில் விழிகளை மூடிக் கொண்டாள். 


"ஏன் மதி.? எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்னை கண்டம் துண்டமா வெட்டிப் போட்டா கூட மனசு ஆறாது.." என்று கர்ஜித்தார்.


அவளின் இதயம் தாறுமாறாக துடிக்கும் சத்தம் அவரின் செவி வரை கேட்டது. பரிதாபம் துளியும் தோன்றவில்லை. 


"என் முகத்துலயே விழிக்காத இனி.." என்றவர் அவளை தூர தள்ளினார். எழுந்து நடந்தார்.


"காத்தவராயா.." என்றவளை திரும்பிப் பார்த்து முறைத்தவர் "என்ன ***க்கு நீ என் பின்னாடி வர.?" எனக் கேட்டார்.


"இத்தனை நாளா சொல்லாம இருந்தது‌ தப்புதான்.. மன்னிச்சிடேன்.." அவரின் காலை பிடிக்க போனாள். மீண்டும் தள்ளி‌விட்டார்.


பின்னால் விழுந்தவளின் அருகே வந்து கன்னங்களை பற்றியவர் "இதுக்கு பதிலா நீ என்னை கொன்னுப் போட்டிருக்கலாம். நம்பிக்கை இல்லாத இடத்துல என்ன ***க்கு காதல் மட்டும்.?" எனக் கேட்டார்.


காந்திமதி விழிகளை மூடினாள். ஆனாலும் கண்ணீர் வழிந்தது.


"சாரி.."


"போய் சாவு.." என்றவர் அவளை விட்டு விலகி நடந்தார்.


எழுந்தவள் இடைவெளி விட்டு அவரை பின்தொடர்ந்தாள். நடந்ததை மட்டும்தான் சொல்லியிருந்தாள். யார் என்னவென்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் காத்தவராயனின் கோபம் இதை விட அதிகமாய் போகும் என்று அறிவாள்.


காத்தவராயனால் நடக்க முடியவில்லை. முன்பாவது விஷ பூச்சி கடித்ததென்று நடித்தார். ஆனால் இப்போது மனதுக்குள்ளே விஷம் பரவி விட்டது. இத்தனை வருடங்களாய் இவளிடம் கேட்டதற்கு பதிலாய் நாண்டுக் கொண்டிருந்திருக்கலாம் என்று நினைத்தார். காந்தமதியின் மீதான கோபம் துளியும் குறையாமல் இருந்தது. அவளிடம் சல்லாபித்த இரவுகளும் பகல்களும் கேவலமாய் வந்து நின்று சிரித்துப் போயின.


"சங்கவி.." மனைவியின் கையை அவசரமாக பற்றினான் ஆதீரன். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த அவளின் விரலை அழுத்திப் பிடித்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments