Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 45

 ஆதீரனின் பதறும் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு காயத்தின் வலி மறைவது போலிருந்தது. அவளின் கை விரலை தனது சட்டையின் நுனியால் இறுக்கி பிடித்திருந்தான். அவனின் சட்டை முழுக்க சிவப்பாக மாறிக் கொண்டிருந்தது.


"உன்னை எவன் காய் வெட்ட சொன்னான்.?" குரைக்காத குறையாக கேட்டான்.


"தினமும்தான் வெட்டுறேன்.. ஆனா இன்னைக்கு எப்படியோ கையில் பட்டுடுச்சி மாமா.." என்றாள் வருத்தமாக.


"இனி நீ கிச்சன்குள்ள போகாதே.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். 


அவளை அமர வைத்தவன் முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான். மருந்திட்டு கட்டுப் போட்டான். 


"ரொம்ப வலியா சங்கவி.? ஹாஸ்பிட்டல் போகலாமா.?" எனக் கேட்டவனின் கண்களில் அதிகளவு வலி இருந்தது.


"ஒன்னும் இல்ல மாமா.. வலிக்கல.." என்றவளின் கன்னங்களை பற்றினான்.


"கவனமா இரும்மா.. உனக்கு ஏதாவது ஆச்சின்னா அப்புறம் என்னால தாங்கிக்கவே முடியாது.." என்றான் சொக்கும் விழிகளோடு.


அவனின் பேச்சைக் கேட்டு கரைந்துக் கொண்டிருந்தது அவளின் உயிர்.


"என் மேல அவ்வளவு பாசமா மாமா?" எதிர்காலத்தின் சதிராட்டம் புரியாத பாவையாக இருந்தாள் அவள்.


"உயிரே நீதான் சங்கவி.. நீ இல்லன்னா நான் வாழ்றதுல அர்த்தமே இருக்காது.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.


நெகிழ்ந்து கொண்டே இருந்தாள் சங்கவி. அவனின் ஆன்மாவிற்குள் தனது ஆன்மாவை கலந்து விட நினைத்தாள். அவனின் நெஞ்சத்தை முழுதாய் ஆக்கிரமிக்க நினைத்தாள். அவனின் சிந்தனையாய் மாற நினைத்தாள்.


"எப்பவும் என்னோடு இருங்க மாமா.. எப்பவும் என்னை இதே போல நேசிங்க.." என்றவளின் கண்கள் பார்த்தவன் "நான் சாகும் வரை இந்த மனசுல நீ மட்டும்தான் இருப்ப சங்கவி. இறந்த பிறகும் நீ மட்டும்தான் இருப்ப.. சத்தியம்.." என்று அவள் தலையின் மீது கை பதித்தான்.


யஷ்வந்தும் மற்றவர்களும் வீடு வந்தபோது குந்தவி அங்கே இல்லை. வேலைக்கு சென்றிருந்தாள். 


"குந்தவி செம பொறுப்பு.." என்றான். அவனை சந்தேகமாக பார்த்தாள் தாரணி.


மனைவியின் பார்வையை கவனிக்காதவன் கடிகாரத்தை பார்த்தான். மணி நான்கை தாண்டி விட்டிருந்தது.


"நான் போய் குந்தவியை கூட்டி வரேன்.." என்று கிளம்பிப் போனான்.


"அந்த பொண்ணும் உங்க அண்ணாவும் எத்தனை நாளா பிரெண்ட்ஸ்.? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படியொரு பிரெண்ட் இல்லையே.." சந்தேகத்தோடு தர்ஷினியிடம் கேட்டாள் தாரணி.


"எங்களுக்கும் தெரியாது. கொஞ்ச நாள் முன்னாடி கூட்டி வந்தான். அவங்க இரண்டு பேரும் பழகுவதை பார்த்து நான் கூட அவன் அவங்களைதான் கல்யாணம் பண்ணிக்க போறானோன்னு நினைச்சேன்.." என்ற தர்ஷினி தனது அறை நோக்கி நடந்தாள்.


மூளைக்குள் கரையான் அரிப்பதை உணர்ந்தவாறே ஹால் சோபாவில் அமர்ந்தாள் தாரணி. நகத்தை கடித்தபடி தன்னுடைய சிந்தனைக்குள் நுழைந்தாள்.


"நான் வீட்டுக்கு கிளம்ப போறேன்.. நீங்க?" என்ற குந்தவியிடம் "தூங்கி எழுந்திருக்கேன்.. குட் மார்னிங் செல்லா.." என்றான் போனிலிருந்தவன்.


"குட் மார்னிங்.." என்றவள் லிப்டுக்குள் நுழைந்து பட்டனை தட்டினாள். 


"செல்லா.. எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு.." ஏக்கமாக கேட்டான். அவனின் ஏக்கத்தில் உள்ளம் தொலைத்தாள்.


"வீடியோ கால் பண்ணட்டுங்களா.?" தயக்கத்தோடு கேட்டவளிடம் "வேண்டாம் செல்லா‌‌.." என்றான். "அப்புறம் உன் பக்கத்துல வரணும்.. உன்னை ஹக் பண்ணணும். கிஸ் பண்ணணும்ன்னு தோணும்.." ஏக்கம் தீராத அதே குரலில் சொன்னான்.


"நா..‌ நான் வேணா வரட்டுமா.?" அவளையும் மீறி கேட்டுவிட்டாள். எதிரில் அவன் சில நொடிகளுக்கு எதுவும் பேசவில்லை.


"ரியலி.?" சந்தேகத்தோடு கேட்டான்.


"எ.. என்கிட்ட பேப்பர்ஸ் எதுவும் இல்ல.. ஆதாரங்கள், என்னோட ப்ரூப்ஸ் எதுவும் இல்ல. அதனால என்னால வெளிநாட்டு பயணம் செய்ய முடியாது. யஷ்வந்த் சார் இப்போதுதான் எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காரு. எல்லாம் முடிஞ்சதுன்னா அப்புறம் வேணா வரேன்.." என்றாள்.


சூர்யாவுக்கு ஆச்சரியம் கூடியது. பேச முடியவில்லை சில நிமிடங்களுக்கு.


லிப்டை விட்டு வெளியே வந்தாள்.


"நீ இங்கே வந்தா பிறகு நான் உன்னை திருப்பி அனுப்பவே மாட்டேன் குன்டவி.. தெரியும்தானே அது.? இங்கே வந்த பிறகு நீ முழுசா இன்டியாவை மறந்தாகணும்.."


இம்முறை குன்டவி மௌனமானாள். 


"அப்படிதான் செய்யுங்க.." என்றவளுக்கு இப்போது வரையிலும் கூட தான் என்ன பாதையில் செல்கிறோம் என்று முழுதாக தெரியவில்லை.


"குந்தவி.." யஷ்வந்த் அழைத்துக் கொண்டே அவளருகே வந்தான்.


"நான் அப்புறம் கால் பண்றேன்.." என்று வைத்தவள் "நீங்க வந்துட்டிங்களா சார்.?" என்றாள் இவனிடம்.


"வந்தாச்சி. சரி வா. வீட்டுக்கு போகலாம்.." என்று கைப்பிடித்து இழுத்தான்.


இன்றைய நாளில் அவள் பார்த்த வேலைகளை பற்றி விசாரித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். சூர்யாவிடம் தான் பேசியதை பற்றி சொன்னாள். அவனுக்கும் சந்தோசமாக இருந்தது. 


"இதுக்கு மேலாவது அவன் என்னை தொந்தரவு செய்யாம இருப்பான்.." என்றான் கிண்டலாக. "ஆனா அவர் இப்பவும் கூட உங்களை தொந்தரவு செய்வது இல்லையே.. நாங்க பேசிக்க ஆரம்பிச்ச பிறகு உங்களுக்கு கால்ஸ் கூட அவ்வளவா வராதே‌.." என்றாள் சந்தேகமாக.


"பாயிண்டை பிடிச்சிட்டியே குந்தவி.." என்று சிரித்தவன் வீட்டின் முன் காரை நிறுத்துவிட்டு இறங்கினான்.


"அப்புறம் நான் உன்னை மிஸ் பண்ணேன்.." சோகமாக சொன்னவனை பார்த்து புன்னகைத்தவள் 'ஆனா எனக்கு உங்க டார்ச்சர் இல்லாம இருந்தது..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.


"நீ என்னை மிஸ் பண்ண மாட்டியா?" எனக் கேட்டவனுக்கு பதிலை சொல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தாள்.


"குந்தவி நிஜமாவா.? உன் மனசுல எனக்கு தனி இடம் இருக்குன்னு நினைச்சேன்.." உண்மையான வருத்தத்தோடு சொன்னவனை திரும்பிப் பார்த்தவள் அவனிடம் பதில் சொல்லும் முன் "இங்கே என்ன நடக்குது.?" என்றாள் தாரணி.


யஷ்வந்த் திரும்பிப் பார்த்தான். அவன் விட்டுச் சென்ற அதே இடத்தில் அவள் இருப்பது போலிருந்தது.


"புரியல தாரு.." என்றவனை முறைத்தவள் எழுந்து நின்றாள். கையை கட்டியபடி கணவன் முன் வந்து நின்றாள்.


"மனசுல ஒன்னு வெளியே ஒன்னுன்னு எனக்கு எப்பவும் பேச வராதுங்க.." என்றவளை கேலியோடு பார்த்தவன் "அதுதான் தெரியுமே.! மேட்டர் என்னன்னு சொல்லு.." என்றான்.


"யார் இவ.?" 


பற்களை அரைத்தான். "யார் இவங்க.?" என்று திருத்தினான். 


வீட்டுக்குள் அங்கங்கே இருந்த மற்றவர்களும் வந்துச் சேர்ந்தார்கள்.


"யார் இவங்க.?" பற்களை கடித்தபடி கேட்டாள். அவன் தன்னை அவமானப்படுத்துவதை போல உணர்ந்தாள்.


"என் பிரெண்ட்.." என்று அவன் சொன்னதும் குந்தவியை தலை முதல் கால் வரை பார்த்தாள். அவள் பார்த்த பார்வையில் குந்தவிக்கு மொத்த உடம்பும் கூசியது.


"என்ன மாதிரி பிரெண்ட்..?" குரல் வேறு ஒன்றாக இருந்தது தாரணிக்கு. அவளின் சந்தேகம் நொடியில் புரிந்து விட்டது யஷ்வந்துக்கு.


"நீ என்ன நினைக்கற.?" என்றான் கண்களை உருட்டி.


"அண்ணி.." யவனா அருகில் வந்து நின்றாள். அண்ணனும் அண்ணியும் சண்டை போட்டுக் கொள்வார்களோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.


"அவனை கோபப்படுத்தும்படி எதுவும் சொல்லிடாதிங்க அண்ணி.." என்றாள் பயத்தோடு.


தாரணிக்கு இருந்த கோபத்திற்கு யஷ்வந்தை தோலை உரித்து கேள்விக் கேட்டிருப்பாள். ஆனால் நடு கூடத்தில் நின்று கேள்வி கேட்டால் பிறகு அவனுக்கும் தனக்கும் சண்டை வந்ததை மற்றவர்கள் அறிந்துக் கொள்வார்கள், அது எதிர்காலத்தில் பிரச்சனையாகும் என்பதை புரிந்துக் கொண்டவள் "என்ன மாதிரின்னு எனக்கு எப்படி தெரியும்.. உங்களுக்குதான் தெரியும்.." என்றாள். அவனை முறைத்தபடியை தங்களது அறை நோக்கி நடந்தாள்.


குந்தவிக்குதான் சங்கடமாக இருந்தது. யஷ்வந்த் மனைவியை பின்தொடர்ந்து ஓடினான். அவள் அறையின் கதவை திறக்கும் முன்னால் அவளின் கைப்பிடித்து நிறுத்தினான்.


"மனசுல ஒன்னும் வெளியே ஒன்னுமா பேசாதவ இன்னைக்கு எதையோ மறைக்கற மாதிரி இருக்கு.." என்றான் பாதி கேலியும் பாதி கோபமுமாக.


தங்களை கடந்துச் செல்லும் வேலைக்காரரின் முதுகை வெறித்தவள் "உள்ளே போய் பேசலாமா.?" என்றாள் புருவம் உயர்த்தி.


"தேவியாருக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல போல.." என்றபடியே உள்ளே நடந்தவனை உதட்டை கடித்தபடி பார்த்தாள். "தலைவனுக்குதான் தலையெழுத்து சரியில்லாம போச்சி போல.." என்று முனகியபடி வந்து கதவை உள்ளே சாத்தினாள்.


"யார் அவ.?" முன்பிருந்த பொறுமை இல்லை. முழுக்க முழுக்க பொறாமை மட்டும்தான் இருந்தது.


"பிரெண்ட்.?"


"என்ன மாதிரியான பிரெண்டுன்னு கேட்டேன்." என்றவளுக்கு குரலும் ஏறியிருந்தது. கோபமும் கூடியிருந்தது.


சட்டை கையினை மடித்து விட்டபடி அவளை நேராக பார்த்தான். "பிரெண்டுல கூட வகையறா உண்டா?" எனக் கேட்டான் நக்கலாக.


"இருக்கே.. நட்பை ஷேர் பண்ற பிரெண்ட்.. படுக்கையை ஷேர் பண்ற பிரெண்ட்.. இவ என்ன ரகம்.? நாலு மாசமா நீங்க என்னை தேடி வரலன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன் நான்.. ஆனா நீங்க இவளோடு கூத்தடிச்சிட்டு இருந்திருக்கிங்க.." என்றாள் ஆத்திரத்தோடு.


"வீணா வாயை விடாதே தாரணி.." என்றவனை பேசவே விடவில்லை அவள்.


"நான் ஏன் பேச கூடாது.. லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டு போகலாம்ன்னு இருந்திருக்கிங்க. அவளுக்கு வீடு வாசல் இல்லையா.? அவ என்ன உங்க வைப்பாட்டியா.? எதுக்காக வீடு வரைக்கும் கூட்டி வந்து வச்சிருக்கிங்க.?" என்றவளின் கன்னத்தில் விழுந்தது பளீரென்று ஒரு அறை.


"பிரிச்சி மேஞ்சிடுவேன்.. லவ்வரை நம்புடி முதல்ல.." என்றவனின் கன்னத்தில் அவனை விட அதிக விசையோடு ஒரு அறையை விட்டாள்.


பற்களை கடித்தவன் கையை இறுக்கினான்.


"நான் உன்னை லவ் பண்றேன் தாரு.. நமக்கு மேரேஜ் ஆயிடுச்சி. இங்கே நீ என்னை சந்தேகப்படுவது கொஞ்சமும் நியாயம் கிடையாது.. அவ என்னோட பிரெண்ட் மட்டும்தான்.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.


"நான் நம்ப மாட்டேன். அதுவும் அவளுக்காக நீங்க என்னை அடிச்ச பிறகு உங்களை எப்பவுமே நம்ப மாட்டேன்.." என்றவள் கன்னத்தை பிடித்தபடி வெளியே ஓடினாள்.


எட்டி அவளின் கைப்பிடித்தவன் "நிஜமாவே நீ என்னை நம்ப மாட்டியா.?" எனக் கேட்டான். அவன் குரலில் கோபத்தை விட சோகம் அதிகம் சேர்ந்து விட்டது இப்போது.


"ஏன் நம்பணும்.? பொண்டாட்டி குத்துக்கல்லு மாதிரி இருக்கேன். அவளை தேடி ஓடுறிங்க.. எப்பவும் அட்டை போல உங்களோடு சுத்துறா.. ஐ ஹேவ் பீலிங்ஸ்.. நான் ஒன்னும் ரோபோட் கிடையாது. நான் முட்டாளும் கிடையாது.. என்ன காரணம் அவ இங்கே இருக்க.? என்ன காரணம் அவ மனசுல உங்களுக்கு நீங்க இடம் தேட.? லவ்ன்னா மியூச்சுவலா இருக்கணும்.. நான் பில்லியனரோட பொண்ணு கிடையாது. அதனால நீங்க எத்தனை கேர்ள் பிரெண்ட் வச்சிக்கிட்டாலும், அவங்களை வீட்டுக்கே கூட்டி வந்து கூத்தடிச்சாலும் கூட நான் அமைதியா இருப்பேன்னு நினைச்சிட்டிங்க. அதானே.?" என்றவளை கண்கள் இடுங்க பார்த்தான்.


"ஆக நீ உண்மையாவே நம்பல.." என்றவனின் பிடியிலிருந்து கையை உருவினாள்.


"மாட்டேன்.. அவளை வீட்டை விட்டு அனுப்புங்க. அப்ப நம்புறேன். ஆபிஸ்ல வேலை தந்திருக்கிங்க.. டிவென்டி போர் ஹவர்ஸும் ஒட்டிக்கிட்டே திரியணுமா.? பொண்டாட்டியை கொஞ்ச கூட நேரம் இல்ல சாருக்கு.. ஆனா எவ்ளோ ஒருத்தியை கைப்பிடிச்சி கூட்டிட்டு சுத்துறிங்க.. எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல.. என்னை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். அப்படியிருந்தும் இந்த செட்டப் உங்களுக்கு. என்னை விட அவ அவ்வளவு அழகா.. பெட்ல கூட ரொம்ப கச்சிதமா இருக்காளா.?"


நெற்றியை தேய்த்தான். "தப்பு தப்பா பேசாத.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. நானும் அப்படி கிடையாது. வீ ஆர் ஜஸ்ட் பிரெண்ட்ஸ்.." என்றவன் அவளின் கன்னங்கள் அள்ளினான்.


"நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். ப்ளீஸ் புரிஞ்சிக்க.. உன்னை விட யாரும் சிறப்பு கிடையாது.." என்றான் கெஞ்சல் குரலில்.


நாளைக்கு ஒரு நாளைக்கும் யூடி வராது நட்புக்களே.. ஏனா இந்த நாள்லதான் நான் போய் தகடூர் தங்க தாரகை விருது வாங்கிட்டு‌ வந்தேன். ஆல் இன்டியா ரேடியோ தருமபுரி பண்பலையில் இளம் தென்றல் நிகழ்ச்சியில் நேரலையில் கலந்துக்கிட்டு என் எழுத்து பயணம் பத்தி இன்டர்வியூ தந்துட்டு வந்தேன்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments