Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 48

 குந்தவி போனை வெறித்தாள். சூர்யாவுக்கு மீண்டும் அழைத்தாள். ஆனால் அவன் அழைப்பை ஏற்கவில்லை.


அவனின் நன்மைக்காகதான் இப்படி சொன்னாள். காதல் வந்ததோ இல்லையோ அவனை வேறு ஒருத்திக்கு விட்ட தர விரும்பவில்லை இவள். 


மறுபடியும் அழைத்து பார்த்தாள். அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவள் "சாரி..‌ நான் உங்களை கோபப்படுத்த நினைக்கல. நீங்க என்னை காரணம் காட்டி கஷ்டப்படுவதை விரும்பல நான்.. நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேன். உங்களால உங்க பிசினஸை காப்பாத்திக்க முடியும். அப்படி சொன்னதுக்கு சாரி. மன்னிச்சிடுங்க.." என்று செய்தி அனுப்பி வைத்தாள்.


அவனிடமிருந்து பதில் வரவில்லை. மனம் அடித்துக் கொண்டது. என்ன செய்கிறானோ என்று பயந்தது உள்ளம். 


இருபது நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தாள்‌. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.


தாரணி யஷ்வந்தின் முகம் பார்த்தாள். "உங்க அப்பா சொல்ற மாதிரி செய்யலாமே.. அப்புறம் நமக்கு பிரச்சனை வராது.." என்றாள்.


அவளை முறைத்தான் யஷ்வந்த்.


"அவர் சொன்னதை கேட்டு நான் என் மாமா மகளை கல்யாணம் பண்ணியிருந்தா உனக்கு எப்படி இருந்திருக்கும்.?" எனக் கேட்டான். அவள் முகம் நொடியில் கறுத்து விட்டது. கோபமும் வருத்தமும் வந்தது.


"உனக்கு எப்படி பீலிங்ஸ் இருக்கோ அதே போலதான் மத்தவங்களுக்கும் இருக்கும். சூர்யா வேற ஒருத்தியை கல்யாணம் செஞ்சா அவனோட லவ்வருக்கு எவ்வளவு வலிக்கும்ன்னு யோசிச்சி பாரு.." என்றான்.


தாரணியால் அவ்வளவு நல்லவிதமாக யோசிக்க முடியவில்லை. சூர்யாவும் தர்ஷினியும் திருமணம் செய்துக் கொண்டால் பிறகு தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று மட்டும்தான் யோசித்தாள்.


அவள் யோசனையில் இருந்த அதே நேரத்தில் அந்த அறையின் கதவை தட்டினாள் குந்தவி. யஷ்வந்த் எழுந்து சென்று கதவை திறந்தான்.


குந்தவி கண்கள் கலங்க நின்றிருந்தாள்.


"என்னாச்சி குந்தவி.?" கவலையாக கேட்டான் இவன்.


"சூர்யா‌ போன் எடுக்க மாட்டேங்கிறாரு.." சொல்லி முடிக்கும் முன்னால் கண்ணீர் விழிகளை தாண்டி விட்டது.


"ஏன்.?" குழப்பமாக கேட்டான்.


"பிசினஸ் பிரச்சனை தீர்ந்துடும், தர்ஷினியை மேரேஜ் பண்ணிக்கங்க சொன்னேன். கோவிச்சிக்கிட்டாரு.‌. நான் மறுபடி மறுபடி போன் பண்ணேன். எடுக்க மாட்டேங்கிறாரு.‌ சாரின்னு நிறைய மெஸேஜ் அனுப்பினேன். ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறாரு.." என்றவள் முகத்தை பொத்தினாள்.


"பயமா இருக்கு சார்.. நான் வேணும்ன்னு சொல்லல.. நான் அவருக்கு தடையா இருந்திட கூடாதேன்னு சொல்லிட்டேன்.. ப்ளீஸ் எப்படியாவது பேசி சமாதானம் செய்ங்க.. அவர் ஏற்கனவே ரொம்ப டென்சன்லதான் இருந்தாரு. ரொம்ப பீல் பண்ணிட்டு இருப்பாரு இப்ப.. நீங்க சொன்னா அவர் கேட்பாரு.. பேசி‌ பாருங்க.." என்றாள் கெஞ்சலாக.


அவளை வெறித்தான் யஷ்வந்த்.


"நீ அவனை லவ் பண்றியா.?" எனக் கேட்டான்.


"சத்தியமா தெரியல சார்.." என்று விம்மியவளின் கைகளை விலக்கினான். அவளின் முகத்தை துடைத்து விட்டான்.‌ அவர்களை பார்த்தபடி நின்றிருந்த தாரணியை இருவருமே கவனிக்காமல் போய் விட்டனர். இவனின் செயலால் அவளின் மனம் கனற ஆரம்பித்ததையும் கவனிக்காமல் போயினர்.


"நான் பேசுறேன்.." என்றான்.


"தேங்க்ஸ் சார்.." என்றவளிடம் தலையை‌ அசைத்தான். "நீ போ.." என்றான்.


"மறக்காம எனக்கு ஒரு கால் பண்ண சொல்லுங்க சார்.." என்றுவிட்டு நகர்ந்தாள்.


யஷ்வந்த் நெற்றியை பிடித்தான். பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்தான்.‌ சூர்யாவுக்கு அழைத்தான்.


இரண்டாவது ரிங்கில் எடுத்தான்.


"சூர்யா.."


"சொல்லு யஸ்வேந்த்.." என்றவனிடம்‌ "அவளோடு எதுக்கு சண்டை போட்ட.? என்கிட்ட வந்து அழறாடா.. பாவமா இருக்கு.. உன் மேல இருக்கற அக்கறையில் முட்டாள்தனமா எதையோ சொல்லிட்டா.. அதுக்காக‌ கோபம் ஏன் உனக்கு.? அவளோடு போன் பண்ணி பேசுடா.. அவ ரொம்ப நொந்துப்‌ போயிருக்கா.. உன் மேல இருக்கும் லவ்வை உணர கூட முடியாத அளவுக்கு அவளுக்கு ஏதோ பிரச்சனை. நீ விட்டுட்டா அப்புறம் அவளை பிடிக்க முடியாம போயிடும்.." என்றான்.


சூர்யா பெருமூச்சு விட்டான்.


"நான் பேசுறேன். தேங்க்ஸ் யஸ்வேந்த்.." என்று இணைப்பை துண்டித்தான்.


குந்தவி போனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். போன் அதிர்ந்ததும் அழைப்பேற்றாள்.


"ஹலோ சூர்யா.." என்றாள் அவசரமாக.


"ம்.." என்றவன் மேலே பேசாமல் இருந்தான்.


"சாரி சூர்யா. நான் இனி அப்படி சொல்ல மாட்டேன்.." என்றாள் அழு‌ குரலில்.


"அழறியா செல்லா.?"


"ம். ஆமா."


"ஏன்.?" 


"ஏனா நீங்க கோபமா இருக்கிங்க.." என்றவளிடம் "என் கோபத்தை கூட உன்னால தாங்க முடியல. இது லவ்வா செல்லா.?" எனக் கேட்டான்.


"தெரியல சூர்யா..  ஆனா உங்க சந்தோசத்தை விரும்புது என் மனசு.." என்றாள் அதே அழுகையோடு.


"அழாதே செல்லா.. நீ அழுதா என்னால தாங்க முடியாது. இது உனக்கு அந்த முதல் நாள்லயே தெரியும்.." 


குந்தவி விழிகளை மூடினாள். அன்று‌ முதல் முறை கூடியபோது வலியில் அழுதது கூட அப்போது நினைவில் இல்லை. ஆனால் இப்போதோ அவன் அழுததும் கூட சேர்ந்து நினைவில் இருந்தது. தனது கண்ணீர் ஏன் அவன் கண்ணில் கண்ணீரை தந்தது என்ற விசயம் அவளுக்கு புரியவில்லை.


"நான் ரொம்ப டிப்ரஷன்ல இருக்கேன். நீ அப்படி சொல்லவும் ரொம்ப நொந்து போயிட்டேன். என்னை நீயே நம்பல. இனி யார் நம்புவான்னு மனசுல ஒரு கேள்வி.. ரொம்ப உடைஞ்சிட்டேன் செல்லா.." 


"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சாரி சூர்யா.. நான் நிஜமா மீன் பண்ணல.." அழுகையும் கெஞ்சலும் சரிசமமாக இருந்தது அவளின் குரலில்.


"இட்ஸ் ஓகே செல்லா. நீ அழாதே.. நான் என்னை சரி பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன்.. அங்கே நைட் ஆகியிருக்கும். சாப்பிட்டு தூங்கு.. குட் நைட்.." என்று அழைப்பை துண்டித்தான்.


இரவு உணவு உண்ண மனோகர் வரவில்லை. அவருக்கு அவரின் ஆபிஸ் அறையில் கொண்டு சென்று உணவை தந்து வந்தாள் வேலைக்காரி ஒருவள்.


தாரணி குந்தவியை எடைப் போட்டுக் கொண்டிருந்தாள். யஷ்வந்தும் அவளும் அடிக்கடி பார்த்து புன்னகைத்துக் கொண்டது கண்டு தனக்குள் எரிந்தாள்.


கொண்டு வந்து வைத்த இரவு சாப்பாடு டீப்பாயின் மீது காய்ந்தபடி கிடந்தது. மனோகர் கணினியில் தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவரின் மனம் முழுக்க அலெக்ஸின் மனதை வீழ்த்துவது எப்படி என்ற யோசனையிலேயே இருந்தது.


"அப்பா.." தர்ஷினியின் குரலில் நிமிர்ந்தார். மகளின் அருகே நின்றிருந்த மருமகளை கண்டு முகம் சுளித்தார்.


தாரணி கையை கட்டியபடி உள்ளே வந்தாள்.


காய்ந்துக் கொண்டிருந்த உணவை பார்த்தவாறே வந்து சோபாவில் அமர்ந்தாள்.


"ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்.." என்றவளை எரிச்சலோடு பார்த்தவர் "என்ன.?" என்றார்.


"சூர்யாவோட லவ்வர் யார்ன்னு எனக்கு தெரியும்.." என்றவள் கையை தட்டிக் கொண்டாள். உள்ளங்கை தூசியை ஊதினாள்.


தர்ஷினி அதிர்ச்சியோடு அண்ணியை பார்த்தாள். அப்பாவோடு பேச துணைக்கு அழைத்து வந்திருந்தாள். ஆனால் இவளிடம் இவ்வளவு பெரிய செய்தி இருக்கும் என்று யோசிக்காமல் போய் விட்டாள்.


"யார்..?" மேஜையை விட்டு எழுந்து வந்து அவள் முன் அமர்ந்தபடியே கேட்டார் மனோகர்.


"சொல்றேன்.. ஆனா அதனால் எனக்கு என்ன லாபம்.?" புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.


அவள் பேசும் தோரணை அவருக்கு பிடித்திருந்தது. அவளின் நேரடி பேச்சும் பிடித்திருந்தது.


"என்ன வேணும்.?" என்றவர் கால் மேல் கால் போட்டபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து மருமகளை பார்த்தார்.


"என்னையும் யஷூவையும் எப்பவும் டிஸ்டர்ப் பண்ண கூடாது. அவரை பிடிச்சிருக்கு எனக்கு. எங்களை பிரிக்க டிரை பண்ண கூடாது நீங்க.." 


அவளை கூர்ந்துப் பார்த்தவர் "சரி.." என்றார்.


"குந்தவி.." என்றவளை குழப்பத்தோடு பார்த்தனர் அப்பாவும் மகளும்.


"அவதான் சூர்யாவோட லவ்வர்.. சூர்யா அவளுக்காகதான் தர்ஷினியை வேணாம்ன்னு சொன்னாரு.." என்றவள் யோசனையோடு மாமனாரைப் பார்த்தாள்.


"என்ன செய்ய போறிங்க.?" எனக் கேட்டாள்.


"அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டுடலாம் அப்பா.." என்ற நாத்தனாரிடம் மறுப்பாக தலையசைத்தாள் தாரணி.


"அவளை அனுப்பினா அப்புறம் அவ நேரா சூர்யாகிட்ட போயிடுவா.." என்றாள்.


இருவருக்கும் திக்கென்று இருந்தது.


"அனாதையா இருப்பவளை காரணமே இல்லாம இவன் கொண்டு வந்து வீட்டுல வைக்கும்போதே யோசிச்சி இருக்கணும் நாம.. அவன் சூர்யாவுக்காக இவளை கூட்டி வந்திருக்கான்.." என்று எரிந்து விழுந்தாள் தர்ஷினி.


"இந்த பிரச்சனையை பொறுமையா வேற மாதிரி தீர்க்கணும்.. இல்லன்னா எந்த ப்ளான் போட்டாலும் சொதப்பிடும்.." என்ற மருமகளை பார்த்த மனோகர் "உன் திட்டம் என்ன.?" எனக் கேட்டார்.


அவள் சொல்ல போகும் பதில்தான் அவளை தனது அடுத்த வாரிசாக ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் என நினைத்தார்.


"அவளை கொன்னுடலாம்.." என்றவளை கண்கள் மின்ன பார்த்தார் மனோகர்.


"எனக்கேத்த மருமகள்.." என்று கையை நீட்டினார்.


"நான் இம்ப்ரஸ்ட்.. நீதான் என் மருமகள்.." என்றார்.


விழிகளை சுழற்றியபடி கையை பற்றி குலுக்கினாள்.


"நல்லா திட்டமிட்டு அவளை ஒரேடியா தூக்கணும்.. அப்பதான் சூர்யாவுக்கு தர்ஷினியை மேரேஜ் பண்ணி தர முடியும். எனக்கும் என் வாழ்க்கையிலிருந்து ஒரு தொல்லையா ஒழிச்ச நிம்மதி கிடைக்கும்.." என்றவள் எழுந்து நின்றாள்.


"பொறுமையா யோசிங்க. என்கிட்ட நீங்க எப்ப வேணாலும் இதை பத்தி பேசலாம்.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டாள்.


தர்ஷினி நகத்தை கடித்தபடி தந்தையின் முன்னால் அமர்ந்தாள்.


"அண்ணனுக்கு என் மேல கொஞ்சமும் அக்கறை இல்ல. ஒரு அனாதை பிச்சைக்காரிக்கு சூர்யாவை சொந்தமாக்க நினைக்கிறான்.." என்று புலம்பியவள் தந்தையின் முகம் பார்த்தாள்.


"அப்பா எனக்கு சூர்யா வேணும்.. நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே.. அவ எவ்வளவு கொடூரமா செத்தாலும் பரவால்ல.." என்றவள் எழுந்தாள். அங்கிருந்து போனாள்.


மனோகர் யோசித்தார். ஆறிக் கொண்டிருந்த உணவை உண்டார். ஒரு முடிவுக்கு வந்தார்.


வீடு அமைதியாய் இருந்தது. அந்த அமைதியை குலைக்கும் விதமாக குண்டு ஒன்று தோட்டாவை விட்டு புறப்பட்டு வீட்டின் முன்னால் இருந்த மரத்தில் சென்று பாய்ந்தது.


காத்தவராயன் அடுத்த குண்டை நிரப்பினார். துப்பாக்கியை மீண்டும் குறி பார்த்தார். ஓரக்கண்ணால் ஹாலில் அமர்ந்திருந்த காந்திமதியை பார்த்தார். பயந்தபடி அமர்ந்திருந்தாள். மறுபடியும் சுட்டார். துள்ளி விழுந்தாள் அவள். பசி தாண்டி எப்படியோ அந்த பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி விட்டனர் இருவரும். ஆனால் காந்திமதியோடு இப்போது வரையிலும் பேசவில்லை அவர்.


காந்திமதி அழுதும் பிரயோஜனம் இல்லை. கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை.


சாப்பாட்டை செய்து முடித்த சமையல்காரி வீட்டிலிருந்து புறப்பட்டாள்.


"காத்தவராயா‌ சாப்பிடலாமா.?" எனக் கேட்ட காந்திமதியை நோக்கி துப்பாக்கியின் முனையை நீட்டினார். அவளின் பயம் அவளுடைய கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.


வரும் கோபத்திற்கு சுட்டு விடலாமா என்று தோன்றியது. தன்னை தானே‌ கட்டுப்படுத்திக் கொண்டவர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி நடந்தார்.


"சாரி.." என்றவளை திரும்பிப் பார்க்கவில்லை அவர்.


"நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்று அவள் சொன்னதும் சட்டென்று திரும்பினார். வேகமாக அவளிடம் வந்தார். 


"போய் செத்துடுன்னு அன்னைக்கே சொல்லிட்டேன். வாழ்க்கையே முழுசா முடிஞ்சி போச்சி‌. இனி கல்யாணம்தான் குறைச்சலா.? கருமாதி‌ மட்டும்தான் பாக்கி நம்ம வாழ்க்கையில்.. இத்தனை வருசம் நான் கெஞ்சும்போது எப்படி வீராப்பா இருந்தியோ அப்படியே இப்பவும் இருந்து தொலை.. நீ இல்லன்னா நான் செத்துட மாட்டேன். இத்தனை வருசம் வாழல.. இனி என்ன வந்துட போகுது..?" எனக் கேட்டவர் அவளின் கையை பிடித்து இழுத்து‌ வந்து வாசலில் தள்ளினார்.


"இப்படியே தொலைஞ்சி போயிடு.. நான் நிம்மதியா இருப்பேன்.." என்றவர் கதவை அறைந்து சாத்தினார்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments