Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 50

 தந்தையை கலவரமாக பார்த்தாள் சங்கவி.


"அவன் வேணாம்.. அவனாலதான் உன் அக்கா செத்திருக்கான்னு தெரிஞ்ச பிறகும் உன்னால எப்படி அவனை காதலிக்க முடிஞ்சது.? சாப்பாட்டுல நீ கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிட்டா அவனை விட்டுடு.. டைவர்ஸ் பண்ணிடு.." என்றார் ஒரே முடிவாக.


சங்கவிக்கு அழுகை வரும் போல இருந்தது. எப்படி அவனை பிரிய முடியும்.? எப்படி அவனை மறக்க முடியும்.?


"என்னால முடியும்ன்னு தோணலப்பா.. அவரை பிடிச்சிருக்கு.." என்றவளை வெறித்தவர் "அப்படின்னா நான் சாகறேன். அவனால நம்ம மொத்த குடும்பமும் சீரழிஞ்சி போச்சி. உன்னையும் அவன்கிட்ட பலி தரதுக்கு பதிலா நானே செத்துட்டு போறேன்.." என்றார்.


"அப்பா.. ப்ளீஸ் அப்படி சொல்லாதிங்க.. என் ஒரே சொந்தமா நீங்க மட்டும்தான் இருக்கிங்க.. அவர் ரொம்ப நல்லவர்.. என்னை நல்லா பார்த்துக்கறாரு.." அழுகையோடு சொன்னாள்.


"அவன் நல்லவன் கிடையாது சங்கவி. அவன் உன்னை எப்படி கல்யாணம் பண்ணான்னு மறந்துட்டியா.? உன் கழுத்தை நெரிச்சான்னே அதை மறந்துட்டியா.? அவன்கிட்ட நீ சித்திரவதையை அனுபவிச்ச.. அன்னைக்கு உன்னை மீட்க போலிஸ் போனேன். ஆனா இன்னைக்கு உன் அக்கா சாவுக்கு அவன் காரணம். அவன் அதை காரணம் காட்டியாவது உன்னை விட்டுடட்டும். இனியாவது உனக்கு நிம்மதி கிடைக்கட்டும்.." என்றவரிடம் "அவர் இப்ப திருந்திட்டாருப்பா. என்னை லவ் பண்றாரு.. அவரை எனக்கு பிடிச்சிருக்கு.." என்றாள்.


"நான் சாக விருப்பமா.?" எனக் கேட்டவரிடம் மறுப்பாக தலையசைத்தாள். "அப்படின்னா அவனை விட்டுடு.. உனக்கு நான் வேணுமா அவன் வேணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க.." என்றார்.‌‌


சங்கவி நிலைக்கொள்ளாமல் தவித்தாள். எந்த பக்கம் செல்வது என்று தெரியவில்லை. அப்பாவும் வேண்டும். கணவனும் வேண்டும். இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையானாள்.


அன்று மதியத்தில் மோகன் மாத்திரைகளை விழுங்கி விட்டு படுத்தார். சங்கவி ஆதீரனுக்கு அழைத்தாள்.


பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு திருப்பி அழைத்தான் அவன். "உங்க வீட்டு வெளியே நிக்கிறேன்.." என்றான்.


அவசரமாக ஓடினாள். கதவை திறந்தாள். சாலையில் தன் காரின் அருகே நின்றிருந்தான். கேட்டை திறந்து ஓடியவள் அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.


"மாமா..‌" என்று அழுதவளின் முதுகை வருடி தந்தவன் "என்னாச்சி சங்கவி.? ஏன் அழற.?" எனக் கேட்டு அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.


"அப்பா நம்ம இரண்டு பேரையும் பிரிஞ்சிட சொல்றாரு.." அழுதபடியே சொன்னாள். சட்டென்று அவளை அணைத்துக் கொண்டான். கைகள் இரண்டையும் இறுக்கினான். அவளுக்கு உடம்பு வலிப்பது போல இருந்தது. ஆனால் அதை சொல்லும் நிலையில் இல்லை அவள்.


"என்னால விட முடியாது சங்கவி.. உன்னை பிரிய முடியாது.." என்றான் அணைப்பை மேலும் இறுக்கியபடி. 


"அவர் உடம்பு சரியில்லன்னுதான் உன்னை நேத்து அனுப்பி வச்சேன். இதுக்கு மேலே உன்னை இங்கே விட்டு வைப்பது என் முட்டாள்தனம்.. வா நாம நம்ம வீடு போகலாம்.." என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "ஆனா என்னால வர முடியாது மாமா.." என்றாள்.


"ஏன்.?" மிடறு விழுங்கியபடி கேட்டான். பயம் அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எப்போதும் கொள்ளும் கோபம் எங்கே போனது என்று குழம்பினாள் சங்கவி.


"அவர் சூஸைட் பண்ணிப்பேன்னு ப்ளாக்மெயில் பண்றாரு.." என்றவளின் கலங்கும் விழிகளை பார்த்தவன் "நீ.. நீ என்ன முடிவெடுத்திருக்க.?" எனக் கேட்டான். இதயம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.  பூகம்பம் வந்த பூமி போல நடுக்கம் கொண்டது மேனி. 


"கொ.. கொஞ்ச நாளுக்கு நான் இங்கேயே இருக்கட்டா.?" கெஞ்சலாக கேட்டாள். குழப்பமாக பார்த்தான் அவன். 


"ஏன் சங்கவி.?"


"அவர் மனசு மாறும் வரைக்கும்.‌. நீங்க நல்லவர்ன்னு அவர் நம்பும் வரைக்கும் நான் இங்கேயே அவரோடு இருக்கட்டா மாமா.? ப்ளீஸ்.. அவருக்கு ஏதாவது நடந்தா என்னால தாங்கிக்கவே முடியாது. அவர் என் ஒரே ரத்த வழி சொந்தம். அவரா இறங்கி வரும் வரைக்கும் என்னை இங்கேயே இருக்க விடுறிங்களா.?" 


ஆதீரன் பெரு மூச்சு விட்டுக் கொண்டான். அவளை மீண்டும் அணைத்தான். அவளின் கூந்தலில் முகம் புதைத்தான். அவளின் வாசத்தை முழுமையாக கிரகித்துக் கொண்டான். 


"சரி நீ போ.." என்றான் சில நிமிடங்கள் கழித்து.


தடுமாற்றமாக பார்த்தாள். "நான் வெயிட் பண்றேன் சங்கவி.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவளின் இதழில் சிறு முத்தம் பதித்தான். சிவந்துக் கொண்டிருந்த அவளின் முகத்தை ரசித்துப் பார்த்தவன் "மறக்காம போன் பண்ணு.. முடியலன்னா மெஸேஜாவது பண்ணு.." என்றான்.


சங்கவி சரியென்று தலையசைத்தாள். வீட்டை நோக்கி நடந்தாள். அவள் செல்லும் வரை அங்கேயே நின்றிருந்தான். அவள் கதவை தாழிட்ட பிறகு காரில் ஏறினான். முகத்தை தேய்த்துக் கொண்டான். இவள் இல்லாமல் எப்படி நேரமும் காலமும் போகும் என்று தன்னிடமே கேட்டுக் கொண்டான்.


தான் செய்த செயலுக்கான பதில் இப்படிதான் இருக்கும் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன் காரை திருப்பினான். அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.


குந்தவி லிப்டின் ஸ்விட்சை தட்டினாள். கீழே இறங்கியது லிஃப்ட். போன் அதிர்ந்தது. சூர்யா என தெரிந்ததும் அவசரமாக அழைப்பேற்றாள். அன்றைய சண்டைக்கு பிறகு இப்போதுதான் அழைத்திருக்கிறான். மனதின் கவலையை சரி செய்துக் கொண்டானா என்று கேள்வியோடு போனை காதில் வைத்தாள்.


"சூர்யா.."


"என் பேரை நீ சொல்லும்போது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு செல்லா.." என்றான்.


இவளுக்கு கொஞ்சமாக வெட்கம் வந்தது.


"என்ன பண்ற.?"


"லிப்ட்ல இருக்கேன்.. வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். கீழே யஷ்வந்த் சார் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு.." என்றவள் லிஃப்ட் குலுங்கி நிற்கவும் அந்த குலுக்கலில் போனை விட்டு விட்டாள். குழப்பத்தோடு சுற்றிலும் பார்த்தாள். லிஃப்ட் நகருவதாக தெரியவில்லை. பட்டன்களை அழுத்தினாள்.‌ எதுவும் வேலை செய்யவில்லை. எமர்ஜென்ஸி போனை எடுத்தாள். ஒரு சத்தமும் வரவில்லை. 


"ஹலோ செல்லா.." போனில் சூர்யா அழைப்பது கேட்டு போனை கையில் எடுத்தாள்.


"சூர்யா.. லிஃப்ட் நின்னுடுச்சி. என்ன செய்றதுன்னு தெரியல.." என்றவளிடம் "ஓ.. ஏதாவது டெக்னிக்கல் ப்ராப்ளமா இருக்கு.. நீ வெயிட் பண்ணு. சரியா போயிடும்.." என்றான்.


"ஆனா இங்கே போன் வொர்க் ஆகல.. பட்டன்ஸூம் வொர்க் ஆகல.." வருத்தமாக சொன்னாள்.


"நான் யஸ்வேந்த்க்கு போன் பண்ணி சொல்றேன்.." இணைப்பை துண்டித்துக் கொண்டான். 


குந்தவி மேலே பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. லிப்ட் ஆடியது. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பயம் வந்தது. எமர்ஜென்ஸி போனை எடுத்தாள். மீண்டும் அமைதி காத்தது. தனது போனில் ஆபிசில் வேலை செய்யும் மற்றவர்களுக்கு அழைத்தாள். எடுத்தவர்கள் பார்க்கிறோம் என்று சொன்னார்கள். குந்தவி காத்திருந்தாள். 


சூர்யா அழைத்தான். "யஸ்வேந்த் எமர்ஜென்ஸி டீமோடு வந்துட்டு இருக்கான்.. நீ வெளியே வந்துடலாம்.." என்றான்.


"ம்.." என்றவள் லிஃப்ட் ரொம்ப ஆடுது.. நேரா நிற்க முடியல.." என்றாள்.


ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்டான். ஆனால் அதை அவளிடம் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை.


"கவலைப்படாம இரு.." என்றவன் "செல்லா ஐ மிஸ் யூ.." என்றான்.


"நானும்.." அருகிலிருந்த கைப்பிடியை இறுக்க பற்றியபடி சொன்னாள்.


"உன்னை கிஸ் பண்ணணும் போலிருக்கு.. மறுபடியும் அதே மாதிரி நடக்கணும் போல இருக்கு.." என்றான்.


இந்த நேரத்தில் இப்படி பேசுகிறானே என்று அவளுக்கு வெட்கம் வந்து சேர்ந்தது. 


"உன் ஹிப்ல ஒரு மச்சம் இருக்கும் இல்ல.?" 


அவசரமாக இடுப்பை தடவியவள் ‌"தெ.. தெரியாது.." என்றாள்.


சிரித்தவன் "அதென்ன முதுகா தெரியாம இருக்க.? உன் முதுகுல ரொம்ப கீழே ஒரு சின்ன தழும்பு இருக்கும்.." என்றான்.


ஒற்றை கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.


"அது எப்படி வந்தது.?" எனக் கேட்டவனுக்கு எப்படி பதில் சொல்லாமல் தவிர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவள் லிப்ட் சர்ரென்று கீழே இறங்கவும் பயந்துப் போனாள். 


"அம்மா.." அலறியவளின் பயக் குரலில் எதிர் முனையில் பேசிக் கொண்டிருந்தவனுக்கும் உடம்பு நடுங்கியது.


"செல்லா.." பயந்து அழைத்தான். அவளின் கையிலிருந்த போன் கை தவறி கீழே விழுந்தது. 


அதிர்ந்து குலுங்கி கடைசியாக நின்றது லிப்ட். நடுக்கத்தோடு மேலும் கீழும் பார்த்தவள் அழுதபடி போனை எடுத்தாள்.


"சூர்யா.." 


"அழாதே செல்லா.. உனக்கு ஒன்னும் ஆகாது.." தைரியம் சொல்ல முயன்றான் அவன்.


"எனக்கு பயமா இருக்கு.." தரையில் அமர்ந்தாள். முட்டிக் கால்களை கட்டிக் கொண்டாள். 


"லிப்ட் அறுந்து விழுதா சூர்யா.? நான் செத்துடுவேனா.?" அழுதபடி அவள் கேட்கவும் "நோ.. நோ..‌‌ உனக்கு ஒன்னும் ஆகாது.." என்றான் அவசரமாக அவன்.


போனில் யஷ்வந்த் அழைத்தான். அழைப்பேற்று கான்பரன்ஸில் போட்டாள்.


"குந்தவி.. ஆர் யூ ஆல் ரைட்.?" எனக் கேட்டான் அவன்.


"அவ நல்லா இல்ல.. சீக்கிரம் லிப்டை சரி பண்ணு யஸ்வேந்த்.. அவ அழறா.." என்று சூர்யா பதில் சொன்னான்.


"லிப்ட் பிரச்சனை.. ரெடி பண்ண முடியல. எமர்ஜென்ஸி குழு அவளை வெளியே கொண்டு வரும் வேலையில் இருக்காங்க.." என்றவன் "குந்தவி கொஞ்ச நேரம் பொறு.. அவங்க உன்னை ரீச் பண்ணிடுவாங்க.. உனக்கு ஒன்னும் ஆகாது. நான் கேரண்டி.." என்றான்.


அவள் அழுதபடியேதான் இருந்தாள். சூர்யாவும் யஷ்வந்தும் மாறி மாறி தைரியம் சொன்னார்கள். 


பதினைந்து நிமிடங்கள் கடந்தது. லிப்டின் மேல் பகுதியை திறந்தார்கள் காப்பாற்ற வந்தவர்கள்.


"மேம் உங்க கையை கொடுங்க.." என்று கையை நீட்டினார்கள். குந்தவி பயத்தோடு எழுந்து கையை தந்தாள். மேலே நின்றிருந்த இருவரும் அவளை தூக்கினர்.‌ அவளின் உடம்பில் பெல்டை கட்டினார்கள். கயிறு மேலே சென்றது.


வெளியே சென்ற பிறகுதான் உயிரே வந்தது அவளுக்கு. 


"குந்தவி.." யஷ்வந்த் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.


"பயந்துட்டேன் நான்.. இப்ப ஓகேவா நீ.?" எனக் கேட்டவன் அவளை சோதித்தான். "கையில் காயம்.. வா மருந்து போட்டுக்க.." என்று இழுத்துப் போனான்.


"இவ்வளவு கேவலமா சொதப்பிய ப்ளானை நான் பார்த்ததே இல்ல.. நிஜமா உங்க மூளை எப்பவும் இப்படியேதான் வேலை செய்யுமா.?" நடப்பது அனைத்தையும் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த தாரணி தன் மாமனாரிடம் எரிச்சலாக கேட்டாள்.


"இருந்த டைம்க்கு இதைதான் அவங்களால செய்ய முடிஞ்சது. யாருக்கும் சந்தேகம் வர கூடாது. அவ மட்டும் சாகணும்ன்னா இப்படிதான் சொதப்பும்.." என்ற மனோகர் கோபத்தோடு மேஜையை குத்தினார்.


"அதுக்கு என்ன செய்ய.? நீங்க பெத்து வச்சிருக்கும் பையன் எப்பவும் அவளோடவே சுத்திட்டு இருந்தா நாம எப்படி அவளை மட்டும் தனியா தூக்குறது.?" எனக் கேட்டாள் தாரணி.


"ஒரு பிரச்சனையும் இல்ல.. நாளைக்கு இவளை டிரைவரோடு வெளியே அனுப்பலாம். லாரியை விட்டு தூக்கிடலாம்.." என்றார்.


யஷ்வந்த் தன்னை தேடி வந்த காவல் துறை அதிகாரிகளை வரவேற்றான்.


"லிப்ட் ஏன் இப்படி ஆனதுன்னு கண்டுபிடிச்சிங்களா.?" எனக் கேட்டான்.


"யாரோ வேணும்ன்னேதான் இதை பண்ணியிருக்காங்க.‌ சிசிடிவி புட்டேஜ் எதுவும் கிடைக்கல.. இது உங்களை நெருங்கியவங்களா இருக்க நிறைய சான்ஸ் இருக்கு.. நீங்க பத்திரமா இருந்துக்க பாருங்க.. நாங்க நிழல் போல வாட்ச் பண்றோம். ஆள் கிடைச்சதும் மறக்காம சொல்றோம்.." என்றவர் எழுந்து போனார்.


"நெருக்கமான ஆள் யாரா இருக்கும்.?" என்று யோசித்தவன் தனக்குள் குழம்பினான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments