Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 54

 தனது முடிவில் உறுதியாக இருந்தாள் சங்கவி.


"என்னால முடியாதுப்பா.." என்றாள்.


"உன்னை அடிச்சே சாகடிச்சிடுவேன்.." என்று மிரட்டினார் மோகன்.


"நான் பிரகனென்டா இருக்கேன்ப்பா.." தனது டெஸ்ட் ரிப்போர்டை காட்டினாள். இந்த காரணமாவது இவர் ஆதீரனை ஏற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு தரும் என்று நம்பிக்கை கொண்டாள்.


மோகன் ஒரு நிமிடம் சிலையாக நின்று விட்டார்.


"என்ன சொன்ன.?" என்றவர் அவள் கையிலிருந்த டெஸ்ட் ரிப்போர்டை பிடுங்கி பிரித்தார்.


ஆத்திரத்தில் முகம் சிவந்து போனது அவருக்கு. ரிப்போர்டை அவளின் முகத்தில் விசிறி அடித்தார்.


"நீ செஞ்ச காரியம் என்ன தெரியுமா.? இதுக்கு பதிலா நீ செத்து கூட போயிருக்கலாம்.." என்று கர்ஜித்தவர் "அவனை விவாகரத்து செய்ற.. இல்லன்னா நடக்கறதே வேற.." என்று கை காட்டி மிரட்டினார்.


சங்கவி முன்பு அறைப்பட்ட தன் கன்னத்தை பிடித்தபடி தரையில் விழுந்த ரிப்போர்ட் பேப்பரை எடுத்தாள். நெஞ்சில் விழுந்த காயத்திற்குதான் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது.


மௌனமாக தனது அறைக்கு சென்றாள். அப்பாவின் கோபத்தை சரி கட்டும்‌ வழி என்ன என்று யோசித்தாள். வயிற்றில் கை பதித்தாள்.


'உன் வருகையும் கூட உன் தாத்தாவுக்கான கோபத்தை குறைக்கல..' என்று வருத்தமாக சொன்னாள். தலையணையில் சாய்ந்தவளுக்கு அக்காவோ ஆதீரனோ யாராவது ஒருவர் அருகில் இருந்தால் நலமாய் இருக்கும் என்று தோன்றியது.


யவனா தந்த மாத்திரைகளை விழுங்கினாள் குந்தவி.‌ வேலைக்கு செல்ல விரும்பினாள். ஆனால் கூடாது என்று சொல்லி விட்டார்கள் அவளின் அறை வாயிலில் நின்றிருந்த பாடிகார்ட்ஸ். 


நேரம் மட்டும் சென்றுக் கொண்டிருப்பது போலிருந்தது. அலுவலகத்தில் இருந்தால் ஷீலா வேலை தந்தே மொத்த நேரத்தையும் திருடிக் கொண்டு இருந்திருப்பாள்.


சலிப்போடு புரண்டவள் கைபேசியை கையில் எடுத்தாள். சூர்யாவின் எண்ணை பதிந்தாள். அழைத்தாள். அழைப்பு டைவர்ட் ஆகி பூங்கொடிக்கு சென்றது. பூங்கொடியோடு சற்று நேரம் பேசியவள் போனை அணைத்தாள். சூர்யா சிறுபிள்ளைதனமாக சண்டையிடுவது போலிருந்தது அவளுக்கு.


அவனோடு பேச நினைத்தாள். "கால் மீ.." என்று செய்தி அனுப்பினாள்.


"நோ.." என்று நொடியில் வந்தது பதில்.


"சாரி.." அனுப்பிவிட்டு காத்திருந்தாள். ஒரு பதிலும் வரவில்லை.


ஐந்து நிமிடம் காத்திருந்தாள். அவனிடமிருந்து பதில் வரும் என்று தோன்றவில்லை.


"சாரி சூர்யா.. அன்னைக்கு நான் உங்களை முதல் முறையா மீட் பண்ணும்போது மனசால் இறந்தவளாதான் இருந்தேன். என் காதல் கை தொலைஞ்ச சோகம், என் தங்கச்சி லைப் சிதைஞ்சி போன கவலை.. வாழவே பிடிக்காத அந்த நேரத்துல என் சேவியரா வந்தது நீங்கதான். உங்களை கோபப்படுத்த நினைக்கல நான். சாரி. உங்களை காதலோடு பார்க்க முடியும்ன்னு தோணல எனக்கு. ஆனா நன்றிக்கடன் பட்டவளா இருப்பேன் எப்போதும்.. நான் செத்துட்டேன்னு என் வீட்டுல நம்ப வச்சிருக்கேன். அப்பதான் என் தங்கச்சி லைஃப் நல்லாருக்கும். என் முன்னாள் காதலன் நான் செத்துட்டேன்னு அந்த குற்ற உணர்விலாவது என் தங்கச்சியை நல்லா பார்த்துப்பார்ன்னு ஒரு நம்பிக்கை. செத்தவ செத்தவளாவே இருந்துட்டா ஆகும்ன்னு தோணுது இப்ப.. நீங்க என்னோடு பேசணும்ன்னு ஆசைப்படுறேன். உங்க குரல் கேட்க ஆசையா இருக்கு.. காய்ச்சலால் மனசு வெறுமையா இருக்கு சூர்யா. திட்டுங்க. வேற எதுவும் கூட கேட்கல நான். போனை பண்ணி திட்டுங்க.. ப்ளீஸ்.. உங்க குரலை கேட்கணும்.." என்று செய்தி அனுப்பினாள்.


இரண்டு நிமிடங்கள் முழுதாய் கரைந்தது. அவன் அழைக்கவில்லை. மின்னும் கண்ணீரோடு போனை தூர வைத்தவள் வெளியே செல்லலாம் என்று எழுந்தாள். போன் ஒலித்தது. பாய்ந்து எடுத்தாள். சூர்யா அழைத்திருந்தான்.


"ஹலோ சூர்யா.." ஆர்வமாக அழைத்தவள் மறுமுனையிலிருந்து பதில் வராமல் போகவும் மீண்டும் சோகமானாள்.


"சாரி.." என்றவளிடம் "தேவையில்ல.. ஐ லவ் யூ சொல்லு.." என்றான் அவன்.


மூச்சே நின்றது இவளுக்கு.


"இல்லன்னா நீ உயிரோடு இருக்கன்னு இன்டியன் நியூஸ் பேப்பர் எல்லாத்திலும் செய்தி தருவேன் நான்.." என்றவன் சிரமப்பட்டு தனது சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.


அவன் சொன்னது கேட்டு பயந்து விட்டாள் குந்தவி.


"அ‌‌.. அப்படி பண்ணிடாதிங்க சூர்யா.." என்றாள் கெஞ்சலாக.


"நான் கேட்டதை நீ இன்னும் சொல்லலையே.." 


"ஐ.. ஐ‌ லவ் யூ.." பயத்தோடு சொன்னாள்.


"லவ் யூ டூ.." என்று குழைந்தவன் "என்ன செய்ற.?" என்று ஆரம்பித்தான்.


"மாத்திரை சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்.." 


"ஓ.. இன்னொரு முறை எனக்கு வேறு பொண்ணை பார்க்கற வேலையோ இல்ல என்னை விட்டுட்டு வேற யார் கூடவாவது போகணுங்கற எண்ணமோ உனக்கு இருந்தா பிறகு நான் உன்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிடுவேன். எத்தனை நாள் தெரியுமா.?" எனக் கேட்டவனிடம் "எ.. எத்தனை நாள்.?" என்றாள். "உன் லைஃப் டைம்க்கும்.." என்றுச் சொன்னான்.


எதிர்காலத்தில் குந்தவி தன்னை செய்ய போகும் செல்ல இம்சைகள் பற்றி அறியாமல் இதை சொல்லி விட்டான். 


"ஓ.." என்று இழுத்தவளிடம் "நான் உன் மேல பயங்கர கோபத்துல இருக்கேன். அதனால உடனே ஒரு கிஸ் கொடு.." என்றான்.


அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள் "போ.. போன்லயா‌.?" எனக் கேட்டாள்.


"எனக்கும் நேர்ல வரணும்ன்னுதான் ஆசை. ஆனா உடனே வர காரியமா.? நீ கிஸ் கொடு.. உன் மேல இருக்கும் கோபம் போகும் வரை கிஸ் கொடு.." என்றான்.


தயங்கியவள் "எப்ப கோபம் போகும்.?" எனக் கேட்டாள்.


"ஒரு அரை மணி நேரத்துல.."


நெஞ்சில் கை வைத்தாள் குந்தவி.


"அவ்வளவு நேரமா.? நான் வேணா ஒரு கிஸ் தரேன்.." என்றாள். அதற்கே நடுங்கியது இதயம். இதுவரை ஆதீரனுக்கு கூட முத்தம் தந்தது இல்லை இவள்.


"ஒன்னா.? பிச்சைக்காரர் தட்டுல கூட ஒத்தை ரூபாய்க்கு மதிப்பு கிடையாது.." என்று ஆரம்பித்தவனை போனிலேயே முறைத்தவள் "அதனாலதான் உங்க பிசினஸ் கூட இப்படி சிங்கியடிக்குதுன்னு நினைக்கிறேன்.. ஒத்தை ரூபாய்க்கும் மதிப்பு இருக்கு சூர்யா.." என்றாள். ஆனால் ஏன் சொன்னோம் என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள். கோபித்துக் கொள்வானோ என்றுப் பயந்தாள்.


"சா.. சாரி சூர்யா..‌ நான் உங்களை குறைச்சி சொல்லல.. ஏதோ லூசு தனமா சொல்லிட்டேன். சாரி.." என்றாள். இவனோடு இருந்தால் காலத்திற்கும் மன்னிப்பு மட்டுமே கேட்போம் என்று இருந்தது.


"மன்னிச்சேன். ஆனா அதுக்கும் எக்ஸ்ட்ரா அரை மணி நேர கிஸ் கொடு.." என்றான்.


நெற்றியில் அடித்துக் கொண்டாள் குந்தவி.


"என்ன டிரெஸ் போட்டிருக்க குந்தவி.?" அவனே முத்தத்திலிருந்து பேச்சை திருப்பினான்.


"சிவப்பு கலர் சுடிதார். துப்பட்டா வொயிட்.. ஏன் சூர்யா.?" 


"சும்மாதான் கேட்டேன்.." எதிர் முனையில் அலமாரி திறக்கப்படும் சத்தம் கேட்டது. தயங்கினாள் குந்தவி. "நீங்களும் இதே கலர் டிரெஸ் பண்ண போறிங்களா.?" எனக் கேட்டாள்.


"ம்ம்.. கரெக்டா கெஸ் பண்ணிட்ட.." என்றவன் அதற்கு பதிலாய் போனில் ஒரு முத்தம் தர இவள் முகம் சிவந்து தரை பார்த்தாள்.


"அம்மா இல்லையா.?"


"பக்கத்து ரூம்ல இருக்காங்க.. முன்னதானே பேசின.? மறுபடியும் அவங்களோடு பேசணுமா..?" எனக் கேட்டான் சந்தேகமாக.


"இ.. இல்ல.. நான் சும்மாதான் கேட்டேன்.."


"ஓகே.. நான் குளிக்க போறேன்.. நீ என்ன பண்ற.?"


"ஐயோ நான் காலையில்தான் குளிச்சேன். மறுபடியும் குளிச்சா காய்ச்சல்தான் அதிகமாகும்.."


சூர்யா சிரித்தான்.


"ஹேய் லூசு.. நான் குளிக்க போறேன்.. நீ போனை வைக்கிறியா.? இல்ல இப்படியே பேசுறியான்னு கேட்க வந்தேன்.." என்றான்.


குந்தவி யோசித்தாள். அதற்குள் போனை வைப்பதா என்றும் தோன்றியது. அவன் குளிக்கும் நேரத்தில் அனாவசியமாக போன் தொடர்பில் இருப்பதா என்றும் தோன்றியது.


"வீடியோ கால் பண்ணட்டா.?" 


போன் பொத்தென்று தரையில் விழுந்தது. அறையின் கதவை பார்த்தாள். சாத்தியிருந்தது. தான் காதில் கேட்டதை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று புரிந்து நெஞ்சில் கை வைத்தாள். மூக்கு சிவக்க போனை பார்த்தாள். அவனை நேரில் பார்க்கும் வேளையில் அவனது மூக்கில் குத்த வேண்டும் என்று முடிவெடுத்தாள்.


அதற்குள் அவன் அழைப்பை துண்டித்து வீடியோ காலில் அழைத்திருந்தான்.


"அடப்பாவி.." என்றபடி போனை வெறித்தாள். தயக்கத்தோடு போனை எடுத்தாள்.


ஒற்றை கையால் கண்களை மூடியபடி போன் அழைப்பை ஏற்றாள். 


சூர்யா கலகலவென சிரித்தான். ஒரு விரல் விலக்கி போனை பார்த்தாள். வியர்வை வழியும் மேனியோடு குளியலறை கதவின் மீது சாய்ந்து நின்றிருந்தான். இப்போதுதான் உடற் பயிற்சி முடித்திருக்கிறான் என்று புரிந்தது.


"நான் போனை வைக்கிறேன்.." என்றவளை முறைத்தவன் "நான் ஒன்னும் உனக்கு ஃப்ரீ ஷோ ஓட்ட போறது இல்ல.. ரொம்ப சீனை போடாதே.." என்றான் பொய் கோபத்தோடு.


குந்தவி உதட்டை கடித்தபடி பார்வையை தாழ்த்தினாள்.


"ஹேய் லூசு செல்லா.. நேரா பாரு.. நீ போன்ல வெட்கப்பட்டா நான் என்ன பண்றது.? ஒரு யூஸும் இல்ல.." என்றவனை கர்ண கொடூரமாய் முறைத்தாள்.


"இப்ப முறைப்பு ஓவரா இருக்கு.. உனக்கு ரொமான்ஸே வரல செல்லா.." என்றவன் போனை அங்கிருந்த ஸ்டேன்ட் ஒன்றில் வைத்தான். 


"நான் அப்புறம் கால் பண்றேன்.." என்று வார்த்தைகளில் தந்தியடித்தவளை கண்கள் உருட்டி பார்த்தவன் "கூல் டவுன் பேபி.. நான் ஹெட்டுக்கு ஆயில் மசாஜ் பண்ணணும்.. பத்து நிமிசம்.. அதுவரைக்கும் லைன்ல இரு.. அப்புறம் வேணா கட் பண்ணிக்க.." என்றான். அருகே இருந்த எண்ணெயை எடுத்து தலையில் தேய்க்க ஆரம்பித்தான்.


"டென்சன் செல்லா.. எவ்வளவு நேரம் எண்ணெய் தேய்ச்சாலும் சரியாகல.. முன்னையெல்லாம் அம்மாதான் தேச்சி விடுவாங்க. அப்பாவோட ஹெல்த் அப்படி ஆனதுல இருந்து நானே தேச்சிட்டு இருக்கேன்.." என்றவன் கண்களை இறுக்க மூடியபடி தலையை அரக்கினான். சரியாக மசாஜ் செய்யவில்லை அவன். ஏனோதானோவென்று தேய்த்துக் கொண்டிருந்தான்.


அந்த இடத்தில் தான் இருந்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. அவனின் கேசத்தை  தன் கை விரல்களால் அளாவ ஆசை வந்தது. அவனின் நெற்றியில் வழிந்தது எண்ணெய். அதை புறங்கையால் துடைத்தான். கண்களை திறந்தான்.


"ஜொள்ளு வழியுது.." என்றான் வாயை திறந்தபடி தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளிடம்.


முறைத்தாள் குந்தவி. "நான் போனை வைக்கிறேன்.." என்றாள் உதட்டை சுளித்தபடி.


"ஓகே..‌ நஷ்டம் உனக்குதான்.." என்று தோளை உலுக்கியவன் அவளை குறுகுறுவென பார்த்தான். 


"நிஜமா வைக்க போறியா.?" எனக் கேட்டான்.


அவள் பதில் சொல்லும் முன் அறையின் கதவு தட்டப்பட்டது.


"நான் போறேன். யாரோ கதவை தட்டுறாங்க.."


"நோ.. நான் சொல்லும் வரை போனை கட் பண்ண கூடாது நீ.. அப்புறம் நான் போன் பண்ணவே மாட்டேன்.." என்றான் கறாராக.


குந்தவி மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டாள். 


இப்படியே சென்று கதவை திறக்க முடியாது. போனை கொண்டு சென்று எதிரே இருந்த மேஜையில் பக்கவாட்டில் நிற்க வைத்தாள். ஓடும் வீடியோ அழைப்பு தெரியாமல் இருக்க புத்தகம் ஒன்றை எடுத்து மறைத்து வைத்தாள். அவன் மீது சந்தேகம் வந்தது. யாராவது அறைக்குள் வரும்போது சத்தமிட்டு பேசி விட்டால் என்ன செய்வது என்ற யோசனையோடு போனின் ஸ்பீக்கரை மியூட்டில் போட்டு வைத்தாள்.


அவள் செய்வதையெல்லாம் குறும் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அவனின் சிரிப்பைதான் அவளால் பார்க்க முடியவில்லை.


துப்பட்டாவை சரியாக இழுத்து விட்டுக் கொண்டவள் கதவை திறந்தாள்.


மனோகர் உள்ளே வந்தார். அவரின் பின்னால் அவரின் பாடிகார்ட்ஸ் நால்வர் வந்தனர். உள்ளே வந்ததும் கதவை தாழிட்டார் மனோகர்.


"என்னம்மா ரொம்ப சந்தோசமா இருக்க போல.." என்றவர் கண் சைகை காட்ட அவரோடு வந்தவர்களில் ஒருவன் கட்டையால் குந்தவியின் தலையில் அடித்தான்.


"செல்லா.." பேரிரைச்சலாக அழைத்த சூர்யாவின் குரல் இந்த பக்க முனையில் கேட்கவே இல்லை.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW





Post a Comment

0 Comments