Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 56

 சக்தி முன்னால் வந்தாள்.


"உங்க ஹஸ்பண்ட் உங்களை கொடுமை பண்றார்ன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கு சங்கவி.. இத்தனை நாளா நீங்க வருவிங்கன்னு எதிர்பார்த்து காத்திருந்தேன் நான்.. ஆனா நீங்க வரல. இப்ப நான் ஆக்சன் எடுத்தே ஆகணும். நீங்க என்ன சொல்றிங்க.?" எனக் கேட்டாள்.


'காத்திருந்தாங்களா.? நானா திருந்தினா கூட இவங்க அமைதியா விட மாட்டாங்க போல இருக்கே.. ஆதீ இது சரி வராது.. உன் பழைய அவதாரத்தை கையில் எடுத்துடு..' என்று ஆதீரன் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் "இல்ல மேம்.. இவர் என்னை எந்த கொடுமையும் செய்யல.." என்றாள் சங்கவி.


'அப்படி சொல்லுடி என் ராஜாத்தி..' என எண்ணியபடி மனைவியை ஆசை பார்வை பார்த்தவன் 'இப்ப என்ன செய்விங்க?' என்ற யோசனையோடு மாமனாரைப் பார்த்தான்.


அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபம் இருந்தது.


"நீங்க பயத்துல பேசாதிங்கம்மா.. நாங்க உங்களுக்கு இருக்கோம்.." என்றாள் சக்தி.


"இல்ல மேடம்.. நாங்க நல்லாதான் இருக்கோம். இரண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம் மேம்.." என்றாள் சங்கவி.


அவள் காதலிப்பதாக சொல்லும் ஒவ்வொரு முறையும் தனக்குள் பரவசத்தை உணர்ந்தான் ஆதீரன். அவளை அணைக்க சொல்லி ஏங்கிக் கொண்டே இருந்தது மனம்.


சக்தி அவளை கூர்ந்து கவனித்தாள். மோகன் மகளை விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வை பார்த்தார். அவரின் இதயம் உடைந்துக் கொண்டிருந்தது. அவரின் மனைவியும் மூத்த மகளும் இறந்தும் போக காரணமான ஒருத்தன் அவரின் இளைய மகளின் காரணமாக நிம்மதியான சந்தோச வாழ்க்கையை வாழ்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 


சக்தி சங்கவியை தனியே அழைத்தாள். 


"நீங்க பயப்படுறிங்களா.?" எனக் கேட்டாள் தூரமாக வந்த பிறகு.


"இல்லைங்க மேம்.. நான் இப்ப பிரகனென்டா இருக்கேன்.. அவரும் நானும் ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கோம்.. அவர் என்னை அவ்வளவு அன்பா பார்த்துக்கறாரு.." என்றாள்.


சக்தி அவளின் கண்களைப் பார்த்தாள். உண்மை மட்டும்தான் தெரிந்தது. 


"என் அம்மாவும் அக்காவும் இறந்ததுக்கு இவர்தான் காரணம்ன்னு நினைச்சி எங்க அப்பா இப்படி பண்ணிட்டு இருக்காரு மேடம். டைவர்ஸ் பண்ண சொல்லி அவரோடு கூட்டிப் போயிட்டாரு.. மாமா என்னை கூட்டி வந்துடவும் அவருக்கு கோபம் வந்துடுச்சி. அதனாலதான் இப்படி  கம்ப்ளைண்ட் பண்ணிட்டாரு.." என்றாள்.


சக்தியால் புரிந்துக் கொள்ள முடிந்தது. 


"சரிம்மா.. நீங்க உங்க அப்பாவை சமாதானம் செய்ய பாருங்க.." என்று சொல்லிவிட்டு நடந்தாள்.


"உங்க பொண்ணுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ விடுங்க சார்.." என்று மோகனிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் சக்தி.


அருகே வந்த மனைவியின் தோளோடு அணைத்தான் ஆதீரன்.


"இவளை என்கிட்டயிருந்து பிரிக்க நினைக்காதிங்க.." என்றான் மோகனிடம். "அவ விட்டுப் போனான்னு நான் எந்த அளவுக்கு இறங்கினேன்னு உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். இவளை விட முடியாது என்னால.. பிரிக்க நினைச்சா அப்படி நினைக்கும் யாரையும் சும்மா விட மாட்டேன்.." என்று மிரட்டினான். அவனின் மிரட்டலில் சங்கவிக்கு உடல் நடுங்கியது. 


"இப்படி பயமுறுத்தாதிங்க மாமா.." என்றாள்.


அவளின் நெற்றியில் முத்தமிட்டான். "சாரி சங்கவி..‌ நான் இப்படிதான். என்னால விட முடியாது.. நீ போகலாம்ன்னு ஆரம்பத்துலயே உனக்கு சான்ஸ் தந்தேன். நீதான் என்னை தேர்ந்தெடுத்த.. இனி உன்னால் என்னை‌ விட்டு போக முடியாது.. என்னை விட்டு நீ பிரிஞ்சி போகணும்ன்னா நீ பிணமாவோ இல்ல விதவையாவோதான் போவ.." என்று‌ அடிக்குரலில் சொன்னவன் மோகனை முறைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.


மோகனின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. 


"அப்பா.." கெஞ்சியபடி அவரை நெருங்கினாள் சங்கவி.


"அவரை மன்னிச்சிடுங்கப்பா.. எனக்காக அவரை ஏத்துக்கங்கப்பா.." என்றாள் கெஞ்சல் குரலில்.


மோகன் தலையை பிடித்தபடி இருக்கையில் விழுந்தார்.


"அப்பா.." அதிர்ச்சியோடு அவரின் தோளை பற்றினாள்.


"இவன்தான் உனக்கு வேணுமா? உன் அம்மாவையும் அக்காவையும் கொன்னுட்டு உன்னையும் டார்ச்சர் பண்ண இவன்தான் வேணுமா.?" எனக் கேட்டார்.


சங்கவி தலை குனிந்தாள். தயக்கத்தோடு ஆமென்று தலையசைத்தாள். அவனை பிரிவதோ விலகுவதோ அவளால் முடியாத காரியம். 


"இனி உன் இஷ்டம்.." என்றவர் எழுந்து நின்றார். அவரின் கைப்பிடித்து நிறுத்தினாள் சங்கவி. "இங்கேயே இருந்துடுங்கப்பா.." என்றாள்.


"இவனோடு இருப்பதுக்கு பதிலா நான் கண்ணை திறந்துட்டு போய் கிணத்துல விழுந்துப்பேன்.." என்றவர் அங்கிருந்து போனார்.


அவர் வீட்டின் கேட்டை தாண்டுவதை மன பாரத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சங்கவி வீட்டுக்குள் திரும்பினாள். சீக்கிரத்தில் இவரை சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்தவளுக்கு கணவனின் நினைவு வந்தது‌. அவனை தேடி ஓடினாள்.


கோபமாகதான் இருந்தான். கட்டிலில் அமர்ந்திருந்தான்.


"மாமா.." தயக்கமாக அழைத்தபடி நெருங்கியவளை கைப்பிடித்து இழுத்து தன் மேல் விழ வைத்தான். அவள் விழுந்த வேகத்தில் அவளை கட்டிலில் சாய்த்தான்.


"என்னை விட்டு போவியா.?" என மிரட்டியவனிடம் இல்லையென தலையசைத்தாள். அவளின் கண்களில் தெரிந்த மிரட்சியை ரசித்தவன் அவளின் காதோரத்தில் முத்தமிட்டான். சட்டென்று முகம் சிவந்தாள். 


"எத்தனை வருசமாகும் நீ என்னோடு சகஜமா சரசமாட.?" எனக் கேட்டான்.


வெட்கத்தில் முகத்தை பொத்திக் கொண்டாள். அவளின் புறங்கையின் மீது முத்தங்களை தந்தான்.


அவளின் வயிற்றில் கைப்பதித்தான். "தேங்க்ஸ் சங்கவி.." என்றபடி அவளின் இதழில் தன்னிதழ் பதித்தான். 


குழந்தையை அதிகம் விரும்பினான். அந்த குழந்தையை இப்போதே கையில் ஏந்த வேண்டும் போலிருந்தது. 


"குழந்தை உன்னைப் போல இருக்குமா? இல்ல என்னைப் போல இருக்குமா.?" எனக் கேட்டவன் அவளின் முந்தானையோடு இருந்த பின்னை கழட்ட முயன்றான். அவனின் கையில் அடித்தாள் சங்கவி.


"ஏன் சங்கவி‌.? பிரிஞ்சி இருந்ததுக்கு கணக்கு தீர்க்க வேணாமா.?" எனக் கேட்டவன் அவளின் கழுத்தில் இதழ் பதிக்க ஆரம்பித்தான். அவனின் முன்னந்தலையை பற்றி பின்னால் தள்ளி விட்டாள். அவளால் முடியவில்லைதான். ஆனாலும் அவள் விலக்கி விட முயன்றது கண்டு அவனே விலகிக் கொண்டான்.


"என்னை பிடிக்கலையா சங்கவி?" உடைந்த குரலில் கேட்டான்.


"பிடிக்கும்.." என்றவள் "டாக்டர் என்ன சொன்னாங்கன்னு மறந்துட்டிங்களா.? பத்து நாளைக்கு பக்கத்துல கூட வர கூடாது.." என்றாள்.


"நான் கவனமா இருக்கேன்.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.


"மாமா.." 


"என்னை நம்பு சங்கவி.." என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். உதடுகளை சற்று மேல் நகர்த்தினான். உப்பு கரித்தது. அதிர்ச்சியோடு அவளின் விழிகள் பார்த்தாள்‌. கலங்கிய கண்ணீர் விழி தாண்டிக் கொண்டிருந்தது.


"சங்கவி.." அவளின் கன்னங்களை பற்றினான்.


"எனக்கு குழந்தை பத்திரமா வேணும்.. நீங்க கவனமாவும் இருக்க வேணாம். ஒன்னும் வேணாம். பத்து நாளைக்கு என் பக்கத்துல வராம இருங்க.. அதுவே போதும்.." என்றாள்.


ஆதீரனுக்கு முகம் வாடி விட்டது. "ஓ.. ஓகே.." மனமேயில்லாமல் சொன்னவன் அவள் மேலிருந்து எழுந்தான்.


எழுந்து அமர்ந்தவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.


"கோபமா மாமா?" எனக் கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தான். மென்மையாக அணைத்துக் கொண்டான்.


"ஐ லவ் யூ.." என்றான்.


இதயத்தில் சிறு பிரவாகத்தை உணர்ந்தாள் சங்கவி.


ரத்தம் கொட்டிய தலையோடு தரையில் விழுந்தாள் குந்தவி. அதிர்ச்சியில் இருந்தாள்.


"அனாதை கழுதை‌. நீ கெட்ட கேட்டுக்கு என் தங்கச்சி மகன் மாப்பிள்ளையா கேட்குதோ.?" எனக் கேட்ட மனோகர் பாடிகார்ட் ஒருவனிடம் கையை நீட்டினார். அவன்‌‌ தந்த உருட்டுக்கட்டையோடு குந்தவியை நெருங்கினார்.


"என்னை விட்டுடுங்க சார்.." கெஞ்சினாள் குந்தவி. தலை பயங்கரமாக வலித்தது.


படாரென்று அவளின் மேல் அடித்தார். கையை குறுக்கே நீட்டியதில் மணிக்கட்டின் மீது மோதியது கட்டை. எலும்புகள் நொறுங்குவது போல சத்தம் கேட்டது.


"அம்மா.." என்று கத்தியவளின் குரல் அந்த அறை முழுக்க பெரும் சூறாவளியின் இரைச்சல் போல ஒலித்தது.


"அம்மா.." சூர்யாவின் பதட்ட அழைப்பில் கணவனுக்கு செய்து கொண்டிருந்த சேவகம் மறந்து திரும்பினாள் பூங்கொடி.


"உங்க அண்ணாவுக்கு போன் பண்ணுங்க.. சீக்கிரம்.." என்றான். நடுங்கும் மேனியோடும், வீழும் கண்ணீரோடும் தன் கையிலிருந்த போனை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.


"ஏன்டா.!" பூங்கொடி அவனின் கண்களில் வழிந்த கண்ணீர் கண்டு பதறிப் போனாள். அலெக்ஸும் அதற்கு மேல் பதறிக் கொண்டிருந்தார். 


"என்னாச்சி சூர்யா.? ஆர் யூ ஓகே.? என்ன பிரச்சனை.?"


"போன் பண்ணி கொடுங்கம்மா.." தன் போனை பார்த்தபடியே கத்தியவன் அதை சொல்லி முடித்த வேளையில் கதறி விட்டிருந்தான். 


"நீ செத்த இடம் யாருக்கும் தெரிய போவது இல்ல.. நீ ஒரு ஓடுகாலின்னு நம்ப போறான் என் மாப்பிள்ளை.." என்று மனோகர் சொல்ல அந்த வலியிலும் சிரித்தாள் குந்தவி.


"அதே வழிமுறை.. அப்போதாவது‌ என்னை பழி வாங்க ஒரு குடும்பம் இருந்தது. இப்ப எதுவும் இல்ல.." என்று அழுதாள்.


போனை பார்த்துக் கொண்டிருந்தவனின் விம்மல் அலெக்ஸின் காதில் விழுந்து அவரை மேலும் நொறுக்கியது. மொத்த பாசத்தையும் இவன் மீதுதான் வைத்திருந்தார் அவர். மகன் கேட்டால் வானத்தை வளைக்கவும் தயங்காதவர். மகன் கலங்கியே பார்த்திடாதவர். இன்று அழுவது கண்டு மனம் வெம்பிப் போனார். 


போனில் ஒலித்த மனோகரின் குரல் அவருக்கும் பூங்கொடிக்கும் குழப்பத்தை தந்தது.


பூங்கொடி தன் அண்ணனுக்கு அழைத்தாள்.


"சூர்யா.. நீங்களும் என்னை மறந்துடுவிங்களா.? ஆதீயை போலவே நீங்களும் என்னை நம்பாம வெறுத்துடுவிங்களா?" என்ற குந்தவியின் இடுப்பில் விழுந்தது உருட்டு கட்டையின் அடி.


துள்ளி‌ விழுந்தாள் குந்தவி. அவளின் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியது.


"செத்து தொலை.." என்றவர் கட்டையை ஓங்கிய நேரத்தில் அவரின் போன் ஒலித்தது. தங்கை அழைத்திருப்பதை அறிந்தவர் விசையோடு குந்தவியின் தலையில் அடித்தார். குந்தவியின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது.


போனை அழைப்பேற்றார்.


"பூங்கொடி.." என்றவரிடம் "மாமா.. நான் உங்களை கொல்லாம விட மாட்டேன்.." என்று போனில் கத்தினான் சூர்யா.


மனோகர் அதிர்ந்துப் போனார்.


"என் செல்லாவை ஏன் கொல்லுறிங்க.? ஸீ இஸ் மை எவ்ரிதிங்.. அவ இல்லாம வாழவே முடியாது என்னால.. நீங்க கேட்டிருந்தா என் பேர்ல இருக்கும் எல்லா ஷேர்ஸையும் எழுதி தந்திருப்பேன். ஏன் அவளை கொல்றிங்க.?" என்று கத்தினான்.


மகன் கையிலிருந்த போனை எட்டிப் பார்த்த பூங்கொடி அதிர்ச்சியில் வாயை பொத்தினாள். 


"உ.. ‌உனக்கு எப்படி தெரியும்.." எனக் கேட்ட‌ மனோகர் சுற்றிலும் பார்த்தார்.


"என் செல்லா எனக்கு பத்திரமா வேணும். என்ன பண்ணுவிங்களோ தெரியாது. அவ எழலன்னா நான் உங்களை மொத்தமா அழிச்சிடுவேன்.." நடுங்கும் கரங்களோடு வழியும் கண்ணீரை துடைத்தபடி சொன்னான். 


மனோகர் எதிர் முனையில் நகைத்தார்.


"அந்த அளவுக்கு லவ்ஸா மாப்ள.? என் பொண்ணை விட இவளுக்கு அவ்வளவு முக்கியத்துவமா.? ஒரு அனாதை பிச்சைக்காரி மேல எதுக்கு இன்ட்ரஸ்ட்.?" எனக் கேட்டவர் ரத்தம் வழிய இறந்துக் கொண்டிருந்தவளை கேவலப் பார்வை பார்த்தார்.


இறந்துக் கொண்டிருந்தவளை சூர்யாவும்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் உள்ளுக்குள் இறந்துக் கொண்டிருந்தான்.‌ ஜீவன் ஒரு பக்கத்திலிருந்து குறைந்துக் கொண்டே வந்ததை அவனால் உணர முடிந்தது.


"இவளை உயிரோடு விட முடியாது. என் பொண்ணுக்கு கிடைக்காத வாழ்க்கை, நிறைவேறாம போன என் திட்டம்.. இதுக்கு ஈக்வெல்லா நான் இவளை கொல்லணும். உன்னால என்னை எதுவும் செய்ய முடியாதுடா.. உன் செல்லாவை பிணமா கூட உன்னால பார்க்க முடியாது‌.." என்றவர் கட்டையை ஓங்கி அடித்தார்.


"செல்லா.." தரையில் மண்டியிட்டு விட்டான் சூர்யா.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments