Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 61

 அன்று இரவு முழுக்க உறங்கவே இல்லை சூர்யா. 


'குண்டவி..' என்று அலறிய அவனின் மனம் அதை நிறுத்தவேயில்லை.


"எங்கே இருக்காளோ.? எல்லாம் என்னாலதான்..  நான் அவளை பார்த்திருக்க கூடாது.." என்று புலம்பிக் கொண்டிருந்தான்.


தாரணிக்கு இரவு உணவை ஊட்டி விட்டான் யஷ்வந்த். ஸ்பூனை கிண்ணத்தில் வைத்துவிட்டு அவளின் உதட்டை துடைத்து விட்டான்.


"நாளைக்கு காலையில் உனக்கு டிஸ்சார்ஜ் தாரணி.. இந்த மாதிரி இனி எதுவும் நடக்காதுன்னு நம்புவோம்.." என்றான்.


ஆமென்று தலையசைத்தவளிடம் "உன்னை யார் இப்படி கொல்ல டிரை பண்ணாங்கன்னு தெரியல.. கண்டுபிடிச்சா கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கும். ரொம்ப மோசமான தண்டனை.." என்றவன் அவளை மென்மையாக அணைத்தான். அவளின் நெற்றியில் முத்தமிட்டான். 


அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளுக்கு சிறு பயமும் சிறு நிம்மதியும் ஒன்றாய் கலந்து மனதில் பரவிக் கொண்டிருந்தது. குந்தவியை இப்படி செய்தது மனோகர்தான் என்றோ, தான் அதற்கு கூட்டு என்றோ தன் கணவன் அறியவில்லையென்று நினைத்திருந்தாள் அவள்.


அவளின் கையில் கட்டு இருந்தது. கை முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று மருத்துவர் சொல்லி இருந்தார்.


"சாரி.. நான் சரியா உன்னை கவனிச்சிக்காம போயிட்டேன்‌‌.." என்றவன் அவளின் இதழில் தன் இதழ் பதித்தான். மென்மையாக மிகவும் மென்மையாக அந்த முத்தத்தை தந்தான். காற்றினில் மிதப்பது போலிருந்தது அவளுக்கு. 


'சாரி தாரு.. நான் உன்னை எந்த அளவுக்கு காதலிச்சேன்னு உனக்கு புரியல. ஆனா நானும் ஏதோ ஒரு தப்பை பண்ணிட்டேன்னு லேட்டாதான் புரிஞ்சிக்கிட்டேன். நீ போன் பண்ணி வர சொன்ன முதல் நாளே நான் என் அப்பா சம்மதத்துக்கு காத்திருக்காம உன் வீடு வந்து சம்பந்தம் பேசியிருக்கணும். உன்னையும் என் பிசினஸ் ஆசைகளையும் சேர்த்து கைப்பிடிக்க நினைச்சது தப்பு கிடையாதுதான். ஆனா என்னை புரிஞ்சிக்காத உன்னை சரியா கணிக்காம போனதுதான் என் தப்பு. மனைவியான பிறகும் கூட நான் உன் புலம்பலை சரியா காது கொடுத்து கேட்காம போயிட்டேன். குந்தவி மேல உனக்கு பொறாமைன்னு நீ முதல் நாள் சொன்னபோதே நான் அதுக்கு ஏதாவது ஒரு முடிவு எடுத்திருக்கணும். போக போக நீ என்னை புரிஞ்சிப்பன்னு நினைச்சது என் தப்புதான். சாரி தாரணி.. ரியலி சாரி.. உன் காதலனாவும் கணவனாவும் நான் தோத்துட்டேன். ப்ளீஸ் மன்னிச்சிடு..' என்று மனதுக்குள் மன்னிப்பு கேட்டான்.


யஷ்வந்த் அவளின் இதழ்களிலிருந்து விலகினான். அவனின் கைக்கடிகாரம் பத்து நிமிடங்களை கடந்திருந்தது. இந்த பத்து நிமிட முத்த சொர்க்கம் யுகத்திற்கும் தொடர்ந்திருந்தால் நலமாக இருக்கும் என நினைத்தாள் தாரணி.


தனது சட்டையை இறுக்கமாக பற்றியிருந்த அவளின் இடது கரத்தை மெதுவாக பற்றி விடுவித்தான். அவளின் விரல் கணுக்களின் மீது முத்தமிட்டான். கண்களை மூடியபடி ஐந்து நிமிடத்திற்கு அந்த கையின் மீது உதடுகளை வைத்திருந்தான். அவனின் மூடியிருந்த விழிகளிலிருந்து ஒரு துளி கண்ணீர் வெறியேறியது.


"யஷூ.." பயத்தோடு அழைத்தாள் தாரணி.


விழிகளை திறந்தவன் அவளின் கன்னத்தை வருடினான். "ஐ லவ் யூ தாரு.. இனி உனக்கு இந்த மாதிரி எந்த ஆபத்தும் வரவே கூடாது.." என்றவன் அவளை படுக்கையில் சாய்த்தான். போர்வையை போர்த்தி விட்டான்.


"தூங்கு தாரணி.." என்றவன் அவளின் அருகே இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்


"தர்ஷினிக்கு மேரேஜ்.. நீங்க போகலையா யஷூ.?" என கேட்டவளின் கூந்தலை வருடியவன் "இல்ல.. நாளைக்கு இரண்டு பேரும் சேர்ந்து போய் பங்ஷன்ல கலந்துக்கலாம்.." என்றான். ஒற்றை கையால் அவளை அணைத்தவன் அவளின் அருகிலேயே தலை சாய்த்து கண்களை மூடினான்.


சங்கவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான் ஆதீரன்.


"சாப்பிடு.." என்று மிரட்டினான்.


மறுப்பாக தலையசைத்தாள். அவனை பார்க்காமல் தலை குனிந்தாள்.


"இப்ப ஏன்டி என்னை இப்படி சாகடிக்கற.? நாளைக்கே நாம செத்தா போக போறோம்.? இன்னைக்கு இல்லன்னா இன்னும் கொஞ்ச மாசம் கழிச்சி குழந்தை உண்டாகதானே போகுது.? அதுவா கலைஞ்சதுக்கு நான் என்ன செய்வேன்.? காலையிலிருந்து சாப்பிடாம இருக்க.. உனக்கு என்னை விட அந்த குழந்தைதான் முக்கியமா போச்சா.?" ஆத்திரத்தோடு கத்தினான். 


கலங்கும் விழிகளோடு நிமிர்ந்தவள் "ஒருவேளை அந்த குழந்தை என் அக்காவா இருந்திருந்தா.?" எனக் கேட்டாள்.


அதிர்ச்சியில் உறைந்தவன் அவள் சொன்னதை திரும்பவும் நினைவுப்படுத்திக் கொண்டான்.


"என் அக்கா என்னை விட்டு இருக்கவே மாட்டா.. இறந்தாலும் கூட அவ என் பக்கத்துலதான் இருந்திருப்பா. என் வயித்துல பாப்பாவா அவதான் உருவாகி இருப்பா.. ஆனா..‌" மேலே சொல்லாமல் விம்மினான்.


தலையை பிடித்தான் ஆதீரன். இப்படியொரு சூழ்நிலையில் தன்னை சிக்க வைத்த விதியை மனதுக்குள் திட்டித் தீர்த்தான்.


நிமிடங்கள் கடந்தது. அவளின் முகத்தை நிமிர்த்தினான்.


"உன் செண்டிமென்ட், பீலிங் எல்லாத்தையும் நான் புரிஞ்சிக்கறேன் சங்கவி. ஆனா ஒரு விசயத்தை நீ புரிஞ்சிக்க. ஆக்ஸிடென்ட்ஸ்க்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. அ.. அவ உனக்கு மகளா பிறக்கணும்ன்னு இருந்தா நிச்சயம் பிறப்பா.. இப்ப இல்லன்னாலும் இன்னொரு நாள். ஆனா இப்படி நீ சாப்பிடாம உடம்பு கெட்டுப் போனா அப்புறம் நீ செத்துதான் போவ. உன் அக்கா பிறக்க மாட்டா.." என்று எரிச்சலாக மொழிந்தான்.


"இப்ப மட்டும் நீ சாப்பிடலன்னா அப்புறம் நான் உன்னை இந்த ஹோட்டலோட மாடிக்கு கூட்டிப் போய் அங்கிருந்து கீழே பிடிச்சி தள்ளி விட்டுடுவேன்.." என்று மிரட்டினான். 


உணவை பிசைந்தவன் அவளுக்கு ஊட்டினான். மறுத்தவளை முறைத்தவன் கையை ஓங்கினான். பயத்தில் விழிகளை மூடினாள்.


"அடி வாங்கி சாகாதே.. என்னையும் சாகடிக்காத.." என்றவன் வலுக்கட்டாயமாக உணவை திணித்தான். அழுதுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.


நள்ளிரவில் அவள் சோர்ந்து உறங்கி விட்டாள். ஆதீரன் ஜன்னலின் அருகே நின்றபடி இருளை வெறித்தான். ஊட்டியின் குளிர் அவனுக்கு உறைக்கவில்லை. சங்கவி சொன்னது பாரத்தை தந்துவிட்டது. அந்த குழந்தை ஒருவேளை குந்தவியாக இருக்குமோ என நினைக்கையில் அந்த குழந்தை அழியாமல் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.


மனம் நொந்துப் போனது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லைதான். ஆனால்‌ அந்த குழந்தை குந்தவியாக இருந்தால் தவறுக்கு பிராயச்சித்தமாக அன்பை கொட்டியிருக்கலாம் என்று இயல்பாய் வந்தது யோசனை. பெருமூச்சோடு தலையை கோதி விட்டுக் கொண்டான். சங்கவியை பார்த்தான். போர்வைக்குள் குறுங்கி படுத்திருந்தாள். ஜன்னலை சாத்தி விட்டு சென்று அவளருகே தலை சாய்த்தான். அவளை அணைத்துக் கொண்டான். அவளின் வாசத்தை ஆழமாக சுவாசித்தான். இறந்தவளை மறந்து விட நினைத்தான்.


'இது சங்கவி. என் காதலி. என் மனைவி.. என் நிகழ்காலம். என் வருங்காலம்..' என்று தன்னிடமே சொல்லிக் கொண்டான்.


திருமண வீட்டில் விதவிதமாக கோணத்தை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் புகைப்பட கலைஞர்.


சூர்யா பட்டு வேட்டி, பட்டு சட்டையோடு தயாராய் இருந்தான். முகத்தில் மட்டும் ஒரு கோடி கவலை இருந்தது. (காதலிச்சவளை விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்றான். கவலை இல்லாம சந்தோசமா மின்னும்.?) அவனருகே இருந்த ஜேம்ஸ் சோகத்தின் பிடியிலியிருந்தார். எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து. இரண்டு வருடங்களாக சந்தித்துக் கொண்டிருக்கும் சிறு சரிவுகளையே ஏற்றுக் கொள்ள முடியாமல் முன்னேற்ற பாதை ஒன்றேதான் வாழ்க்கை என்று எண்ணும் குணமுடைய குடும்பம். ஜேம்ஸும் அலெக்ஸும் இளமையிலிருந்து மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து மூளைக்கு ஓய்வே தராமல் சேர்த்து வைத்தது. 


சூர்யாவின் அறைக்குள் நுழைந்த மனோகர் மாலையை அவனின் கழுத்தில் அணிவித்தார்.


"அப்பவே ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்.‌ இவ்வளவு வன்முறை நடந்திருக்காது.." என்றார் நக்கலாக.


சூர்யா பற்களை கடித்தான். ஆத்திரத்தை வெளிக்காட்டாமல் இருக்க ஆசை கொண்டான்.


"ஆனாலும் உன் அம்மாவுக்கு ரோசம் அதிகம். கல்யாணத்துக்கு கூட வராம போயிட்டா.." என்று கவலைப்பட்டவர் வெளியே நடந்தார்.


தாரணியை வீட்டிற்கு அழைத்து வந்தான் யஷ்வந்த். மாமனார் மீது கொலை வெறியில் இருந்தவள் திருமணம் முடிந்த பிறகு அவரை பழி தீர்க்க யோசனை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். 


கையை அசைக்க முடியாமல் இருந்தவளுக்கு யஷ்வந்தே புடவை கட்ட உதவி செய்தான். அவள் சொன்னபடியே கட்டி விட்டான்.


"மேக்கப் ஆர்டிஸ்ட்கிட்ட சொல்லியிருந்தா அவங்களே கட்டி விட்டிருப்பாங்க‌‌.." என்ற தாரணியின் புடவை கொசுவத்தை நீவி சரி செய்து விட்டவன் "இருக்கட்டும் தாரணி. பரவால்ல.." என்றான்.


தாரணி அவனை மகிழ்ச்சியோடு பார்த்தாள். தன் முன் ஒற்றை கால் மண்டியிட்டு இருந்தவனின் கேசத்தை இடது கையால் வருடி விட்டாள். 


எழுந்தவன் "உனக்கு தலை பின்னி விட ஆள் அனுப்புறேன்.." என்றுவிட்டு வெளியே போனான்.


அவள் அலங்காரம் முடிந்து வெளியே வந்தபோது அறை வாசலின் முன்னால் நின்றிருந்தான் யஷ்வந்த். இனி அந்த வீட்டில் இருந்த யாரையும் நம்ப முடியாது அவனால். 


மண மேடையின் முன்னால் இருந்த இருக்கையில் அவளை அமர வைத்தவன் அவளின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான்.


தர்ஷினியை மேடைக்கு அழைத்து வந்தார்கள். மின்னும் பொன்னாக காட்சியளித்தாள். அனைத்தும் தெரிந்தும் சொத்துக்காக தன் தங்கையின் வாழ்க்கையை நாசம் செய்யும் தந்தையை அடியோடு வெறுத்தான் யஷ்வந்த்.


மந்திரங்கள் சில முடிந்த பிறகு சூர்யா வந்து மனையில் அமர்ந்தான்.


'கடவுளே ப்ளீஸ்..' மனதுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தான்.


'எனக்கு எப்பவும் அதிர்ஷ்டம் உண்டு. லட்சம் கோடி உயிரணுக்களோடு துணையா பிறந்தும் கருவா உருவாகும் வாய்ப்பு எனக்குதான் கிடைச்சது. தயவு செய்து அந்த அதிர்ஷ்டம் இப்போதும் இருக்கட்டும்.. ஹெல்ப் பண்ணுங்க கடவுளே.. அட்லீஸ்ட் நான் இந்த நாட்டை விட்டு திரும்பிடும் முன்னாடியாவது இந்த அதிர்ஷ்டம் அடிக்கட்டும்..' என்று வேண்டிக் கொண்டிருந்தான்.


தாலியை ஆசிர்வாதம் வாங்க சொந்தங்களிடம் எடுத்து வந்தார்கள். யஷ்வந்த் தாலியை வெறித்துப் பார்த்தான். அட்சதையை அவன் கையில் எடுத்த நேரத்தில் போன் ஒலித்தது. நம்பரை கண்டதும் ஆவலோடு‌ அழைப்பேற்றான்.


"ஹலோ.." அவசரமாக பேசினான்.


"சார்.. மேமை சேப்டி பண்ணியாச்சி.." 


கண்களை மூடியபடி நெஞ்சில் கை வைத்தவன் சூர்யாவின் அதிர்ஷ்டம் இந்த அளவுக்கு வேலை செய்யும் என்று எதிர்பார்க்கவேயில்லை.


எழுந்து நின்றான்.


"சூர்யா.." சந்தோசத்தோடு அழைத்தான்.


அக்னியில் நெய் விட்டுக் கொண்டிருந்தவன் நிமிர்ந்துப் பார்த்தான்.


"ஸீ இஸ் சேப் நவ்.." 


நெய் கரண்டி அக்னியில் நழுவி விழுந்தது. உணர்வுகளின் பிடியிலிருந்து‌ வெளிவரவே சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்கு. 


சுற்றி நின்றிருந்த சொந்தங்களுக்குதான் ஒன்றும் புரியவில்லை. புரிந்து கொண்டிருந்த மனோகர் அவசரமாக யாருக்கோ அழைத்தார். 


"அவ எங்கே.?" எனக் கேட்டார்.


"சார்.. யாரோ சிலர் எங்களை அடிச்சி போட்டுட்டு அவளை கடத்திட்டு போய்ட்டாங்க.." என்றான் எதிரே பேசியவன்.


கடுப்போடு போனை தூக்கிப் போட்டு உடைத்தார். தனது அறை நோக்கி ஓடினார்.


"யுவர் குந்தவி இஸ் சேப் நவ்.." மறுபடியும் சொன்னான் யஷ்வந்த்.


விழிகள் கலங்க வானம் பார்த்து வேண்டிக் கொண்ட சூர்யா மனையிலிருந்து எழுந்தான். தர்ஷினி குழப்பத்தோடு சூர்யாவை பார்த்தாள்‌.


"நோ.. அப்படியே உட்காரு.." என்றார் துப்பாக்கியோடு அங்கே வந்த மனோகர்.


"என் ப்ளான் எப்பவும் தோற்கவே கூடாது.." என்றார். வீட்டின் ஆட்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.


"என்ன நடக்குது இங்கே.?" என்றுக் கேட்டாள் ரூபிகா.


"இந்த கல்யாணம் நடக்காது அத்தை.‌" என்ற சூர்யா மாலையை கழட்டினான்.


துப்பாக்கியின் டிரிக்கரில் விரலை பதித்தார் மனோகர்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (ஆதீரன் ஊட்டி‌ வரைக்கும் போயிருக்கான். காந்திமதியை பார்ப்பானா.? எபியை படிச்சதுக்கு நன்றிகள்.. அப்படியே அடுத்த பேஜ் ‌வரைக்கும் போய் அஞ்சாம் ஸ்டாரை அழுத்தி ஏதாவது கமெண்ட் பண்ணா நல்லா இருக்கும்..😁 கமெண்ட் பண்ண தெரியல, டைம் இல்லன்னாலும் பரவால்ல.. நாலு 💝💝💝 ஹார்டினாவது தந்துட்டு போங்க.. (💯👌🏻) (⭐⭐⭐⭐⭐) (😱😱😒😒🧐🧐🤔🤔🤭🤭🤣🤣😭😭😂😂😅😅🤩🤩🥳🥳😡😡😤😤😲😬🙈🙈🙄🙄🤧🤧😍😍❤️❤️💞💞💘💘🧡🧡💛💛💚💚💙💙💜💜🤎🤎🖤🖤🤍🤍♥️♥️💖💖💗💗💓💓💕💕💌💌💟💟❣️❣️💔💔👍👍👊👊✌️✌️🍭🍭🍬🍬🍫🍫🔪🔪🎉🎉🥇🥇🥈🥈🥉🥉🏅🏅🎖️🎖️🏆🏆) உங்க உணர்வை கமெண்ட்ல சொல்ல இத்தனை‌ எமோஜியை கூகுள்காரன் ரெடி பண்ணி வச்சிருக்கான். அதனால இந்த எபிசோட் தரும் உணர்வை இப்படி ஏதேனும் ஒரு எமோஜியின் மூலமா கமெண்டில் கடத்தி விட்டு செல்லவும். யாரையும் கம்பல் பண்ணல நான். விருப்பம் உள்ளவங்க மட்டும் கமெண்ட் பண்ணுங்க.


முக்கிய அறிவிப்பு; இந்த கதை இனி டெய்லி வராது. ஒருநாள் விட்டு ஒருநாள் வரும். நன்றிகள். இந்த கதை வராத அந்த ஒருநாள் கேப்பில் மௌனமாய் சில முத்தங்களும், என் காதல் நீ! உன் கணவன் நான்!  கதைகள் பதிவேற்றப்படும்.. அதுக்கும் உங்க ஆதரவை கொடுங்க.🙏



Post a Comment

2 Comments

  1. Superji. Manohar,தாரிணி, தர்ஷினி எல்லாருக்கும் நல்ல punishment குடுங்க

    ReplyDelete