Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 62

 யஷ்வந்தை பயத்தோடு பார்த்தாள் தாரணி. 


'குந்தவியை மனோகர்தான் கொல்ல டிரை பண்ணார்ன்னு இவருக்கு தெரிஞ்சிடுச்சா.?' என்று குழம்பினாள்.


யஷ்வந்த் முன்னால் வந்து நின்றான்.


"பைத்தியம் போல செய்யாதிங்க அப்பா. வலுக்கட்டாயமா கட்டி வைக்க முடியாது. அது நம்ம தர்ஷினி லைப்பைதான் பாதிக்கும்.." 


தர்ஷினியும் குழப்பத்தில்தான் இருந்தாள். இறந்து போன காதலியின் நினைவில் இருப்பவனிடம் பரிதாபம் காட்டி மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் இப்போது தன் தந்தைதான் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்தால் தன்னையும் சேர்த்து வெறுத்து விடுவானோ என்று பயந்திருந்தாள். 


"யார் லைப்பும் நாசமாகாது.." என்ற தந்தையை கடுப்போடுப் பார்த்த யஷ்வந்த் "லைப் லாங்கும் இந்த துப்பாக்கியோடவே அவங்க லைப்பை ரூல் பண்ண போறிங்களா.?" எனக் கேட்டான்.


அவர் இவனுக்கு பதில் சொல்லவில்லை.


"உட்கார் சூர்யா.." என்றார். ஜேம்ஸை பார்த்தவர் "உங்க குடும்பத்தோட கடைசி வாரிசு உயிரோடு வேணும்ன்னே இப்பவே உட்கார்ந்து என் மக கழுத்துல தாலியை கட்ட சொல்லுங்க.." என்றார்.


"சாரி சார்.." எங்கிருந்தோ வந்தனர் போலிஸார்.


"இவரோட காதலியை கொல்ல டிரை பண்ண வழக்குல உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம் நாங்க.." என்றார்கள்.


மனோகர் குழம்பி போனார். எப்படி போலிஸ் வந்தார்கள் என்று புரியவில்லை. அவரின் கையிலிருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டது. அவரின் கையில் விலங்கு பூட்டப்பட்டது.


"துருப்பு சீட்டு கையை விட்டு போகவே கூடாது. போனா எல்லாமே தலைகீழ்.." என்று தனக்குதானே சொல்லியவர் "உன் மாமனை விட அந்த அனாதைதான் உனக்கு முக்கியமா போயிட்டாளா.?" எனக் கேட்டார்.


"என்னை விட என் காதலை விட எங்க சொத்துதானே உங்களுக்கு முக்கியமா போச்சி.?" என்று திருப்பிக் கேட்ட சூர்யா கழுத்திலிருந்து மாலையை கழட்டி வீசினான்.


"சாரி தர்ஷினி. நான் எனக்கு பிடிக்கலன்னு முதல்லயே சொன்னேன். உங்க அப்பாதான் என் செல்லாவை கடத்தி வச்சிக்கிட்டு என்னை ப்ளாக்மெயில் பண்ணிட்டாரு. உன் மேலயும் தப்பு இருக்குன்னு தெரியும். ஆனா உன்னை குறை சொல்ல‌‌ விரும்பல நான்.. இந்த திருமண ஏற்பாட்டால உன் மனசுல ஏதாவது ஆசை வந்திருந்தா சாரி. என்னை மன்னிச்சிடு.." என்றவன் மணமேடையை விட்டு கீழே இறங்கினான்.


ஜேம்ஸ்‌ இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டார். சொத்தை கூட திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால் இவனின் உடைந்த மனதை எப்போதுமே ஒட்ட வைக்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்து‌ விட்டிருந்தார்.


"போலாம் பெரியப்பா.." என்றவன் வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். 


யஷ்வந்த் தாரணியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே நடந்தான். தாரணியின் உள்ளங்கை ஈரமாக இருந்தது. கவனிக்கும் நிலையில் இல்லை அவன். மனோகர் தன்னையும் போலிசிடம் சொல்லி விடுவாரோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.


திருமண வீட்டின் முன்னால் ஜெட் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. திருமண வீடு இவர்களை புதிராக பார்த்துக் கொண்டிருந்தது. ரூபிகா தன் கணவனை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள். யஷ்வந்தின் அண்ணன்களும் அண்ணிகளும் யஷ்வந்தின் மீதும் சூர்யாவின் மீதும் கொலைவெறியில் இருந்தனர்.


மனைவி ஜெட்டில் ஏற உதவி செய்தான் யஷ்வந்த்.


"எ.. எங்கே போறோம்.?" தயக்கமாக கேட்டவளிடம் "இவங்களை வழியனுப்பி வைக்க போறோம்.." என்றான். அவளை இங்கேயே விட்டு சென்றிருக்கலாம்தான். ஆனால் பயமாக இருந்தது. யார் வந்து எப்போது அவளை தாக்குவார்களோ என்று நினைத்து நடுங்கி கொண்டிருந்தான்.


திருமண வீட்டிலிருந்து கிழக்கே பறந்த ஜெட் ஐந்நூறு கிலோமீட்டர் தாண்டிய பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் தரை இறங்கியது. 


உள்ளிருந்து ஸ்ட்ரெச்சரை இழுத்து வந்தார்கள் யஷ்வந்தின் ஆட்கள் இருவர்.


சூர்யா தனது இருக்கையிலிருந்து இறங்கி ஓடினான். படுக்கையில் மயங்கி கிடந்தாள் குந்தவி. தலையில் காயம் அப்படியேதான் இருந்தது. இந்த ஒரு வார சிகிச்சையில் முகத்திலிருந்து காயங்கள் மட்டும் பாதி மறைந்திருந்தது.


"குணமாகிடுவா சூர்யா.. டோன்ட் வொரி.." என்றார் அருகில் வந்த ஜேம்ஸ். 


சிலையாய் மாறி நின்று குந்தவியை பார்த்துக் கொண்டிருந்தவன் கட்டுகள் இல்லாத அவளின் நெற்றியில் வருடினான். கண்ணீர் தானாக கொட்டியது. அவளின் நெற்றியை நனைத்தது. 


"சாரி செல்லா.." என்றான். 


குந்தவியின் காயங்களையும் கட்டுக்களையும் பார்த்த தாரணிக்கு உடம்பு நடுங்கியது. அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான் யஷ்வந்த்.


"மெடிக்கல் ரிப்போர்ட் சார்.." 


யஷ்வந்தின் ஆட்கள் தந்த ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டார் ஜேம்ஸ். 


"இது அவங்களோட ப்ரூஃப் ஐடிஸ்.. உங்களோடு பயணப்படுவதற்கான பேப்பர்ஸ்" என்று இன்னொருவன் தந்தான். 


அனைத்திலும் செல்லா என்று தெளிவாக இருந்தது. 


சூர்யா எந்த பேப்பரையும் கவனிக்கும் நிலையில் இல்லை. குந்தவியை மட்டும் பார்த்து நின்றான்.


"போலாம் சூர்யா.." அவனை ஜெட்டுக்கு நகர்த்தினார் ஜேம்ஸ்.


குந்தவியை ஜெட்டில் ஏற்றினார்கள்.


"சார்.." தயங்கி அழைத்தான் ரிப்போர்டை தந்தவன்.


"ம்.." என்றபடி திரும்பிய சூர்யாவிடம் "நீங்க சொன்ன மாதிரியே டாக்டர்ஸ்கிட்ட விசாரிச்சோம் சார்.. ஆனா அவங்க என்னவோ சொன்னாங்க. எங்களாலதான் புரிஞ்சிக்க முடியல.." என்றான்.


சூர்யா தன் பெரியப்பாவின் கையிலிருந்த ரிப்போர்டை கையில் வாங்கி பிரித்தான். குந்தவி இடையில் இரண்டு முறை கண் விழித்து உள்ளாள் என்பது ஆச்சரியமாக இருந்தாலும் பிரச்சனைகளை படித்த பிறகு வருத்தம் தானாக வந்து சேர்ந்தது.


"பரவாயில்ல. அவ கிடைச்சதே போதும். சீக்கிரம் குணமாகிடுவான்னு‌ நம்புறேன்.." என்றவன் யஷ்வந்தை அணைத்துக் கொண்டான்.


"நீ செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றிகள் மச்சி.." என்றான்.


"அவளை பத்திரமா பார்த்துக்க. அவ என் பிரெண்ட். நான் உயிர் போகும் நிலையில் இருக்கும்போது நான் கூப்பிட கூட இல்ல. அவளே என்னை நெருங்கி வந்தா. துப்பட்டாவை எடுத்து என் பெரிய காயத்துக்கு கட்டு போட டிரை பண்ணா.." என்று சொல்லி சிரித்தவன் "என்னை காப்பாத்திடணும்ன்னு முழு மனசா நினைச்சா. ஆனா இன்னைக்கு அவ நிலைக்கு நானும் காரணம்ன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு.." என்றான்.


"சூர்யா டைம் ஆச்சி.." நினைவுப்படுத்தினார் ஜேம்ஸ். 


ஜெட் அங்கிருந்து கிளம்பியது.


"சார் நாம கிளம்பலாமா.?" யஷ்வந்தின் பாடிகார்ட் கேட்டார்.


"ம். போகலாம்.." என்றவன் வந்திறங்கிய ஹெலிகாப்டரில் ஏறினான். தன் அருகே அமர்ந்த தாரணியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.


தாரணிக்கு மனம் அடித்துக் கொண்டது. குந்தவியின் நிலைக்கு தானும் காரணமென்று யஷ்வந்த் சொன்னதன் அர்த்தம் என்னவென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


யஷ்வந்த் பேச முயன்றான். ஆனால் பேன் சுத்தும் சத்தத்தில் எதையும் பேச முடியவில்லை.


எங்கோ பார்த்த இடம் போல தோன்றியது தாரணிக்கு கீழேயிருந்த நகரத்தை பார்க்கையில்.


மூங்கில் காட்டின் பின்னாலிருந்த விளையாட்டு மைதானம் ஒன்றில் இறங்கியது ஹெலிகாப்டர்.


தாரணி விழித்தாள்.


கீழே இறங்கி நின்ற யஷ்வந்த் அவளின் கையை பிடித்து இறக்கி விட்டான்.


பெருமூச்சு விட்டான்.


"ஐ யம் சாரி தாரு.." என்றான்.


"யஷூ.." பயத்தோடு அழைத்தாள்.


"நான் உன் காதலனாவும் கணவனாவும் தோத்துட்டேன். என் லவ்வை உனக்கு புரிய வைக்க முடியல என்னால. என் பிரெண்ட்ஷிப்பையும் புரிய வைக்க முடியல. குந்தவிக்கு அப்படி ஆக நீயும்தான் முக்கியமான காரணம்ன்னு எனக்கு தெரியும்.."


தாரணி பயத்தில் எச்சில் விழுங்கினாள். வியர்த்து வழிந்தது.


"அவ என் சிஸ்டர் மாதிரின்னு சொன்னேன். அவ அனாதைப்பா. தற்கொலைக்கு டிரை பண்ணவ. அதனால அவளோடு கொஞ்சம் அதிகமா டைம் செலவு பண்ணேன். இல்லைன்னு சொல்லல. ஆனா நீதான் என்னை நம்பவே இல்ல. அவ சூர்யாவோட காதலின்னு தெரிஞ்ச பிறகாவது உனக்கு என் மேல இருக்கும் சந்தேகம் போயிருக்கணும். ஆனா போகல. தப்பு என் மேலதானே.?"


"ஐயோ இல்ல யஷூ.." என்றவளை மேலே பேச விடாதவன் "எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு தாரு. சந்தேகத்தை கூட பொறுத்து போகலாம். ஆனா நம்பிக்கை துரோகத்தை எப்படி மறப்பேன்.?" எனக் கேட்டான்.


தாரணியின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.


"உன்னை ரொம்ப லவ் பண்றேன். இது உனக்கான தண்டனை இல்ல. எனக்கானதுதான்.." என்றவன் கலங்கும் தன் விழிகளை துடைத்துக் கொண்டான். 


"யஷூ.. சாரி ப்ளீஸ்.."


மறுப்பாக தலையசைத்தவன் "அந்த வீடு உனக்கு சேப்டியும் கிடையாது. வாடகை வீட்டுக்கு உன்னை கூட்டிப் போக முடியாது. சாரி எனக்குதான் அது செட்டாகாது. குந்தவி குணமாகும் வரை நீயும் நானும் பிரிஞ்சி இருப்பதுதான் சரியானது.."


"வேண்டாம் ப்ளீஸ் யஷூ. வேற எந்த தண்டனை வேணாலும் கொடுங்க. பிரிஞ்சி போகாதிங்க.." அழுதபடி கெஞ்சினாள்.


கசப்பாக சிரித்தான். "இன்னும் பிரியவே இல்ல. ஆனா வலிக்குது உனக்கு. முழுசா பிரிய இருந்த சூர்யாவுக்கு எப்படி வலிச்சிருக்கும்ன்னு யோசிச்சியா.? ஒருத்தரோட சந்தோசத்தை பறிக்கிறது எப்படி சரியா வரும்.?" எனக் கேட்டான்.


யஷ்வந்தின் கையை பற்றினாள்.


"என்னை அடிச்சி கூட போடுங்க.. விட்டு போகாதிங்க.."


அவளின் கன்னத்தை வருடினான். 


"உன்னை அடிக்க சட்டுன்னு எனக்கு மனசு வராது தாரு. அடிச்சாலும் நீ புரிஞ்சிக்க மாட்ட. எல்லாம் வேஸ்ட். நீ இங்கே இரு. கொஞ்ச மாசம்.. கொஞ்ச வருசம். யாருக்கு தெரியும்.? அவ குணமாகி வந்துட்டா போதும். அப்புறம் நானா வந்து உன்னை கூட்டிப் போறேன். மன்னிச்சிடு சாரி‌‌.." என்றவன் அழுதவளின் கன்னங்களை துடைத்து நெற்றியில் முத்தமிட்டான். 


"இந்த இடைவெளிக்குள்ள நான் பிசினஸை தனியா ஸ்டார்ட் பண்ணி ஓரளவுக்கு நின்னுடுவேன்னு நம்புறேன்.." என்றவன் விலகி நின்றான்.


அவனின் சட்டையை இடது கையால் இறுக்கமாக பற்றி இருந்தாள் தாரணி. விழிகள் கலங்க அவளின் கையை பிரித்தான். பிரிக்கவே முடியவில்லை. சட்டையை விட மறுத்தாள். விம்மியழுதுக் கொண்டிருந்தாள். 


இதயம் உடைபடும் ஓசை அவனின் மூளையின் ஒவ்வொரு செல்லிலும் ஒலித்தது. அவளின் ஒவ்வொரு விரல்களையும் விடுவிக்கையில் தனது இதயத்திற்கும் தனக்குமான தூரம் அதிகரிப்பதை உணர்ந்தான்.


"விட்டு போகாதிங்க.." 


அவளை விட்டு விலகினான். ஹெலிகாப்டர் நோக்கி நடந்தான். தாரணி பின்னால் ஓட முயன்றாள். அவளின் கையை பற்றியது ஒரு ஜீவன். திரும்பி பார்த்தாள். வருண் ஆத்திரத்தோடு நின்றிருந்தான்.


ஹெலிகாப்டர் கிளம்பியது. யஷ்வந்த் கண்ணீர் வழியும் கண்களை புறங்கையால் துடைத்தபடி தலை குனிந்தான்.


"என்னை விடு அண்ணா.." என்றவளின் கையை மேலும் இறுக்கமாக பற்றினான் வருண்.


யஷ்வந்த் காலையில் இவனுக்கு போன் செய்திருந்தான். "உங்க தங்கச்சி என் அப்பாவோடு கூட்டு சேர்ந்து ஒரு தங்கச்சி போல இருந்த என் பிரெண்டை கொலை பண்ண டிரை பண்ணிட்டா. ஆனா என் அப்பா பாம்பு போல. அதனால இவளையும் கொல்ல டிரை பண்ணிட்டாரு. என் பிரெண்ட் பழையபடி குணமாக்கும் வரை என்னால நிம்மதியா இருக்க முடியாது. ஏதாவது கோபத்துல நான் உங்க தங்கச்சியை திட்டிட்டா அது பெரிய பிரச்சனையா போயிடும். என் வீட்டிலும் அவளுக்கு பாதுகாப்பு கிடையாது. அதனால கொஞ்ச மாசமோ வருசமோ அவளை உங்க வீட்டுல வச்சிக்கோங்க.." என்றுச் சொல்லி இருந்தான்.


தங்கையின் வில்லத்தனம் பற்றி கேள்விப்பட்டவுடனே ஆத்திரமாக வந்தது வருணுக்கு. குணத்தில் தன் தந்தையை கொண்டு இருக்கிறாளே என்று கோபப்பட்டாலும் கூட, இப்போதே இவளுக்கான தண்டனை தராவிட்டால் மிகவும் மோசமாக மாறி விடுவாள் என்று புரிந்துக் கொண்டான். "சரி. கூட்டி வாங்க. பழி வாங்குறேன்னு என் தங்கச்சியை கொடுமை செய்யாம பத்திரமா அனுப்பி வைக்கிறதா சொன்னதுக்கு நான் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.." என்று சொல்லியிருந்தான் இவன்.


வானத்தில் மறைந்த ஹெலிகாப்டரை ஈரம் மின்னும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்த தாரணியின் விம்மல் சத்தம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டிருந்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க நட்புக்களே.. கதை பிடிச்சா கலெக்சன்ல/ரீடிங் லிஸ்ட்ல போட்டு வச்சிக்கங்க..



Post a Comment

2 Comments

  1. யஷ்வோட decision ரொம்ப நல்ல decision

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சிஸ் ❤️💝💝

      Delete