Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 65

 ஆல் ரீடர்ஸ் அட்டேன்சன் ப்ளீஸ்‌ : கதை ஸ்லோவா போக கிடையாது. நீங்க எபிசோட் நம்பரை பார்க்காதிங்க. எங்கே இன்னும் கிளைமேக்ஸ் வரலன்னு தேடாதிங்க. என்ஜாய் பண்ணி படிங்க. அடுத்தது இப்படிதான் நடக்கணும்ன்னு நினைக்காம ஜஸ்ட் என்ஜாய் பண்ணி கதையை மட்டும் படிங்க.. கதையோடு டிராவல் பண்ணுங்க.. நன்றிகள்.


காந்திமதி கண்ணீரை சிந்தினாள். 


"ப்ளீஸ் காத்தவராயா.. என்னை நம்பு. என் உயிரே நீதான். நான் எதுக்கு உன்னை பழி வாங்கணும்?" அழுகையால் உடைந்த குரலில் கேட்டாள்.


துப்பாக்கியின் முனை அவளின் நெற்றியை அழுத்தியது. கண்களை மூடியபடி குலுங்கினாள். காந்திமதியை கண்டு சங்கவிக்கு பரிதாபமாக இருந்தது. எப்போதும் மிரட்டிக் கொண்டே இருப்பவள் இன்று புதிதாக அழுவதை பார்க்கவும் அவளுக்கு ஏதோ போலாகி விட்டது.


"ரொம்ப நாள் கழிச்சி சந்தோசமும் நிம்மதியும் கை சேர்ந்து இருக்கு காத்தவராயா. தயவுசெஞ்சி என்னை நம்பு.." காந்திமதி கெஞ்சினாள்.


"நீ சொன்ன அவன் யார்?" எனக் கேட்டார் முறைத்தபடி. "என்ன நடந்ததுன்னு முழுசா தெளிவா சொல்லு.." என்று கத்தினார். "யார் உன்னை ரேப் பண்ணது? இல்ல யார் உன்னை ரேப் பண்ணதா நீயா நினைச்சிட்டு இருக்க.. சொல்லுடி.." அதட்டிக் கேட்டார்.


காந்திமதி தயக்கத்தோடு ஆதீரனைப் பார்த்தாள். மகனின் முன்னால் அனைத்தையும் சொல்ல முடியவில்லை.


அவளின் பார்வையை தெளிவாக புரிந்துக் கொண்டவர் அவளை இழுத்துக் கொண்டு அருகே இருந்த அறைக்கு நடந்தார். கதவை சாத்தும் முன் மகனை பார்த்தவர் "போயிடாதிங்க. இங்கேயே இருங்க.. டெஸர்டை சாப்பிடுங்க.." என்றார்.


"என்ன நடந்தது?" 


அவளை அறையின் நடுவில் நிறுத்தி கையை கட்டியபடி கேட்டார்.


புடவை முந்தானையால் வாயை பொத்தி அழுதவள் "காலேஜ் லீவ் முடிஞ்ச இரண்டாவது வாரத்துல நீ ஊட்டிக்கு வந்துட்ட. அன்னைக்கு ஒரு நாள்தான் அப்படி ஆச்சி.." என்றாள்.


"என்ன ஆச்சின்னு கேட்டேன்.."


"காப்பி குடிச்சதும் மயக்கம் வந்துடுச்சி.. ரொம்ப நேரம் கழிச்சிதான் தூக்கம் தெளிஞ்சது. எழுந்தபோது எந்த டிரெஸ்ஸும் என் மேல இல்ல.." என்று குலுங்கினாள்.


அன்று வனத்தின் நடுவே மாட்டிக் கொண்டபோது வன்புணர்வு செய்யப்பட்டேன், அதனால் குழந்தை உருவானது என்று மட்டும் சொல்லியிருந்தாள். இன்றும் கூட இவள் சொல்வதில் முழுமை இருப்பதாக தெரியவில்லை அவருக்கு.


"உன் உடம்புல டிரெஸ் இல்லங்கறதால உன்னை யாரோ ரேப் பண்ணிட்டான்னு நினைச்சிருக்க.." என்றார் கேலி சிரிப்போடு. அந்த சிரிப்பின் பின்னால் இருபத்தியெட்டு ஆண்டு கால வேதனையும் வலியும் இருந்தது.


"உ.. உடம்பு வலிச்சது காத்தவராயா.. ரொம்ப பெயின்.." தலைகுனிந்து சொன்னவளை கண்டு தலையை கோதிக் கொண்டார். ஆயிரத்தியெட்டு கோபம் இருந்தாலும் கூட வலியோடு இருந்தேன் என்று அவள் சொன்னதும் தானாய் மனது இளகியது. அவளின் வலியை தானும் உணர்ந்தார். அப்படி நடந்திருக்குமோ என்றும் தோன்றியது. மயக்க மருந்தினால் உடம்பில் வலி தோன்றியிருக்குமோ என்றும் சந்தேகம் வந்தது. மயக்க மருந்து தந்தவன் உடலை வேறு விதமாக ஏதும் பயன்படுத்தியிருப்பானோ என்றும் தோன்றியது.


ஆக மொத்தத்தில் அவரால் நிலையான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் என்ன நடந்திருந்தாலும் ஆதீரன் அவள் வயிற்றில் கருவாய் உருவாகி இருந்த சமயத்தில்தான் இப்படி நடந்திருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டார். வயிற்றில் வளரும் கருவை பற்றி தெரியாமல் அந்நிலையில் சிக்கி வந்தவள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதால்தான் கருவுற்றிருக்கிறோம் என்று தவறாக புரிந்துக் கொண்டாள் என்றும் யூகிக்க முடிந்தது.


"அவர் அத்தையை சுட்டுடுவாரா மாமா?" டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி தனது கற்பனை உலகத்தில் இருந்த ஆதீரன் மனைவியின் கேள்வியால் திரும்பினான். எதிரே இருந்த அறையை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.


"அவர் சுட்டாதான் என்ன போச்சி? சுடலன்னாதான் என்ன போச்சி?" விரக்தியாக சொன்னான்.


"பீல் பண்ணாதிங்க மாமா.." அவனின் வலது கையோடு தனது இடது கரத்தை கோர்த்துக் கொண்டு சொன்னாள்.


"வாழ்க்கையே புரியல சங்கவி.." 


"தைரியமா இருங்க மாமா. எல்லாமே சரியாகிடும்.." என்றவளை ஆச்சரியப்படாமல் பார்க்க முடியவில்லை அவனால்.


'இவளை அவ்வளவு கொடுமை செஞ்சிருக்கேன். அப்படியிருந்தும் எனக்கு ஆறுதலா மட்டுமே இருக்காளே.!' என நினைத்தவனுக்கு இந்த உறவுகளின் குளறுபடியில் கிடைத்த ஒரே உருப்படி உறவு இவள்தான் என்று தோன்றியது. அவளின் பின்னங்கழுத்தில் கையை போட்டு வளைத்தவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். 


அவனின் கழுத்தில் வந்து புதைந்தது அவளின் முகம். அவளின் பின்னங்கழுத்தில் மூக்கை உரசியவன் "எப்பவும் கூடவே இருப்பியா?" எனக் கேட்டான்.


"ம்.. இல்லன்னா நீங்களும் உங்க அப்பாவை போல துப்பாக்கி எடுத்து வந்து என்னை சுட்டுட்டா என்ன செய்றது.?" எனக் கேட்டாள் அப்பாவியாக.


அவனின் இதழில் புன்னகை தாண்டவமாடியது. அப்பா என்று சட்டென்று சொல்லி விட்டாளே என்று ஆச்சரியமாக இருந்தது. 


"நான் நிஜமாவே சுட்டுடுவேன்.. அதுவும் சொல்லாமலேயே சுட்டுடுவேன்.." என்றான். காரணமே இல்லாமல் அவளின் மேனி நடுங்கியது. 


"அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது சங்கவி. நான் அவரோட பையன்னு முடிவாகிடுச்சி. அப்படின்னா அவங்க லவ் பண்ணியிருக்காங்கன்னு தெளிவா தெரியுது. அவர் எப்படி இத்தனை வருசம் பிரிஞ்சி இருந்தாரோ எனக்கு தெரியாது. ஆனா என்னால அது முடியாது.." என்றவனை பார்த்து அவள் வேண்டுமானால் சிரிக்காமல் இருக்கலாம். ஆனால் விதி சிரித்தது.


துப்பாக்கியோடு நாற்காலி ஒன்றில் அமர்ந்தார் காத்தவராயன்.


"உன்னை மாதிரி ஒரு முட்டாளுக்கு நான் எங்கே போவேன்?" எனக் கேட்டார்.


காந்திமதி விம்மியழுதாள். தயக்கத்தோடு சென்று அவரின் காலடியில் அமர்ந்தாள். இத்தனை ஆண்டு குற்ற உணர்ச்சிதான் அவளை அவரிடமிருந்து விலகி இருக்க வைத்தது.


"சாரி காத்தவராயா.. நான் முட்டாள்தான்.." என்றாள் அவரின் தொடை மீது தலை சாய்த்தபடி.


விலக்கி தள்ள சொன்னது கோபம். அணைத்துக் கொள்ள சொன்னது நேசம். இரண்டுக்கும் இடையில் சிக்குண்டு கிடந்தவர் "இதை நீ அப்பவே சொல்லி இருந்தா இவன் பிறந்த முதல் நாளே டெஸ்ட் எடுத்திருக்கலாம். இத்தனை வருசம் நாம பிரிஞ்சிருந்திருக்க தேவையில்ல.. என் வாழ்க்கையை நாசம் பண்ணி, உன் வாழ்க்கையை நாசம் பண்ணி, கடைசியில் ஒன்னும் அறியாத என் மகன் வாழ்க்கையையும் சேர்த்து நாசம் பண்ணியிருக்க.." என்றார் இடிந்து போனவராக.


"தெரியாம போனேன் காத்தவராயா.." என்றவளின் கண்ணீர் அவர் அணிந்த கால்சட்டையை தாண்டி தொடையை நனைத்தது.


அவளின் மன வேதனையையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. தவறே நடக்காமல், தவறு நடந்திருந்தாலும் கூட அறியாமல் நடந்த ஒன்றிற்கு பழி பாவம் சுமப்பது சின்ன விசயம் இல்லையே!?


"அவன் யார்ன்னு சொல்லு.. எதுக்கு அவன் மயக்க மருந்து தந்தான்னு நானே கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.." என்றார் விட்டத்தைப் பார்த்தபடி.


"எ.. எனக்கு அவன் யார்ன்னு தெரியாது.."


பொய் சொல்கிறாள் என்று புரிந்தது. வரும் ஆத்திரத்துக்கு சுட்டு விடலாம் என்றுத் தோன்றியது. 


"எந்த இடத்துல சம்பவம் நடந்தது.?" ஏதாவது ஒரு விசயத்தை பிடுங்கியாவது, பிடித்தாவது விசயத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.


நொடி நேரம் யோசித்தாள். "நான் டெய்லரிங் கிளாஸ் போன வழியில் ஒரு பாட்டு கேசட் கடை இருக்கும். அங்கேதான் அப்படி ஆச்சி.." 


கொலைவெறியோடு அவளைப் பார்த்தார். அவள் தையல் வகுப்புக்கு சென்ற பாதை அவளுக்கு நினைவிலாவது இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவருக்கு மிக தெளிவாக நினைவில் இருந்தது. அந்த வழியில் மட்டுமல்ல அந்த வட்டத்திலேயே அவள் சொன்ன கடை கிடையாது. 


வெளியே டம்ளர் உருளும் சத்தம் கேட்டது. அதன் பிறகுதான் அவருக்கு மகனின் நினைவு வந்தது. இவளை பிறகு விசாரிக்கலாம் என நினைத்து அவளின் தலையை விலகி விட்டுவிட்டு எழுந்தார். தனக்கே இவ்வளவு அதிர்ச்சி என்றால் அவனுக்கு எவ்வளவு அதிர்ச்சி இருக்கும் என்றுப் புரிந்துக் கொள்ள முடிந்தது.


வெளியே வந்தவரின் பார்வையில் தரையில் விழுந்த டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சமையல்கார பெண்ணும் கை கோர்த்து அமர்ந்திருந்த மகனும் மருமகளும் தென்பட்டனர்.


"தேங்க்ஸ்.. என் பேச்சை மதிச்சி இங்கிருந்து போகாம இருந்ததுக்கு.." என்றபடியே வந்து முன்னால் வந்தார்.


நெற்றியை கீறிக் கொண்டார். 


"சாரி ஆதீ.." என்றார் மனப்பூர்வமாக.


"நான் இத்தனை வருசமா அந்த முட்டாள் பேச்சை கேட்டுட்டு இருந்துட்டேன். சாரி. அப்பா இல்லாம, அப்பா யாருன்னே தெரியாம வளருவது கஷ்டமான விசயம்தான். என்னாலதான் உனக்கு இந்த நிலமை. மன்னிச்சிடு. நாம மூனு பேரும் சேர்ந்து ஒரே குடும்பமா இருக்கணும்ங்கறதுதான் என்னோட இருபத்தியெட்டு வருச ஆசை. ஆனா அந்த முட்டாள் என்னை நெருங்கவே விடல. இந்த பொண்ணோட புண்ணியத்தால உன்னை அடையாளம் கண்டுபிடிச்சேன் நான்.." என்றவர் சங்கவியை பார்த்து புன்னகைத்தார்.


"நான் உன்னை கட்டாயப்படுத்தல. நீ யோசி. அந்த முட்டாளை மன்னிக்க ஏதாவது வாய்ப்பிருந்தா மறக்காம எனக்கு போன் பண்ணு.." என்றார்.


ஆதீரன் மனைவியின் கைப்பிடித்தபடி எழுந்தான்.


"மேரேஜ்க்கு முன்னாடி குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டா இப்படி விபரீதமா போக கூட வாய்ப்பு இருக்கு. இதுக்கு மேல உங்களுக்கு இதை சொல்லி என்ன பிரயோஜனம்.? நான் ரொம்ப கன்ப்யூஸ்டா இருக்கேன்.. அப்புறம் பார்க்கலாம்.." என்றவன் வெளியே நடந்தான்.


சங்கவி தயக்கத்தோடு எதிரே இருந்த அறையை பார்த்தாள். காந்திமதி வெளியே வரவேயில்லை.‌


"விருந்துக்கு தேங்க்ஸ் மாமா.." என்றவள் ஆதீரனை பின்தொடர்ந்தாள். அவளின் அழைப்பில் காத்தவராயனுக்கும் ஆதீரனுக்கும் புன்னகை உண்டானது.


ஷைனிங் வேர்ல்டின் தலைமையகம். 


அப்போதேதான் இயக்குனர்களுடனான கூட்டம் நடந்து முடிந்தது.


கூட்டம் நடந்த ஹாலை விட்டு வெளியே வந்தனர் ஜேம்ஸின் மகன் ஜார்ஜும், சூர்யாவும். நடந்த கூட்டத்தை பற்றி வராண்டாவில் நின்றபடி பேச ஆரம்பித்தனர். இயக்குனர்கள் அவர்களை தாண்டிக் கொண்டு நடந்தனர்.


சரிவுகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சமன்பட ஆரம்பித்திருந்தது. வளர்ச்சியை மேல்நோக்கி கொண்டு போவதற்காக அனைவருமே உழைத்துக் கொண்டிருந்தனர்.


தன்னை தாண்டி நடந்த இளம்பெண் ஒருத்தியின் முதுகை வெறித்தான் ஜார்ஜ்.


"அண்ணிக்கிட்ட சொல்லட்டுமா?" மிரட்டினான் சூர்யா.


"ஹேய்.. நான் அவளோட அவுட்பிட் பார்த்தேன். அதே போல சல்மாவுக்கு ஒன்னு பிரசென்ட் பண்ணலாமான்னு யோசனை.." என்றபடியே அந்த பெண்ணை பார்த்து நின்றவன் தூரத்திலிருந்த லிப்டிலிருந்து வெளியே வந்தவளை கண்டு கண்களை அகலமாக விரித்தான்.


'இந்த பிசாசா.? சிக்கினா சிதறு தேங்கா நான்.. தப்பிச்சிடு ஜார்ஜ்..' தனக்குதானே சொன்னவன் அதை சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பி இருக்கலாம். அவன் யோசித்து முடிக்கும் முன் அவர்களை நெருங்கி விட்டாள் அவள்.


"பூச்சாண்டி வந்துட்டேன்.." என்றபடி ஓடி வந்து சூர்யாவை கட்டிக் கொண்டாள்.


சூர்யா அவளைப்‌ பார்த்தான். வாயோரத்தில் ஐஸ்கிரீமின் நிறம் ஒட்டிக் கொண்டிருந்தது. துடைத்து விட்டான். 


"நீ எப்படி இங்கே வந்த.?" எனக் கேட்ட சூர்யாவிடம் "ஜேம்ஸ் தாத்தா கூட்டி வந்தாரு.." என்றவள் ஜார்ஜை பார்த்து பற்களை காட்டினாள்.


"எனக்கு எப்ப தம்பி பாப்பா கிடைப்பாங்க அங்கிள்.?" எனக் கேட்டாள் சோகமாக.


இவளிடம் இதுதான் பிரச்சனையே. பார்க்கும் நேரத்திலெல்லாம் தம்பி பாப்பா வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தாள். சல்மா இன்னும் எட்டு வருடத்துக்கு குழந்தையை பற்றி நினைக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு இருந்தாள்.


"எனக்கு வேலை இருக்கு.." என்ற ஜார்ஜ் அங்கிருந்து நழுவ முயல, "எனக்கு தம்பி பாப்பா வேணும்.. என்னோடு விளையாட ஒருத்தரும் இல்ல.." என்று அழ ஆரம்பித்து விட்டாள் அவள். அவர்களை தாண்டி நடந்தவர்கள் அவளை பார்த்து சிரித்தபடியே கடந்தனர்.


"இவதான் ரொம்ப நாளாவே கேட்கறா இல்ல.. ஒரு தம்பி பாப்பா பெத்து தரலாமில்ல.?" என்றபடியே அங்கே வந்தார் ஜேம்ஸ். அவரின் கையிலிருந்த கரடி பொம்மையை பிடுங்கி கொண்டவள் "நீங்களே சொல்லுங்க தாத்தா.. ஜார்ஜ் அங்கிளுக்கு என் மேல பிரியமே இல்ல.." என்றாள் அழுதபடி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (காட் - கேளுங்கள் கொடுக்கப்படும்.


மீ - எங்கே பாஸ்? நானும்தான் கமெண்ட் கேட்டுட்டு இருக்கேன். வழக்கமா கமெண்ட்ஸ் தருபவர்களை தாண்டி ஒருத்தரும் கமெண்ட் செக்சன்ல வந்து இரண்டு எமோஜியை கூட டைப் பண்றது இல்ல..)





Post a Comment

0 Comments