Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 67

 ஆதீரன் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். அவனின் காரில் அருகில் நின்றிருந்தாள் காந்திமதி. 


"ஆதீ.." என்றாள் அவன் தன் அருகில் வந்ததும். அவளை கண்டுக் கொள்ளாமல் காரில் ஏறி கிளம்பி விட்டான் ஆதீரன்.


இந்த மூன்று மாதங்களில் தினமும் வந்து காத்து கிடக்கிறாள் காந்திமதி. மன்னிக்க மனம் வரவில்லை இவனுக்கு. 


"ஆதீ.. சாரி. என்னை ஒருத்தன் ரேப் பண்ணிட்டதா நினைச்சிட்டேன். முட்டாள் நான். அவனை பழிவாங்க முடியல. நான் உன் மேல பாசமாதான் இருந்தேன். உன் மேல உயிரையே வச்சிருந்தேன்டா. ஆனா அவன் மேல இருந்த வெறுப்பு எப்படியோ உன் மேலயும் பரவிடுச்சி. 


நான் எவ்வளவோ டிரை பண்ணேன் ஆதீ.. ஆனா நீயும் குந்தவியும் சந்தோசமா இருந்தது மனசுக்கு ஒத்துக்கல.. மன்னிச்சிடுடா என்னை. நீ என் காத்தவராயனோட பையன் இல்லன்னு நினைச்சி உன் காதலை அழிச்சிட்டேன்.." என்று முதல் நாளே கெஞ்சினாள்.


"நான் உங்களை என் அம்மான்னு நினைச்சேன். உங்களுக்கு என் மேல அவ்வளவு வெறுப்பு இருந்திருந்தா என்னை கருவுலயே அழிச்சிருக்கலாமே.. ஏன் பெத்து வளர்த்தி பழி வாங்கணும்?" வெறுப்போடு கேட்டான்.


விம்மியழுதாள் காந்திமதி.


"அப்ப அவ்வளவு விவரம் இல்லடா.. கருவை கலைக்கும் அளவுக்கு தைரியம் வரல. என் வீட்டுல சொல்லாம ஓடி வந்துட்டேன். உனக்காகவேதான் நான் நின்னு வாழ்ந்தேன். காத்தவராயனை நெருங்கவே விடலடா. காத்தவராயனுக்கு உன்னை பத்தி தெரிஞ்சா உன்னை கொன்னுடுவானோன்னு நீ பிறந்த சில வருசம் வரை மறைஞ்சி மறைஞ்சிதான்டா வாழ்ந்தேன். அவன் கண்டுபிடிச்சி வந்து கூப்பிட்டபோது கூட நான் போகல. உன்னை தத்து மகனா ஏத்துக்கறதா கூட சொன்னேன். மனசு வரல. 


ஏதாவது ஒரு சூழ்நிலையில் உன்னை ஒரு வார்த்தை சொல்லிடுவானோன்னு பயந்தே அவனை ஒதுக்கி வச்சேன். ஆனா உன் காதலி விசயத்துல என் கட்டுப்பாட்டையும் மீறி இப்படி பண்ணிட்டேன். முதல்ல அவளை கொல்லதான் நினைச்சேன். ஆனா நீ மனசு உடைஞ்சி போயிடுவன்னுதான் அவளை துரத்தி அடிச்சேன். உன்னை உயிரா நேசிச்சேன். உன் காதல் என் மனசுல விஷத்தை விதைச்சிடுச்சி. தப்பு முழுக்க என் மேலதான்.. மன்னிச்சிடு.." என்று கெஞ்சினாள்.


ஆதீரனுக்கு அதிர்ச்சியை தவிர வேறு எதுவும் இல்லை. பெற்ற தாயால் பழிவாங்கப்பட்ட காதலுக்கு சொந்தக்காரன். உள்ளம் குமுறியது. 


"என் முன்னாடி வராதிங்க. எனக்கு கடுப்பா இருக்கு. நான் பழசை மறக்க நினைக்கிறேன். ஆனா நீங்க எனக்கு செஞ்ச துரோகத்தை எப்பவும் மன்னிக்க மாட்டேன். நீங்க என் மேல இருக்கும் ஓவர் பொசசிவ்னாலதான் குந்தவியை ஓட வச்சிங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் இத்தனை நாளா. ஆனா திட்டமிட்டு பழி வாங்குனிங்கன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு மனசுக்கு.


துரோகம். ஆரம்பத்துல இருந்தே துரோகம். அடிமட்டத்துல இருந்தே துரோகம். நான் என்ன பாவம் செஞ்சேன்னு எனக்கே தெரியல. ஆனா நான் ஏதோ ஒரு பாவத்தை செஞ்சிட்டேன். அது உங்களுக்கு பிறந்ததாதான் இருக்கும்.." என்றவன் அந்த முதல் நாளிலும் கூட இதே‌ போலதான் காரை எடுத்துக் கொண்டு விர்ரென்று வந்து விட்டான்.


ஆனால் அதற்கு அடுத்த நாள் காத்தவராயன் அவனை காண வந்தார். அவரிடம் கோபப்பட தோன்றவில்லை அவனுக்கு.


அலுவலகம் வந்தவரை அமர வைத்து தேனீர் தந்தான். ஆனால் அவனாக வாய் திறந்து எதுவும் பேசவில்லை. 


"அவ தெரியாம தப்பு பண்ணிட்டா ஆதீ.." என்றவரிடம் கை காட்டி தடுத்தவன் "என்னதான் உங்களுக்குள்ள பிரச்சனை.? கேட்கவும் தெரிஞ்சிக்கவும் எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்.." என்றான் ஆதீரன்.


"நானும் உன் அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ் அன்ட் காலேஜ்மேட்ஸ். ரொம்ப நாள் லவ்.. காலேஜ் முடிஞ்ச நேரம். சீக்கிரம் திரும்பி வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்தேன். மறுபடி போய் பார்த்தா அவ அங்கே இல்ல. 


தேடி சலிச்சி ஒருநாள் கண்டுபிடிச்சேன். நீ சின்ன பையனா அவளோட முந்தானையை பிடிச்சி நின்ன. என் மகன்னு ஓடி வந்தேன். இல்லன்னு அனுப்பிட்டா. அவளுக்கு வேற ஒரு காதலன்னு, கள்ள காதலன்னு புரிஞ்சிக்கிட்டேன். செம வலி. செம கோபம். ஆனாலும் அவளை என்னால மறக்க முடியல. உன்னையும் விலக்கி தள்ள முடியல. உங்க ரெண்டு பேரையும் என்னோட கூட்டி போக எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா அவ என்னோட எந்த திட்டத்துக்கும் ஒத்து வரல. 


கிட்டத்தட்ட இருபத்தியெட்டு வருசமா அவ இல்லாம வாழ்ந்தேன் நான். என்னை எந்த ஒரு சூழ்நிலையிலும் நெருங்க விடல அவ‌. நான் போராடிப் பார்த்தேன்டா ஆதீ. எனக்கு எந்த ஒரு இடத்திலும் அவ நூலளவு கூட இடம் கொடுக்கல..‌ இந்த இருபத்தியெட்டு வருசத்துல அவ இல்லாம நான் பட்ட வேதனையும், நான் உயிராய் நேசிச்சவ வேற எவனோ ஒருத்தனுடைய குழந்தைய பெத்து வளர்த்தான்னு நான் மனசுக்குள்ள கொண்ட சோகமும் எனக்கு நரக வேதனையா இருந்தது. நீ என் மகன்னு தெரிஞ்ச பிறகு நான் பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து போன மாதிரி இருந்தது. அப்போதும் கூட இவ செஞ்ச செயலால நாம பிரிஞ்சி இருக்கோம். தயவுசெஞ்சி அவளை மன்னிச்சிடு. எனக்காகவாவது மன்னிச்சிடு. என்னை ஏத்துக்க ஆதீ.." என்றார் கெஞ்சல் குரலில்.


ஆதீரனால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவரை ஏற்றுக் கொள்ளதான் நினைத்தான். ஆனால் தாயின் முகம் கண் முன் வந்து நின்று அவனை எப்போதும் கோபத்திலேயே வைத்திருந்தது.


இதோ அதோ என்று மூன்று மாதங்கள் கடந்து விட்டது. காந்திமதியும் தினமும் வந்து அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.


தாய் தந்தையின் நினைவை மனதிலிருந்து அகற்றி விட்டு வீடு வந்து சேர்ந்ததும் மனைவியைத் தேடி ஓடினான் ஆதீரன்.


"சங்கவி.." வீட்டுக்குள் நுழையும் போதிருந்தே அவளை அழைத்துக் கொண்டுதான் சென்றான்.


"மாமா.." என்றபடி எதிர்கொண்டு வந்தவளை பாய்ந்து அணைத்துக் கொண்டான். 


"நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா.?" எனக் கேட்டான் அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டபடி.


"விடுங்க மாமா.. யாராவது பாத்துடப் போறாங்க.." வழக்கம் போல அவனிடமிருந்து நழுவ முயன்றாள்.


தனது பாக்கெட்டிலிருந்த மல்லிகையை கையில் எடுத்தான். இந்த மூன்று மாதத்தில் ஒரு நாள் கூட பூக்கடையில் வண்டியை நிறுத்தாமல் இருந்ததே இல்லை. பூக்கடைக்காரிக்கு வழக்கமான வாடிக்கையாளர் ஆகி விட்டான். பூக்கடைக்காரியும் இவனுக்கு தினமும் மல்லிகையை கொஞ்சமேனும் ஒதுக்கி வைக்க ஆரம்பித்து விட்டாள்.


அவளின் கூந்தலில் பூச்சரத்தை சூட்டினான். வாசத்தோடு இருந்தவளின் கூந்தலை முகர்ந்தவன் அவளின் காதோரத்தில் முத்தமிட்டான்.


"மாமா.." தயக்கத்தோடு அழைத்தவளை என்னவென்பது போல பார்த்தான்


"நாளைக்கு ஆஸ்பிட்டல் போகலாமா.?" எனக் கேட்டாள் மேலும் தயங்கியபடி.


"என்னாச்சி சங்கவி.?" பதறினான் ஆதீரன்.


"ஒரு வாரம் லேட்டாகியிருக்கு மாமா.." தன் வயிற்றில் கை பதித்தபடி சொன்னாள்.


ஆதீரனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆண்டவன் அதற்குள் தங்களுக்கு கருணை காட்டி விட்டான் என்று மகிழ்ந்தான்.


சங்கவியை அணைத்தான். அவளுக்கு முத்த மழையாகப் பொழிந்தான். அவனின் அழுத்தமான முத்தங்களாலேயே கன்னங்கள் இரண்டும் சிவந்து போனது சங்கவிக்கு.


"மாமா.." அவனை விலக்கி நிறுத்தினாள். "இன்னும் கன்ஃபார்ம்‌ ஆகல இல்லையா.? அதுக்குள்ள கொண்டாடாதிங்க.." என்றாள்.


ஆனால் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.


மறுநாள் காலையில் மருத்துவமனையை அடையும் வரையிலும் கூட மனது துள்ளி குதித்துக் கொண்டேதான் இருந்தது.


மருத்துவர் ரேகா ஆதீரனும் சங்கவியும் தாய் தந்தையராக போகின்றனர் என்று பரிசோதித்து சொன்னாள். 


ஆதீரனுக்கு மாபெரும் நிம்மதியாக இருந்தது.


இந்த மூன்று மாதங்களில் சங்கவி அவனிடத்தில் சிரித்துக் கொண்டு இருந்தாலும் கூட மனதுக்குள் கலங்கி கொண்டுதான் இருந்தாள். அதை ஆதீரனும் அறிந்திருந்தான். அவளின் சோகம் தீர்வதற்கு இந்தக் குழந்தை காரணமாக இருக்கும் என்று நம்பினான்.


ரேகா தந்த டயட் சார்ட்டை இறுக்கமாக பற்றிக்கொண்டான் ஆதீரன். அதில் இருந்தவற்றை ஏழெட்டு முறை படித்துப் பார்த்தான்.


என்னென்ன உணவுகளை அவள் சாப்பிட வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே மனனம் செய்து விட்டான்.


அவளை பூப்போல காக்க வேண்டும் என்று மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டான்.


"பாட்டி.." கத்திக்கொண்டே வீட்டிற்குள் ஓடி வந்தாள் செல்லா.


உணவு மேஜையின் அருகே நின்றிருந்த பூங்கொடி செல்லா ஓடி வந்ததைக் கண்டு ஃப்ரிட்ஜுக்குள் இருந்த சாக்லேட் பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்தாள். அதை செல்லாவிடம் நீட்டினாள்.


"அம்மா வேணாம்" அந்த சாக்லேட் பாக்ஸை பிடுங்கிக் கொண்டான் சூர்யா.


"ஏன்டா.?" என்ற அன்னையிடம் "அவ உப்பு மூட்டை தூக்க சொல்லி கேட்கிறா.. நீங்க தினம் வாங்கி வந்து தரும் ஸ்வீட்ஸால வெயிட்டாகிட்டே போறா.. இவ இப்படியே வெயிட் போட்டுட்டு போனா நான் எப்படி இவளை உப்பு மூட்டை தூக்க முடியும்.?" எனக் கேட்டான் பரிதாபமாக.


பூங்கொடிக்கும் தன் மகனின் நிலையை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. ஆனால் கண்கள் இரண்டை விரித்து வைத்தபடி தன்னை ஏக்கமான கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த செல்லாவை காணும்போது சாக்லேட் பாக்ஸை திருப்பிக் கொள்ள முடியவில்லை.


அவளின் கைகள் தானாக செல்லாவிடம் சாக்லெட் பாக்ஸை தந்தது.


"ஏன் பாட்டி அங்கிளுக்கு என் மேல பாசமே இல்ல.?" வருத்தத்தோடு கேட்டாள் செல்லா.  அம்மா தன்னை முறைக்கும் முன்பே திருப்பி முறைத்து விட்டான் சூர்யா.


செல்லா தன்னுடைய விளையாட்டு பொம்மைகள் இருந்த அறைக்கு ஓடினாள். அங்கிருந்த பொம்மைகளோடு விளையாடினாள்.


சூர்யாவின் கால்கள் அவளை தானாக பின் தொடர்ந்து கொண்டிருந்தன. பார்பி டாலை வைத்து அவள் விளையாடுவதை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் மனம் கொள்ளை போய் கொண்டிருந்தது செல்லாவின் கண்களில்.


நிறைய கேள்விகளை கேட்டாள் விளையாடியபடியே. தன்னால் முடிந்த அளவுக்கு பதில் சொன்னான் சூர்யா.


உண்மையிலேயே அவனுக்கு செல்லாவின் தாய் தந்தையரை நினைத்து பரிதாபமாக இருந்தது. இப்போதே இந்த கேள்வி கேட்பவள் குழந்தையாக இருக்கும்போது எத்தனை கேள்விகளை கேட்டு இருப்பாள் என்பதை அவனால் யூகிக்கவே முடியவில்லை.


தன்னிடம் இருந்த பந்து ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.


"அங்கிள் வாங்க. நாம இந்தப் பாலை கேட்ச் பிடிச்சி விளையாடலாம்.." என்று அழைத்தாள்.


எழுந்து நின்றவன் அந்த அறையின் எதிர் சுவற்றின் அருகில் சென்று நின்றான். இந்தப் பக்கமிருந்து பந்தை தூக்கி வீசினாள் செல்லா.


பந்தை பிடித்துவிட்டான் சூர்யா. உடனே அழ ஆரம்பித்தாள் செல்லா.


"உங்களுக்கு என் மேல பாசமே இல்ல. ஏன் எப்பவும் நீங்களே ஜெயிக்கிறிங்க? அவ்வளவு பெரிய பையனா இருக்கிங்க நீங்க.. ஒரு சின்ன குழந்தை ஜெயிக்கணும்ன்னு விட்டு கொடுக்க மாட்டேங்கிறிங்க.." என்றாள் அழுகையின் நடுவே.


சூர்யா நெற்றியில் அடித்துக்கொண்டான்.


"அழாதம்மா தாயே.. நீ நில்லு. இந்த முறை நான் கேட்ச் பிடிக்காம விட்டுடுறேன்.." என்றவன் பந்தை தூக்கி அவளிடம் வீசினான்.


செல்லா பந்தை தூக்கி அவன் முகத்தின் மீது வீசினாள். அவள் அழ கூடாது என்பதற்காக அவன்‌ தன் கையை கூட மேலே உயர்த்தவில்லை. பந்து வந்து நேராக அவனின் மூக்கில் மோதியது.


"அம்மா.." என கத்தியபடி மூக்கை பிடித்தவன் அங்கேயே சரிந்து விழுந்தான்.


செல்லா பயந்து ஓடி வந்தாள்.


"அங்கிள்.." என அழைத்தபடி அவனை எழுப்ப முயன்றாள். அவனோ கண்கள் சொக்க மயங்கி விட்டிருந்தான்.


பயத்தில் அழ ஆரம்பித்து விட்டாள் செல்லா.


"சாரி அங்கிள் இனிமேல் நான் பாலை தூக்கி உங்க மேல போட மாட்டேன்.. ப்ளீஸ் எழுங்க.." அவனை உலுக்கி எழுப்ப பார்த்தாள்.


அவன் கண்களை திறக்கவே இல்லை.


"பாட்டீ.." என்று கத்தியபடி அங்கிருந்து செல்ல முயன்றவள் அவன் அரை கண் விழித்து தன்னை பார்ப்பதை கவனித்து விட்டாள்.


'சூர்யா அங்கிள் என்னையே ஏமாத்த பாக்கறிங்களா.?' என நினைத்தபடி சுற்று முற்றும் பார்த்தாள். 


போன வாரம் பொம்மை கடைக்கு ஜேம்ஸ் அழைத்து சென்றிருந்தபோது தான் ஆசையாக வாங்கி வந்த தேள் பொம்மையைத் தேடி எடுத்துக் கொண்டு சூர்யாவிடம் ஓடிவந்தாள்.


சூர்யாவின் மீது அந்த பொம்மையை வீசினாள். 


"ஐயோ அம்மா.." என்று பதறி எழுந்தான் சூர்யா.


அவன் எழுந்து நின்று உதறியதும் அவன் மேலிருந்து கீழே விழுந்த பொம்மை தேள் குடுகுடுவென்று ஓடியது. 


"ஐயயோ நி‌ஜமான தேள் அங்கிள்.." என்று ஓடி வந்து சூர்யாவின் மீது ஏறிக் கொண்டாள் செல்லா.


அதன்பிறகுதான் சூர்யாவும் ஓடிய தேளை கவனித்தான். அது பொம்மை தேள் என்றுதான் நினைத்திருந்தான் உதறும் வரையிலும்கூட. 


"அடிப்பாவி உனக்கு ஏதுடி இந்த நிஜமான தேளு.?" என்றவன் போனை எடுத்து வீட்டில் பணிபுரியும் பணியாளரை அழைத்தான்.


சற்று நேரத்தில் அந்த அறைக்கு வந்த பணியாளர் அந்தத் தேளை பிடித்துக் கொண்டு போய்விட்டார்.


"பொம்மை ரூம்ன்னா அதை பொம்மை ரூம் மாதிரி வச்சிக்கணும். இப்படி பொம்மையாலான குப்பைமேடு மாறி வச்சிக்க கூடாது.." என்று திட்டினான் சூர்யா.


உடனே செல்லா ஓவென்று அழ ஆரம்பித்தாள்.


பூங்கொடி மகனின் தோளில் பட்டென்று அடித்தாள். "என் செல்லாவை அழ வைக்காதடா.."


"அதை இன்னும் எட்டு மணி நேரம் கழிச்சி சொல்லுங்க.." என்றவன் தனது அறையை நோக்கி நடந்தான் 


"என்னைவிட்டு போகாதிங்க அங்கிள்.." என்று ஓடி வந்து அவன் முதுகில் தொற்றிக் கொண்டாள் செல்லா.


அவனது அறையிலும் அவனை கொடுமை செய்துவிட்டு இரவு உணவுக்கு பூங்கொடியிடம் ஓடி வந்து விட்டாள் செல்லா. 


பூங்கொடி ஊட்டிய உணவை சமத்துப் பெண்ணாக சாப்பிட்டு கொண்டாள்.


"குட் நைட்.." என்று சொல்லி விட்டு எழுந்தாள் செல்லா.


அவளை கலக்கமாக பார்த்தான் சூர்யா. 


"அம்மா இவளை உங்க ரூம்ல துங்க வச்சிருக்கிங்களா.? எனக்கு ரொம்ப டிஸ்டபன்ஸாவும் அன்கம்பர்டபிளாவும் இருக்கு.."


பூங்கொடி குழம்பு பாத்திரத்திலிருந்த கரண்டியை எடுத்து மகனின் நடு தலையில் நச்சென்று அடித்தாள். பற்களை கடித்தபடி அம்மாவை பார்த்தான்.


"அவ ஒன்பது வயசு குழந்தை. அன்கம்பர்டபிளா உனக்கு ஏன்டா தோணுது.?" எனக் கேட்டாள் சிடுசிடுப்போடு.


தலையை தேய்த்துக் கொண்டவன் "அம்மா அவ லேட் நைட் வரைக்கும் கதை சொல்ல சொல்லி கேட்கறா.. எனக்கு அது அன்கம்பர்டபிளா இருக்கு. தூக்கம் தூக்கமா வருதும்மா எனக்கு. இவ தூங்கவே விட மாட்டேங்கிறா.." என்றான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments