Advertisement

Responsive Advertisement

மௌனம் 11

 ரூபியின் அருகே வாட்டர் பாட்டிலை எறிந்துவிட்டு வெளியே நடந்தாள் நவீனா. 

"தனியா போகாதிங்க பாஸ்.." என்ற ரூபிக்கு மீண்டும் மயக்கம் வந்தது. 

ஜன நடமாட்டம் இல்லாத சாலையில் விர்ரென்று பறந்தது நவீனின் கார். ஸ்டெலாஸ்டியனுக்கு இன்று முடிவு கட்டி விட வேண்டும் என்ற வெறியில் இருந்தான்.

"என்னை கொல்ல ஆள் அனுப்புறியா.? நீ செத்தது தங்சேயாவுக்கு கூட தெரியாத மாதிரி பண்றேன் இருடா.." என்று கர்ஜித்தான்.

வெறிச்சோடி இருந்த தார் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்த நவீனின் கார் முன்னால் வந்து நின்றது மற்றொரு கார். நவீன் பிரேக்கடித்து தனது காரை நிறுத்தினான். துப்பாக்கியை குறி பார்த்தபடி காரில் இருந்து இறங்கினான் தனசேகர்.

நவீனாவின் வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு இறங்கி நின்றான் விஷால்.

"கையில் யார் கிடைச்சாலும் செத்தாங்க.." என்ற உறுமலோடு சாத்தியிருந்த கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

"தனசேகர் சார் சொல்லியும் கேட்காம பண்றோம்.." என்று புலம்பியபடி லாவண்யா பின்னால் ஓடி வந்தாள். 

பாதியாக சாத்தியிருந்த கதவை திறந்தான் விஷால். ஹாலில் கண்ணாடி துண்டுகளாக சிதறி கிடந்தது. 

"நாம வரும் முன்னாடியே என்னவோ நடந்திருக்கு.." என்ற லாவண்யா தயக்கத்தோடு உள்ளே நடந்தாள்.

"அச்சோ.." என்றவள் ரூபியின் அருகே ஓட முயன்றாள். அவளின் கையை பிடித்து நிறுத்தினான் விஷால்.

"அவ ஸ்டெல்லா கூட பேசி இருக்கா.. இவளும் தீவிரவாதியா இருக்க சான்ஸ் இருக்கு.." என்றவன் கவனத்தோடு நடந்து அவளின் அருகே சென்றான்.

மயங்கி கிடந்தவளின் முகத்தை வெறித்தான்.

"யாரோ கழுத்தை நெரிச்சி கொன்னிருக்காங்க சார்.." என்றாள் லாவண்யா பதற்றமாக.

"ஆம்புலன்ஸ்க்கும் லோக்கல் போலிஸ் ஸ்டேஷனுக்கும் போன் பண்ணு.. மறக்காம முதல் போனை தனசேகர் சாருக்கே பண்ணு.. அவரோட கவன குறைவு எந்த அளவுக்கு வந்து நின்னிருக்குன்னு அவருக்கே தெரியட்டும். காலையில பாம் வெடிச்சது‌. இப்ப நம்ம நாட்டுல நம்ம கன்ட்ரோல்ல இருக்கற ஒரு ஏரியாவுலயே மர்டர்.." என்றவன் கோபத்தோடு சுவற்றில் கையை குத்தினான்.

"அவ்வளவுதான்.. இதுவும் முன்னாடி நடந்த அதே கேஸ்தான்.! இந்த முறையும் நாமதான் தோற்க போறோம்.. ஆனா இந்த முறை தோற்க முழு காரணம் தனசேகர் சார் மட்டும்தான்.!" என்றான் ஆத்திரத்தோடு.

லாவண்யா கவலையோடு போனை கையில் எடுத்தாள். தோற்க விரும்பவில்லை அவள். தனசேகருக்கு அழைக்க இருந்தவளின் கண்களின் ரூபியின் நெஞ்சம் ஏறி இறங்குவது தெரிந்தது.

"இந்த பொண்ணு சாகல.." அவசரமாக அவள் முன் மண்டியிட்டவள் ரூபியின் கன்னத்தை தட்டினாள்.

இரும்பினாள் ரூபி. விஷால் ரூபியின் அருகே அமர்ந்தான்.

"ஏய் பொண்ணே.!" அவளின் கன்னத்தில் தட்டினான். அதில் சரி பாதி அறை கலந்திருந்தது என்பது அடி வாங்கிய ரூபிக்கு மட்டும்தான் தெரியும். அவள் கண் விழிக்கும் முன்பே அவளை சோதித்தான் விஷால். எந்த வித ஆயுதமும் அவளிடம் இல்லை என்பதை அறிந்த பிறகும் அவளை அதே போலவே அடித்து எழுப்பினான்.

லாவண்யா அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தாள். மொத்த தண்ணீரையும் ரூபியின் முகத்தில் கொட்டினாள்.

கண் விழித்த ரூபி தன் முன் இருந்த இருவரையும் குழப்பமாக பார்த்தாள். கழுத்து இன்னமும் எரிந்தது. தொட்டுப் பார்த்துவிட்டு முனகினாள்.

லாவண்யா தன் காலடியில் இருந்த ஆயின்மென்டை எடுத்தாள். விஷால் அதை பிடுங்கினான். மருந்தை எடுத்து ரூபியின் கழுத்தில் பூசினான். அவனின் கை அழுத்தமாக பதியவும் எரிச்சலில் முகம் சுளித்தாள் ரூபி.

"உன்னை என்ன கழுத்தை கடிச்சி ரத்தம் குடிச்சிக்கிட்டா இருக்கேன்‌, எதுக்கு இப்ப சும்மா சிணுங்குற.?" என்று எரிந்து விழுந்த விஷால் எழுந்து நின்றான். ரூபியின் கையை பற்றி மேலே எழுப்பி நிறுத்தினான். அருகே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்து அதில் அவளை அமர வைத்தான்.

"ஸ்டெல்லாவோட அட்ரெஸ் சொல்லு.!" என்றான்.

சுவரில் சாய்ந்து நின்றபடி விஷாலை கவனித்த லாவண்யா 'மனுசன் அநியாயத்துக்கு வேலை பார்க்கறாரு..' என்று எண்ணினாள். 

"உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா.? உங்க கிச்சன்ல பால் இருக்கா, நான் சூடு பண்ணி கொண்டு வரட்டா.?" என்று கேட்டபடியே கிச்சனை நோக்கி நடந்தாள் லாவண்யா.

"லா, உனக்கு அடுப்பு பத்த வைக்க தெரியுமா.?" அதிர்ச்சியோடு விஷால் கேட்டது கண்டு லாவண்யாவும் அதிர்ந்துப் போய் திரும்பிப் பார்த்தாள். 

'மெண்டலா இவன்.? இப்பதான் என்னை மிரட்டிட்டு இருந்தான்‌. இப்ப அந்த பொண்ணை கிண்டல் பண்ணிட்டு இருக்கான்‌.!' என்று யோசித்தாள் ரூபி. 

மப்டியில் வந்திருந்தாலும் கூட அவனை கண்ட உடனே காவல் துறை அதிகாரி என்பதை அறிந்து விட்டிருந்தாள் ரூபி. ஸ்டெல்லாவை பற்றிக் கேட்டதுமே தான் இத்தோடு காலி என்று நினைத்து விட்டாள்.

"அடுப்பு பத்த வைக்க தெரியும் சார்.. நிறைய நாள் ஆர்டர் பண்ணிய சாப்பாடு லேட்டாகி ஆறிட்டா அந்த சாப்பாட்டை நானே சூடு பண்ணியிருக்கேன்.!" என்ற லாவண்யா கிச்சனுக்கு சென்றாள்.

"நீ சொல்லு.. ஸ்டெல்லா எங்கே இருக்கான்.? உனக்கும் அவனுக்கும் நடுவுல எப்படி கனெக்சன்.? உன் உண்மையான பேர் என்ன.? நீ இங்கே எதுக்கு வந்திருக்க.? உங்களோட திட்டங்கள் என்ன.?" என்றான் விஷால் ரூபியிடம்.

"எத்தனை கேள்வி.?" என்று முனகியவள் "கழுத்து.. ரொம்ப.. எரியுது சார்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பதில் சொல்லட்டா.?" என்றுத் திக்கிக் திணறிச் சொன்னாள்.

விஷால் யோசித்துவிட்டு தனது போனை எடுத்தான். நோட் பேட்டை கிளிக் செய்து அவளிடம் நீட்டினான்.

"எழுது.. நான் கேட்கற கேள்விக்கான பதிலை அப்படியே டைப் பண்ணு.." என்றவன் "ஸ்டெல்லா எங்கே இருக்கான்.?" என்றுக் கேட்டான்.

'தெரியா..' அவள் முழுதாய் டைப் பண்ணும் முன்பே தனது துப்பாக்கியை எடுத்து அவளின் நெற்றியில் வைத்தான்.

"உண்மையான ஆன்சரை டைப் பண்ணு.. எனக்கு டைம் இல்ல.." என்றான் உறுமலாக.

'சத்தியமா தெரியாது..'

அவனின் துப்பாக்கியை அவளின் நெற்றியில் அழுந்தியது.

"இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. நான் ஏற்கனவே செம கடுப்புல இருக்கேன். உன்னை கொன்னு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்.!" என்றான்.

"சார்.. கொஞ்சம் இருங்க.." என்றபடி வந்தாள் லாவண்யா.

"இந்தாம்மா.. இந்த பாலை குடிச்சிட்டு அப்புறம் பதிலை சொல்லு.." என்று டம்ளரை அவள் முன்னால் வைத்தாள்.

ரூபி விஷாலை பார்த்தபடியே பாலை குடித்து முடித்தாள்.

"இப்ப சொல்லு.. அட்ரஸ்.." என்றபடியே அவளின் கையில் இருந்த தன் போனை பிடுங்கிக் கொண்டான் விஷால்.

"நிஜமா தெரியாது சார்.."

"ஸ்டெல்லா யாருன்னாவது தெரியுமா.?" நக்கலாக கேட்டவனிடம் தலையசைத்தவள் "கெட்டவன் சார்.." என்றாள்.

அவளின் முகத்தை சில நொடிகள் உற்று பார்த்தான் விஷால். 

"பச்சை புள்ளை மாதிரி இருக்கா.." என்று தன் உதடுகளோடு முனகினான்.

"அந்த கெட்டவனை பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் சொல்றியா.?"

ஸ்டெல்லா எந்த நாட்டிலெல்லாம் குண்டு வைத்தான், எந்த தலைவர்களையெல்லாம் கொன்றான் என்ற விவரங்களை சொன்னாள் ரூபி.

"இத்தனையா.?" லாவண்யா அதிர்ச்சியோடு விஷாலை பார்த்தாள்.

"இவங்க எல்லாம் ஒரே குரூப் இல்லையா, அதனால இவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும் லா.." என்ற விஷாலின் பார்வை ரூபியின் முகத்தை விட்டு நகரவில்லை.

"சரி இப்ப சொல்லு.. நீ யாரு.? இங்கே எதுக்கு வந்திருக்க.?"

"நான் வித்ய ரூபிணிகா ஸ்ரீமாதுரி.! பரத நாட்டிய தாரகை நவீனாவுக்கு துணைக்கு வந்திருக்கேன்.!" 

அவள் சொன்னது கேட்டு கலகலவென நகைத்தான் விஷால்.

"பேரே நாலு மைல் தூரம் போகும் போல.." என்றவன் அவளின் தோளில் கையை வைத்தான். அவனின் தொடுதலில் நெளிந்தாள் அவள்.

"அவ நவீனா இல்ல நவீன்னுன்னு எங்களுக்கு தெரியும். இப்ப உண்மையை சொல்லு.!" என்றான் அவளின் தோளை கசக்கியபடி.

அவனின் கையை மெல்ல விளக்கினாள் ரூபி.

"எனக்கு எதுவும் தெரியாது சார். நவீனாவா நவீன்னான்னு கூட தெரியாது. அவளுக்கு துணையா இருக்க சொல்லி எங்களோட ஹோம்ல இருந்து என்னை அனுப்பி வச்சாங்க.. நான் ஒரு அனாதை சார். என்னை போல பல அனாதைகள் எங்க ஹோம்ல இருக்காங்க.‌. நவீனாவும் என்னை போல அனாதைதான்.. ஆனா அவ வேற ஒரு ஹோம்ன்னு சொன்னா. அவ இந்த போட்டியில் ஜெயிச்சா அந்த பணத்துல பாதியை எங்களோட டிரஸ்டுக்கு தருவதாக சொன்னா.. அதனால நான் அவ கூப்பிட்டதும் துணைக்கு வந்தேன்.!" என்றாள். சொன்ன பொய்களை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் சொல்வது பொய்யென்று விஷாலுக்கும் தெரிந்தேதான் இருந்தது. அதனால்தான் அவளை ஆச்சரியம் தீராமல் பார்த்தான்.

"செமையா கதை சொல்ற.. சரி இப்ப சொல்லு.. உனக்கு எப்படி ஸ்டெல்லாவை தெரியும்.?" 

'இது ஒரு நல்ல கேள்வி..' என்று நினைத்தபடி இருக்கை ஒன்றில் அமர்ந்தாள் லாவண்யா.

"அது.. ஒரு முறை எங்க டிரெஸ்ட் கட்டிடம் ஒன்னு பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாச்சி சார்.. அப்ப.. அப்ப அந்த பயங்கரவாதிங்களுக்கு எதிரே தாக்குதல் நடத்தியது ஸ்டெல்லாவும் அவனோட குரூப்பும்தான்.! அப்படிதான் அவனை எனக்குத் தெரியும். சும்மா பழக்கம் மட்டும்தான் சார்.. வேற எதுவும் தெரியாது.." என்றாள் கைகளை விரித்தபடி.

"நான் வேணா டீடெயில்ஸ்ல உன் வொர்க் ஸ்டோரி ரைட்டர்ன்னு சொல்லி எழுதிக்கிட்டா.?" எனக் கேட்டவனை புரியாமல் பார்த்தாள் ரூபி.

கையை அறைய ஓங்கியவன் அவளின் அசையாத விழிகளை வெறித்துவிட்டு கையை கீழிறக்கினான்.

"லா அவளை அறை.." என்றான் பற்களை கடித்தபடி.

லாவண்யா சந்தேகமாக பார்த்தாள்.

"சொன்னதை செய்.." அவன் முடிக்கும் முன்பே லாவண்யா அறைந்து விட்டாள். கன்னத்தை பிடித்தபடி விஷாலை பார்த்தாள் ரூபி.

"இப்ப சொல்லு.. ஸ்டெல்லாவை உனக்கு எப்படி தெரியும்.."

"நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே சார்.! ஒரு சின்ன பொண்ணை ரொம்பவுமே கொடுமை பண்றிங்க சார்.! இதுக்கு நீங்க நிச்சயம் எங்க நாட்டு கவர்மெண்டுக்கிட்ட பதில் சொல்ல வேண்டி இருக்கும்.!" இந்த முறை அவனே அறைந்து விட்டான்.

ஓங்கி அறைந்ததில் அவனுக்கு கை லேசாக எரிந்தார் போல இருந்தது. 'டெய்லி வொர்க் அவுட் போதவில்லை போல' என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவளோ துளியும் விழிகள் கலங்காமல் அவனை அதே போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மனுசியா இவ.?" என்று முணுமுணுத்தவனிடம் "இந்த கையில துப்பாக்கி வச்சிருக்கிங்க.. டிரிக்கரை இழுப்பதை விட்டுட்டு ஏன் சார் அடிக்கிறிங்க.? செத்தாலும் என்கிட்ட இருந்து எதையும் உங்களால வாங்க முடியாது.! டிரை பண்ணாதிங்க சார்.. இந்த துப்பாக்கியை பிடுங்கி என் நெத்தியில் வச்சி நானே சுட்டுக்க நாலு செகண்ட் கூட ஆகாது.! ஆனாலும் அமைதியா இருக்க காரணம் இந்த வாழ்க்கை எது வரைக்கும் போகும்ன்னு பார்க்கதான்.!" என்றாள் ரூபி.

லாவண்யா உதட்டை பிதுக்கினாள்.

"நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார் இது.! ஸ்டெல்லா பத்தி சொன்னாலும் நான் சாவேன். சொல்லலன்னாலும் நான் சாவேன். அப்புறம் ஏன் சொல்லணும்?" என்றவளை வெறித்தவன் அவளின் கன்னத்தில் பதிந்திருந்த கை தடத்தை வெறுப்போடு பார்த்தான்.

"இவளை அரெஸ்ட் பண்ணி காருக்கு இழுத்துட்டு வா லா.! நம்ம இடத்துல வச்சி விசாரிக்கலாம். அப்புறம் எப்படி இவ உண்மையை சொல்லாம போயிடுவான்னு பார்க்கலாம்.!" என்ற விஷால் அங்கிருந்து நடந்தான்.

லாவண்யா தன் பின் பாக்கெட்டில் இருந்த கை விலங்கை எடுத்து ரூபியின் கைகளில் அணிவித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

2 Comments

  1. Supper.... Today kuttyyyyy ud.... But supper.... Waiting for next ud dr ma

    ReplyDelete
  2. இன்றைக்கு நவீனும் ரதியும் லீவா?

    ReplyDelete