Advertisement

Responsive Advertisement

மௌனம் 13

 ரத்தம் வெள்ளத்தின் இடையே இறந்துக் கிடந்த ஸ்டெலாஸ்டியனை அதிர்ச்சியோடு பார்த்தான் நவீன்.

இவனை யார் கொன்றிருப்பார்கள் என்று குழம்பினான். ஐந்தாறு குண்டுகள் ஸ்டெல்லாவின் நெற்றியில் இறங்கி இருந்தது. கொஞ்சம் கோரமாகவே இறந்திருந்தான் என்றுக் கூட சொல்லலாம்.

"விஷால்.. அவன்தான் இப்படி பண்ணியிருக்கான்.." கோபத்தோடு கையை காற்றில் குத்திக் கொண்டு திரும்பினான் தனசேகர்.

"அவன் எப்பவுமே என் பேச்சை கேட்கறதே இல்ல.." என்று கடுகடுத்தான்.

தனது போனை எடுத்து விஷாலுக்கு அழைத்தான்.

விஷால் பத்து நொடிகளுக்கு பிறகு போனை எடுத்தான்.

"சார்‌‌.." என்றான் தயங்கிய குரலில்.

ரூபியை தான் அழைத்துச் செல்லும் விசயம் அதற்குள் அவருக்கு தெரிந்து விட்டதா என்று தயங்கினான் அவன்.

"விஷால்.. உன் அவசர புத்தியை மறுபடியும் காட்டி இருக்க.. ஸ்டெல்லாவை கொல்ல சொல்லி உனக்கு நான்தான் வேலை தந்தேன் இல்லன்னு சொல்லல.. ஆனா அட்லீஸ்ட் இவனை கொல்லும் முன்னாடி எனக்கு ஒரு மெஸேஜ் பண்ணணும்ன்னு தோணுச்சா உனக்கு.? சரி சொல்லு.. உனக்கு எப்படி ஸ்டெல்லாவோட அட்ரஸ் கிடைச்சது.?" என்றுக் கேட்டான்.

விஷால் குழப்பத்தோடு தலையை சொறிந்தான்.

"ஸ்டெல்லாவோட அட்ரஸ் எனக்கு தெரியாது சார்.." என்றான் தயக்கமாக.

தனசேகர் குழம்பிப் போய் ஸ்டெலாஸ்டியனின் உடலைப் பார்த்தான்.

'விஷால் கொல்லல.. நானும் கொல்லல.. நவீனும் கொல்லல.. வேற யார் கொன்னிருப்பா.?" என்று குழம்பியவன் "லாவண்யா எங்கே.?" என்றுக் கேட்டான்.

"பக்கத்துலதான் இருக்கா சார்.. என்ன ஆச்சி சார்.?" 

"ஸ்டெல்லா செத்துட்டான்.." 

அதிர்ந்துப் போனான் விஷால். "எப்படி சார்.?" என்றுக் கேட்டான்.

"அட்ரஸ் மெஸேஜ் பண்றேன்.. வந்து சேரு. நேர்ல பேசலாம்.." என்றுவிட்டு போன் அழைப்பை துண்டித்த தனசேகர் இறந்து கிடந்தவனின் அருகே வந்து அவனை புரட்டினான்.

இறப்பு, கொலை மிகவும் அமைதியான முறையில் நடந்தது போலிருந்தது. யார் இந்த அளவிற்கு நெருங்கி இவனை சுட்டிருக்க முடியும் என்று குழம்பினான் தனசேகர்.

தனது கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்த விஷாலின் தோளை உலுக்கினாள் லாவண்யா.

"என்ன சார்.?" 

அவள் பக்கம் திரும்பியவன் "ஸ்டெல்லா செத்துட்டானாம்.." என்றான்.

லாவண்யாவும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் மாறிப் போனாள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரூபியை திரும்பிப் பார்த்தாள். ரூபியும் அதிர்ந்துப் போய்தான் அமர்ந்திருந்தாள்.

"இப்ப என்ன சார் பண்றது.?" 

"நாம ஸ்பாட்டுக்கு உடனே போயாகணும் லா.. இல்லன்னா சாருக்கு நாம பண்ண இருந்த வேலை தெரிஞ்சிடும். அப்புறம் ரொம்ப நல்லாவே மாட்டிப்போம்.." என்றவன் காரை யூ டர்ன் எடுத்தான்.

"இவளை என்ன பண்றது.?" என்றான் குழப்பதோடு.

"எங்கேயாவது அடைச்சி வைக்கலாம் சார்.. நாம இவளை அரெஸ்ட் பண்ணோம்ன்னு தெரிஞ்சா தனசேகர் சார் நம்மை திட்டுவாரு.. இவளை நாம சந்தேகப்படுறோம்ன்னு இவளுக்கு சப்போர்ட் பண்றவங்களுக்கு தெரிஞ்சா இவளை உடனே கூட்டிப் போகதான் பார்ப்பாங்க.. அப்புறம் நமக்கு எந்த வித துப்பும் கிடைக்காது.." என்று கவலையோடு சொன்னாள் லாவண்யா.

"இவளை எங்கேயாவது அடைச்சி வச்சாதான் ஆகும்.." என்றவன் "உன் வீடு ஓகேவா லா.? உன் பேரண்ட்ஸ் கூட உன்னோடு இல்லயே.. இவளை ஒரு நாளைக்கு மட்டும் உன் வீட்டுல உள்ள ஒரு ரூம்ல அடைச்சி வைக்க முடியாதா.?" என்றான். 

லாவண்யா யோசித்தாள்.

"நமக்கு டைம் இல்ல லா.. இன்னும் கால் மணி நேரத்துக்குள்ள சேகர் சார் கண் முன்னாடி போய் நாம நின்னாகணும்.. இல்லன்னா பிரச்சனைதான்.. என் கெஸ்ட் அவுஸ்க்கு இவளை இழுத்துட்டுப் போகலாம்ங்கற திட்டத்துலதான் இருந்தேன்.. ஆனா இப்ப டைம் இல்ல.." என்றான்.

லாவண்யா யோசித்தாள்.

"பேசாம என்னை இறக்கி விட்டுடுங்களேன்.. நீங்க என்னை அரெஸ்ட் பண்ணிங்கன்னு நான் யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்.." என்றாள் ரூபி. 

லாவண்யா யோசித்துப் பார்த்துவிட்டு "என் வீட்டுக்கு நான் இவளை கூட்டிப் போறேன் சார்.. இவளை வெளியே விட்டா டேஞ்சர்.." என்றாள்‌.

"நான் இங்கே வர காரணம் எங்க ஹோம்தான்.. நான் காணாம போனேன்னு தெரிஞ்சா அவங்க கேஸ் பைல் பண்ணுவாங்க.. பேசாம என்னை விட்டுடுங்க.." ரூபி மீண்டும் கேட்டாள்.

"லாரியில் அடிப்பட்டு செத்த ஒரு பிணத்தை அவ சொல்ற ஹோம்க்கு பார்சல் பண்ணிடு லா.. இவளை திருப்பி அனுப்புற உத்தேசம் எனக்கு இல்ல.." என்றவனை திகிலோடு பார்த்தாள் ரூபி.

ஸ்டெல்லா இருந்த தெருவின் கடை கோடியிலேயே காரை நிறுத்தி விட்டான் விஷால்‌.

"நீ இவளை கொண்டுப் போய் உன் வீட்டுல அடைச்சி வச்சிட்டு திரும்பி வா.. நீ ஏதோ வேலையா போயிருக்கன்னு சொல்லி சார்க்கிட்ட நான் சமாளிச்சிக்கிறேன்.." என்றான்.

லாவண்யா சரியென தலையசைத்து விட்டு ஓட்டுனர் இருக்கைக்கு மாறி அமர்ந்தாள்.

"குயிக்கா வா லா.." என்றவன் ஸ்டெல்லாவின் வீடு நோக்கி நடந்தான்.

விஷால் வந்து நின்றதும் அவனை தாண்டிக் கொண்டுப் பார்த்தான் தனசேகர்.

"லாவண்யா எங்கே.?" என்றுக் கேட்டான்.

"என்னோடுதான் வந்தா சார்.. ஆனா அவளை யாரோ மாப்பிள்ளை பார்க்க வந்திருக்காங்கன்னு சொல்லி கொஞ்சம் முன்னாடி போன் வந்தது சார்.. அவ போன்லயே பிடிக்கலன்னுதான் சொல்ல இருந்தா.. ஆனா நான்தான் நேரா போய் சொல்றதுதான் மரியாதைன்னு சொல்லி அனுப்பி வச்சேன்.. இன்னும் கால் மணி நேரத்துல வந்துடுவா சார்.." என்றான்.

தனசேகருக்கு வித்தியாசமாக இருந்தது. இந்த ஊரடங்கு நாளில் ஏன் லாவண்யாவை பெண் பார்க்க வந்தார்கள் என்று அவனுக்கு புரியவில்லை.

விஷால் குண்டடிப்பட்டு செத்துக் கிடந்த ஸ்டெல்லாவை ஆர்வமாக பார்த்தான்.

"நீங்கதான் கொன்னிங்களா சார்.?" என்றுக் கேட்டான்.

"இல்ல.." தனசேகர் சொன்னதும் அதிர்ச்சியோடு நிமிர்ந்துப் பார்த்தான்.

"யாரோ மர்டர் பண்ணி இருக்காங்க.. ஏதோ புது குழப்பம்.." என்று தனசேகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அறை ஒன்றிலிருந்து வெளியே வந்தாள் நவீனா.

"இந்த வீட்டுல எந்த க்ளூவும் இல்ல சார்‌.." என்றாள்.

விஷால் குழப்பத்தோடு அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

"இங்கே என்ன சார் நடக்குது.?" என்றான்.

"இது நவீன்.. எனக்கு ஹெல்ப் பண்றான்.. இவன் தகவல் சொல்லிதான் இந்த அட்ரஸ் எனக்கு தெரிஞ்சது. சரி நாமளே முடிச்சிடலாம்ன்னு வந்துப் பார்த்தா ஏற்கனவே ஸ்டெல்லா டெத் ஆகியிருக்கான்.." என்று விளக்கிச் சொன்னான் தனசேகர்.

விஷாலுக்கு குழப்பம் தீரவேயில்லை.

"ஒருவேளை இவன்தான்  ஸ்டெல்லாவை கொன்னிருப்பானோ.?" தன் சந்தேகத்தைக் கேட்டான்.

இல்லையென தலையசைத்தான் தனசேகர்.

"நானும் இவனும் சேர்ந்துதான் இங்கே வந்தோம்.. நவீன் இவனை கொன்னிருக்க சான்ஸே இல்ல.. இதுல வேற யாரோ குறுக்க புகுந்திருக்காங்க.. எதிரியா நண்பனான்னு தெரியல.. ஆனா இந்த வீட்டுல ஸ்டெல்லாவோட போனை தவிர வேறு ஆதாரம் கிடைக்கல.. இவன் பாடியை மறைச்சிட்டு ஒன்னும் நடக்காத மாதிரி நாம கிளம்பிடுறது நல்லது.. இவன் இந்த நாட்டுக்குள்ள வந்ததுக்கும் ஆதாரம் இல்ல.. இப்ப செத்ததுக்கும் ஆதாரம் இல்ல.." என்ற தனசேகர் அதற்கான அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினான்.

விஷால் நவீனை வெறித்தான். அவனுக்கு நவீனை சுத்தமாக பிடிக்கவில்லை. தனசேகர் இவனோடு நட்பு பாராட்ட காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தான். ஒருவேளை அந்த இரண்டு பெண்கள் என்று மைக்கேல் சொன்னதில் இவன் மட்டும்தான் ஸ்டெல்லாவோடு தொடர்பில் இருந்திருப்பானோ என்று யோசித்தான். ரூபி சொன்னதை நினைவுப்படுத்திப் பார்த்தான். அவளை அரெஸ்ட் செய்தது தவறோ என்று இப்போது தோன்றியது.

ஆனாலும் கூட தனசேகர் நவீனோடு தொடர்ப்பில் இருப்பது உறுத்தலாகதான் இருந்தது.

"சார்.. ஒரு நிமிசம்.." தனசேகரை இழுத்துக் கொண்டு தனியே சென்றான் விஷால்.

"இவன் பொண்ணு வேசம் போட்டிருப்பதால இவனை உங்க செகண்ட் செட்டப்பா வச்சிக்க முயற்சி பண்றிங்களா?" தூரமாக வந்து நின்றபடி கேட்டான்.

தனசேகர் அவனை முறைத்தான்.

"மூளை கொஞ்சம் ஓவராதான் வேலை செய்யுது போல.. உன்கிட்ட இதுக்கு மேல மறைக்க முடியாது.. இவன் அப்ரூவரா மாறிய பிறகுதான் நம்ம நாட்டுக்குள்ள காலே வச்சான்.. இவன்கிட்ட கேட்டுதான் ஸ்டெல்லா அட்ரஸ் வாங்கி தரேன்னு உன்கிட்ட சொன்னேன் நான்.." 

'அச்சோ.. அப்படின்னா அந்த பொண்ணு அப்பாவிதான் போல.. அனாதை, ஹோம் மூலமா வளர்ந்தேன்னு சொன்னா.. நான்தான் நம்பாம போயிட்டேன்..' என்று ரூபியை நினைத்துக் கவலைப்பட்டான். 

"நான் தனியா கொஞ்சம் வேலை பார்த்துட்டு இருக்கேன் விஷால்.. உன்னை நம்பாம இல்ல.. இந்த நவீனை நான் இன்னும் முழுசா நம்பல.. அதனால நான் வேணாம்ன்னு ஒரு விசயம் சொன்னா அதை செய்யாம இரு..ப்ளீஸ்.." என்றான் தனசேகர்.

விஷால் புரிந்ததாக தலையசைத்தான். 

"இப்ப உடனே இங்கிருந்து போ.. நீ இதுல கலந்துக்காத மாதிரியே நடந்துப்போம்.. ஒரு ஆள் டேஞ்சர்ல சிக்கினாலும் இன்னொரு ஆள் செயல்படலாம்.." என்றான்.

"போன்லயே சொல்லி இருக்கலாம்.. நான் இவ்வளவு தூரம் வந்தது வேஸ்டா போச்சி.." என்று முகம் திருப்பிக் கொண்டு நகர்ந்தான் விஷால்.

அவனை கைப்பற்றி நிறுத்தினான் தனசேகர்.

"சாரி பார் தட்.. ஆனா உன் முகத்தை பார்த்த பிறகுதான் என்னால உண்மையை கண்டுபிடிக்க முடியும்.. ஸ்டெல்லாவை நீ கொல்லலன்னு நான் நம்பணும் இல்லையா.? அதுக்காகத்தான் உன்னை இங்கே வர சொன்னேன்.." என்றான்.

விஷாலுக்கு பாதி கோபம் வந்தது. பாதி வருத்தம் மிகுந்தது.

"சரி நான் கிளம்பறேன்.. நீங்க இவன் பக்கத்துல கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க.." 

சரியென தலையசைத்த தனசேகர் நவீனை திரும்பிப் பார்த்துவிட்டு விஷாலை ஒட்டி வந்து நின்றான்.

நவீன் ஸ்டெல்லாவின் குண்டு பாய்ந்த நெற்றியை சோதித்துக் கொண்டிருந்தான்.

விஷாலின் கையில் பென்டிரைவ் ஒன்றை திணித்தான் தனசேகர். அதை அங்கிருந்து பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கண் சைகை காட்டினான். விஷால் பென்டிரைவை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

விஷால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த அதே நேரத்தில் லாவண்யாவும் வந்துச் சேர்ந்தாள். காரில் ஏறி அமர்ந்தவன் "அந்த பொண்ணை நீ எங்கே வச்சிருக்கியோ அங்கேயே போ.. அந்த பொண்ணு நிரபராதிதான் போல.." என்றான் கவலையாக.

தனசேகரும், நவீனும் ஸ்டெல்லாவின் உடலை எடுத்துச் சென்று மின் தகனம் செய்தனர்.

"பாவம்.. எங்க தங்சேயா எங்க ஆளுங்க எல்லோரையும் அவரோட தீவுல புதைக்கணும்ன்னு ஒரு கோட்பாடு வச்சிருக்காரு.. இந்த முறை அந்தப் கோட்பாடு தகர்க்கப்பட்டுடுச்சி.." என்றான்.

"ஓ.. கவலைப்படாத.. அந்த ஆளை கொன்ன பிறகு அதே தீவுல அவரை புதைக்க நான் ஏற்பாடு செய்றேன்.." என்றான் கிண்டலாக.

ரூபியின் முன்னால் வந்து நின்றான் விஷால்.

"நீ நிரபராதின்னு தெரிஞ்சிடுச்சி.." என்றவன் அவளின் கை விலங்கை அவிழ்த்து விட்டான். அவளின் கழுத்தில் இருந்த காயத்தை பரிசோதித்தான். அவன் தொட்டதும் வலியில் முகம் சுளித்தாள் அவள்.

"சாரி.." என்றான்.

ரூபி சந்தேகமாக அவனைப் பார்த்தாள்.

"அந்த நவீன்தான் ஸ்டெல்லாவோடு தொடர்பில் இருந்திருக்கான்னு தெரிஞ்சிருக்கு.. அதனால்தான் உன்னை நான் ரிலீஸ் பண்றேன்.. நீ உடனே உன் நாட்டுக்கு கிளம்பிடு.. நவீன் இஸ் எ டேஞ்சர் கய்.! உனக்கு சுத்தமா பாதுகாப்பு இல்ல.." என்றுச் சொல்லி அவளை எழுப்பி நிற்க வைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments