Advertisement

Responsive Advertisement

மௌனம் 14

 நவீன் வீட்டிற்கு வந்தபோது வீடு அலங்கோலமாக இருந்தது. அவன் உடைத்து வைத்திருந்த மதுபான பாட்டிலின் கண்ணாடி சில்லுகளும், ரூபியை தள்ளி விட்டு திரும்புகையில் அவனின் கால் பட்டு கீழே விழுந்து கிடந்த நாற்காலியும்தான் அவனின் கண்களுக்கு முதலில் தென்பட்டது.

கோபத்தில் கண் மண் தெரியாமல் நடந்துக் கொண்டதற்காக தன் மீதே கோபம் கொண்டான்.

ரூபியை தேடினான். அவன் விட்டுச் சென்ற இடத்தில் அவள் இல்லை. அவளின் அறையை திறந்துப் பார்த்தான். வீடு மொத்தத்தையும் தேடி பார்த்தான். அவளை காணவே இல்லை.

கோபித்துக் கொண்டு சென்று விட்டாளா என்று சந்தேகித்தவன் அவளின் போனுக்கு அழைத்தான். போன் ஹாலின் மேஜை ஒன்றின் மீது கிடந்தது. 

தலையை பிடித்தபடி இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

புவனின் இறந்த உடல் நினைவுக்கு வந்தது. ரூபியும் அதே போல உயிரற்ற உருவமாக இருப்பது போல காட்சி தோன்றி மறைந்தது.

"பாஸ்.. எனக்கு புவின் அண்ணாவை விட உங்களைதான் ரொம்ப பிடிக்கும்.."

"அண்ணன்தான் ரொம்ப பொறுப்பா உன்னை வளர்த்தினான். நீ ஏன் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற.? நான் பேட் பாய்.. தெரியுமில்ல.?" 

"அவர் எனக்கு அப்பா, அம்மா, குரு.. ஆனா நீங்க எனக்கு பிரதர், நண்பர்.. நீங்க எப்பவும் எனக்கு ஸ்பெஷல்தான்.. ம்ம்ம்.. ஐ வாண்ட் த்ரீ தவுசன்ட் டாலர் அர்ஜென்ட்லி.. கேன் யூ சென்ட் மீ ப்ளீஸ்.?"

"அடி கழுதை.. உனக்கு காசு வேணுங்கறதுக்காக என் காதுல பூ சுத்திட்டு இருந்திருக்க இவ்வளவு நேரம்.."

"பாஸ்.. பாஸ்.. ப்ளீஸ்.. நான் இருக்கற நாட்டுல ரொம்ப குளிருது பாஸ்.. ஹீட்டருக்கு ரொம்ப செலவாகுது.. இரண்டு நாளா கிளப், பப்ன்னு போய் பர்சனலா கொஞ்சம் செலவு பண்ணிட்டேன்.. தங்சேயா அடுத்த வாரம்தான் பணம் அனுப்புவாரு..  ஆனா என்னால அது வரை தாக்கு பிடிக்க முடியாது.. காசு போட்டு விடுங்களேன்.. யூ ஆர் மை க்யூட்டஸ்ட் ப்ரோ. டார்லிங் பிரெண்ட்.. ஸ்வீட்டஸ்ட் காம்ரேட்.."

தங்சேயா தந்த வேலை ஒன்றிற்காக தூரத்து நாட்டிற்கு சென்றிருந்தவள் பணம் தீர்ந்த ஒரு நாளில் தன்னோடு பேசியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நவீனுக்கு ஆத்திரமாக வந்தது. தனக்கு முன்னால் இருந்த நாற்காலியை எட்டி உதைத்தான்.

"கழுத்தை நெரிச்சிருக்கேன் அவளை.. ச்சே.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டான்.

தெருமுனையில் காரை நிறுத்தினான் விஷால். ரூபி கீழிறங்கினாள்.

"நீ அங்கே போக வேணாம்ன்னுதான் இப்பவும் சொல்வேன்.. உன் கழுத்தை நெரிச்சி இருக்கான் அவன்.. ஹீ இஸ் டேஞ்சர்.. நீ ஓகே சொன்னா உன்னை பத்திரமா உங்க நாட்டுக்கு நான் அனுப்பி வைப்பேன்.!" என்றான் அவன்.

அவன் சொன்ன உங்க நாடு என்ற வார்த்தை அவளின் இதயத்தில் கீறலாக விழுந்தது. 

"இல்ல சார்.. பரவால்ல.. அது ஆணா பெண்ணாங்கறது எனக்கு தேவையில்ல.. நான் நவீனாவோடு இருந்தா என்னோட தினசரி சம்பளம் எங்க ஹோம்க்கு போய் சேர்ந்துடும். எனக்கு அதுவே போதும்.." என்றவள் நொடிகள் தயங்கிவிட்டு "தேங்க்ஸ்.." என்றாள் சிறு குரலில். 

பெருமூச்சோடு தலையசைத்தவன் அவளிடம் மருந்து மாத்திரை கவரை நீட்டினான். 

"டேக் கேர்‌‌.. எதுவா இருந்தாலும் என் நம்பருக்கு கூப்பிடு.. நான் உதவிக்கு வரேன்.!" என்றவனை ஒருவித பரிதவிப்போடு பார்த்தவள்  "ஓகே சார்.." என்றுவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள். அவள் வீட்டுக்குள் நுழையும் வரை அங்கேயே இருந்து பார்த்துவிட்டு அதன் பிறகே அங்கிருந்து கிளம்பினான் விஷால்‌.

ரூபி வீட்டிற்குள் வந்தபோது அவள் விட்டுச் செல்லும்போது இருந்தது போலவேதான் இருந்தது. இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த நவீன் வாசற்படியில் நிழலாடுவதை கண்டு அவசரமாக நிமிர்ந்து பார்த்தான். 

ரூபி உள்ளே வந்தாள். அவளின் கழுத்தில் கட்டுப் போடப்படிருந்தது. 

"ஹாஸ்பிட்டல் போனியா.?" பெருமூச்சோடு கேட்டவன் ஓடி சென்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"ஐ யம் சாரி ரூபி.. ரியலி ரியலி சாரி.. நான் ஸ்டெல்லா மேல இருந்த கோபத்துல அப்படி பண்ணிட்டேன்.. மன்னிச்சிடு ப்ளீஸ்.." என்றான் கெஞ்சலாக.

ரூபி சரியென்று தலையசைத்தாள். 

"பரவால்ல பாஸ்.." என்றாள்.

அவளை அழைத்து வந்து நாற்காலி ஒன்றில் அமர வைத்தவன் "சமைக்கட்டா.? உனக்கு என்ன வேணும்.?" என்றுக் கேட்டான்.

"நான் வெளியவே சாப்பிட்டேன் பாஸ்.." தரையை பார்த்தபடி சொன்னாள்.

அவளின் முன் மண்டியிட்டவன் "சாரி ரூபி.." என்றான் கெஞ்சலாக. 

ரூபியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவனின் நெற்றியோடு தன் நெற்றியை மோதினாள்.

"நாம அனாதைங்க பாஸ்.. உறவுகளை இழந்தவங்க.. உறவுகளை பிரிந்தவங்க..  ஆனா நமக்கு தனி தனி உலகம் கிடையாது. அபெக்சன் பூ வாசம் போல.. அது ஒரு காந்தம் போல.. யாரா இருந்தாலும் சரி.. இணைந்திருக்கும்போது அதுவா உருவாகி இருவரையும் இணைச்சி அவங்களை ஏதோ ஒரு உறவா மாத்தி விட்டுடும்.. தங்சேயாவால நம்மளை கெட்டவங்களா வேணா வளர்த்த முடியும். ஆனா உணர்வுகள் இல்லாதவங்களா மாத்த முடியாது. நமக்குள்ள பாசம் இருக்கு.. யூ ஆர் மை ப்ரதர்.. ஒன்லி ஒன் பிரதர் நவ்.!" என்றவளுக்கு புவினின் நினைவால் கன்னத்தில் கண்ணீர் கோடு போட்டது. 

"நீங்க செத்து போகணும்ன்னு நான் ஆசைப்படல.. ஸ்டெல்லா ரொம்ப டேஞ்சர். அவன் உங்களை கொல்ல டிரை பண்ணிட்டு இருந்தான். நீங்க கோபத்துல இருக்கும்போது உங்களால சரியா செயல்பட முடியாதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.." என்றவளுக்கு குரல் கம்மியது.

அவளின் கழுத்தை வளைத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் "சாரி ரூப்ஸ்.. அவனோடு நீ ரகசியமா பேசிட்டு இருக்கங்கறது தெரிஞ்சதும் ரொம்ப கோபம் வந்துடுச்சி.. அவசரப்பட்டுட்டேன்.!" என்றான்.

"அவனை கொல்லதான் நானும் நினைச்சேன்.. ஆனா நம்ம குழுவில் இருக்கும் யாருக்காவது விசயம் தெரிஞ்சா அப்புறம் எனக்கு.. எனக்கு த.. தண்டனை தருவாங்கன்னு ப..பயந்.." சொல்ல முடியாமல் திணறியவளின் முதுகை வருடி தந்தான் நவீன்.

"நீ பயப்பட வேணாம் ரூபி.. நாம இப்ப நம்ம நாட்டுல இருக்கோம்.. இந்த நாடு எனக்கு தேவை கிடையாது. ஆனா உன்னை இங்கேயே சேப்பா விட்டுடுதான் நான் இங்கிருந்து போவேன் ரூபி. நான் பிராமிஸ் பண்றேன்.." ஆறுதலாக நம்பிக்கை அளித்தான்.

லாவண்யா தந்த தேனீரை பருகியபடி வானத்தை வெறித்தான் விஷால்‌.

"எனக்கு ரூபியை நினைச்சா கவலையா இருக்கு.. அவன் அவளை கொன்னுட்டா என்ன செய்றது.?" என்றுக் கேட்டான்.

"சார்.. இப்ப நாம கவலைப்பட வேண்டிய விசயம் அது இல்ல.. ஸ்டெல்லாவை கொன்னது யாருன்னுதான் கண்டுபிடிக்கணும்.!" என்றாள் அவள்.

"யா.." என்றவன் தன் பின்னங்கழுத்தை தேய்த்துக் கொண்டான்.

"இந்த பொண்ணை பார்க்கும்போது ஏதோ ஒரு மாதிரி பீல் ஆகுது லா.. அவளோட கண்கள் ரொம்ப இன்னசன்டா இருக்கு.!"

லாவண்யா சலிப்போடு கண்களை சுழற்றினாள்.

"இங்கேயும் கண்ணா.?" என்று முனகினாள்.

"தனசேகர் சார்.. ஸ்டெல்லாவோட வீட்டை சுற்றி எங்கேயெல்லாம் கேமரா இருந்ததோ அந்த இடத்துல பதிவான வீடியோ புட்டேஜ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டு வர சொல்லி இருக்காரு.. அந்த பொண்ணை நினைக்கறதை விட்டுட்டு வந்திங்கன்னா நாம போய் நம்ம வேலையை பார்க்கலாம்.." என்றாள் லாவண்யா.

விஷால் தேனீர் கோப்பையை வைத்துவிட்டு பெருமூச்சோடு எழுந்து நின்றான்.

ரதி தனது அறையில் படுத்திருந்தாள். அவள் காலையில் அணிந்திருந்த டாப் தரையில் ஓரமாக கிடந்தது.

நவீனின் கண்கள்தான் இன்னமும் அவளின் நினைவில் இருந்தது. தான் ஏன் அந்த கண்களுக்கு விழுந்தோம் என்று கேட்டு நொந்துப் போனாள்.

நவீன் வீட்டை முழுதாக சுத்தம் செய்தான். ரூபிக்கு இளஞ்சூட்டில் உணவை பரிமாறினான். இடையில் நூறு முறை மன்னிப்புக் கேட்டான்.

"இந்த பந்த்ல எந்த ஹாஸ்பிட்டல் திறந்து இருந்தது.?" சந்தேகத்தோடு அவளிடம் கேட்டான்.

"நான் ஸ்டெல்லாவோடு பேசினேன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது பாஸ்.?" அவன் கேட்ட அதே நேரத்தில் ரூபியும் கேட்டு இருந்தாள்.

"ம்ம்.. உன் போனை செக் பண்ணும்போது கண்டுபிடிச்சேன்.!" என்றவன் தனசேகர்தான் விசயத்தை சொன்னான் என்ற உண்மையை சொல்ல தயங்கினான். 

"ஓ.." என்றவள் "இங்கே இரண்டு தெரு தள்ளி ஒரு ‌கிளினிக் இருக்கு பாஸ்.. அவங்கதான் ட்ரீட்மெண்ட் பண்ணாங்க‌.." என்றாள்.

ரூபியை அவளின் அறையில் உறங்க வைத்துவிட்டு வெளியே வந்தான் நவீன்.

"இந்த மூணாவது ஆளை கண்டுபிடிச்சே ஆகணுமே.!" என்று புலம்பியவன் தனது அறைக்கு சென்றான். அலமாரி ஒன்றில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த போனில் ஒன்றை எடுத்தான். 

அவனுக்கு தெரிந்த நம்பிக்கை மிகுந்த குழு உறுப்பினர் ஒருவனுக்கு அழைத்தான். வழக்கமான நலம் விசாரிப்பிற்கு பிறகு "இந்த நாட்டை அழிக்க என்னை போல இன்னும் யாரெல்லாம் வந்திருக்காங்க.?" என்று விசாரித்தான்.

"மை காட்.. நவீ நானே உனக்கு கால் பண்ணனும்ன்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள நீயே கேட்டுட்ட.. தங்சேயா தீவை விட்டு வெளியேறிட்டாரு.." 

எதிரில் இருந்தவன் சொன்னதை நம்ப முடியவில்லை நவீனால்.

"உண்மையாவா.?"

"ஆமா.. அதுவும் இப்ப கிளம்பி வந்திருக்கும் கன்ட்ரி நீ இருக்கும் அதே கன்ட்ரிதான்.. அவரே களத்துல இறங்கி இருக்காருன்னா ஏதோ பெரிய மேட்டரா பண்ண போறாருன்னுதான் தோணுது.. உனக்கு இனி அங்கே வேலை இருக்காது.. இங்கே வந்து லைப்பை என்ஜாய் பண்ணலாம்.." என்றான்.

நவீனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.‌ தங்சேயா இந்த நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய அவசியம் என்னவென்று யோசித்து பார்த்தான்.

உலகத்தை வெகு வேகமாக அழிக்க நினைக்கிறார் என்பது புரிந்தது அவனுக்கு. அதிக கவலையாகவும் இருந்தது. தனசேகருக்கு போன் செய்து விசயத்தை சொன்னான்.

இவன் போனை வைத்ததும் தனசேகர் நெற்றியை பிடித்தான். முன்பு சில்வண்டாக வந்த புவினையே கோட்டை விட்டு விட்டோம் என்பதை நினைத்துப் பார்த்தவனுக்கு இந்த முறை தங்சேயாவை வெற்றிக் கொள்ள முடியுமா என்று கவலையாக இருந்தது. 

தனது மேலதிகாரிக்கு அழைத்து விசயத்தை சொன்னவன் "நான் ரிசைன் பண்ணிடுறேன் சார்.. நீங்க வேற அதிகாரியை பார்த்துக்கிறிங்களா.?" என்றுக் கேட்டான்.

"ஏன்ய்யா இப்படி பண்ற.? எல்லோரும் அதே மனுசங்கதான் சேகர்.. அவங்களால முடிஞ்சது உன்னால முடியாதா‌.? நீ இருக்கும் ஊருக்கு நீதான் காவல்.. அதை என்னால மாத்த முடியாது. நான் மத்த இடங்களுக்கு அலார்ட் பண்றேன்.. நீயும் கொஞ்சம் கவனமா இரு.." என்றார் அவர்.

தனசேகர் யோசித்துவிட்டு விஷாலுக்கும் லாவண்யாவுக்கும் மற்றவர்களுக்கும் விசயத்தை சொன்னான்.

"அவன் இருக்கும் இடம் தெரியலன்னுதான் இத்தனை நாளா அவனை அரெஸ்ட் பண்ண முடியாம மொத்த உலகமும் தயங்கி இருந்தது. ஆனா இப்ப அவன் நம்ம நாட்டுக்கே வந்திருக்கான்.. நாம அவனை போட்டு தள்ளணும் சார். இதுவரை இங்கே செத்த எல்லோருக்கும் ஈடாக அவனை கொல்லணும்‌.." என்று சூளுரைத்தான் விஷால்‌.

"சொல்பேச்சு கேட்காத உங்களையெல்லாம் வச்சிக்கிட்டு நாம எப்படி அவனை கொல்ல முடியும்.?" 

"இதான் சாக்குன்னு வாராதிங்க சார்.!" என்றவன் "ஒருவேளை அந்த ஸ்டெல்லாவை தங்சேயாதான் கொன்னிருப்பானா.?" என்றுச் சந்தேகம் கேட்டான்.

தனசேகருக்கும் கூட இப்போது தங்சேயா மீது சந்தேகம் வந்தது. ஆனால் காரணத்தைதான் யூகிக்க முடியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments