Advertisement

Responsive Advertisement

மௌனம் 18

 கோவில் திருவிழா அது. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் விஷேசம் என்பதால் அந்த ஊர் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. 

வெள்ளை நிற அம்பாசிட்டரை தூரமாக நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்கினார் அவர். அந்த காரின் பின்னால் வந்து நின்றது இன்னும் மூன்று கார்கள். அனைவரும் ஒரே வீட்டை சேர்ந்தவர்கள். 

"ரூபிணிகா.." காரிலேயே அரையாய் தூங்கிவிட்ட ஒன்பது வயது குழந்தையை தட்டி எழுப்பினார் அவர்.

"ரூபிணிகா.. நாம கோவிலுக்கு வந்துட்டோம்.. வாம்மா போகலாம்.." என்றவர் அரை தூக்கத்தில் இருந்தவளை கீழே இறக்கி நிறுத்தினார்.

கண்களை கசக்கி விட்டுக் கொண்ட ரூபிணிகா சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள். 

"பாப்பு.. உனக்கு பலூன் வேணுமா.? இல்ல பஞ்சு மிட்டாய் வேணுமா.?" என்றுக் கேட்டான் அவளின் பெரியப்பன் மகன்.

"அதெல்லாம் எதுவும் வேணாம்.. சாமியை கும்பிட்டு திரும்பி வரும்போது வாங்கிக்கோங்க.!" என்றாள் சித்தி.

"சின்ன பிள்ளைங்களுக்கு இல்லாததா.?" என்ற ரூபிணிகாவின் அத்தை "அப்பா நீங்க போய் பஞ்சு மிட்டாய் எட்டு பாக்கெட் வாங்கிட்டு வாங்க.." என்று அனுப்பினாள்.

அது பெரிய கூட்டுக் குடும்பம். ரூபிணிகா ஒரு நாள் கூட தனியாய் வாசல் வீதியில் கூட நடந்தது இல்லை. எப்போதும் நிழல் இருந்தது. எப்போதும் உறவுகள் உடன் இருந்தது.

தாத்தா எட்டு பாக்கெட் பஞ்சு மிட்டாயோடு திரும்பி வந்தார். குழந்தைகள் அனைவருக்கும் தந்தார்.

"அக்கா எனக்கு மஞ்ச கலர்.." என்று ரூபிணிகாவிடம் இருந்த பஞ்சு மிட்டாயை வாங்கிக் கொண்டு தன்னிடமிருந்ததை தந்தான் அவளின் தம்பி.

"வாவ்..‌ இவ்வளவு பெரிய யானையா.?" கோவிலுக்கு செல்லும் வழியிலேயே யானை ஒன்றை பார்த்ததும் அவளின் அத்தை மகன் வாயை பிளந்து நின்று விட்டான்.

"டேய்.. வரும்போது பார்த்துக்கலாம் வாடா.." என்று அவனின் அப்பா இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தார்.

கூட்டத்தின் இடை புகுந்து நடந்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம் சென்றது என்றே ரூபிணிகாவிற்கு தெரியவில்லை.  அவர்கள் நின்றிருந்த வரிசை கொஞ்சமும் முன்னேறாமல் இருப்பது போலிருந்தது. கொட்டாவி விட்டபடியே நின்றிருந்த சுவரின் மீது சாய்ந்தாள் ரூபிணிகா.

அவளின் அருகே நின்றிருந்த அவளின் அத்தை மகன் "மாது.. வரியா நாம போய் யானை பார்த்துட்டு வரலாம்.." என்று அழைத்தான்.

ரூபிணிகா அதிர்ச்சியோடு மறுப்பாக தலையசைத்தாள்.

"அப்பா பிச்சிடுவாரு.." என்றாள்.

"இந்த கூட்டத்தை பார்த்தியா.? இவங்க கோவிலுக்குள்ள போக இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்ப்பா.. நாம இந்த கூட்டத்தை விட்டு வெளியே போனா யானை பார்த்துட்டு சட்டுன்னு திரும்பி வந்துடலாம்.!" என்றான் அவன்.

"போ.. நான் வரல.." என்றவள் மீண்டும் சுவரின் மீது சாய்ந்து நின்றாள்.

"நீ என்னோடு வந்தா நான் ஒரு வாரத்துக்கு உன் ஹோம் வொர்க்கை செஞ்சி தரேன்.." என்றான் அவன்.

ரூபிணிகா சட்டென்று சுவரை விட்டு எழுந்து நேராக நின்றாள்.

"நிஜமாவா.? ஏமாத்த கூடாது. சரியா.?" எனக் கேட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். வரிசையில் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் இந்த சில்வண்டுகளை கவனிக்கவில்லை.

ரூபிணிகா தன் அத்தை மகனோடு அந்த கூட்டத்திலிருந்து நழுவி நடந்தாள். அந்த வரிசையின் எல்லை வரையில் வரும் வரையிலும் கூட யாருமே அவர்களை கவனித்து நிறுத்தவில்லை.

யானையின் முன்னால் வந்து நின்ற ரூபிணிகா "எவ்வளவு நேரம் பார்க்கணுமோ, பார்த்துக்க.." என்றாள் கொட்டாவி விட்டபடியே.

"அப்பா.. பாரேன்.. எவ்வளவு பெரிய காலுன்னு.. இது மிதிச்சா நாம செத்துடுவோம் மாது.." என்றான்.

"நீ ஏன்டா அது காலுக்கடியில் போய் நிற்கணும்.?" எனக் கேட்டவள் தூரத்தில் இருந்த பொம்மை கடையை வேடிக்கை பார்த்தாள். அப்போதுதான் அவளின் பார்வையில் தன் தந்தை தூரத்தில் செல்வது தெரிந்தது. அவர் தன்னை தேடித்தான் வந்துள்ளார் போல என்ற எண்ணத்தோடு அவரை அழைக்க ஓடியவள் தன் அருகே இருந்த அத்தை மகனை மறந்து விட்டாள்.

அவள் ஓடி சென்று கை பிடித்து நிறுத்திய பிறகுதான் தான் அடையாளம் கண்டது தனது தந்தையை அல்ல என்பதை புரிந்துக் கொண்டாள்.

திரும்பிப் பார்த்தாள். யானையை காணவில்லை. எந்த பக்கம் இருந்து ஓடி வந்தோம் என்றும் அவளுக்கு புரியவில்லை. நான்கு புறமும் ஒன்று போலவே இருந்தது. 

ஏதோ ஒரு திசையில் குத்து மதிப்பாக நடந்தாள். ஆனால் அது அவள் பார்த்த இடமாக இல்லை.. அப்படியே அந்த கூட்டத்தில் தெரிந்தவர்களை தேடி அலைந்தவள் அரை மணி நேரம் கழித்து காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டாள். அவரிடம் சொன்னால் தந்தையிடம் தன்னை சேர்ப்பித்து விடுவார்கள் என்று நம்பி நடந்தவளின் தோளில் பதிந்தது ஒரு கரம்.

திரும்பிப் பார்த்தாள்.‌ வெளிநாட்டு இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.

"உன் பேரண்ட்ஸை தேடுறியா பாப்பா.? ஆனா உங்க அம்மாவும் அப்பாவும் இந்த பக்க வாயில்ல இருக்காங்க.." உச்சரிப்பு சரியாகவே இல்லை. ஆனாலும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. 

"நீங்க யாரு.?" எனக் கேட்டபடி அவன் கை காட்டிய திசை நோக்கி நடந்தாள்.

"உன் அப்பாவோட பிரெண்ட்தான்.." என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் ரூபிணிகா.

இவனை போல ஒருத்தர் தன் தந்தைக்கு நண்பரா என்று வியந்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் அவன் கூட்டிச் சென்ற இடத்தில் அவளின் குடும்பம்தான் இல்லாமல் போய் விட்டது. 

"நான் போலிஸ் அங்கிள்கிட்ட ஹெல்ப் கேட்கிறேன்.. உங்க உதவிக்கு தேங்க்ஸ் அங்கிள்.." என்றுவிட்டு திரும்பியவள் கண்கள் இரண்டும் இருள அப்படியே சாய்ந்தாள்.

***

சின்னையனின் கழுத்தில் காலை வைத்திருந்தான் நவீன். தன் கையில் இருந்த துப்பாக்கியின் விசையை இழுத்தான்.

"தங்சேயா எங்கேன்னு நீ இப்ப சொல்லன்னா நான் உன்னை இங்கேயே புதைச்சிட்டு போயிடுவேன்.!" என்றான் நவீன்.

"சோறு போட்டவனையே கொல்ல முயற்சி பண்றியே.!" என்று அதிர்ந்தான் அவன்.

"அவன் எனக்கு சோறு போட்டான்னு நீ பார்த்தியா.? இந்த சமுதாயம் எங்களை ஒதுக்கி தள்ளுச்சி. அவன் அதை யூஸ் பண்ணிக்கிட்டான்.! நீ வேணா அவனுக்கு சேவகம் செஞ்சி பிச்சையெடு.! என்னை துரோகி போல சொல்லாதே.!" என்றான் நவீன் ஆத்திரத்தோடு.

"தங்சேயா அட்ரஸை சொல்லிடு சின்னு.." என்றான் விஷால் சற்று முன்னால் வந்து.

"விஷால் நாம என்ன இருந்தாலும் ஒரு சாமி கும்பிடுற பங்காளிங்கடா.. நீயே இப்படி துரோகம் செய்யலாமா.?" என்றுக் கேட்டார் அவர்.

சிரித்தான் விஷால்.

"இங்கே எல்லோரும் இந்தியாங்கற நாட்டுக்கு கூடதான் சொந்தக்காரங்க.. நீ என்ன அதை ஏத்துக்கிட்டியா.? பணத்தை தவிர உனக்கு வேற எதுவும் முக்கியம் கிடையாது. இங்கே பெரிய துரோகி நீதான்.. அந்த பொண்ணு இப்ப ஆபத்துல இருக்கா.. நீ தங்சேயா அட்ரஸை சொன்னாதான் எங்களால மேற்கொண்டு நகர முடியும். இல்லன்னா அதுவரைக்கும் உன்னை டார்ச்சர் பண்ணியே சாகடிப்போம்.. எப்படி வசதி.?" என்றுக் கேட்டான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

சாரி மக்களே.. கடந்த இரு நாட்களாக 200 (1நிமிசம்) வார்த்தைகள் கம்மியாதான் தந்தேன். ஆனா இன்னைக்கு 400 (2நிமிசம்) வார்த்தைகள் கம்மி.. மூணு நாளுக்கும் சேர்த்து மொத்தம் 4 நிமிச யூடி பாக்கி இருக்கு. டைம் இருக்கும்போது டைப் பண்ண டிரை பண்றேன்ப்பா.. 

Post a Comment

0 Comments