Advertisement

Responsive Advertisement

மௌனம் 22

 அந்த வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையில் கூடி இருந்தது கூட்டம்.

கணினி திரைகளில் நிறைய நாட்டு இளைஞர்கள் இருந்தார்கள்.

"நாளைய நாள் இந்த பூமியின் வரலாற்றில் பெரிய முத்திரை பதிக்கப்பட கூடிய நாள்‌. மொத்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சிட்டியிலும் குண்டு வெடிக்கணும். ஒவ்வொரு சிட்டியிலும் மக்கள் கூட்டம் அதிகம். நாளைய நாளில் இந்த உலகத்தில் பாதி மக்கள் தொகை இல்லாம போகணும்.! இதுதான் நம்மோட ஒரே குறிக்கோளா இருக்கணும்.!" என்றார் தங்சேயா.

"நிச்சயம்.. கண்டிப்பா.." அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு சேர குரல் தந்தார்கள்.

அவர்கள் பேசுவதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நவீனுக்கு தலை கிறுகிறுத்தது. நடக்கும் நிகழ்வுகளை ஸ்கிரீன் ஷேர் செய்துக் கொண்டிருந்தான் நவீனின் தோழன் ஒருவன்.

இவனைப் போலவே சமீபத்தில் புத்தி தெளிந்தவன்தான் அவனும். 

அவன் ஸ்க்ரீன் ஷேர் செய்தது அனைத்தையும் ரெக்கார்ட் செய்த நவீன் அதை தனசேகருக்கு அனுப்பி வைத்தான். தனசேகரின் மூலம் அது குமரன் கைகளுக்கு சென்று சேர்ந்தது. 

அடுத்த அரை மணி நேரத்தில் குமரனின் தலைமையில் அனைத்து நாடுகளுக்குமான அவசர கூட்டம் நடைபெற்றது. 

"அந்த தங்சேயாவோட எந்த திட்டமும் நடக்க கூடாது.!" என்று கர்ஜித்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு படையின் தளபதி.

"இங்கே நமக்கு நேரம் இல்ல.. நாம எப்படியாவது அவங்களை கூண்டோடு அழிச்சே ஆகணும். இது லாஸ்ட் மினிட் வார்.! நாம ஒத்துமையாவும், புத்திசாலிதனமாகவும் நடந்தாகணும்.! நாட்டுல எங்கேயும் மக்கள் கூட்டத்தை சேர விடக் கூடாது. சந்தேகத்துக்குரிய நபர்களை உடனுக்குடன் அரெஸ்ட் பண்ணனும். இந்த வீடியோவுல இருக்கும் நபர்களில் யார் எங்கே இருந்தாலும் உடனே என்கவுண்டர் பண்ணனும்.!" என்றார் குமரன்.

இன்னும் பல திட்டங்களை தீட்டி முடித்த பிறகு அந்த வீடியோ கான்பரன்ஸ் முடிந்தது.  

நாடு மட்டுமல்ல மொத்த உலகமுமே தலைகீழாக கவிழ்த்துப் போட்டபடி பரபரப்பாக இருந்தது. ஆனால் மக்களுக்கு விசயத்தை சொல்லாமல் வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டனர் பல நாடுகளின் அரசுகளும்.

தங்சேயா வேங்கையின் கோபத்தோடு நடந்துக் கொண்டிருந்தார். இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டன‌. இந்த திட்டம் நூறு சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார் அவர்.

நவீன் மயங்கி கிடந்த ரூபியை சில நொடிகள் பார்த்துவிட்டு நகர்ந்தான்.

"ரதி.. இவளை பத்திரமா பார்த்துக்க.." என்றான்.

ரதி அவனை சந்தேகமாக பார்த்தாள்.

"நான் தங்சேயாவை தேடி போறேன்.! இந்த நாட்டை அவர் அழிக்கும் முன்னாடி நான் அவரை அழிச்சாகணும்.. ரூபியோட பேரண்ட்ஸ் யாருன்னு தனசேகர் சொல்வாரு.. நான் திரும்பி வராம போனா இவளோட பேரண்ட்ஸ்கிட்ட பேசி இவளை அவங்க ஏத்துக்கும் படியா பண்ணிடு ப்ளீஸ். இவ ரொம்ப நல்லவ. ஆனா பயந்தவ.. இதுவரைக்கும் இவ கொன்னது முழு நல்லவங்களை இல்ல.. ஒரு நாட்டை அழிக்க சொல்லி டீல் பேசிட்டு போவாங்க சிலர். அவங்க சொன்ன வேலையை தங்சேயா முடிச்சிடுவாரு. அவங்ககிட்ட இருந்து முழு பேமண்டும் வாங்கிடுவாரு. அதுக்கப்புறம் அந்த வேலை சொன்னவங்களை கொல்லச் சொல்லி ரூபியை அனுப்பி வைப்பாரு. இவ அவங்களை கொன்னுட்டு வருவா.! அவங்க பண்ண தவறுக்கு கண்டிப்பா மாபெரும் தண்டனை உண்டு. ஆனா ரூபி சுலபமாதான் அவங்களை கொன்னுட்டு வந்தா. சோ இவ கெட்டவ கிடையாது. அது மட்டுமில்ல.. இவ தங்சேயாவோடு இருந்தான்னு வேணா ப்ரூஃப் பண்ண முடியும். ஆனா இவதான் நிறைய கொலைகாரர்களை கொலை பண்ணான்னு யார்கிட்டயும் ஆதாரம் கிடையாது. அதனால இவளை யாராலும் அரெஸ்ட் பண்ண முடியாது. இவளுக்கு தண்டனை தரவும் யாராலும் முடியாது.! இவ எழுந்த பிறகு நான் இவளை ரொம்ப நேசிக்கிறேன்னும் மறக்காம சொல்லு.!" என்றவன் வெளியே நடந்தான்.

ரதியின் கரம் அவசரமாக அவனின் கையை பற்றியது.

"ஆபத்தை தேடி போறியா.?" என்றுக் கேட்டாள்.

"நீ நினைக்கிற மாதிரி கிடையாது ரதி.. என் கண்கள் ஒன்னும் அவ்வளவு அழகு கிடையாது.!" என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.

"அழகுதான்.. எனக்குத் தெரியும்.!" என்றவள் "ரூபி செஞ்ச கொலைகளுக்கு ஆதாரம் கிடையாது. அதே போல நீ செஞ்ச தப்புக்கும் ஆதாரம் இல்லதானே.?" என்றுத் தயக்கமாக கேட்டாள்.

சிரித்தபடியே அவளின் கையை விடுவித்தான் நவீன்.

"நம்ம வாழ்க்கையில் யாராவது ஒரே ஒருத்தரை பார்க்கும்போது மட்டும்தான் அவங்களோடு ஏற்கனவே பல ஜென்மம் வாழ்ந்த மாதிரி தோணும். ஆனா அது நம்ம மனசோட கற்பனை.! அதை தாண்டி போயிடணும் ரதி.. நான் மறுபடி பிறந்தேன்னா உனக்கு அத்தை மகனாவோ மாமன் மகனாவோ பிறக்கணும்ன்னுதான் நானும் கூட ஆசைப்படுறேன்.!" என்றவன் அவள் அடுத்து பேச முயலும் முன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

ரதி லாவண்யாவுக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னாள்.

"நவீன் எதையாவது கண்டுபிடிச்சா கண்டிப்பா நமக்கு தகவல் தருவான்.!" என்றாள் அவள்.

நவீன் அந்த கடற்கரையோர சாலையில் தனியாக நடந்துக் கொண்டிருந்தான்.

இதுவரை அவன் செய்த கொலைகள் அனைத்தும் அவனின் நினைவில் வந்துப் போனது. 

அவனின் நினைவுகள் முடியும் முன்பே அவனின் அருகே வந்து நின்றது ஒரு கார். காரில் அமர்ந்திருந்த தங்சேயா "லிஃப்ட் வேணுமா.?" என்றுக் கேட்டார்.

"நான் உங்களை விட்டு விலகவே இல்ல தங்சேயா.." என்றான் நவீன்.

"நான் அப்படி சொல்லல.!" என்றவரை வருத்தமாக பார்த்தவன் "என்னை உளவுப் பார்க்கதானே ஸ்டெல்லாவை அனுப்புனிங்க.?" எனக் கேட்டான்.

"இல்ல.. உனக்கு உதவியா இருக்கட்டும்ன்னுதான் நான் அவனை அனுப்பினேன்.!" என்றவர் அவனுக்காக காரின் கதவை திறந்து விட்டார். நவீன் உள்ளே ஏறி அமர்ந்தான்.

"நடந்ததை மறந்துடலாம் நவீன். நீ ரூபி மேல பாசமா இருப்பன்னு எனக்குத் தெரியாது.. நாம வேணா ஒரு டீல் பேசிக்கலாம்.. நான் சொல்ற வேலையை நீ முடிச்சி கொடுத்தா நான் ரூபியை சுதந்திரமா விட்டுடுறேன்.!" என்றார் அவர்.

நவீன் யோசித்துவிட்டு சரியென தலையசைத்தான்.

"என்ன வேலை.?" என்றுக் கேட்டான்.

"பெருசா எதுவும் இல்ல.. நான் சொல்ற இடத்துக்கு மனித வெடிகுண்டா போகணும்.!" என்றார் அவர்.

நவீனின் இதயம் சில நொடிகள் துடிக்கவே இல்லை. மீண்டும் துடிக்க ஆரம்பித்தபோது தாறுமாறாக துடித்தது அந்த இதயம். 

"நான் கெட்டவன்தான் நவீன். ஆனா வாக்கு தவறாதவன். இது உனக்கே நல்லா தெரியும்.!" 

"ச.. சரி.!" தயக்கத்தோடு ஒத்துக் கொண்டான் நவீன்.

அந்த கடற்கரையோர பங்களாவில் நுழைந்தான் நவீன். ரூபி அடைக்கப்பட்டு இருந்த வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருந்தது இந்த பங்களா.

நவீன் வீட்டுக்குள் வந்த அடுத்த பத்தாம் நிமிடத்தில் அவனின் மார்போடு சேர்த்து கட்டப்பட்டது வெடிகுண்டுகள் நிரம்பிய ஜாக்கெட்.

"நீ எதுவும் பண்ண தேவையில்ல.. இங்கிருக்கும் தனசேகர் ஆபிஸ் போ.. அங்கே போனதும் இந்த பாம் தானா வெடிச்சிடும்.!" என்றார் தங்சேயா.

வெடிகுண்டுக்கான கன்ட்ரோல் ரிமோட் அவரிடம்தான் உள்ளது என்பதை நவீனால் யூகிக்க முடிந்தது.

எல்லாம் புவினால் வந்தது‌. போன முறை அவன் இங்கே வந்த போது தனசேகரின் காரணமாகத்தான் அவனுக்கு பிரச்சனைகள் உண்டானது. இவர் இங்கே சொந்த பழி வாங்க வந்திருக்கிறார். தனது மகன் புவினை தொல்லை செய்தவர்களை கொல்ல வந்திருக்கிறார். நவீனுக்கு சிரிப்பு வந்தது.

ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்று அவனுக்கும் புரியவில்லை. அவருக்கும் புவின் மீது பிள்ளை பாசம். ஒருவேளை அவர் தீவிரவாதியாக மாறும் முன்பே புவினை கண்டிருந்தால் இந்த தீவிரவாத அமைப்பே உருவாகி இருக்காதோ என்று எண்ணினான் நவீன்.

"பாஸ்.. இப்ப என்ன பண்றது.?" விஷால் தனசேகரை பார்த்துக் கேட்டான்.

நவீனுக்கும் தங்சேயாவுக்கும் இடையில் நடந்த உரையாடலை கேட்டு முடித்த தனசேகருக்கும் கூட சட்டென்று எதுவும் தோன்றவில்லை. விஷால் மருத்துவமனை விட்டு வரும் முன்பே நவீனின் கைக்குள் சிப் ஒன்றை பொருத்தி விட்டுதான் வந்தான். அந்த சிப்பின் உதவியால்தான் நவீனை சுற்றி நடக்கும் விசயங்களை இவர்களால் கேட்க முடிந்தது.

"தங்சேயாவுக்கு இந்த உலகத்து மேல குறி.. ஆனா ஸ்பெஷலா நம்ம மேலயும் குறி.!" என்று சிரித்தவன் போனை எடுத்தான்.

இவனின் அழைப்பை உடனே ஏற்றான் எதிரில் இருந்தவன். "ஸ்பாட்டுக்கு வந்துட்டோம் சார்.!" என்றான் அவன்.

"அந்த வீட்டுக்குள்ள போய் அவனை அரெஸ்ட் பண்ணுங்க.. தங்சேயாவை அரை உயிரா கொண்டு வாங்க.. அந்த வீட்டை தரவா சோதனை போட்டு ஒரு துண்டுப் பேப்பர் கூட விடாம கைப்பற்றிக் கொண்டு வாங்க.." என்றான் தனசேகர்.

ஆனால் அதே நேரத்தில் தங்சேயாவும், நவீனும் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்‌. அந்த வீட்டைச் சுற்றி இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் சட்டென்று மறைந்துக் கொண்டார்கள். 

"அவங்க இங்கிருந்து கிளம்பறாங்க சார்.!" என்று தனசேகருக்கு தகவல் தந்தான் இங்கிருந்த வீரனில் ஒருவன்.

"இரண்டுப் பேரையும் சுட்டுடலாமா சார்.?" விஷால் தனது யோசனையை கேட்டான்.

தனசேகர் யோசித்தான்.

இப்போதைக்கு இது நல்ல யோசனையாக படவில்லை.

"தங்சேயாவை அரெஸ்ட் பண்ணுங்க. நம்ம நாட்டுல எங்கேயெல்லாம் வெடிகுண்டு இருக்குன்னு அந்த தங்சேயாவுக்குதான் தெரியும். அதனால முடிஞ்ச அளவு உயிரோடு பிடிங்க.!" என்றான் போனில்.

பின்னர் விஷாலை பார்த்தவன் "அவனை கொல்லுறதுதான் என்னோட குறியும். ஆனா வெடிகுண்டுகளையும், அவனை சுற்றி இருப்பவங்களையும் அவன் சொன்னாதான் நம்மால தெரிஞ்சிக்க முடியும்.!" என்றான்.

விஷால் கவலையோடு தரை பார்த்தான்.‌

"ஆனா அவனை உயிரோடு விடும் ஒவ்வொரு செகண்டும் நமக்குதான் ஆபத்து.!" என்றான்.

"இன்னும் ஒரே ஒருநாள்.. பாம்ஸை செயலிழக்க செய்யும் வரை.!" என்று சமாதானம் சொன்னான் தனசேகர்.

தங்சேயா காரில் ஏறி அமர்ந்தார். அதே நேரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

"சீக்கிரம் கீழே இறங்கு.." என்றான் ஒருவன்.

தங்களை சுற்றி நின்றவர்களை தடுமாற்றமாக பார்த்தான் நவீன்.

"ஹாய் பிரெண்ட்ஸ்.. என்னை தேடி வந்திருக்கிங்க‌‌.. ஏதாவது முக்கியமான வேலையா.?" சிரிப்போடு கேட்டார் தங்சேயா.

"உலகம் தேடும் டெரரிஸ்டை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்.. நீ உன்கிட்ட இருக்கும் வெப்பன்ஸையெல்லாம் எடுத்து கீழே வை.. இல்லன்னா உன்னை சுட்டு ஜல்லடை ஆக்கிடுவோம்.!" என்றான் ஒரு வீரன்.

தங்சேயா சிரிப்போடு தனது பாக்கெட்டிலிருந்த துப்பாக்கிகளையும், கத்திகளையும் எடுத்துத் தரையில் எறிந்தார்.

"ரொம்ப ஆசையா வந்திருக்கிங்க.. ஆனா உங்களோட மந்திரி ராஜ் எங்கே இருக்கார்ன்னு உங்கள்ல யாருக்காவது தெரியுமா.?" என்றுக் கேட்டார் அவர்.

தனசேகர் தன் காதில் கேட்டது உண்மையா என்று அதிர்ந்தார்.

"இது எப்படி சாத்தியம்.? ராஜ் எங்கே.?" என்றார் விஷாலிடம்.

"ஒரு நிமிசம் சார்.." என்றவன் அவசரமாக போனை கையில் எடுத்தான்.

"உங்க மந்திரி ராஜ் உயிரோடு திரும்ப வேணும்ன்னா நீங்க என்னை விட்டுதான் ஆகணும்.!" 

அதே நேரத்தில் விஷாலும் "மந்திரி ராஜ் காலையிலிருந்து காணமாம் சார்.!" என்றான்.

"தங்சேயாவோட  வேலைதான்.. அவனை புதைச்சா கூட எனக்கு ஆத்திரம் அடங்காது.." பற்களை அரைத்தான் தனசேகர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW


Post a Comment

0 Comments