Advertisement

Responsive Advertisement

மௌனம் 27

ரூபி கண் விழித்தபோது அவளின் அருகே விஷால் அமர்ந்திருந்தான்.

ரூபி சுற்றும் முற்றும் பார்த்தாள். நவீனை தேடினாள்.

"நவீன் இந்த நாட்டை விட்டு கிளம்பிட்டான்!" விஷால் சொன்னது கேட்டு எழுந்து அமர முயன்றாள். அவளுக்கு உதவி செய்தான் விஷால்.

"எ.. எங்கே.. ஏன்?" குழப்பமாக கேட்டவளின் முன்னால் கையை காட்டியவன் "பொறுமை.!" என்றான்.

"அவன் என் பிரதர்!" அவளை மீறி எரிச்சலாக வந்தது வார்த்தைகள். 

"அவனை இந்த நாட்டுல விட்டு வைக்க முடியாது!" 

"என்னை ஏன் அவன் கூட்டிப் போகல?" காயம் பட்டது என்பதையும் மறந்து கைகள் இரண்டிலும் முகத்தை புதைத்தாள். அழுகையாக வந்தது. அனாதை போல இருந்தது. இத்தனை வருசமா கூடவே இருந்தவன் இப்போது திடீரென்று சொல்லாமல் கிளம்பி விட்டது வருத்தமாக இருந்தது. 

தயக்கமாக அவளின் தோளை தொட்டான் விஷால்.

"என்னை ஜெயில்ல போட போறிங்களா?" நிமிர்ந்துப் பார்த்து கேட்டவளின் கண்கள் ஈரத்தால் மின்னியது.

விஷால் இடம் வலமாக தலையசைத்தான். "உன்.. உன் பேரண்ட்ஸ் வந்துட்டு இருக்காங்க!" என்றான்.

ரூபி திகைத்துப்போய் அவனை வெறித்தாள். "என்ன சொன்னிங்க?" என்றுக் கேட்டாள்.

"உன் பேரண்டஸ்க்கு தகவல் சொல்லி இருக்கோம் ரூபிணிகா. உன்னை பார்க்க வந்துட்டு இருப்பதாக சொல்லி இருக்காங்க.. நீ பயப்படும் அளவுக்கு ஒன்னும் கிடையாது. நீ யாரு, இதுவரை என்ன செஞ்சன்னோ அவங்க யாருக்கும் தெரியாது. மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தன் உன்னை கடத்திட்டுப் போய் இத்தனை வருசமா வளர்த்தியதா தகவல் தந்திருக்கோம். நீயும் அதையே கன்டினியூ பண்ணிக்கோ! உன் லைப்பை கெடுத்துக்காத!" என்றவன் எழுந்து நின்றான்.

ரூபி அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். தாய் தந்தை கிடைப்பதே பெரிய லாபம் எனும்போது அந்த பெற்றோருக்கு தன்னை பற்றிய உண்மை தெரியாது என்பது அதை விட பெரிய லாபமாக தெரிந்தது. ஆனாலும் கூட நவீன் இங்கிருந்து சென்று விட்டது மனதை கலங்கடித்து விட்டது. 

இடைப்பட்ட நேரத்தில் தங்சேயாவுக்கு நடந்ததை சொன்னான் விஷால்.

"நீ தப்பு பண்ணியிருக்க. ஆனாலும் உன் தவறுகள் நேர்மையானவர்களின் உயிரை வாங்காம பட்சத்தில் உனக்கு உதவி செய்றோம். இதுக்கு மேலயாவது நீ நல்வாழ்வு வாழ்வன்னு நம்புறோம்.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

சத்தியமா இந்த கதைக்கு சாரி கேட்ட மாதிரி நான் எந்த கதைக்குமே கேட்டது இல்லன்னுதான் நினைக்கிறேன். சின்ன யூடிக்கு சாரி மக்களே.. தலைவலி. புத்தக திருவிழா (30கிலோமீட்டர் அந்த பக்கம்) போயிட்டு வந்த அலைச்சல். (இது அஞ்சி நாள் முன்னாடி எழுதிய யூடி) எங்க ஊருக்கு நல்ல நாள்லயே பஸ் இருக்காது‌. இந்த அரைகுறை லாக்டவுண் நேரத்துல சொல்லவா வேணும்? சுத்தமா பஸ்ஸே இல்ல. போகும்போதும் பஸ் இல்ல. சரின்னு பார்த்தா வரும்போதும் நாலு மணி நேரம் கால் கடுக்க நின்ன பிறகுதான் ஒரு பஸ் வந்தது. ஆனா அதுவும் வேற ஒரு ஊரை சுத்திட்டு போய் கொண்டு விட்டது.  அதான்.. சாரி..🙏

Post a Comment

2 Comments

  1. No problem.நாளைக்கு பெரிய யூரியா கொடுக்க. ஆமா நீங்கள் எந்த ஊர்?

    ReplyDelete
  2. யூடியா கொடுங்கள்.

    ReplyDelete