Advertisement

Responsive Advertisement

தேவதை 35

 ஆதியின் இதயம் அடித்துக் கொள்வது கவிக்கும் கேட்டது. ஆனால் அவன் தன் பயிற்சியை நிறுத்தவில்லை. அவளின் கையிலிருந்த வாள் அவனின் காரணத்தால் சுழன்றது. கத்தியை கண்ணில் காண பிடிக்காமல் கண்களை மூடிக் கொண்டாள் ஆதி. 


"என்னை விட்டு விடுங்கள் ஏந்தலே!" கெஞ்சினாள்.


"வாள் பயிற்சி உனக்கு முக்கியம் ஆதி!"


அவளின் பயத்தின் வாசம் அவனின் நாசியில் அளவுக்கு அதிகமாகவே துளைத்தது. இவள் இப்படியே இருந்தால் அது தனக்கும் தன் உலகிற்கும் ஆபத்தை கொண்டு வந்தே விடும் என்று பயந்தான்.


"இதை பொம்மை போல் நினைத்துக் கொள்!" என்றான்.


அது கத்தி. அது உயிரை எடுக்கும் ஆயுதம். இதுதான் ஆதியின் நினைவில் இருந்தது.


அவளின் கைகள் இரண்டும் நடுங்கியது. அவனின் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாள். 


"ஆதி!" 


மறுப்பாக தலையசைத்தாள். "என்னால் முடியாது!" என்றவளின் கைகள் வேலை செய்ய மறுத்தது. அவனால் அவளின் கையை மேலே தூக்க முடியவில்லை.


அவனுக்கு கோபம் வந்தது. ஆனால்  இருவரையும் பிணைத்திருந்த அன்பின் காரணமாய் அவள் மீது கோபப்பட முடியாமல் போய் விட்டது.


அவள் கையை விட்டான் கவி. அவளின் கையிலிருந்த வாள் தரையில் விழுந்தது.


"போ ஆதி!" என்றான்.


ஆதி அவன் புறம் திரும்பினாள்.


"அந்த கண்ணால் என்னை பார்க்காதே! தயவுசெஞ்சி தூரமா போயிடு. உன்னால எதுவும் முடியாது. அன்பின் தேவதைகளால் எதுவும் முடியாது என்று நீ ஆயிரம் முறை சொன்னாய். நான்தான் நம்பாமல் போனேன். போய் விடு. போய் உன் மாளிகைக்குள் படுத்து உறங்கு.!" என்றவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.


ஆதிக்கு அவனை பார்க்கையில் பரிதாபமாக இருந்தது. ஆனால் தனக்கு வராத ஒன்றை அவள் மட்டும் எப்படி வலுக்கட்டாயமாக செய்வாள்?


கவி பயிற்சி மைதானத்தை விட்டு செல்வதை கண்டு அவன் பின்னால் ஓடி வந்தாள் நனி.


"ஏந்தலே!"


"என்ன?" அவளை திரும்பி பார்த்துக் கேட்டான். அவனின் கோபம் வெளிப்படையாக தெரிந்தது.


"ஏந்தலே.. அரசிக்கு நான் பயிற்சி தரட்டுமா?" எனக் கேட்டவளை ஆச்சரியமாக பார்த்தான்.


"நான் அரசியின் மெய் காப்பாளினி. அவரின் தோழியும் கூட. என்னோடு அவர்கள் சகஜமாக பழகுகிறார்கள். அவர்களுக்கு பயிற்சி என்று சொல்லி தந்தால் நிச்சயம் சரி வராது. ஆனால் விளையாட்டு போல அவருக்கு என்னால் போர் பயிற்சி அளிக்க இயலும்.!" என்றவளை ஆச்சரியமாக பார்த்தான்.


"நீங்கள் என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படையுங்கள்!" என்று வேண்டினாள்.


கவிக்கு வேறு வழி தெரியவில்லை. யோசனையோடு சரியென தலையசைத்தான்.


நனி தன் குரூர சிரிப்பை மனதுக்குள்ளேயே போட்டு பூட்டிக் கொண்டு அவனைப் பார்த்து வணக்கம் வைத்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments