க்யூட்டா ஹீரோஸ். அதை விட க்யூட்டா ஹீரோயின்ஸ்.. இது ஒரு பீல் குட் ஸ்டோரி. மற்றும் லவ் + பேமிலி ஸ்டோரி. அதனால எல்லோருமே படிக்கலாம். ஆகையால் படிக்க வரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
இரண்யன்.. வயது ஐம்பதோ அறுபதோ. அதுவா முக்கியம்.? அவரின் கொள்கைதான் முக்கியம். அவரின் குடும்ப கௌரவம் பிள்ளைகளின் நடவடிக்கையில் இல்லை. மாறாக ஊரார் சொல்லும் வார்த்தைகளில் இருந்தது.
'இரண்யனை பாரு. அவன் புள்ளைங்க எப்படி அவன் பேச்சை கேட்டு நடக்குது பாரு..' என்ற உறவினர்களின் பாராட்டாலேயே தன் வீட்டின் குக்கரில் விசில் வருவதாக நம்புபவர்.
இரண்யனின் மனைவி மூதேவி. ஆமாம் அவள் பெயர் மூதேவிதான். எட்டாவதாக பிறந்த பெண் குழந்தை. அவளின் தாயார் பழியை போட வழி கிடைக்காமல் மகளுக்கு மூதேவி என்று பெயர் வைத்து விட்டாள்.
பெயர்தான் மூதேவி. ஆனால் அவள் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு அவள்தான் ஸ்ரீதேவி. அவளின் வாலிபத்தில் ஆரம்பித்த பள்ளி. முப்பது ஆண்டுக்கால அனுபவத்தை தாங்கி சீராக இயங்கிக் கொண்டிருந்தது ஔவையார் மேல்நிலைப்பள்ளி.
மூதேவிக்கு தன் கணவரின் கொள்கை நம்பிக்கை மீதெல்லாம் அக்கறை கிடையாது. அதை சொன்னாலும் அவர் கேட்டுக் கொள்ள மாட்டார். அதனால் அவளின் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பாள். அடங்கி போகிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதையும் காதில் வாங்காமல் திரிகிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஜோடியின் வாரிசுகள் நால்வர்.
சத்யா - மூத்த மகன். இன்ஜினியரிங் முடித்து விட்டு தனது நண்பர்களோடு சேர்ந்து சொந்தமாக கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். இன்னமும் கல்யாணம் செய்துக் கொள்ளாத முப்பத்தி மூன்று வயதை கடந்த கட்டிளம் காளை.
இரண்டாவது மகன் சந்தோஷ் - டிடெக்டிவ் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறான். வயது இருபத்தியெட்டு. அவனின் பகுதி நேர வேலையாக இப்போதைக்கு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. காதல் என்றால் கட்டி கரும்பும் கசக்கும் இரண்யனுக்கு. இவன் என்ன செய்ய போகிறானோ.?
மூன்றாம் மகன் - நிஷாந்தன். இருபத்தி மூன்று வயது. டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை கடைசி வருட மாணவன். காதலென்றால் என்னவென்றே தெரியாத குழந்தை. (சொன்னா நம்பணும்.)
கடைக்குட்டி பார்கவி - பதினெட்டு வயது. இதே ஊரில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு மாணவி.
***
வடக்கு கொடிக்கால்ல கலகலப்பான மனுசன்னா அது நம்ம நாகராஜன்தான். அவரோட ஹை பிரஷர் மனைவி சோபனா. இரண்டு பேரும் சண்டையே போட்டுக்காம பெத்த இரண்டே இரண்டு புள்ளைங்கதான் தனுஸ்ரீயும் நீனாஸ்ரீயும். இரண்டும் பேருக்கும் நடுவுல நாலு வயசு வித்தியாசம். ஆனா வாயடிக்கறதுல நீனாதான் முன்னாடி நிற்பா. ஆம்பள பையன் இந்த வீட்டுல இல்லையான்னு யாரும் கேட்க முடியாது. நீனா இருக்கும் வீட்டுக்கு ஆம்பள பையன் வேற வேணும்ன்னு கேட்டுட்டு ஓடிடுவாங்க. அவ்வளவு நல்ல புள்ளை அவ.
அதுக்காக தனு ரொம்ப நல்லவன்னு நான் சொல்ல வரல. அவ கொஞ்சம் வாய் கம்மி. அவ்வளவுதான். மத்தபடி எவனாவது வம்புக்கு வந்தா கம்பு சுத்திடுவா.
***
செலம்பா - இவ ஔவையார் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் ஆசிரியராக இருப்பவள். அமைதி அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி. ஆனா இவளோட வண்டவாளம் என்னன்னு இவ தோழி தனுவுக்கு மட்டும்தான் தெரியும்.
கதையோட கேரக்டர்ஸ் இவ்வளவுதான். கலகலப்பான காதல் கதை. அதுவும் புல் லவ் அன்ட் பேமிலி ஸ்டோரி மட்டும்.
0 Comments