"உங்கள் மனதில் உள்ள அன்பை காப்பாற்றிக் கொள்ள ஆசைப்பட்டால் அதற்கு முதலில் நீங்கள் உங்களை பாதுகாக்க வேண்டும் இளவரசி. நீங்கள் உங்களை பாதுகாக்க மறுக்கும் போது உங்களின் பரிசுத்தம் அழியும் அன்பின் இளவரசி. உங்களின் அன்பு கெட்டுப் போகும். உங்களின் தாக்குப் பிடிக்கும் திறனை தாண்டி நீங்கள் உடையும் நேரத்தில் உங்களின் அன்பு உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு பகையாக மாறும். நீங்கள் எதிரியாவீர்கள். உங்களை நேசிப்போரை அழிக்க ஆரம்பிப்பீர்கள்.
அன்பு இந்த பிரபஞ்சத்தின் வளர் விதியை போல. அது எப்போதும் வளர்ந்துக் கொண்டே இருக்கும். உங்களின் அன்பு பலருக்கும் தேவை. ஆனால் நீங்கள் செய்யும் தவறால் உங்களை தற்காத்துக் கொள்ள மறந்து உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு விஷமாகவும், எமனாகவும் மாறி போவீர்கள்.!" திரைச்சீலை சொன்னதை அதிர்ச்சியோடு கேட்டாள் ஆதி.
"இந்த பிரபஞ்சத்தின் கடைசி அன்பின் தேவதை நீங்கள். உங்களின் அன்பு பாதுக்காகப்பட வேண்டியது. உங்களுக்கான பாதுகாப்பை நீங்கள்தான் உங்களுக்கு தந்துக் கொள்ள வேண்டும்!" திரைச்சீலை சொல்ல சொல்ல சிலையாக நின்றாள் ஆதி.
"நான் நேசிப்போருக்கு நானே எதிரி ஆவேனா?" என்றாள் சந்தேகத்தோடு.
"ஆமாம் இளவரசி!" என்றது திரைச்சீலை.
ஆதி தன் நெஞ்சை பற்றினாள். நினைத்துப் பார்ப்பதே பயங்கரம் போல இருந்தது. ஒரு அன்பின் தேவதையிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
"அரசி.. நீங்கள் பயிற்சி எடுப்பதன் அவசியத்தை புரிந்துக் கொள்ளுங்கள்!" என்றாள் அருகில் இருந்த நனி.
ஆதிக்கு புரிந்தது. ஆனால் பயமாக இருந்தது. அன்பின் தேவதை வதை செய்வாளா?
"உங்களால் முடியும் இளவரசி.. நீங்கள் தோற்றால் சத்திய தேவ உலகமே முழுதாய் அழிந்துப் போகும். இந்த பிரபஞ்சமும் அழிவிற்கு செல்லும். நீங்கள் ஒரு நல்ல குணம் படைத்த தேவதை. இந்த பேராபத்தை விருப்ப மாட்டீர்கள்தானே?" நனியின் கேள்வியால் அவள் புறம் திரும்பிய ஆதி தயக்கமாக ஆமென தலையசைத்தாள்.
"அப்படியானால் வாருங்கள். நாம் போய் பயிற்சி எடுப்போம். நம்மால் அனைத்தும் முடியும்!" என்றவள் ஆதியை அழைத்துக் கொண்டு சத்திய தேவ உலகம் நோக்கி புறப்பட்டாள்.
கவிக்கு தன் பயத்தின் காரணம் புரியவில்லை. அந்த பயத்திற்கு காரணம் ஆதியின் பயம்தான் என்று புரிந்திருந்தும் அவளை தேடி செல்லவில்லை அவன்.
சத்திய தேவ உலகின் மறுபக்கம் இருந்த பனி சிகரத்தின் மீது வந்து நின்றாள் நனி.
ஆதியிடம் பொம்மை கத்தி ஒன்றை தந்தாள். ஆதிக்கு இந்த பொம்மை கத்தியை பிடித்திருந்தது.
"ஆயுதம் எதிரியை அழிக்க என்று எண்ணாதீர்கள் அரசியே.. இந்த ஆயுதம் உங்களை பாதுகாக்க மட்டுமே என்று உணருங்கள்.!"
ஆதி புரிந்ததாக தலையசைத்தாள்.
நனி தன் கையை சுழற்றினாள். அவளின் வாள் எப்படி சென்று வந்து வளைகிறது என்பதை கவனித்தவள் அதே போல தன் கையை சுழற்றினாள். பொம்மை கத்தி அவளின் விரல்களில் நடனமிட்டது.
நனி கை தட்டினாள்.
"சிறப்பு அரசி.. உங்களால் முடியும்!" என்றவள் அடுத்தடுத்த பயிற்சிகளை சொல்லி தர ஆரம்பித்தாள்.
கவி தன் மர குகை நோக்கி நடந்தான். அவனால் பயிற்சி படைக்கு தலைமை ஏற்க முடியவில்லை. அவர்களையே பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு மரத்தடிக்கு வந்தான்.
இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இது பந்தத்தின் காரணம் என்று அவனுக்கே புரிந்தது. ஆனாலும் ஆதிக்கு ஏன் இப்படி பயம் என்று அவனுக்கு புரியவில்லை.
ஆதியை தேடிக் கொண்டு புறப்பட்டான். அவளின் வாசம் அவனை அழைத்துச் சென்றது. அவள் இருக்கும் திசை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவன் இரண்டாம் அடிக்கு அவள் முன் வந்து நின்றான்.
பொம்மை கத்தியை வைத்து மொத்தமாக கையை வீசிக் கொண்டிருந்தாள். கவிக்கு ஆச்சரியமாக இருந்தது. பயிற்சி தந்துக் கொண்டிருந்த நனியையும் அதிர்ச்சியாக பார்த்தான்.
"இது சண்டையிட அல்ல. என் பலத்தை பாதுக்காக்க.!" என்றாள் பயிற்சி எடுத்தபடியே.
கவியின் முகத்தில் புன்னகை பூத்தது. நனியை மகிழ்ச்சியோடு நோக்கினான்.
ஆதி ஆரம்ப நிலைக்கு கூட இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அதற்குள்ளேயே அவனுக்கு பெருமையாக இருந்தது. தனது உலகிற்கு இனி எந்த வித ஆபத்தும் இல்லை என்று பெருமையோடு இருந்தான்.
"அன்பை பாதுக்காக்க வேண்டும்!" என்றுச் சொல்லிக் கொண்டவள் கத்தியை இப்படியும் அப்படியுமாக சுழற்றினாள். காற்று போல சுழன்றது கத்தி. அவளுக்கு பயமாக இருந்தது. அதை பொறுத்துக் கொண்டாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments