ஆதி பூமிக்கு வந்து விட்டாள். சத்திய தேவ உலகில் போர் நடந்துக் கொண்டிருந்தது. தனது பிள்ளைகள் வெல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இவள் இங்கே வந்து விட்டாள். உள்ளம் இப்போதுதான் குளிர்ந்துக் கொண்டிருந்தது.
யாரையும் எதையும் யோசிக்கும் அளவிற்கு இல்லை அவள். அவளின் வெறுப்பு பிரபஞ்ச வெளி வரை பரவிக் கொண்டிருந்தது.
இவளின் வெறுப்பு தரும் வேதனை தாங்காமல் பல உலகங்கள் கடினத்தில் உழன்றுக் கொண்டிருந்தன. வேதனை எந்த அளவிற்கு சென்றது என்றால் அனைத்து அண்டங்களில் உள்ள கடவுள்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டனர்.
ஒரு தேவதை. அவ்வுலகத்தின் கடைசி தேவதை. இளம் தேவதை. அவளின் வெறுப்பு மொத்த பிரபஞ்சத்தையும் மாற்றி அமைக்கும் அளவிற்கு சக்தி உடையதாக இருக்கும் என்று அதுவரை யாருமே கணிக்காமல் விட்டு விட்டனர்.
பிரபஞ்சத்தின் இயக்கம் மெள்ள குறைய ஆரம்பித்தது. நட்சத்திரங்கள் பலவும் அவைகளின் ஒளியை இழக்க ஆரம்பித்தன.
கிரகங்களின் ஈர்ப்பு விசையில் மாற்றம் உண்டாகி விட்டது. இதுவரை விரிந்து பரந்துக் கொண்டிருந்த பிரபஞ்சத்தின் எல்லை இப்போது இரு மடங்கு வேகத்தில் சுருங்க ஆரம்பித்தது. ஏற்கனவே சுருங்கிக் கொண்டிருந்த பகுதிகளில் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மோதி சேதாரங்களை விளைவித்துக் கொண்டிருந்தன.
கடவுள்களின் உலகத்தில் அவசரமாக மாநாடு கூட்டப்பட்டது.
"இது எப்படி சாத்தியம்? எப்படி இந்த கிரக மாற்றங்கள்? பிரபஞ்சம் தலைகீழாக மாறி போனது எப்படி?" என்றார் ஒரு கடவுள்.
"கடவுளுக்கு இது கூட தெரியலையா?" எனக் கேட்டான் நிழாலன். அவன் ஒரு இளம் கடவுள். அவன் மனப்பிறழ்வு கொண்ட கடவுள் என்பது அங்கிருந்த யாருக்கும் தெரியாத உண்மையும் கூட.
"உனக்கு தெரியுமா?" எனக் கேட்டார் ஒரு கடவுள்.
நிழாலன் தன் கை விரலை சொடுக்கிட்டான். வானத்தில் ஒரு புறம் திரை போல் கண்ணாடி தோன்றியது. அதில் ஆதியின் முகம் தெரிந்தது.
"இவள் அன்பின் உலகத்து கடைசி இளவரசி ஆதி. இவளால்தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக பிரபஞ்சம் இயங்க காரணமான அன்பு பரவிக் கொண்டிருந்தது. இப்போது இவளின் மனதில் இருந்த அன்பு வெறுப்பாக மாறி போனதால்தான் இந்த பிரபஞ்சத்தில் மாற்றம் உண்டானது.!" என்றான்.
கடவுளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். "நாம் கடவுள்கள்.. நம்மால் கூட இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த விதியையும் மாற்ற முடியாது. ஆனால் ஒரு சாதாரண தேவதை இப்படி செய்தாளா?" என்று குழம்பினார்கள்.
"அவளின் பிள்ளைகளிடம் சிறிதளவு அன்பு குடியிருக்கிறது. அந்த அன்பும் அழியும் வேளையில் இந்த மொத்த பிரபஞ்சமும் அழிந்து போகும்.!" என்றான் நிழாலன்.
கடவுளர்கள் ஆதியின் ஆதியை பற்றி விசாரிக்க கிளம்பினார்கள். அவர்களோடு இருந்த ஹார்ட்டும் அவரின் துணைவர்களும் வாயை திறக்கவேயில்லை. மௌன சாமியார்கள் போல இருந்தார்கள். நிழாலன் அவர்கள் நால்வரையும் கண்டு கேலியாக சிரித்தான்.
கடவுளர்கள் பிரபஞ்ச கண்ணாடியில் ஆதியின் ஆதி அந்தம் அறிந்தனர். அனைத்தும் அதில் தெரிந்தது. அதன் பிறகே அனைவரின் பார்வையும் ஹார்டின் புறம் திரும்பியது.
"யோவ்.. பால்வீதி ஆண்டவா.. நாங்க இத்தனை பேர் என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னோ புலம்பிட்டு இருக்கோம். ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட பேசாம இருக்கிங்க.!" என்றார் ஒருவர்.
"அப்படி இல்லை.. அவள் எங்களின் மீது வெறிக் கொண்டு இருக்கிறாள். உங்களுக்கு தெரிந்தால் எங்களை தூது அனுப்பி விடுவீர்களோ என்று பயந்து போனோம்.!" என்றாள் ஃபயர்.
நிழாலன் கலகலவென சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
மற்ற கடவுளர்கள் ஹார்டை முறைத்தார்கள்.
"நிச்சயம் நீதான் போக வேண்டும். ஏனா அவ உன் அண்டத்தின் காப்பாளினி தேவதை. அவளின் மனதில் இருக்கும் வெறுப்பை மாற்றி பழையபடி அன்பை கொண்டு வா.!" என்றார்கள்.
ஹார்ட் மறுப்பாக தலையசைத்தார்.
"அவளின் வெறுப்பு எங்களின் இதயத்தில் பரவினால் பிறகு நாங்களும் சாயம் போய் விடுவோம்.. எங்களுக்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகள் வாழதான் ஆசையே தவிர அழிய இல்லை.!"
"முட்டாள்.. இப்போது நீ அவளை சரி செய்யாவிட்டால் பிறகு இந்த பிரபஞ்சம் அழிந்து போகும். அதன் பிறகு நீயும்தான் அழிவாய்.!" என்றார்கள்.
அப்போதும் கூட ஹார்ட் முடியாது என்றுதான் சொன்னார்.
மற்றவர்களுக்கு அழிய விருப்பம் இல்லை. அதனாலேயே பூமிக்கு கிளம்பி வந்தார்கள்.
ஆதி மரம் ஒன்றின் கிளையில் கவிழ்ந்து படுத்திருந்தார். எதன் மீதும் பிடிப்பு இல்லை அவளுக்கு. மரங்களும் கற்களும் இப்போது ஓவியம் போல தென்படவில்லை. எதையும் ரசிக்க தோன்றவில்லை அவளுக்கு. அன்பின் தேவ உலகம் அழிந்த காட்சி சுழற்சி முறையில் அவளின் கண் முன் வந்துக் கொண்டிருந்தது.
"எங்களை கொல்லாதீர்கள்.!" கவியிடம் கெஞ்சிய தன் சகோதர சகோதரிகளின் நினைவில் கண்ணீர் சிந்தினாள். வெறுப்பை தாண்டி வேதனை இருந்தது.
இவளின் வலி தாங்காமல் அங்கே கவி மண்டியிட்டான். போர் களத்தில் தன் பிள்ளைகள் சூழ்ந்திருக்க மண்டியிட்டான். உலகமே ரத்த வெள்ளத்தில் இருந்தது. மனிதர்கள் சிலரும் கூட அடிப்பட்டு இருந்தார்கள். ஆனாலும் போர் நடந்துக் கொண்டேதான் இருந்தது. அவர்கள் கவியின் புதல்வர்கள். அவர்களை கொல்வது என்பது மொத்த சத்திய தேவர்களாலுமே மனதால் முடியாத ஒரு காரியம். அவர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி அவர்களை தடுத்து நிறுத்திக் கொண்டு மட்டும்தான் இருந்தார்கள்.
"தந்தை விழுந்து விட்டார்.." என்று ஓடினாள் ஒரு மனுசி.
"கூடாது." அவளை பிடித்து நிறுத்தினான் ஒருவன்.
"அவர் நம் தாயின் எதிரி.. நம் தாய் தந்த கட்டளையை மறந்து விட்டாயா?" எனக் கேட்டான் அவன்.
அவள் கவியின் புறம் பார்த்தாள். அவளின் விழிகள் இரண்டும் கலங்கியது. மனதில் சாகாமல் இருந்த அன்பு அவளை அழ வைத்தது. அவன் அவளின் தந்தை. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அவளுக்கு வாழ்க்கையை வாழ கற்றுத் தந்திருக்கிறான். போரிட, மற்ற உலகத்தையும் ஆள, தன் சகோதர சகோதரிகளிடம் பிரச்சனையின்றி பழகவும் கற்றுத் தந்திருக்கிறான்.
அவளால் அமைதியாய் பார்த்திருக்க முடியவில்லை. மனிதர்களில் ஒருவன் தன் கத்தியை உயர்த்தினான். கவியை கொன்று விட எண்ணி கத்தியை தாழ்த்தினான்.
நிச்சயம் அவனால் கொல்ல முடியாது. ஆனால் இப்போது கவி பலவீனமாக இருந்தான். அதனால் அவன் காயமுறுவான். அதை இந்த மனுஷியும் அறிவாள்.
கத்தி கவியின் கழுத்திற்கு வந்து சேரும் முன் ஓடியவள் கவியின் மேல் விழுந்தாள். கத்தி அவளின் முதுகில் விழுந்தது.
"சகோதரி.." கத்தினான் கத்தியை வைத்திருந்தவன்.
"தந்தையே.. உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லையே.!" என கேட்டாள் அவள்.
கவியின் நெஞ்சில் புது வலி புறப்பட்டது இப்போது. சுயநலமற்ற உதவி ஒவ்வொன்றிலும் அன்பு குடிக்க கொண்டிருக்கும் விசயம் இப்போது அவனுக்கு புரிந்தது.
"செனியா.!" என்றான் கண்ணீர் கன்னங்களில் வழிய.
"நான் உங்களை போல தந்தையே.. வீரமானவள். அழிவற்றவள்.. எதையும் தாங்குபவள்.!" என்றவள் கண்களை மூடினாள்.
அவளை அணைத்திருந்த கவி தன் உள்ளங்கையில் படரும் ரத்தம் உணர்ந்து கதறினான். இது பெரிய தண்டனையாக பட்டது அவனுக்கு.
அவள் இறக்கவில்லை என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அவளின் வலி அவனை கொன்றது. அவளின் மீது வைத்திருந்த அவனின் அன்பு இப்போது பூதாகரமாக வளர்ந்து அவனையே தின்றது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments