Advertisement

Responsive Advertisement

தேவதை 30

 லேட்டுக்கு சாரி மக்களே.. டவர் கிடைக்காத இடத்துல மாட்டிக்கிட்டேன்


ஆதிக்கு பேச்சே வரவில்லை. வாரியும் கவியும் ஒன்றுக் கிடையாது.


வாரியை மணம் முடித்தால் அவள் அன்பான ஒரு நேச வாழ்வை வாழலாம். ஆனால் கவியை மணம் முடிப்பது என்பது அவனின் உலகத்திற்கு ராணியாவது. எத்தனையோ பிரச்சனைகள். எத்தனையோ மக்களின் குரல்களை கேட்க வேண்டும். 


பெரிய பொண்ணோ சின்ன பொண்ணோ.. பதவிகளை சரியான முறையில் பயன்படுத்தி ஆக வேண்டும்.


வாரியாக இருந்தால் இவள் தனது விருப்படியே இருக்கலாம். ஆனால் கவியென்றால் அது ஒரு பணி போல. இங்கே நூறு மனிதர்களை சமாளிப்பதே அவளால் முடியாத காரியமாக உள்ளது. அப்படி இருக்கையில் ஓர் உலகத்தையே நிர்வகிப்பது நடக்கும் காரியமா?


"என்னால் முடியும் என்று தோன்றவில்லை ஏந்தலே.! நான் ஒரு சாதாரண தேவதை.. நீங்கள் உங்கள் அரசியல் வெல்லும் படியான ஒரு சம்பந்ததை தேடி மணம் முடியுங்கள்.!" என்றாள்.


கவி அவளை முறைத்தான்.


"எனக்கு நீ தேவை.!" என்றான்.


ஆதி மௌனமானாள். அவனிடம் போரிட்டு வெல்ல முடியுமா? 


"ஆதி.!" அவனின் மென்மையான குரலில் நிமிர்ந்தாள்.


அன்பை தேக்கி வைத்திருந்தது அவனின் கண்கள்.


அவளின் கையை பற்றினான்.


"வேறெதையும் விட நீ எனக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறாய். உன்னை நேசிக்கிறேன் நான்.!" 


ஆதியின் இதயத்தில் வேர் ஒன்று பரந்து விரிந்தது. நெஞ்சத்தின் மீது கையை வைத்தாள். 


'ஏன் எனக்குள் புது நம்பிக்கை வேர் விடுது?' குழம்பினாள்.


"நீ என்னை மணம் முடித்தால் உனக்கு இந்த மொத்த பிரபஞ்சத்தையும் பரிசளிப்பேன் நான்.!" என்றான்.


ஆனால் அதன் தேவை என்ன என்று ஆதிக்கு புரியவில்லை. ஆனால் அவனிடம் மறுத்து பேசுவது முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்தது.


சரியென்று தலையசைத்தாள்.


கவி அவளை அணைத்தான். ஆதி அவனை திருப்பி அணைக்க இருந்த நேரத்தில் விலகி நின்றான்.


"என்னோடு வா.!" என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். மனிதர்கள் பார்க்கும் முன் அவளோடு சேர்ந்து மேலே பறந்தான்.


"பிள்ளைகள் நம்மை தேடுவார்கள்.!" 


"அவர்களை அப்புறம் வந்து சந்திக்கிறேன்.!" என்ற கவி ஆதியை பிரபஞ்சத்தின் மத்தியில் கூட்டி வந்து நிறுத்தினான். 


கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. பல வித வண்ணங்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.


"சத்திய தேவ ஏந்தல் கவியாகிய‌ நான் இந்த பிரபஞ்சம் சாட்சியாக, கடவுள்களின் சாட்சியாக, எனது இதயத்தில் உள்ள உயிரின் சாட்சியாகவும் உன்னை என் இணையாகவும் துணையாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.!" என்றான்.


ஆதிக்கு அதிர்ச்சியில் கண்கள் வெளி வந்துவிடும் போல் இருந்தது.


மணம் என்றுதான் சொன்னான். ஆனால் இப்படி நொடியில் மணம் முடிப்பான் என்று அவள் நினைக்கவே இல்லை.


"ஆதி.." என்றான் அழுத்தமாக.


ஆதி பெருமூச்சு விட்டாள்.


"அ.. அன்பின் தேவதைகளின் கடைசி தோன்றலான ஆதியாகிய நான்‌ இந்த பிரபஞ்சம் சாட்சியாக, கடவுள்களின் சாட்சியாக, எனது இதயத்தில் உள்ள உயிரின் சாட்சியாக உங்களை என் இணையாகவும் துணையாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.!" 


ஆதிக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கவி தன் கையை நீட்டினான். நடுங்கும் தனது கரத்தை அவனின் கரம் மீது வைத்தாள். கைகள் இரண்டும் மோதியதும் அவளின் இதயத்தில் இருந்த வேர் உடலின் பிற ரத்த நாளங்களிலும் தன் சுவட்டை பதிக்க ஆரம்பித்தது. உடலின் உள்ளே எலும்பு, நரம்பு போல இந்த இதயத்தின் வேரும் பரவி விட்டது.


"உன்னை நேசிக்கிறேன் ஆதி!" என்றான். அந்த வார்த்தையின் அர்த்தம் முழுதாய் தெரியாதவன் அவன். அந்த வார்த்தை ஏற்படுத்த போகும் பின் விளைவையும் அறியாதவன். அதனால்தான் அதை சொல்லி விட்டான். ஆனால் ஆதிக்கு இந்த வார்த்தை சத்தியம். அன்பின் தேவதையிடம் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?


ஆதியை அழைத்துக் கொண்டு தனது உலகம் வந்துச் சேர்ந்தான் கவி. அனைத்து சத்திய தேவர்களும் தேவதைகளும் ஆதியின் வாசத்தில் வெளியே வந்தனர்.


கவி தனது மரத்தின் கீழ் நின்றிருந்தான்.


வந்து சேர்ந்த தேவர்களும் தேவதைகளும் ஆதியை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவள் மேனியின் வெளி தோலின் மீது ஓடும் கருப்பு நரம்புகளை கண்டு அதிர்ந்தனர். இந்த உலகின் அரசி அவள் என்பது மகிழ்ச்சியான விசயம் என்றாலும் கூட அவர்களுக்கு ஏனோ பயமாகவும் இருந்தது.


"ஆதியை எனது இணையாக தேர்ந்தெடுத்து உள்ளேன். இனி இவள் இந்த உலகின் சக்ரவர்த்தினி.." என்றான்.


மக்களின் கிசுகிசுப்புகள் அவன் காதுகளுக்கும் கேட்டது. 


"இவள் ஒரு அன்பின் தேவதை. அதனால் இவளுக்கு மிக முக்கிய தேவை பாதுகாப்புதான்!" என்று கவி பேசிக் கொண்டு செல்ல ஆதிக்கு குழப்பமாக இருந்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments