Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.4

 கலையரசன் pov


பள்ளி முடிந்து வந்ததும் தியானத்தில் அமர்ந்து விட்டேன். நான் ஏன் பழிவாங்கப்படுகிறேன் என்று அறிந்துக் கொண்டே ஆகவேண்டும். எனக்கான பதிலை ஒரே ஒருவரால்தான் சொல்ல முடியும். அது பூவிளந்தேவி. அவள்தான் வினீயின் ஆன்ம ஜோடி. நான் என் சயாவை நேசிப்பதை விடவும் அவள் அதிகமாக வினீயை நேசித்துக் கொண்டிருந்தாள்.


அரை மணி நேரம் மனதை ஒருமைப்படுத்தினேன். என் மனதின் விலங்கை உடைத்து ஆன்மாவாய் விண்வெளி நோக்கி பறந்தேன்.


வெள்ளையும் கருப்புமாக இருந்த விண்வெளியின் நட்சத்திர மண்டலம் ஒன்றில் குழலிசைத்தபடி அமர்ந்திருந்தாள் பூவிளந்தேவி.


என்னை கண்டதும் புன்னகைத்து எழுந்து நின்றாள்.


"வருக.." என்றாள்.


"எனது பிரச்சனை உனக்கு தெரியுமா.?" 


இல்லையென தலையசைத்தாள். பொய் சொல்கிறாள்.


"உதவி செய் பூவிளந்தேவி. எனக்கு அழிய ஆசையில்லை." 


"வினீயும் சயாவும் விளையாடிட்டு இருக்காங்க."


குழப்பமாக இருந்தது எனக்கு.


"எப்போதும்தான் விளையாடுறாங்க."


"இல்ல. இன்பத்தை மறந்து பழி வாங்கும் விளையாட்டு விளையாடுறாங்க. சோகம் மட்டும் மத்தவங்க லைப்க்கு வேணும்ன்னு பண்ணிட்டு இருக்காங்க."


இது என்ன சில்லறைதனமாக இருக்கிறது.? சந்தோசத்தை திருப்பி பரிசளிப்பதில் என்ன கேடு வந்தது இவர்களுக்கு.?


என் மன புலம்பலை படித்து விட்டது போல புன்னகைத்தாள் பூவிளந்தேவி.


"முதல் ஆரம்பம் உன் காதலிதான். அவளேதான் அப்படி ஒரு வாழ்க்கை கேட்டாள். ஆனால் இவன் மாத்தி அமைக்கலன்னு சொல்லி அவன் லைப்பை கொடுமையானதாக மாத்திட்டா. அவ தன்னோட பூமி வாழ்க்கையின் நினைவுகளை அழிச்சிக்கவே இல்ல. அப்புறம் அவன். பிறகு இவ. இப்படியேதான் போயிட்டு இருக்கு."


"அவங்க என்னவோ பண்ணட்டும்.? ஆனா நான் என்ன பாவம் பண்ணேன்.? நான் அவளோடு கூடி இரண்டு ஜென்மங்கள் ஆகுது.."


சிரித்தாள் எதிரே இருந்தவள்.


"ரொம்ப காஞ்சி போயிட்டியோ.?" என்றவளை முறைத்தேன்.


"அவ என் ஆன்ம ஜோடி. தேவை என்பது உடம்புக்கு மட்டுமே கிடையாது. மனசுக்கும் ஆன்மாவுக்கும் கூடதான். இரண்டு ஜென்மமா இரண்டு பேரின் ஆன்மாவும் இணையல. என் ஆன்மா எந்த அளவுக்கு பலவீனமா மாறி இருக்குன்னு உனக்கு தெரியுமா.? அவ வேணும் எனக்கு. எனக்கு ஜோடியா வேணும்." என்றேன் வருத்தத்தோடு.


பூவிளந்தேவி‌ என் கரத்தை பிடித்தாள். 


"அவர்களுக்கு சலிப்பு வந்த பிறகு நான் ஏதாவது செய்றேன்."


கோபத்தில் அவளின் கையை உதறினேன்.


"எனக்கு அவ வேணும். அவங்களுக்கு சலிக்கவும் வேணாம். ஒன்னும் வேணாம். இரண்டு பேரையும் கொன்னு கைது செய். அவர்களோட வாழ்க்கை நினைவுகளை அழிச்சி உண்மையான நினைவுகளை கொடு. என்னால முடியல. அவ இல்லாம வாழ்க்கை நிறையல." என்று கத்தினேன்.


அவளோ ஒரு வருத்தமும் இல்லாதவள் போல இருந்தாள்.


"நிறைய பேர் அப்படிதானே வாழ்றாங்க."


"யார் நாசமா போனாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. எல்லோருக்கும் இன்ப துன்பத்தை அனுபவிக்க உரிமை இருக்கு. சயாவும் வினீயும் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க ஆசைப்பட்டா அதுக்கு நான் தடையா வரல. ஆனா என் லைப்பை சோகமா கொண்டு போக அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.?" 


"தைரியம் இருந்தா இதை உன் சயாகிட்ட போய் சொல்லு." என்றவள் குழலை இசைக்க ஆரம்பித்தாள்.


நான் எப்படி இதை அவளிடம் சொல்வேன்? காதலா நட்பா என கேட்டால் நட்பு என்று கண்களை மூடியபடி தேர்ந்தெடுப்பாள்.


அவள் நட்பில் எப்படியோ தொலைந்து போகட்டும். நான் என்ன பாவம் செய்தேன்? நீங்களே சொல்லுங்கள். நான் பாவம் இல்லையா? அந்த வீணாய் போன வினீக்கும் இந்த நேரத்தில் எதிரியாய் இருக்கும் சயா மட்டும்தான் தெரிவாள். அப்பாவியான நானோ, என் தேடலோ, என் சோகமோ தெரியாது. பிறகு நான் எப்படிதான் என் பிரச்சனையை தீர்ப்பேன்?


"உன்னால அவங்களோட மனசை சரி பண்ண முடியுமா முடியாதா?" கடைசியாக கேட்டேன்.


"என்னால முடியாது. உன்னால முடிஞ்சதை நீ செய்." 


அவள் தனது குழலோடு மட்டும் பேச ஆரம்பித்து விட்டாள்.


"கலை.."


யாரோ என் தோளை உலுக்கவும் கண்களை திறந்தேன். என் அண்ணன் நின்றிருந்தார். மொத்த முடியும் வெள்ளையாய் மாறி, தோலில் சுருக்கம் ஆரம்பித்து இருந்தது.


"உன்னை பார்க்க என் கொலிக் வந்திருக்காரு.." 


என்னை பார்க்க இவரோட கொலிக் ஏன் வரணும்? 


குழப்பத்தோடு எழுந்து போனேன். ஹாலில் நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். அருகில் சாகித்யா அமர்ந்திருந்தாள்.


"வணக்கம் சார்." எழுந்து நின்று கையை கூப்பினார்‌. நானும் பதில் வணக்கம் வைத்தேன்.


"இவ என் பொண்ணு. சாகித்யா. உங்க ஸ்கூல்லதான் ப்ளஸ் டூ படிக்கறா." எனக்கு தெரிந்ததை புதிதாக சொல்லிக் கொண்டிருந்தார்.


சாகித்யா என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். கடவுளை பக்தன் பார்ப்பது போல, இயற்கையை ஆதி மனிதன் ரசிப்பது போல, தவழ ஆரம்பித்த குழந்தை வெண்ணிலயை கவனிப்பது போல பார்த்தாள்.


"இவளுக்கு மேக்ஸ் சுத்தமா வராது. டியூசன் எங்கே அனுப்புறதுன்னு தெரியல. அதனால்தான் உங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது ரெகமெண்ட் பண்ணுவிங்களான்னு கேட்டுட்டு போக வந்தேன்." என்றார்.


அவளை வேறு யாரோ ஆசிரியரிடம் அனுப்ப விரும்பவில்லை நான். 


"நான் டீச் பண்றேன்."


சாகித்யாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. என்னை ஆவலோடுப் பார்த்தாள். 


"தினமும் பைவ் டூ நைன் வரைக்கும் நான் பர்சனலா கிளாஸ் எடுக்கிறேன்."


அவளின் அப்பா எழுந்து நின்றார். என்னை நன்றிகளோடு பார்த்தார். கையை கூப்பி வணக்கம் சொன்னார்.


"என்னையிலிருந்து ஆரம்பிக்கலாம்.?" எனக் கேட்டார்.


"உங்களுக்கு விருப்பம் இருந்தா இன்னையிலிருந்து கூட."


"அப்பா என் பேக் கார்ல இருக்கு. நான் எடுத்துட்டு வரேன்." என்று வெளியே ஓடினாள்.


"ரொம்ப மந்தம் சார். தயவு செஞ்சி பாஸ் பண்ற அளவுக்கு படிக்க வச்சிடுங்க. எல்லா நேரத்திலும் செயலிலும் நல்லாதான் இருக்கா. ஆனா படிப்புல மட்டும் ரொம்ப முட்டாள். அவங்க அம்மாகிட்ட ரொம்ப திட்டு வாங்கறா. நான் இல்லாத நேரத்துல அவங்க அம்மா அடிச்சி சூடு வைக்கிறா. என்னால எதுவும் செய்ய முடியல. என் பொண்ணு கொஞ்சம் கூட கஷ்டப்பட கூடாதுன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு ரொம்ப துயரப்படுறா. அவ ஸ்டேட் பர்ஸ்ட் கூட வர தேவையில்ல. பாஸ் பண்ணிட்டா போதும்." என்றார்.


"என்னால முடிஞ்சதை செய்றேன்." என்றேன் நான்.


சாகித்யா புத்த பையோடு ஓடி வந்தாள். 


"என் ஸ்டடி ரூம் அந்த பக்கம்." நான் கை காட்டிய திசையில் ஓடினாள்.


"நைட் ஒன்பது மணிக்கு வரேன் சார்." என்றுவிட்டு போனார்.


நான் அண்ணி தந்த காப்பியை குடித்துவிட்டு ஸ்டடி ரூமுக்கு போனேன். எனது மேஜையின் மேலிருந்த என் மனைவியின் (அவளின் முந்தைய ஜென்மத்திற்கும் அதற்கு முந்தைய ஜென்ம உருவத்தை) புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.


"அழகா இருக்காங்க சார்." என்றவள் புகைப்படத்தை வைத்து விட்டு வந்து நாற்காலியின் அருகே நின்றாள்.


"உட்காரு." அவளுடைய கணக்கு புத்தகத்தை எடுத்தேன்.


"எதுலயெல்லாம் வீக்.?" 


"எல்லாமே சார். இன்னைக்கேதான் அதிசயமா டெஸ்ட்ல புல் மார்க். மத்தபடி நான் எல்லாத்திலும் பெயில்தான் சார்‌. முழு முட்டாள்." என்றாள்.


அவளின் தலையை வருட தோன்றியது. ஆனால் செய்யவில்லை. இருவருக்கும் இடையில் ஜென்ம பந்தமும், ஆன்ம பந்தமும் இருக்கலாம். ஆனால் இப்போது வயது வித்தியாசமும், வாழ்க்கை முறையில் வித்தியாசமும் இருந்தது.


"நான் சொல்லி தரேன், எல்லாமும்." 


"தேங்க்ஸ் சார்." மகிழ்ந்து இருந்தாள். எனக்கும் மகிழ்ச்சியே.


***

வினீயின் pov


எனக்கு இந்த வாத்தியாரை பிடிக்கவேயில்லை. இந்த கிழவனுக்கு ஏன் சயாவின் மீது இவ்வளவு பிரியம்? பிறகுதான் யோசித்தேன். சயாவின் முந்தைய பிறப்பு இவனுக்கு அண்ணன் மகள் என்றும், அதற்கு முந்தைய பிறப்பு இவனின் காதலி என்றும். 


இவன் ஏன் திரும்ப திரும்ப வருகிறான் என்று புரியவில்லை. இவனின் குறுக்கீடு பிடிக்கவில்லை.


அவளருகே அமர்ந்தவள் அவள் புரியவில்லை என்று சொல்லிய கணக்கை பார்த்தான். சாகித்யா அவனை‌ ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இவனருகே மகிழ்ச்சியாக இருந்தாள். அவளின் அம்மாவின் குணத்தை மாற்றியது போலவே இவனின் குணத்தையும் மாற்றி விடலாமா என்று யோசித்தேன். பழிவாங்க கூட நல்ல ஐடியா கிடைக்கவில்லை. பார்த்திங்களா நான் எவ்வளவு பாவம் என்று?


மகிழ்ந்து இருந்த இருவரையும் நக்கலாக பார்த்தபடி அங்கே இருந்த உயர பீரோவின் மீது ஏறி அமர்ந்தேன். குரங்கு போலதான் உட்கார்ந்து இருந்தேன். என்னை பார்த்து யாரும் சிரிக்காதிங்க. அப்புறம் உங்களுடைய ஆன்ம நட்பிடம் சொல்லி‌ உங்களின் வாழ்க்கையை சாகித்யாவதை விடவும் மோசமாக எழுத சொல்லி விடுவேன்.


என் வாழ்க்கையை எப்படி கேவலமா மாத்தி வச்சா இவ. இப்ப நல்லா அனுபவிக்கட்டும் என்ற எண்ணத்தோடு கன்னத்தில் கை பதித்து அவளை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன்.


பிரின்சிபால் அவன் பேர் என்ன கருமமோ.. கலையரசன் என்று ஒரு கோப்பையின் கீழ் எழுதியிருந்தது.


இதுதான் அவனுடைய பெயர்.


கலையரசன் சாகித்யாவின் நோட்டில் கணக்குகளை எழுத ஆரம்பித்தான். வயசானவனுக்கு மரியாதை தர வேண்டிய அவசியம் ஆன்மாவான எனக்கு இல்லை.


"இவ்வளவுதானா? கணக்கு ஈசியா இருக்கு சார்." சந்தோசமாக சொன்னாள் சாகித்யா.


அவளுடைய சந்தோச குரலை கேட்கும் போதெல்லாம் என் காதுக்குள் ஈயம் காச்சி ஊத்தப்படுவது போலவே இருந்தது.


'அவளுக்கு கணக்கில் எல்லாம் மறந்து போக வேண்டும்!' அவளின் வாழ்க்கை ஏட்டில் எழுதினேன்.


அடுத்த கணக்கை போட்டுக் கொண்டிருந்தவள் மூளை குழம்பி நிமிர்ந்தாள். தாரை தாரையாக கண்ணீரை வடித்தாள்.


"புரியல சார்.." என்றாள். எனக்கு மகிழ்ச்சி.


கலையரசன் நோட்டை வாங்கி பார்த்தான். எட்டும் நான்கும் எத்தனை என்று கூட்டி விட்டால் போதும். ஆனால் நான்தான் நான்காவது வாய்ப்பாட்டை கூட மறக்கடித்து விட்டேனே. இப்போதே இவன் இவளை முட்டாள் என்று திட்டி வெளியே அனுப்ப போகிறான். அதற்காய் காத்திருந்தேன்.


"சாகித்யா.." அவளின் தலையை வருடினான். "எதுவும் தெரியாம இல்ல. உனக்கு எல்லாமே தெரியும். நீ நினைக்கும் நேரத்துல விசயம் ஞாபகத்துக்கு‌ வரலன்னு பீல் பண்ணாத. உன் மனசுல இருக்கும் பயத்தையும் கவலையையும் தூக்கி எறிஞ்சிட்டு யோசி‌. உன்னால முடியும்.." என்றான். இவன் ஏன் இப்போது திடீர் தத்துவ ஞானியானான் என்று புரியவில்லை.


என் கண் முன்பே அவளிடம் மாற்றம். கண்ணீரை துடைத்துக் கொண்டாள். பன்னிரெண்டு என்று எழுதினாள். அதிர்ச்சியில் அட்டாக் மட்டும்தான் வரவில்லை எனக்கு. டேய் கஸ்மாலம் நீயே வெறும் ஆன்மா. உனக்கு ஏதுடா ஹார்டும் அதுல அட்டாகும் என்று நீங்கள் திட்டுவது என் செவி‌ வந்து சேர்ந்து விட்டது. ஒரு அப்பாவி ஆன்மா தனது மனசை சொல்வது கூட தவறா?


கலையரசன் அவளை அன்போடு பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு வாந்தி வருவது போல இருந்தது அவனின் கண்களை பார்த்து. விட்டால் பார்வையால் கடித்து தின்று விடுவான் போல.


யோசனை ஒன்று வந்தது. அவளை எப்படி கொல்வது என்று யோசித்து சலித்த எனக்கும் ஒரு யோசனை கிடைத்தது. சாகித்யாவின் வாழ்க்கை ஏட்டை எடுத்தேன். மகிழ்ச்சியில் உள்ளம் நிரம்பியபடி கையிலிருந்த எழுதுக்கோலால் ஒரு விசயத்தை எழுதினேன்.


'சாகித்யா தன் பிரின்சிபால் கலையரசனால் வன்புணர்வு செய்யப்பட்டு இறந்து போக வேண்டும்' என்று.


எனது இந்த ஐடியா எப்படி இருக்கு? பழிக்கு பழி. ரத்தத்திற்கு ரத்தம். முத்தத்திற்கு முத்தம். ஓ சாரி. கடைசி வரியை நீக்கிக் கொள்ளுங்கள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே. இந்த குரங்கு பையன் வினீயை அவனோட ஜென்மத்துல நல்லா வச்சி செய்யணுமா வேணாமான்னு நீங்களே சொல்லுங்கப்பா.‌



Post a Comment

0 Comments