Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.5

 வித்யன் இறக்கும் தறுவாயில் இருந்தான். தன் காதலியின் மனம் மாற்ற ஆசைக் கொண்டு கல்லூரியின் உயர கட்டிடத்தின் மீதிருந்து கீழே குதித்தவன் அவன். அதன் விளைவாய் கையிலும் காலிலும் பலத்த அடி. தலையிலும் கூட அடி. மருத்துவமனை வராண்டாவில் இழுத்துக் கொண்டிருந்தது அவனின் உயிர்.


சயா எங்கிருந்தோ ஓடி வந்தாள். "வினீ.. எழு!" என்று அழுதாள்.


அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அவனின் வாழ்க்கையை மிக மிக அற்புதமாக வழி நடத்திக் கொண்டிருந்தாள் அவள். அவனை எப்படியாவது வாழ வைக்க வேண்டும், பிழைக்க வைக்க வேண்டும் என்று பாடாய் பட்டாள்.


அந்த மருத்துவமனை வராண்டாவில் நடந்துச் சென்ற எந்த மருத்துவரும் நர்ஸும் இவனை திரும்பி பார்க்கவில்லை.


"என் வினீ இங்கே சாக கிடக்கிறான்.. யாராவது காப்பாத்தி கொடுங்க.." என்று கத்தி அழுதாள்.


ஒருவருக்கும் அவளின் அழுகை குரல் கேட்கவில்லை. அவளை தாண்டி நடந்துக் கொண்டிருந்தார்கள். 


வினோதனின் உடம்பிலிருந்து ரத்தம் போய் கொண்டே இருந்தது. அவனின் உயிரும் போய் கொண்டே இருந்தது.


"வினீ.." அழுது சலித்தாள் இவள்.


அவனது வாழ்க்கை ஏட்டை எடுத்தாள். ஏட்டில் இருந்த எழுத்துகள் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. இது எப்படி சாத்தியம் என்ற குழப்பத்தோடு எழுதுக்கோலை கையில் எடுத்தாள். அவனின் காதலை அவளின் காதலி உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் எழுதி வைத்திருந்தாள் முன்பு. ஆனால் இப்போது பார்த்தால் அவளின் காதலி காதலிக்க ஒத்துக் கொள்ளாததால் இவன் கீழே விழுந்து மரணமடைய வேண்டும் என்றிருந்தது


"ஐயோ.." தலையில் அடித்துக் கொண்டாள். அவனுக்கு மரணம் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


"வினீ.." அழுதபடியே வாழ்க்கை ஏட்டில் மாற்றி எழுதினாள். மருத்துவ சிகிச்சையில் அவன் உயிர் பிழைத்து விட வேண்டும் என்று எழுதினாள்.


அவசரமாக மருத்துவர்கள் இருந்த அறைக்கு ஓடினாள். அங்கிருந்த ஒரு மருத்துவ பெண்ணின் உடம்பில் புகுந்தாள்.


"வராண்டாவுல ஒரு பையன் கிடக்கறான். அவனை உடனே ஆபரேஷன் தியேட்டர் கொண்டு வாங்க.." என்றாள் மற்ற பணியாளர்களிடம்.


"மேடம்.. அந்த பையனோட வீட்டுல இருந்து இன்னும் ஆட்கள் வரல. நாம வெயிட் பண்ணலாம்.." என்றான் ஒருவன்.


"அதுக்குள்ள அவன் செத்துடுவான்.." என்றவள் அவசரமாக வெளியே ஓடினாள்.


வினோதன் படுத்திருந்த படுக்கையை தள்ளிக் கொண்டு நடந்தாள்.


கண்கள் கலங்கியபடி செல்லும் பெண் மருத்துவரை அனைவரும் அதிசயமென பார்த்தனர்.


"வினீ.. உயிர் பிழைச்சிடு.." என்று வேண்டியபடியே அவனுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தாள்.


அவளுக்கு அனைத்தும் நினைவில் இருந்தது. இவன் அவளின் ஆன்ம நண்பன். அவளின் போன ஜென்ம வாழ்க்கையை மிகவும் அழகாக வழி நடத்தியவன். அவளின் வாழ்க்கையில் அவள் அனுபவித்த இன்பமும் மகிழ்ச்சியும் அவளின் நினைவில் தெளிவாக இருந்தது. அந்த வாழ்க்கைக்காக இவனுக்கு எதையும் செய்வாள். ஆரம்பத்திலிருந்தே இவனது வாழ்க்கையை அழகாகத்தான் வழி நடத்தி வந்தாள். ஆனால் இப்போது இந்த புது குழப்பம். வாழ்க்கை ஏட்டில் எப்படி எழுத்துக்கள் மாறியது என்று அவளுக்கு புரியவில்லை.


அழுதபடியே சிகிச்சையை முடித்தாள்.


"உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரோ?" உடன் இருந்த பெண் ஒருவர் கேட்டார்.


"இல்ல.. என் பையன் வயசுதானே இவனுக்கும்? அதனால மனசு பாரமா ஆகிடுச்சி.." என்றவள் அவனின் முகத்தை வருடி தந்து விட்டு வெளியே நடந்தாள்.


வினோதன் கண் விழித்து விட்டான். அதன் பிறகுதான் சயாவுக்கு உயிரே வந்தது. அவளுக்கு உயிர் இல்லைதான். நிம்மதி வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.


தனது கையிலிருக்கும் வாழ்க்கை ஏட்டில் எப்படி விசயங்கள் மாறியது என்ற குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரையும் காணவில்லை. 


அதே வேளையில் வினோதனை கவனித்துக் கொண்டிருந்த நர்ஸ் ஒருவர் அவசரமாக மருத்துவரிடம் ஓடினாள்.


"அந்த பையனுக்கு என்னவோ ஆயிடுச்சி டாக்டர்.." என்றாள்.


"என்ன எப்படி?" என்று‌ ஓடி வந்த டாக்டரின் உடம்பில்‌ மீண்டும் புகுந்தாள்‌ சயா.


உடம்பு வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது வினோதனுக்கு.


சயாவால் தாங்க முடியவில்லை. அவனது உடலுக்கு மாறினாள். அவனின் உடம்பு கொஞ்சமாக அடங்கியது. டாக்டர் சிகிச்சையை வழங்கினார்.


"என்னை மன்னிச்சிடு வினீ.. உன்னோட ஏஞ்சல் நான்‌. அப்படியிருந்தும் உன்னை சரியான முறையில் ரூல் பண்ண முடியாம போயிட்டேன்.. ஆனா என்ன செஞ்சாவது உன்னை காப்பாத்தாம விட மாட்டேன்.." என்றாள்.


அதன் பிறகு வினோதனுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. சராசரி மனிதரை போல குணமாக ஆரம்பித்தான்.


***


வினிதா பயத்தோடு பின்னால் நகர்ந்தாள். உள்ளே வந்தார் அந்த காவல் துறை அதிகாரி.


"அப்புறம் மேடம்.. கஸ்டமரை எதிர்பார்த்து காத்திருந்திங்களோ.?" எனக் கேட்டார்‌ அவர் நக்கலாக.


"சார்.. ப்ளீஸ் சார்.. என்னை விட்டுடுங்க சார்.." கெஞ்சியவளை பொய் பரிவோடுப் பார்த்தவர்‌ "இன்னைக்கு எவ்வளவு சம்பாதிச்சி வச்சிருக்க.?" எனக் கேட்டார்.


"சார்.. பத்து பைசா இல்ல சார்.." என்றவள் இடுப்பை இழுத்து போர்த்திக் கொண்டாள். 


'கஸ்டமர் வருவான்னு பார்த்தா இந்த கபோதி வந்து நிக்குது. ஆளையும் பணத்தையும் அப்படியே விட்டுட்டு போயிட்டான்னா நிம்மதியா இருக்குமே!' என்று கவலைப்பட்டாள்.


உள்ளே இருந்த கட்டிலில் வந்து அமர்ந்தார் காவலர்.


"நாத்தம் அடிக்குது வினிதா.." மூக்கை கசக்கி‌விட்டபடி சொன்னர்.


அந்த இடம் அப்படிதான் நாசம் வீசிக் கொண்டிருந்தது. அவள் வெளியே சென்று வரும் வேளையிலெல்லாம் அதை உணர்ந்துள்ளாள். பல ஆண்களின் வியர்வை படிந்த படுக்கை அது. படுக்கை‌ விரிப்பை எத்தனை முறை துவைத்தும் வாசம் மட்டும் போகவேயில்லை. 


இந்த அறையின் வாசத்தை மாற்ற மட்டும் ரூம் ஸ்பிரேவுக்கு மாதம் பல ரூபாயை செலவழித்துக் கொண்டிருந்தாள் வினிதா.


"கஸ்டமர் வர நேரம் சார். உங்களை பார்த்தா பயந்து ஓடிடுவான். நீங்க போங்க. நான்தான் மாசா மாசம் கரெக்டா பணத்தை செட்டில் பண்றேனே.." என்றாள் கவலையாக.


காவலர் நகைத்தார்.


"இன்னைக்கு பில்லு கொஞ்சம் கை கடிச்சிடுச்சி. ஒன்னாம் தேதி வரை காத்திருக்க முடியாது வினிதா. அதனாலதான் வந்துட்டேன். நீ பணத்தை கொடு.." என்றவர் படுக்கையில் மல்லாக்க சாய்ந்தார். 


வினிதா நகத்தை கடித்தாள். இருப்பில் ஐயாயிரம் சொச்சம்தான் இருந்தது. அதை வைத்துதான் தம்பியின் மருத்துவ செலவுக்கு இந்த வாரத்தை ஓட்டலாம் என்று நினைத்திருந்தாள். இன்று வருபவனிடம் எவ்வளவு கறக்க இயலும் என்று தெரியவில்லை. அதிகப்பட்சம் ஐயாயிரம் கிடைத்தாலே பெரிய விசயம். மூளையை கசக்கியபடியே மறு பக்கம் திரும்பினாள். ரவிக்கையினுள் இருந்து இரண்டாயிரம் ரூபாயை மட்டும் எடுத்தாள்.


"இதுதான் சார் இருக்கு.." என்று இரண்டாயிரத்தையும் நீட்டினாள்.


வாங்கி எண்ணியவர் "இது பத்தாதுதான்.. நான் போய் எதுக்கும் ரோஜாக்கிட்ட பார்த்துட்டு வரேன்.." என்று வெளியே நடந்தார்.


தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டவள் அவசரமாக ஓடிச் சென்று லிப்ஸ்டிக்கை உதட்டுக்கு பூசினாள்.


சிவந்திருந்த உதடுகளை கண்ணாடியில் ஒழுங்கு காட்டினாள். கட்டிலின் கீழே படுத்திருந்தான் சயா. கால்களை மேலே தூக்கி ஆட்டியபடி படுத்திருந்தவன் வினிதாவின் உதடுகளை கண்டு உதடு பிதுக்கினான். 


வினிதா பெருமூச்சோடு காத்திருந்தாள். வருபவனுக்கு ஒத்துழைக்க வேண்டும். நடித்து நடித்து சலித்த உடம்பு. இன்றும் நடிக்க தயங்கியது. செயற்கையாக உணர்வுகளை வரவைப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் சமாளித்தாக வேண்டுமே!


கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஆர்வமாக சென்று கதவை திறந்தாள். அழகான இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.


"வாங்க.." வழி விட்டாள்.


தயங்கியபடி உள்ளே வந்தான். அவனின் முகத்தைப் பார்த்தாலே வேறு ஏதோ ஒன்று போல தோன்றியது. இன்றைக்கு தனக்கு விடுமுறைதான் என்பது தெளிவாக புரிந்துப் போனது.


சட்டையை கழட்ட ஆரம்பித்தான். இவளும் புடவை முந்தானையை கழட்டினாள். முந்தானை கீழே விழுந்ததும் சட்டென்று தலை குனிந்துக் கொண்டான்.


தேறாத கேஸ் என்று எண்ணியவள் கடுப்போடு மொத்த உடையையும் கழற்றி எறிந்துவிட்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள். கடைசி பட்டனில் கொண்டு வந்து கைகளை நிறுத்தி இருந்தவன் பட்டனை திருகிக் கொண்டிருந்தான்.


கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை. அவனை சாய்த்தாள். அவனின் சட்டையின் கடைசி பட்டனை கழட்டினாள். கால்சட்டை பட்டனில் கை வைத்தாள்.


அவளின் கையை தடுத்தான். குழப்பமும் தயக்கமுமாக ஏதோவொரு சிந்தனையில் இருந்தான்.


"என்ன ப்ரோ?" என்றவளை ஆச்சரியத்தோடு பார்த்தான்.


"ப்ரோவா?" என்றான்.


"இப்ப மேட்டர் அதுவா? உங்களுக்கு நான் தேவைன்னுதானே வந்திங்க. அப்புறம் என்ன?" எனக் கேட்டாள்.


"எனக்கும் என் லவ்வருக்கும் சண்டை.." என்று சோகமாக சொன்னவனை எரிச்சலாக பார்த்தவள் "அவளை பழி வாங்க நீங்க இங்கே வந்திங்களாக்கும்?" எனக் கேட்டாள்.


ஆமென தலையசைத்தவனிடம் "இதே மாதிரி அந்த பொண்ணும் பழி‌ வாங்கணும்ன்னு வேற எவன்கிட்டயாவது போயிருந்தா நல்லா இருக்குமா?" எனக் கேட்டான்.


திகைத்தான் அவன்.


"சண்டை நாளைக்கு சமாதானம் ஆகும். ஆனா தப்பு எப்பவும் சரியாகாது. உங்க லைப்பை நீங்களே கெடுத்துக்காதிங்க.." என்றவள் எழுந்தாள். தரையில் கிடந்த ஆடைகளை எடுத்து அணிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.


அவனின் கண்ணை பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். மறந்தும் கூட நிமிரவில்லை அவன்.


"கிளம்புங்க ப்ரோ. என் ஒருநாளை வேஸ்ட் பண்ணிட்டிங்க நீங்க.." என்றவள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்றை கையில் எடுத்தாள். ஜன்னலை திறந்து வைத்தபடி படிக்க ஆரம்பித்தாள். வந்திருந்தவன் தயங்கி எழுந்து வெளியே நடந்தான்.


புத்தகத்தில் மூழ்கி இருந்தவள் அரை மணி நேரத்திற்கு பிறகே ரவிக்கையில் இருந்த பணத்தை நினைத்தாள். அவசரமாக தரையை பார்த்தாள். பணம் இல்லை. வந்தவன் எடுத்து சென்று விட்டானோ என்ற பயத்தோடு புத்தகத்தை வைக்க ஓடினாள். புத்தக மேஜையின் பக்கத்தில் பணம் இருந்தது. நிம்மதியோடு கையில் எடுத்தாள். எண்ணினாள். இரண்டாயிரம் கூடுதலாக இருந்தது. இன்றைய நாளில் பத்து பைசா கூட லாபம் இல்லை என்று அறிந்து கவலை கொண்டாள்.


"சயா.." என்றபடி சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். கீழே இருந்து காற்றாய் வளைந்து மேலே வந்து கட்டிலில் விழுந்தான் சயா.


"உன்னை மாதிரி ஒரு பேயை ரூம்ல வச்சிட்டு இருக்கற ராசிதான் ஒரு பத்து பைசா கூட சம்பாதிக்க முடியல.." என்று திட்டினாள்.


சிரித்தபடியே அவளுடைய லிப்ஸ்டிக்கை அழித்தான்.


"நான் உன்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணலையே.." என்று கையை விரித்தான்.


"நீ எதுவும் பண்ணவே தேவையில்ல. நீ இந்த ரூம்க்குள்ள இருக்கங்கற விசயமா எனக்கு போதும். ஒரு எழவு மூடும் வர மாட்டேங்குது.." 


சிரித்தபடியே அவளின் மீது சாய்ந்தான் சயா. "நான் வெறும் பேய். என்னை பார்த்து உனக்கு என்ன? ஒருவேளை லவ் பண்றியோ?"


"கர்மம்.. கர்மம்.. உன்னை போல ஒரு அவலட்சண பேயை யாராவது லவ் பண்ணுவாங்களா?" எனக் கேட்டவள் எழுந்து சென்று பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்தாள். அதில் இரண்டை எடுத்து அவனிடம் வீசினாள்.


"தின்னு தொலை.." என்றவள் செஸ் போர்டை எடுத்து வந்து கட்டிலில் வைத்தாள்.


"இன்னைக்கு பொழுது நாமம்தான். இதையாவது விளையாடலாம்.." என்றபடி காயின்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.


"உன் தம்பி எப்ப குணமாவான்?" காயினை நகர்த்தியபடி கேட்டான்.


"யாருக்கு தெரியும்.? அவன் குணமான பிறகு இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்.." 


"என்னையும் மறக்காம கூட்டி போவியா? எப்படின்னு தெரியல. ஆனா உன்னோடு என் லைஃப் லாக் ஆகிடுச்சி. விடுவிக்க தெரியல. அதை கண்டுபிடிக்க முடியும்ன்னும் தோணல. நீதான் என்னை வெளியே அழைச்சி போகணும். ஆண்களை நிர்வாணமா பார்த்து பார்த்து சலிக்குது இங்கே.." என்றான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..


லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க.. 



Post a Comment

0 Comments