Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.6

 சாகித்யா pov


எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டே இருந்தது. நான் இப்போதெல்லாம் அதிகமாக மகிழ்ந்திருந்தேன். அம்மா என்னை வழக்கம் போலதான் அடித்தார். ஆனாலும் வலி அவ்வளவாக என்னை தீண்டவில்லை. உடம்பு மரத்துப் போகவில்லை. ஆனால் இது வேறு. அம்மாவிடம் வாங்கிய அடியின் வலிகள் சட்டென்று மறைந்துப் போனது. எப்படி நான் மாறினேன் என்று எனக்கே புரியவில்லை.


"சாகித்யா.. இனி நீதான் கிளாஸ் லீடர்.." என்றார் வகுப்பாசிரியை.


வகுப்பு மொத்தமும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. நானும் கூட அதிர்ச்சியில்தான் இருந்தேன். நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் நான்தான் நான்கு வகுப்பிலும் சேர்த்து முதல் மதிப்பெண். அம்மாவே என்னை நம்பவில்லை.‌ பிட் அடித்தாயா என்று கேட்டார்.


ஆனால் நான் எந்த திருட்டுதனமும் செய்யவில்லை. சூர்யா என் மீது கொலைவெறியில் இருந்தான். அவனின் இடத்தை நான் பிடித்து விட்டேன் என்று எரிச்சல் அவனுக்கு.


"இந்த அட்டனென்ஸ் நோட்டை கொண்டுப் போய் பிரின்சிபால் ரூம்ல வச்சிட்டு வா.." என்று நோட்டை தந்தார் ஆசிரியர்.


துள்ளிக் கொண்டு கிளம்பினேன் நான். ஆசிரியரை கண்டாலே பயந்து நடுங்கியவள் நான். ஆனால் இப்போது பிரின்சிபாலையே பிரெண்டாக பிடித்து விட்டேன். இந்த விசயத்திலும் பலருக்கும் என் மீது பொறாமைதான்.


பிரின்சிபால் அறை வாயிலில் நின்றபடி கதவை தட்ட இருந்தேன். கணக்கு ஆசிரியை சகுந்தலா மிஸ்ஸோடு ஏதோ ஒரு விவாதத்தில் இருந்தார் அவர்.


"என் பர்சனல் லைப் பத்தி நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை கிடையாது மேம். இங்கே கேம்பஸ்குள்ள என்ன விசயமோ அதை மட்டும் பேசுங்க.." என்றவர் வாசல் புறம் திரும்பினார்.


"சாகித்யா.. உள்ளே வாம்மா.." என்றார்.


நோட்டை கொண்டுச் சென்று மேஜையின் மீது வைத்தான். மென்மையாக புன்னகைத்தார். கடவுளின் காட்சி போலதான் இப்போதும் கூட தோன்றியது. மனதின் நிறைவு உணர முடிந்தது. அதே துள்ளலோடு வகுப்புக்கு திரும்பி‌ விட்டேன்.


கலையரசன் pov


சாகித்யா தினமும்‌ டியூசன் வந்துக் கொண்டிருந்தாள். படிப்பில் தேர்ந்தும்‌ விட்டாள். நான் சொல்லி‌ தந்ததால் இந்த மாற்றம் இல்லை. என் அருகாமை அவளுக்கு தந்த மாற்றம் அப்படி. என் நிழலும் என் வாசமும் என் ஆன்மாவின் வெம்மையும் அவளை குணப்படுத்திக் கொண்டிருந்தது.


அதே வேளையில் நான் இன்னொரு விசயத்தையும் உணர்ந்தேன். அவளுக்கு ஏதோவொரு மிகப் பெரிய ஆபத்து வர இருக்கிறது. அதை தெளிவாக உணர முடிந்தது. ஆனால் என்ன ஆபத்து என்று புரியவில்லை. அவளின் ஆபத்தை தடுக்க நினைத்தேன். 


இதற்கு இடையில் இந்த சகுந்தலா மிஸ். அவரின் அக்காவிற்கு என்னை திருமண முடிச்சி போட ஆசைப்படுகிறார். தலை நரைத்த வயதில் எதற்கு இந்த திருமணம்? சாகித்யாவை பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளேன். எனக்கு திருமணம் வாழ்வு கூட தேவையில்லை. இவளின் அருகில் இருந்தால் போதும்.


ஆனால் இப்போதெல்லாம் என்னுள்ளும் ஏதோ மாற்றங்கள். நான் அவளை பார்க்கும் வேளையிலெல்லாம் எனது மூளை வேறு எதை எதையோ யோசிக்கிறது. சிரமப்பட்டு என் மூளையை சரிசெய்துக் கொண்டிருக்கிறேன்.


வினீயின் pov


அடச்சை.. என்ன வாழ்க்கைடா இது? ஒரு கிறுக்கு ஆன்மாவா இருந்தும் என் எதிரியோட வாழ்க்கையை கிறுக்கா மாத்த முடியல. நானும் லெப்ட்ல போறேன். ரைட்ல போறேன். ஆனா இந்த கலையரசனை கவுக்க முடியல.


பள்ளி நேரம் முடிந்து கிளம்பினான் அந்த கிழவன். நான் அவனின் நிழல் போல நடந்தேன்.


சகுந்தலா வந்தாள். நானே இவனை கவுக்க முடியலன்னு கடுப்புல இருக்கேன். இதுல இந்த சகுந்தலா வேற 'என் அக்காவை கட்டிக்கிறிங்களா சார்'ன்னு இந்த ஆளுக்கு நூல் விட்டுட்டு இருக்கா. அடப்பாவி.. இந்த அற்புத உலகத்துல உனக்கு மனுசனா கிடைக்கல? இதை நான் கேட்டாலும் அவ காதுக்கு கேட்காது.


"சார் நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சி பாருங்க.." 


"மேடம். நான் விடோவர். என்னால என் மனைவியை மறக்க முடியல. நீங்க வேற இடம் பாருங்க.. என் அண்ணன் பையன் மூலமா நான் தாத்தா ஆகிட்டேன். இனி எனக்கு எதுக்கு மேரேஜ்.?" எனக் கேட்டான் அந்த கிழவன்.


பாத்திங்களா மகாஜனங்களே! இந்த பேரன் எடுத்த கிழவனுக்கு கூட ஒரு பொண்ணு. ஆனா எனக்கு.. இந்த வீணா போன சயா என் காதலிக்கிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டா. என் லைப்பையே நாசம் பண்ணிட்டா.‌ இவளை எவ்வளவு கொடுமை செஞ்சாலும் எனக்கு ஆத்திரம் தீராது.


"சார் என்ன இருந்தாலும் நீங்க வசதியானவர்.." என்று குழைந்தாள் அவள்.


அந்த கிழவனின் அருகே போய் இடுப்பில் கிள்ளினேன். சொரணையே இல்லாதது போல நின்றுக் கொண்டிருந்தான். அந்த பெண்ணின் இடுப்பில் கிள்ளினேன்.


சப்பென்று ஒரு அறையை கலையரசனுக்கு தந்தாள்.


"இவ்வளவு சீப்பா நடந்துப்பிங்களா சார்? என் அக்காவை மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் இல்ல. ஆனா என் இடுப்பை கிள்ளுறிங்க.." என்றாள் ஆத்திரத்தோடு.


கலையரசன் குழப்பத்தோடு தலையை‌ கீறிக் கொண்டார்.


போனால் போகிறதென்று அவரின் பின்னந்தலையை நானும் சொறிந்து விட்டேன். பூச்சி ஊறுவதாக நினைத்திருப்பான் போல. பின்னந்தலையை தேய்த்து‌ விட்டுக் கொண்டான்.


"உங்க இடுப்பை நான் கிள்ளினேனா?" எனக் கேட்டான் குழப்பத்தோடு.


"பின்ன என்ன பூதமா வந்தது?" எனக் கேட்ட அந்த பெண் அங்கிருந்து போய் விட்டாள்.


கலையரசன் குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை என்பது அவனின் கௌரவத்திற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் போல.


"சார்.." பள்ளி பையோடு சாகித்யா ஓடி வந்தாள்.


"போலாம்மா.. உட்காரு.." என்று அவளுக்கு கார் கதவை திறந்து விட்டான்.


அவன் திறந்து விட்ட கதவில் நான் ஏறினேன். என் ஆன்மாவின் மடியில் அமர்ந்தாள் சாகித்யா.


அந்த ஆள் காரை ஓட்டினான்.


"சாகித்யா.. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நட்பை விட காதல்தான் எப்பவும் உயர்ந்தது.."


அட பொறுக்கி.. நான் உனக்கு கண்ட பீலிங்கையும் தந்தா சன்னியாசி மூடுக்கு போறான். ஆனா சின்ன பொண்ணுக்கிட்ட காதல் கத்தரிக்காய்ன்னு பாடம் எடுக்கறான்.


சாகித்யா அவனை சோகமாக பார்த்தாள்.


"நட்பு எப்போதும் உயர்ந்தது சார். காதல் தரும் இன்பத்தை விட நட்பு தரும் துன்பமும் கூட இனிமையானது.."


அவள் சொன்னது கேட்டு எனக்கு ஏதோ போல ஆனது. நட்பிற்கு இவ்வளவு மதிப்பா இவளிடம் என்று ஆச்சரியம் கொண்டேன். இவளை போய் துன்புறுக்கிறோமே என்று கூட தோன்றியது.


வீடு வந்ததும் அவளுக்கு மீண்டும் கதவை திறந்து விட்டான். நான்தான் முதலில் நடந்தேன். 


அறைக்குள் சென்றதும் எனது வழக்கமான பீரோவின் மீது ஏறி அமர்ந்துக் கொண்டேன்.


"கலை.." என்று அழைத்தபடி வந்தாள் கலையரசனின் அண்ணி.


சாகித்யாவுக்கும் அவனுக்கும் காபி தந்து போனாள்.


"என்னால எப்படி சார் இவ்வளவு நல்லா படிக்க முடிஞ்சது?" சாகித்யா சந்தேகத்தோடு கேட்டாள்.


எனக்கும் அதே சந்தேகம்தான். இவளால எப்படி இவ்வளவு நல்லா படிக்க முடிஞ்சது? நீங்க பொம்மையை பார்த்து இருங்கிங்களா? அந்த பொம்மையோட தலையை கட் பண்ணி எடுத்தா என்ன இருக்கும்? ஒன்னுமே இருக்காது. அது வெறும் காலி டப்பாவா இருக்கும். அது போலதான் இவ மூளையும். அவ மூளையை எடுத்து பவர் சோப் போட்டு துவைச்சி எடுத்தாலும் சரி. இரண்டாவது வாய்ப்பாடு கூட அந்த மூளையில் சரியா பதிஞ்சிருக்காது. அப்படிப்பட்டவ எப்படி இன்னைக்கு பத்தொன்பதாவது வாய்ப்பாட்டை கூட படபடன்னு சொல்றான்னு ஒரே கன்ப்யூஸன்ஸ் மக்களே.


"நீ எப்பவும் புத்திசாலிதான் சாகித்யா. நான் சும்மா ஹெல்ப் பண்றேன்.." என்ற அந்த கிழவன் அவளுக்கு முக்கோணவியல் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்தான்.


எனக்கு தூக்கமாக வந்தது. கணக்கு பாடத்தை சொல்லித்தர ஆரம்பித்தால் ஒரு ஆன்மாவுக்கு கூட தூக்கம் வரும். என்ன செய்ய? எல்லாம் கணக்கு செய்யும் மாயம்.


கணக்கெடுக்கிறேன் என்ற பெயரில் அவன் என்னை அரை மணி நேரம் கொலையாய் கொன்றான். அவன் அந்த கணக்கு புத்தகத்தை மூடி வைத்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக மூச்சு‌ வந்தது.


***


வினீயை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் பூவிளந்தேவி.


அவனுக்கான சர்ப்ரைஸ் ஏட்டை எடுத்தவள் அதில் அவனுக்கு கணக்கு பிடிக்காது என்று எழுதினாள்.


"மை டியர் லவ்வர் பாய்.. இந்த காதலியை‌ விட தோழி‌ முக்கியம்ன்னு நீ அவளை தேர்ந்தெடுத்த. அதுக்குதான் இந்த சின்ன உதவி.." என்றவளுக்கு மிக நன்றாக தெரியும் இந்த விசயம் சயாவிற்கு தெரிய வரும்போது அவள் இந்த கணக்கை வைத்து இவனை கர்ண கொடூரமாக பழி எடுப்பாள் என்று. 


வினீயின் பக்கத்தில் போனாள்.


"என் வாழ்க்கையும் என் ஜீவனும் தனிமையில் வாடி இருக்கிறது வினீ.. நீ எப்போது திருந்துவாயோ? உன் சில்லரைதனங்கள் எப்போது தீருமோ?" எனக் கேட்டபடி அவனின் ஆன்மாவை வருடினாள்.


"என்ன நமக்கு கூசுது.. ஆன்மாவுக்கு ஏது சரீரம்? அப்புறம் எப்படி இந்த கூச்சம்?" என்று குழம்பியபடியே நெளிந்தான் வினீ.


"உன் கண்ணுக்கு நான் தெரியாத மாதிரி என் கண்ணுக்கு நீயும் தென்படாமலேயே இருந்திருக்கலாம். ஒருதலை காதலாய் மனசுக்குள்ள வேகிறேன்.." என்று கலங்கினாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே








Post a Comment

0 Comments