Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.8

 சாகித்யாவின் pov


முன்பு என்னை திட்டிக் கொண்டே இருந்த சூர்யா இப்போதெல்லாம் என்னிடம் நட்போடு பேச ஆரம்பித்தான்.


"சாகித்யா இது உனக்காக.." என்று சாக்லேட்களை நீட்டினான். பாட புத்தகத்தில் வைத்துக் கொள்ள மயிலிறகு தந்தான். வீட்டிற்கு கிளம்புகையிலும், காலையில் முகம் பார்க்கையிலும் புன்னகைத்தான். க்ளாஸில் நான் என் தோழியோடு பேசினாலும் கூட எனது பெயரை போர்டில் எழுதாமல் விட்டான்.


அவனுடனான நட்பு எனக்கு பிடித்திருந்தது. அவனின் பேச்சும், புன்னகையும் பிடித்திருந்தது.


"சாகித்யா.. கடையில் இதை பார்த்தேன். உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்.." என்று ஒரு குட்டி பொம்மையை நீட்டினான். அந்த பொம்மையின் வயிற்றில் இதயம் இருந்தது.  அந்த இதயத்திற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று பயங்கரமாக யோசித்தேன்.


"தேங்க்ஸ்.." என்றேன்.


அன்று மாலையில் கலையரசன் சாரிடம் டியூசன் சென்றபோது என் பையிலிருந்து கீழே விழுந்தது அந்த பொம்மை.


கையில் எடுத்தவர் "என்ன இது.?" எனக் கேட்டார் அதை திருப்பி திருப்பி பார்த்து. அவரின் கண்களிலிருந்த ஆவலை கண்டபிறகு அந்த பொம்மையை என்னிடம் வைத்துக் கொள்ளும் ஆசை போய் விட்டது எனக்கு.


"கடையில் பார்த்தேன் சார். உங்களுக்கு பிடிக்கும்ன்னு வாங்கி வந்தேன்.." என்றேன்.  


"வாவ். ரியலி.? இட்ஸ் க்யூட்.." என்றவர் அந்த பொம்மையை கைக்குள் வைத்துப் பொத்திக் கொண்டார். அவர் என்னை சொன்னது போலவே இருந்தது. தோன்றிய நினைப்புக்காக என்னையே திட்டிக் கொண்டேன்.


கையடக்க பொம்மையை பத்திரப்படுத்திக் கொண்டார்.


பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.


"இப்பவெல்லாம் அதிகமா அந்த சூர்யா பையனோடு சேர்ந்து சுத்துற.." அவரின் குற்றச்சாட்டில் திகைத்துப் போனேன். 


"பி.. பிரெண்ட்தான் சார்.." சொல்லிய என் குரலில் பொய் இருந்தது. அவர் அறிய கூடாது என்று எண்ணினேன்.


"பிரெண்டா இருக்கறதுதான் நல்லது.." என்றவர் பாடத்தை சொல்லித் தர ஆரம்பித்தார்.


அடுத்து வந்த ஒரு வாரத்தில் சூர்யா என்னை அவனோடு சேர்ந்து ஊர் சுற்ற அழைத்தான். எனக்கும் பிடித்தது. இருவரும் சேர்ந்து குழந்தைகள் பூங்காவிற்கு சென்று ஊஞ்சல் ஆடினோம். எதிரெதிரே ஆடிய ஊஞ்சல். அவன் என்னை கடக்கும் ஒவ்வொரு முறையும் எனது கையை பிடிக்க முயன்றான். நானும் எனது கையை தந்தேன். கைகள் இரண்டும் உரசி கொள்ளுகையில் வெட்கம் வந்தது எனக்கு.


இருவரும் சேர்ந்து பானிபூரி உண்டோம். அன்று மாலையில் வீடு திரும்பினேன். என் நாவில் பானிபூரியின் ருசியோடு சேர்ந்து அவனது இதழ் ருசியும் கலந்திருந்தது. தந்துக் கொண்ட முத்தம் அநியாயத்திற்கு வெட்கத்தை தந்திருந்தது.


கலையரசன் pov


என்னவானது என்று தெரியவில்லை. ஆனால் இதயம் அதிகளவு வெறுமையை உணர்ந்தது. எனது ஆன்மா என்னை விலகியது போல, என் உயிர் என் உடலை விட்டு பிரிவதை போல உணர்ந்தேன். படுக்கையில் புரண்டுக் கொண்டே இருந்தேன்.


அனைத்தும் என்னிடம் இருந்தது. ஆனால் நிம்மதி இல்லை. வாழ்வில் முழுமையை உணர முடியவில்லை. சாகித்யா அருகில் இருக்கும்போது உணரும் அந்த உணர்வு மட்டுமே வாழ்நாள் முழுக்க வேண்டுமென்று ஆசைக் கொண்டேன். ஆனால் நடக்காத காரியம்.


அடுத்த நாள் பள்ளிக்கு செல்லுகையில் வழிபாதையை கவனித்தேன். சாகித்யாவும் சூர்யாவும் கைகளை பிணைத்தவாறு நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பிணைந்த கரம் எனக்கு தாங்க இயலாத வலியை தந்தது.


ஆனால் அதை விடவும் அதிக வலியை தந்தாள் அவள். அன்று மாலையில் சாகித்யா டியூசன் வரவில்லை.


இரண்டு நாட்களுக்கு பிறகு வந்தாள். 


"ஏன் இரண்டு நாளா வரல?" 


"தலைவலி சார்.." பொய்யை சொன்னாள். என்னால் என்ன செய்ய முடியும்? அவள் இப்போது எனக்கு சொந்தமில்லாதவள். என் ஆன்மாவின் உரிமைப்பட்ட ஜோடி அவள் என்று அறிந்திருந்தும் அவளின் கை தீண்டும் யோகம் கூட கிடைக்காமல் தள்ளி நின்றிருந்தேன். பூக்கள் அடர்த்தியாக பூத்திருந்த பூவனத்தின் நடுவில் ஓடும் சிறு குழந்தையாய் இருந்தும்‌‌ கூட கையெட்டா மரத்தின் மலர்களை பறிக்க இயலாமல்‌ தோற்று வாடினேன். 


அடுத்து வந்த நாட்களில் அவளிடம் அநியாய மாற்றம். அவளும் சூர்யாவும் என் கண் முன்னே நிறைய சுற்றினார்கள். என்ன சொல்லி தடுப்பேன் நான்?


பள்ளி முடிய இரண்டு மாதங்கள் இருந்தது. டியூசனுக்கு வந்திருந்தாள் அவள். வெளியே மழை பொழிந்துக் கொண்டிருந்தது. 


"சார்.. இதோட மதிப்பு நைன் பாயின்ட் சிக்ஸ்.." என்று நோட்டை கொண்டு வந்து காட்டினாள். அதே நேரத்தில் தூரத்தில் இடி இடித்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 


"அம்மா.." கத்தியபடி அவள் என் நெஞ்சில் சாய்ந்தாள். பின்னங்கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த அவளின் கரங்கள் என்னை கொன்று விடுமோ என்று கூட எண்ணினேன். அவளின் கையால் மரணம் என்றால் எனக்கு அதுவும் கூட இன்பமே.


"பயமா இருக்கு சார்.." என்றவளின் முதுகை தட்டி தந்தேன்.


"பயப்படாதம்மா.."


"ரொம்ப பயமா இருக்கு சார்.." என் மேனியில் குகை தேடினாள். அவளை விலக்கி தள்ள முயன்றேன். இறுக்கியிருந்த கரங்கள் மேலும் இறுகியது.


"சாகித்யா.." 


"சார் என்னை விலக்கி தள்ளாதிங்க.." 


ஆனால் அவள் என் ஆன்ம ஜோடி. இவ்வளவு அருகாமை அவளுக்கு நல்லது அல்ல.


"நீ என்னை விடு. நான் லைட்டை போடுறேன்.." என்றேன்.


வினீ pov


என்ன கருமம் பிடிச்ச மனுசன்டா இவன்? அவதான் ஏறி விழறா இல்ல? நான் எழுதி வச்ச தேதி முடிஞ்சி பல மாசம் ஆச்சி. ஆனா இவன் அவளை கட்டி கூட பிடிக்கல. இந்த லட்சணத்துல எங்கே இவன் அவளை ரேப் பண்றது? 


இப்ப கூட அவளோட மொத்த உடம்பும் அவனை டச் பண்ணிட்டு இருக்கு. ஒருவேளை இவன் சன்னியாசியோ? ச்சே.. பேசாம நான் இவனை தேர்ந்தெடுத்ததுக்கு பதிலா சூர்யாவை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால் அவனால இவளுக்கு மரணத்தை தருவது சாத்தியம்ன்னு தோணல. சின்ன பையன் அவன். கடுப்பாகி போச்சி. வெறுப்பாகி போச்சி. ஒரு ஆன்மாவா இருந்தும் என் வாழ்க்கையை அழிச்சவளை என்னால பழி வாங்க முடியல.


சாகித்யா பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தாள். அவனும் குழந்தைக்கு பாடம் சொல்வது போல அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு என் ஆன்மாவின் மொத்த அங்கமும் பற்றி எரிவது போலவே இருந்தது.


சற்று நேரத்தில் மின்சாரம் வந்து சேர்ந்தது. அவளை நாற்காலியில் அமர வைத்து குடிக்க தண்ணீர் தந்தான் அந்த கிழவன். தோற்றுப் போன சோகத்தில் பீரோவின் மீதே படுத்துக் கொண்டேன் நான்.


சாகித்யாவின் தந்தை வந்தார் அவளை அழைத்துக் கொண்டு போனார். இந்தக் கிழவனோ உணவை உண்டு விட்டு படுத்துறங்க ஆரம்பித்தான். எனக்குதான் என் வாழ்க்கையே வெறுத்துப் போனது போல் ஆகிவிட்டது. இறந்துப் போன ஒரு மனிதனுக்கு இந்த அளவிற்கு வெறுப்பு தேவையில்லை. ஒரு சுதந்திர ஆன்மாவாக இருந்துக்கொண்டு, மேலும் ஒரு மனிதப் பெண்ணின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு ஆன்மாவிற்கு இந்த வெறுப்பு தேவையில்லை. ஆனால் நானும் வெறுப்பின் காரணமாக அழுது கொண்டிருந்தேன். சோகத்தால் துடித்துக் கொண்டிருந்தேன்.


நான் நினைத்தது போல இந்தக் கிழவன் அவளை கெடுக்கவில்லை. அவளின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்றுக் கொண்டிருந்தது.


சாகித்யா பள்ளிப்படிப்பை முடித்தாள். விரைவிலேயே கல்லூரிப் படிப்பையும் முடித்தாள்.


சூர்யாவும் அவளும் காதலித்தார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் கூட நடந்தது. எங்காவது சென்று தூக்கிட்டு கொள்ளலாமா என்று தோன்றியது எனக்கு. ஆனால் ஒரு ஆன்மாவாக இருக்கும் என்னால் தூக்கிட்டு கொள்ள முடியாது என்ற விஷயம் புரிந்து மேலும் வெம்பி வெம்பி அழுதேன். என் அழுகையை கண்டு உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும். சிரிப்பு கூட பொங்கி வரும். பழி வாங்க இயலாத ஒரு கட்டத்தில் நின்று கொண்டு கதறி அழும் என்னைப் போன்றவர்களுக்கு எனது சோகம் புரியும்.


இன்னும் ஒரு வாரத்தில் சாகித்யாவுக்கு திருமணம். திருமணமான மறுநாள் சூர்யாவுக்கு கள்ளக்காதல் இருப்பதை தெரிந்து சாகித்யா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அவளது ஏட்டில் மாற்றி எழுதினேன்.


தனது திருமண நாளுக்கு முந்தைய மாலையில் கலையரசனை தேடி சென்றாள் சாகித்யா.


"சார் எனக்கும் சூர்யாவுக்கும் நாளைக்கு கல்யாணம். நீங்க கண்டிப்பா வரணும்.." என்று அழைத்தாள் அந்த கடைசி நேரத்தில்.


சரி என்று தலையசைத்தான். கலையரசனின் முகத்தில் ஒரு டன் அளவுக்கு சோகம் குடியிருந்தது. என்னால் அவனின் சோகத்தை இனம் காண முடியவில்லை. 


"இது உனக்காக." என்று சொல்லி கை கடிகாரம் ஒன்றை சாகித்யாவிடம் நீட்டினான்.


ஆசையோடு வாங்கிக் கொண்டாள் சாகித்யா.


"தேங்க்ஸ் சார்.." என்றாள் மனநிறைவோடு. 


உடனே அந்த கைக்கடிகாரத்தை கையோடு கட்டிக்கொண்டாள்.


"நாளைக்கு காலையில் வந்துடுங்க சார்.." என்று சொல்லிவிட்டு துள்ளலோடு அங்கிருந்து கிளம்பினாள். நேராக திருமண மண்டபத்திற்கு வந்தாள். மணமகள் அறைக்குச் சென்றுப் படுத்துறங்க ஆரம்பித்தாள்.


நான் அவளின் கட்டிலின் கீழ் ஒண்டிக் கொண்டேன். மனதுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம். ஆனால் அறியமுடியவில்லை. அமைதியாக இருந்தேன்.


மறுநாள் காலையில் பதட்டமோ பதட்டம். சாகித்யா இறப்பின் பிடியில் இருந்தாள். உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது.


எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவளின் வாழ்க்கை ஏட்டை எடுத்துப் பார்த்தேன். அவளின் கை கடிகாரத்தில் இருந்த விஷம் பரவி அவள் இறந்து போவாள் என்று எழுதி இருந்தது. குழப்பத்தில் தலையை சொரிந்து கொண்டேன்.


கலையரசன் pov


நான் எனது மணிக்கட்டிலிருந்த நரம்புகளை துண்டித்துக் கொண்டு இருந்தேன். ஆமாம் நான் சாக முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனது சாகித்யாவுக்கு வழி இல்லாத ஒரு மரணத்தை பரிசளித்து விட்டேன். 


அவளுக்கு நான் தந்த கைக்கடிகாரம் நானே உருவாக்கியது. கைக்கடிகாரத்தின் கீழே உள்ள சிறு ஊசி அவளின் ரத்தத்திற்குள் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பும். அதை அவள் அறியவே மாட்டாள். ஏனெனில் எனது கண்டுபிடிப்பு அந்த அளவிற்கு துல்லியமானது. 


அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து வாழ்வது எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவள் இப்படி வாழ ஆரம்பித்தால் இந்த மொத்த வாழ்க்கையும் இப்படியே முடிந்துவிடும்.


நான் விரைவில் இறந்து விடுவேன். எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. எனது மரணத்தை என்னால் தள்ளிப்போட முடியாது. ஆனால் நான் மீண்டும் பிறக்கும் பொழுது சாகித்யாவுக்கு மகனாகவோ மகளாகவோ பிறக்க விரும்பவில்லை. அதனால்தான் எங்களுக்கான வாழ்க்கையை நானே முடிவு எடுத்தேன்.


இருவரும் இறப்போம். இருவரும் மீண்டும் பிறப்போம். யாராலும் எங்களின் அடுத்த ஜென்ம வாழ்க்கையை மாற்ற முடியாது. இப்படிதான் நினைத்தேன். ஆனால் என்ன நடக்க இருக்கிறதோ எனக்கும் தெரியாது.


கண்கள் சொக்கி மயங்க ஆரம்பித்தேன். எனது அறைக்குள் ஓடி வந்தான் அண்ணன்.


"கலை உன்னோட ஸ்டூடண்ட் சாகித்யா இறந்துட்டாளாம்.." என்றான் வருத்தத்தோடு. அவன் என் கையை பார்க்கவில்லை இன்னும்.


"பாவம் அந்த பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம். ஆனா இப்படி ஆகிப் போச்சி. விஷப்பூச்சி எதுவோ அவளை கடிச்சி இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க. வாழவேண்டிய பொண்ணு இப்படி ஆயிடுச்சே.." என்று சோக கீதம் வாசித்தவன் மயங்கி தரையில் பொத்தென்று விழுந்த என்னை கண்டு பாய்ந்தோடி வந்தான்.


இருள் என் பார்வையை மறைத்தது. அத்தோடு இந்த ஜென்மத்தில் இருந்து எனக்கு மாபெரும் விடுதலையும் கிடைத்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. கலையரசன் சாகித்யாவின் இந்த ஜென்ம வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்று சொல்லிச் செல்லுங்கள் நட்புக்களே



Post a Comment

0 Comments