Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.0

 விதி வித்தியாசமாக இருந்தது. கொஞ்சம் கிறுக்குதனமாக இருந்தது. ஆமாம் வினீயும் சயாவும் விளையாடிய விளையாட்டில் அப்படிதான் அனைத்துமே மாறி இருந்தது.


கருவுற்றிருந்த சரயுவின் வயிற்றில் பிறக்க போகும் மகன்தான் வினீ. இதை அவன் எதிர் பார்க்கவேயில்லை.


அவன் பிறக்க போகிறான் என்றால் அவள் இறக்க போகிறாள் என்று அர்த்தம். வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை பார்த்தவளுக்கு ஆயுள் கூட சேர்ந்து இல்லையே என்று வருந்தினான். 


சரயுவை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டான் கங்கா. 


"உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா.?" விளையாட்டு போல கேட்டாள் சரயு.


"ஆரம்பத்துல ரொம்ப கொடுமை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுமா.. தங்கத்தை உரசி பார்த்துட்டேன்.." என்று மன்னிப்பு கேட்டான் கங்கா.


அவர்களின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வினீக்கு என்னவோ உறுத்தியது. அந்த கங்காவை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.


"இவனை எங்கேயோ பார்த்திருக்கேன்.." என்று‌ புலம்பிக் கொண்டிருந்தான்.


வயிற்றுக்குள் இருக்கும் ஜீவனை அடிக்கடி பார்த்தான். அந்த குழந்தை பூமியின் காற்றை நேரடியாக சுவாசிக்கும் வேளையில் அதன் ஆன்மா அந்த குழந்தையோடு இணையும். குழந்தையாக பிறக்கும் வரை தனக்கு சுதந்திரம் உண்டு என்று புரிந்துக் கொண்ட வினீ சரயுவின் வாழ்வில் நிம்மதியை மட்டும் அள்ளி அள்ளி கொடுத்தான். 


அவளின் மரணம் குழந்தை பிறக்கும் வேளையில் என்று தெளிவாக எழுதியிருந்தது. அவனுக்கு பிறக்க விருப்பமே இல்லை. ஆனால் விதியை மாற்றும் வலிமையை இழந்திருந்தான். இப்போது செய்துக் கொண்டிருக்கும் தவறுக்கு வாழ்க்கை இன்னும் மோசமாக மாற போகிறதோ என்று கவலையாக இருந்தது இப்போதே.


பத்து மாதங்கள் முடிந்தது. சரயுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் கங்கா. உடன் சென்ற வினீ கதறிக் கொண்டிருந்த சரயுவுக்கு ஆறுதல் சொல்ல முயன்றுக் கொண்டிருந்தான்.


பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார்கள். கங்கா வெளியில் நின்றான். வினீ அறையின் உள்ளே சுவரோரம் சாய்ந்து நின்றபடி கண்ணீர் விடும் தோழியை, தனக்கு தாயாக போகும் ஆன்ம நட்பை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.


நேரம் கடந்தது. குழந்தை பிறக்கும் முன்பே இறந்து விட்டாள் சரயு. அவள் நண்பனின் வாழ்க்கை ஏட்டை எடுத்து வர நேரமாகும் என்று வினீக்கு தெரியும்.


"இந்த பொண்ணு செத்துட்டா. பாவம் குழந்தை.." என்றாள் ஒரு நர்ஸ்.


"மூனாவது பெட்ல இருக்கும் பொண்ணு குழந்தை செத்துப் போய் அழுதுட்டு இருக்கா. அவளுக்கு இந்த குழந்தையை தந்தா‌ நமக்கு நிறைய பணம் கிடைக்கும்" என்றாள் இன்னொரு நர்ஸ்.


அந்த மூனாவது பெட்டிலிருந்த பெண்ணை போய் பார்த்தான் வினீ. வாழ்வின் முதல் நொடி ஆரம்பிக்க இருந்தது. அந்த வாழ்வில் நடக்க இருக்கும் அத்தனையும் முன்படம் போல அவன் மனதுக்குள் ஓடியது. 


அவள் வினீத்திற்கு வளர்ப்பு தாயாக போகிறவள். ஆனால் அவள் வளர்ப்பு தாயென்று வெளியில் இருக்கும் யாருக்கும் தெரிய போவதில்லை. அனைத்தும் அற்புதமான வாழ்க்கை. பல காலங்களுக்கு முன்பே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி அப்படியே ஓடியது.


ஆனால் நொடி நேரத்தில் அதே விசயம் வேறாக ஓடியது. கங்காதரனால் கடத்தப்பட்டு திருடனாகப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரசியல்வாதியாகி கடைசியில் ஒரு பொது கூட்ட மேடையில் பந்து ஒன்று மூக்கில் மோதி அவன் செத்தும் போனான்.


அதிர்ச்சியில் ஆன்மாவாவே உறைந்து போனது அவனுக்கு.


அவன் முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்களை சுமந்தாலும் கூட சயாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று பாடாய் பட்டான். ஆனால் அவளே தன் சொந்த தாயாய் இருப்பாளென்றோ, தான் தன் தந்தையாலேயே கடத்தப்பட்டு திருடனாக்கப்படுவோம் என்றோ நினைக்கவே இல்லை. உண்மையிலேயே வலித்தது அவனுக்கு.


மருத்துவர் வந்து சேராத அந்த நேரத்தில் செவிலியர்கள் இருவரும் இறந்தவளின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்தனர். வினீயின் ஆன்மா தன் சொந்த புத்தி இழந்து மனித உடலில் சிறைப்பட்டது. அவனை மூன்றாவது பெட்டிலிருந்த தாயிடம் ஒப்படைத்தனர்.


சயா வந்தாள் சரயுவின் நினைவோடு அல்ல. சத்யாவின் நினைவோடு. (அவளோட லைஃப் எந்த பாயிண்ட்ல மேட்ச் ஆகுதுன்னு அப்புறம் பார்க்கலாம்)


சத்யாவின் வாழ்க்கை நினைவோடு வந்து வினீயின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைத்தாள்.


சரயு இறந்துப் போனதும் மனம் வெறுத்துப் போனான் கங்கா. கொஞ்ச காலமானாலும் அவளை உயிராய் நேசித்திருந்தான். பைத்தியம் போல காதலித்திருந்தான்.


குடிக்கு அடிமையானான். குடும்பம் வெறுத்து நடுதெருவுக்கு வந்தான். சூதாடினான். திருடினான். பொய் சொன்னான். மற்றவர்கள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டான். கூட்டாளிகள் பலரோடு இணைந்தான். குழந்தைகளை கடத்தினான். பெண்களை விற்றான்.‌ சிறுவர்களுக்கு சூது கற்றுத் தந்தான்.


தன் மகன் என்றே தெரியாமல் வினீத்தை கடத்தினான். பல குழந்தைகளோடு சேர்த்து அவனையும் திருடனாக்கினான்.


சத்யாவின் நினைவுகளோடு வந்து சேர்ந்த சயாவுக்கோ மகன் கணவன் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற விசயம் தெரியவில்லை.


வினீத் வாழ்ந்தான் செத்தான். மறுபடி நாம அங்கே போக வேணாம்.


யாராவது அவன் வாழ்க்கையை பத்தி தெரிஞ்சிக்க நினைச்சா இந்த கதையை இன்னொரு முறை படிச்சிக்கோங்க.


இப்ப நாம கங்காவோட வாழ்க்கைக்கு வருவோம்.


வினீத் விளையாட்டு பொது கூட்ட மேடையில் பந்தடிப்பட்டு ஆம்புலன்ஸில் தூக்கிச் செல்லப்பட்டான். வேகமாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கியது லாரி ஒன்று. ரோட்டோரத்தில் சொறி பிடித்து படுத்திருந்த கங்காவின் மீது ஏறியது அந்த லாரி. 


சம்ப இடத்திலேயே செத்துப் போனான் கங்காதரன். அனைத்து நினைவுகளும் படபடவென்று வந்து சேர்ந்தன. 


போன ஜென்மத்தில் கலையரசனாக வாழ்ந்தவன் அவன். இந்த ஜென்மத்தில் காதலியோடு‌ வாழ ஆசைப்பட்டு அவளை விதிக்கு புறம்பாக கொன்றதற்காக அவளை வெறுக்கும்படியான தண்டனை கிடைத்திருந்தது அவனுக்கு.


இறந்த இடத்திலேயே அவனின் ஆன்மா சிலையாக நின்று விட்டது. போன ஜென்மத்தில் அவளை கொன்றது தவறு. அவளின் சாவுக்கு காரணமானது தவறு. அதனாலேயே அவனின் அனைத்து சக்திகளும் கங்காவாய் வாழ்கையில் பிடுங்கிக் கொள்ளப்பட்டு விட்டது.


சாதாரண மனிதனாக வாழ்ந்தவன் தன் ஆன்ம ஜோடியைதான் மனைவியாக்கி உள்ளோம் என்ற விசயம் கூட அறியாமல் விதியின் பாதையில் நடந்து விட்டான். ஆருயிர்‌ காதலியை கொடுமை செய்தே அரை உயிர் எடுத்து விட்டான். அவளை அடித்த அடிகள், உதைத்த உதைகள் அத்தனையும் நினைவிற்கு வந்தன. நொந்தவன் நல்லவேளையாக சைனீஸ் நூடுல்ஸ்ஸாக ஆகாமல் நம்மூர் நூல்கோலாக ஆகிப் போனான்.


பிரபஞ்ச வெளியில் பாய்ந்து போனவன் பூவிளந்தேவியை தேடினான். வழக்கமான அதே பாறையில் அமர்ந்து குழலால் அதே இசையை இசைத்துக் கொண்டிருந்தாள்.


"வா கலை.." அன்பாக அழைத்தாள் அவள்.


"இது என்ன கன்றாவி வாழ்க்கை.? இப்படி கங்காவா வாழ நான் ஒத்துக்கவே இல்லையே.." என்றான்‌ கோபத்தோடு.


"நீ உன் சயாவோடு வாழ விரும்பின. அதுக்காக ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்ட.. நீ உன் ஆன்ம ஜோடியோடு மட்டுமே உறவை வச்சிருக்க. உனக்கு ஆன்ம நட்பே கிடையாது. அதனால உனக்காக பதில்களும் இங்கே கிடைக்காது. நான் என் வினீக்காக காத்திருக்கேன்‌. உனக்கு பதில் சொல்லி கடுப்பாக விரும்பல." என்றவள் தனது வேலையில் கவனமானாள்.


கலை வருந்திய மனதோடு ஆன்மாக்களின் விளையாட்டு ஒப்பந்தங்கள் பதிக்கப்படும் அலுவலகம் வந்தான். 


அவன் கேட்ட கூடல் கிடைத்து விட்டது. அவன் ஆசைப்பட்டது போலவே ஆன்மாவுக்கும் கூட மனம் நிறைந்து விட்டது. ஆனால் வலியாக இருந்தது. அவளை நேசித்த நேரங்களை நினைத்துப் பார்க்கையில் இப்போது செய்து வந்த தவறு கோடி கொலை குற்றம் செய்தது போலவே இருந்தது. 


(அதனால சொல்ல வருவது என்னன்னா மக்களே.. நீங்க கடுப்போடு திட்டி விரட்டிக் கொண்டிருக்கும் உங்களின் துணை உண்மையிலேயே உங்க ஆன்ம ஜோடியா இருக்க சான்ஸ் இருக்கு. செத்த பிறகு வருந்த வேணாம். விதி எப்படி சதிராட்டம் ஆடினாலும் சரி. நீங்க உங்க இணையை நேசிங்க.


உங்களோட மனசுல பதியும் வெறுப்பை தூக்கி எறிஞ்சிட்டு நேசிங்க. ஆன்ம ஜோடிகளுக்கான பயர் கனெக்ட் ஆகலன்னு யோசிக்காம நேசிங்க. இந்த வினீ குரங்கை போல யாராவது கூட உங்க ஆன்ம ஜோடியோடு இருக்க வேண்டிய அந்த ஃபயர் கனெக்ஷனை கட் பண்ணி விட்டிருக்கலாம். மனுசனா வாழும்போதே ஆயிரம் எதிரி. ஆன்மாவா இருக்கையில் மட்டும் அம்புட்டு நல்லவங்களாவா இருப்போம் நாம.? வினீயை போல எத்தனை எதிரியோ நமக்கு.? அதனால நேசிப்பை மட்டுமே கை கொள்ளுங்க. இல்லன்னா கலையை விடவும் அதிகமா வருந்துவிங்க.)


சரி வாங்க நாம அடுத்த ஜென்மத்துக்கு போவோம். இப்ப இது புது லைஃப். ஞாபகம் வச்சிக்கங்க. சத்யாவை மறந்துடுங்க. இனி சரயுவை மட்டும் நினைங்க.


செத்துப் போன சரயு தனக்கு வழங்கப்பட்ட வினீயின் வாழ்க்கை ஏட்டை எரிச்சலோடு வெறித்தாள். அவளுக்கு சத்யாவாக இருந்து வினீத்தை பழி வாங்கியது நினைவில் இல்லை. சரயூவாக இருந்து கணவனிடம் கொடுமையை அனுபவித்ததும், குழந்தையை கையில் கூட ஏந்தாமல் இறந்து போனதும்தான் நினைவில் இருந்தது. 


இம்முறை வினீ வினோதனாக அவளிடம் சிக்கி விட்டான். 


தண்டவாளத்தில் தடதடவென்று வந்துக் கொண்டிருந்தது ரயில். காதலியை கை விட போகிறோமே என்ற விசனத்தோடு‌ உயிரை கை விட இருந்தான் அவன்.


அவன் செத்தானா பிழைச்சானான்னு அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் நட்புக்களே.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க. 



Post a Comment

0 Comments