Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.2

 சயாவுக்கு குழப்பம் மட்டும்தான் கூடிக் கொண்டிருந்தது.


"நான் யார்.?" எனக் கேட்டாள்.


"அந்த கேள்வியை செத்து முடிச்சதும் கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.." என்றாள் பூவிளந்தேவி.


"இங்கே பிரச்சனையே இதுதான். தான் யாருன்னு ஒருத்தரும் தன்கிட்ட கேட்டுக்கறது இல்ல.. பூமியில் உங்களுக்குன்னு வச்சிக்கிட்ட பேரே உங்களுக்கான மொத்த அடையாளமும்ன்னு நினைச்சிடுறிங்க. நீ ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவுக்கு ஒரு உயிரும் உடலும் கிடைக்கும்போது மனுசனா பிறக்கறிங்க. அதுக்காக நீ மனுசி மட்டுமே கிடையாது. உனக்கு சுதந்திரம் இருக்கு. உன் ஆன்மாவுக்குன்னு தனி அடையாளம் இருக்கு. உன்னோடது டெம்ரவரி வாழ்க்கை. நீ கெட்டவனோ நல்லவனோ அது முக்கியமில்ல. உன் வாழ்க்கையை நீயே வாழ்ந்தியாங்கறதுதான் முக்கியம். வாழ்க்கைன்னா ரசிச்சி வாழணும், அது எவ்வளவு மோசமா இருந்தாலும். உன் வாழ்க்கையை மாத்தி அமைக்க உன் ஆன்ம நட்புக்கு வேணா வழி இல்லாம இருக்கலாம். ஆனா உன் லைப்பை உன்னால மாத்தி அமைக்க முடியும்.. நீ தப்பு பண்ணிட்ட. இனி உன் தப்புக்கான தண்டனையை நீ அனுபவிச்சிதான் ஆகணும்.." என்றார் அவர்களின் வாழ்க்கை ஏட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி.


சயா பயத்தோடு கலையை பார்த்தாள்.


"எனக்கு புரியும்படி என்னாச்சின்னு நீங்களாவது சொல்றிங்களா?"


அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து போனான் வினீ.


பிரபஞ்சத்தின் அழகிய சமவெளிக்கு வந்தவன் "நான் வினீ.. நீ சயா.." என்றான்.


"ஓ.." 


"நீயும் நானும் ஆன்ம நட்புக்கள். உன்னோட வாழ்க்கையை நானும் என்னோட வாழ்க்கையை நீயும் மாத்தி மாத்தி ரூல் பண்ணிக்க முடியும். நீயும் நானும் இங்கே ஜாலியாதான் இருந்தோம். சரி ஒரு மாற்றம் இருக்கட்டுமேன்னு வாழ்வியல் விளையாட்டை விளையாட போனோம். ஆனா விளையாட்டுல சொதப்பிட்டோம்.. நீ எதுக்கும் கவலைப்பட வேணாம் சயா.." 


"ஆனா எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல.."


இரு விரல்களை சொடுக்கிட்டான். அத்தனையும் புயல் போல நினைவிற்கு வந்தன.


"வினீ.." பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள்.


"என்னுயிர் நண்பா.." என்றவளை விலக்கியவன் "உன்னுயிர் நண்பன்தான்.." என்றான்.


"கலை ஏன் உனக்கு ஜோடியா ஆனான்.?" என்றாள் கோபத்தோடு.


"எல்லாம் உன்னாலதான்.."


"இதை என்னால ஏத்துக்க முடியாது.. நீ என் நண்பன். உனக்கு அவன் ஜோடியா.. உவ்வேக்.." பொய்யாய் வாந்தி எடுத்தவளை தூரத்திலிருந்து முறைத்தான் கலை.


"என் அழகு நண்பன். ஆருயிர் நண்பன்.. டுபுக்கு மாதிரி இருக்கான் அந்த கலை.." அவள் மேலே பேசும் முன் நிறுத்தினான் வினீ.


"அவன் உனக்கு ஜோடி. அதை மறந்துட்டியா.?" எனக்‌ கேட்டான்.


"எனக்குதான் விதி.."


பற்களை அரைத்தான் கலை.


"என் மனசுல இருந்த பாரமே இப்பதான் குறைஞ்சிருக்கு.." என்று முனகியபடியே அவர்களின் அருகே போனாள் பூவிளந்தேவி.


"இப்போதாவது புரிஞ்சதா வினீ உனக்கு, காதலின் சிறப்பு?" கவலையாக கேட்டாள்.


"அதுதான் யுகம் யுகமா லவ் பண்றோமே.. ஆனா இவளை போல ஓர் ஆன்ம நட்பு கிடைக்க எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும்?" தோழியின் கன்னத்தில் தன் கன்னம் தேய்த்தான்.


"ஆமா மச்சி.. லவ்வுன்னா வேஸ்டு. நட்புதான் பெஸ்டு.." என்றவள் அவனின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டாள்.


பூவிளந்தேவியின் நெஞ்சம் பற்றி எரிந்தது. ஃபயர் வண்டிதான் இல்லாமல் போனது அருகில். இல்லையேல் சற்று தணித்திருக்கவாவது செய்திருக்கலாம்.


பூவிளந்தேவி அங்கிருந்து போய் விட்டாள். அவளின் கோபம் கண்டு பரிதாபப்பட்டான் கலை‌.


"அடுத்த டைம் உன்னோட லைப்பை செமையா ரூல் பண்றேன்டா சகா.."  என்றவள் எழுந்து நின்றாள்.


"எங்கே ரூல் பண்றது.? நீ ஏற்கனவே பண்ண சேதாரதுக்கே என்ன தண்டனை தர போறாங்களோ.?" என்றான் அவன் கடுப்போடு.


"சில் மச்சி. அது வெறும் கேம். நூறு வருசமெல்லாம் மேட்டரா.?" எனக் கேட்டவள் விசிலடித்தபடியே பிரபஞ்ச வெளியில் துள்ளியோடினாள்.


ஆனால் அவளின் மொத்த சந்தோசமும் அங்கிருந்த அதிகாரி சொன்ன வார்த்தையால் உடைந்துப் போனது.


"நீ அவனோட லைப்பை கன்ட்ரோல் பண்ண முடியாது. உன் ஆன்ம நட்பின் சக்தி எதுவும் இனி பூமியின் எல்லையில் வேலை செய்யாது.."


"ஐயோ.. அப்படின்னா நான் எப்படி என் நண்பனை கன்ட்ரோல் பண்றது?" பதறிக் கேட்டவளை நக்கலாக பார்த்தான் கலை.


யோசனை வந்தவளாக கலையை திரும்பிப் பார்த்தவள் "அன்பே, தலைவா.. நான் இல்லாம உங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா.? நீங்க ஏன் உங்க பதவியை வச்சி இந்த டார்லிங் குட்டியை காப்பாத்தி விட கூடாது.?" எனக் கேட்டாள் பற்களை காட்டியபடி.


அவனும் அதே போல பற்களை காட்டினான்.


"நான் உன்னோடு கூடிட்டேன்.. இனி ஆறு ஜென்மத்துக்கு நீ எப்படி போனாலும் எனக்கு பிரச்சனை இல்ல.. நீயாச்சி. உன் நட்பாச்சி.." என்றவன் அங்கிருந்து போனான்.


"யோவ் காதலா.. உனக்கு மனசாட்சி இல்லாம போச்சிய்யா.." என புலம்பியவள் "நண்பா நீ என்ன நினைக்கிற.?" எனக் கேட்டாள்.


"ஜஸ்ட் ஹன்ட்ரட் இயர்ஸ்தானே.?" என்றவன் முன்னால் இருந்த அதிகாரியிடம் "விளையாட்டு பத்திரத்தை கொடுய்யா.. மங்களூர் குரங்கு மண்டையா.." என்றான்.


பற்களை அரைத்தபடியே இருப்பதிலேயே கடினமான ஒரு விளையாட்டு பத்திரத்தை எடுத்து நீட்டினார். 


சயாவும் வினீயும் புன்னகைத்தபடியே கையெழுத்திட்டனர்.


அவர்கள் கையெழுத்தை பதிந்ததும் பத்திரத்தை பிடுங்கிக் கொண்டார் அதிகாரி. அதன் நகலை அவர்களிடம்‌ தந்தார்.


"இந்த முறை உங்களோட விளையாட்டு என்னன்னா, இவன் சாகவே கூடாது. நீ அவனை சாக விடவே கூடாது.." என்று விளக்கிச் சொன்னான் அதிகாரி.


"என் நண்பன் ஏன்ய்யா சாகணும்.?" எனக் கேட்டவளை நக்கலாக பார்த்தவாறே "அவனோட விதி சாகணும். உன்னோட விதி அவனை சாக விடாம காப்பாத்தணும்.. நீ அவனுக்கு காப்பாள தேவதை இந்த முறை. உனக்கு குறிப்பிட்ட வரம்புக்குள்ள சக்தி இருக்கும். அதை தாண்டி எதுவும் கிடையாது.. நீங்க இப்ப போகலாம்.." என்று அவர்களை துரத்தியடித்தார்.


அவர்கள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் வந்தாள் பூவிளந்தேவி. அவளிடமும் ஒரு பத்திர நகலை நீட்டினார் அதிகாரி.


"உனக்கு இந்த விளையாட்டுகள்ல ஏன் இன்ட்ரஸ்ட் இல்ல.?" எனக் கேட்டார்.


"போரிங் இது.‌ ஒரு சிக்கலான விளையாட்டு. தோத்தாலும் மறுபடி விளையாடணும். ஜெயிச்சாலும் மறுபடி விளையாடணும். இதுக்கு பதிலா சும்மாவே இருந்துட்டு போகலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு. வினீயை நினைச்சி கற்பனையில் வாழணும். புல்லாங்குழல் இசைக்கணும்.. பிரபஞ்ச வீதியை வெறிச்சபடி உட்கார்ந்திருக்கணும்.." என்றவளை பரிவோடு பார்த்தவன் "அப்புறம் எதுக்கு இந்த முறை அவங்க விளையாட்டுல நீயும் ஜாயின் ஆகுற.?" எனக் கேட்டான்.


அவன் தந்த காகிதத்தை வைத்து காற்று விசிறியவள் "சும்மாதான். என் காதலனுக்கு ஒரு பாடம் கத்து தர போறேன்.." என்றாள்.


"இந்த முறை ஆயுள் முடியும் முன்னாடி அவன் இறந்துட்டா என்னவாகும்.?" சந்தேகத்தோடு கேட்டாள்.


"அவனோட ஆன்ம நட்புக்கு பயங்கரமான தண்டனை கிடைக்கும்.." அதிகாரி சொன்னதும் தனக்குள் சிரித்தபடி அங்கிருந்து போனாள்.


வித்யனாய் பிறந்தான் வினீ. அவனின் வாழ்க்கை ஏட்டை அழகாய் மாற்றி எழுதினாள் சயா. அவன் தன் நண்பன் என்பது அவளுக்கு நினைவில் இல்லை. ஆனால் அவனின் காவல் தேவதை நான் என்பது மட்டும் நினைவில் இருந்தது.


ஆனால் அவனுக்கே அடிக்கடி மரணம் நெருங்கியது. குழந்தையிலிருந்தே மரணம் துரத்தி விளையாடியது. எப்படி என்று சயாவுக்கே புரியவில்லை. ஆனால் அவனின் உயிரை காப்பதில் கவனமாக இருந்தாள்.


எதுவரை அவளின் முயற்சி நிற்குமோ என நினைத்தபடி அவளுக்கு மேல் பதவியில் இருந்த பூவிளந்தேவியும் அவனுக்கு மரணத்தை பரிசளிக்க காத்து கிடந்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..






Post a Comment

0 Comments