Advertisement

Responsive Advertisement

மௌனமாய் சில முத்தங்கள்





ரூபிணிக்காவின் கையிலிருந்த மோதிரத்தின் மீது விழுந்தது இரு துளி கண்ணீர். 


"ரூபிணிகா.!" விஷால் தன் அருகே வருவது கண்டு அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.


அவளருகே வந்தவன் அவளின் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான். அவளின் கண்களை ஆழமாக பார்த்தான். 


"ரொம்ப அழகா இருக்க!" என்றான்.


"நாம இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்!" எங்கோ பார்த்தபடி சொன்னாள்.


சிரித்தான் விஷால்.


"மறுபடியும் விளையாட்டா?"


மறுப்பாக தலையசைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல!" 


விஷால் அவளை விட்டு விலகி நின்றான்.


"நமக்கு நிச்சயத்தார்த்தம் முடிஞ்சிடுச்சி. இப்ப நீ இப்படி சொல்ற.! இத்தனை மாசம் லவ்வுன்னு சொல்லி என்னை டார்ச்சர் பண்ணி, என் பின்னாடி சுத்தும்போது இந்த விருப்பம் இருந்ததா?" கோபத்தோடு கேட்டவனை தயக்கமாக பார்த்தவள் "ப்ளீஸ்.. எனக்கு பிடிக்கல!" என்றாள். அவளை மேலே பேச விடவில்லை அவன். அவளின் கையை பற்றினான். அவளது மோதிரத்தை கழட்டி தூர எறிந்தான்.


"சந்தோசமா இரு!" என்றவன் அவளை விட்டு விலகி நடந்தான்.


ரூபிணிக்காவின் போன் ஒலித்தது. கண்ணீரை துடைத்தபடியே சென்று போனை எடுத்தாள்.


"ரூபி பாப்பு! என் திட்டத்துக்கு சம்மதமா? இல்ல உன் லைப்ல நீயே மண்ணைப் போட்டுக்க போறியா?" என்றான் எதிரில் பேசியவன்.


ரூபிணிகா நிற்காமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.


"என் குடும்பத்தை விட்டுடு. நான் என்ன வேணாலும் செய்றேன்!" என்றாள்.


ரூபிணிகா எக்ஸ் டெரரிஸ்ட்.. பல காலமாய் தொலைத்த தன் குடும்பத்தை சமீபத்தில் கண்டறிந்து அவர்களோடு இணைந்தவள்..


விஷால் ஐ.பி.எஸ்.. ரூபிணிகாவின் அத்தை மகன். அவளின் ஆசை காதலனும் கூட. 


இறந்த காலம் மறந்து தன் காதலனோடு புது வாழ்க்கை தொடங்க இருந்தாள் அவள். ஆனால் இறந்த காலம் அவளை விடவில்லை. துரத்தி வந்த இறந்த காலத்திடமிருந்து எப்படி தப்பிப்பாள்.?  அவள் ஒரு முன்னாள் தீவிரவாதி என்று அவளின் குடும்பம் அறிந்தால் என்ன நடக்கும்.?


இறந்த காலம் அறிந்தும் அவளை முழுதாய் விரும்பினான் விஷால். அவள் தன்னிடமிருந்து விலகும் காரணம் அறிந்தால் என்ன செய்வான்? 


அந்த தீவிரவாத கூட்டத்தை பொறுத்தவரை ரூபி என்பவள் ஒரு அனுபவசாலி பைட்டர். அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த தெரிந்த ஒரு மனித பெண். அவளின் உணர்வுகள் அவர்களுக்கு தேவையில்லை. அவள் வேண்டும். பல நாடுகளில் சேதம் விளைவிக்க காரணியாக அவள் வேண்டும்.


என்ன நடக்கும் இப்போராடத்தில்.? காதல் வெல்லுமா? ரூபியின் மன உறுதி வெல்லுமா? தீவிரவாதம் ஜெயிக்குமா? விஷாலின் அதிரடி ஆக்சன் வெல்லுமா? 


மௌனமாய் சில மரணங்கள் கதையின் மூன்றாம் பாகம் இது. தனியாவும் இந்த கதையை படிக்கலாம். அந்த இரண்டு பாகத்தையும் படிச்சிட்டு வந்தும் படிக்கலாம்..

மௌன முத்தம் 1

மௌன முத்தம் 2

மௌன முத்தம் 3

மௌன முத்தம் 4

மௌன முத்தம் 5

மௌன முத்தம் 6

மௌன முத்தம் 7

மௌன முத்தம் 8

மௌன முத்தம் 9

மௌன முத்தம் 10

மௌன முத்தம் 11

மௌன முத்தம் 12

மௌன முத்தம் 13

மௌன முத்தம் 14

மௌன முத்தம் 15

மௌன முத்தம் 16

மௌன முத்தம் 17

மௌன முத்தம் 18

மௌன முத்தம் 19









Post a Comment

0 Comments