புவின் POV
கட்டிடம் வெடிக்குண்டால் தகர்க்கப்பட்டபோது அவளை விட்டு நகர்ந்தேன் நான். அவளின் அருகில் நான் இருந்தால் அது அவளுக்கு ஆபத்தாகும். அதனாலயே நகர்ந்தேன். வெகுதூரம் வந்து விடவில்லை. மறைவாய் ஒரு இடத்தில் நின்று அவளை கவனித்துக் கொண்டிருந்தேன்.
அவள் அழுதாள். நிறைய துடித்தாள். பயந்திருப்பாள் என்று நினைக்கிறேன். எனது டிரைவர் என்னிடம் அவளை பற்றி விசாரிக்க முயன்றான். நான் சரியான பதிலை சொல்லாமல் அவனை அவ்விடத்திலிருந்து விரட்டினேன்.
அவளின் மூச்சு விடும் சத்தம் என் காதில் வந்து கேட்டுக் கொண்டே இருந்தது. வெகுதூரத்தில் வந்து நின்றும் கூட கேட்டது.
அன்று நடு இரவில் அருகே இருந்த கடையில் தேனீர் வாங்கிச் சென்று அவளிடம் தந்து வந்தேன். அவள் நல் புத்தியில் இல்லை. என்னை அவளுக்கு அந்த நேரத்தில் அடையாளம் கூட தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
மறு நாள் அவளின் தோழியையும் அந்த மதி பையனையும் எரித்துவிட்டு வீட்டுக்கு சென்றாள் அவள். எனக்கு அவளை நினைத்து கவலையாகதான் இருந்தது. ஆனால் நாட்டிற்கு இந்த நிகழ்வு அவசியம். இந்த சுயநல உலகிற்கு இந்த நிகழ்வு மிகவும் அவசியம்.
அவளின் வீட்டை இரவில் அவள் பூட்டவில்லை. மறந்திருப்பாள் போல. வீட்டை திறந்து உள்ளே சென்றேன். இரவெல்லாம் அவளோடுதான் நேரத்தை கடத்தினேன். அவளின் கைகள் சூடாக இருந்தது. அந்த கைகளை இறுக்க பிடித்தபடி இரவை கழித்தேன். அவள் இடை இடையே கண் விழித்து பார்த்தாள். ஆனால் என்னை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில் அவள் வீட்டிற்கு சென்றேன். கதவை தட்டியதும் சற்று நேரத்தில் வந்து திறந்தாள். லூசான ஒரு உடையை அணிந்திருந்தாள். என்னை கண்டதும் லேசாக அதிர்ச்சியடைந்தாள்.
"டூ லெட் போர்ட் பார்த்தேன்.." என்றேன். அவள் புரிந்துக் கொண்டவளாக உள்ளே நகர்ந்தாள். இரவில் பார்த்த வீட்டை இப்போது பகலில் பார்த்தேன். மிகவும் க்ளீன் அன்ட் நீட்டாக இருந்தது. புகைப்படங்களில் அவளின் தாயும் தந்தையும் என்று நினைக்கிறேன். சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
"இந்த பக்கம் வழி.." என்றாள் மாடி படிகளில் ஏறிக் கொண்டு. அவளை பின் தொடர்ந்தேன். மாடியில் ஒரு ஹாலும் இரண்டு படுக்கையறைகளோடு இருந்தது வீடு.
அதிகம் பேசவில்லை அவள். நான் அந்த வீட்டை சுற்றி பார்த்த வேளையில் என்னை விட்டுவிட்டு ஓரமாக சென்று நின்றுக் கொண்டாள். துக்கத்தில் இருக்கிறாள் என்பது பார்க்கும்போதே புரிந்தது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
சின்ன யூடிக்கு ரியலி சாரி.. நாளையிலிருந்து இந்த கதையோட யூடி வராது நட்புக்களே.. ஒரு பத்து பதினைஞ்சி நாட்கள் தாமதம் ஆகலாம். சாரி. மைன்ட் பிரெஷாகாம இந்த கதையை என்னால எழுத முடியாது. மீறி எழுதினாலும் கதையை சொதப்பி வச்சிடுவேன். அதனாலதான் கேப் விடுறேன். நட்புக்கள் என்னை புரிஞ்சிப்பிங்கன்னு நம்புறேன். இந்த கதைகளுக்கு பதிலா காதல் கடன்காரா அப்டேட் ஆகும். அந்த கதையை படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸை கொடுங்க. விரைவில் நம்ம புவினையும் குழலியையும் கூட்டி வந்துடுறேன்.
0 Comments