புவின் POV
என் பதிலுக்காக காத்திருந்தாள் குழலி. "இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். நீங்க.?" என்றேன்.
"இந்த பங்சன் முடிஞ்சிதான் கிளம்பணும்.." என்றவள் ஹாலின் நடுவே இருந்த மேடையை கை காட்டினாள்.
"அந்த அலங்காரம் நல்லா இருக்கா.?" என்றாள்.
"சூப்பர்.." என்றேன். அவளின் கன்னங்கள் சிவந்தது. இது அவ்வளவு பெரிய பாராட்டா என்று தெரியவில்லை எனக்கு.
"இந்த செலிபிரிட்டி இன்னும் எவ்வளவு நேரம் இங்கே இருப்பாங்கன்னு தெரியுமா.?" என்றேன்.
தன் வாட்சை பார்த்தாள். "இன்னும் அரை மணி நேரம்.." என்றாள் தன் வார்த்தைகள் மீதே முழு நம்பிக்கை இல்லாதவளாக.
நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவள் ஐஸ்கிரீமின் காலி கப்பை தூக்கி குப்பை தொட்டியில் போட்டாள். "எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட் வேலை.. அப்புறம் பார்க்கலாம்.." என்றாள். இவளை நான் மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
அவள் என் பார்வையிலிருந்து மறைந்த சில நொடிகளில் எழுந்து நின்றேன் நானும். அந்த ஷாப்பிங் மாலை விட்டு வெளியே கிளம்பினேன்.
வாசலை தாண்டுகையில் காரின் சாவியிலிருந்த நடு பட்டனை அழுத்தினேன். இன்னும் ஐந்து நிமிடம் என்று கை கடிகாரம் பார்த்தே கணக்கிட்டுக் கொண்டேன். கார் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தேன். ஆனால் ஏதோ ஒரு குறை. ஏதோ ஒரு தவறு. என்னவென்று சரியாக விளங்கவில்லை. மாலை திரும்பி பார்த்தேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பிறகென்ன எனக்கு குறை.?
விந்தை உணர்வை ஓரம் கட்டி விட்டு சாலையில் நடந்தேன். பாதங்கள் அடியெடுத்து வைக்க மறந்தன. இவளை பார்த்திருக்க கூடாது நான். அதுதான் என்னை இப்படி தடுத்து நிறுத்துகிறது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இது மிகவும் புதிது. தலையை கோதி விட்டுக் கொண்டு திரும்பி ஓடினேன்.
ஹாலின் இடையே இருந்த மேடையை சுற்றி கூட்டம் குவிந்து கிடந்தது. ஓரமாக அவளும் நின்றுக் கொண்டிருந்தாள். அந்த செலிபிரிட்டியை ஒரு வித பொறாமை கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அருகே சென்று அவளின் கையை பற்றினேன். ஆச்சரியத்தோடு திரும்பி பார்த்தாள்.
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அப்படி வரிங்களா.?" என்றேன். தேவையில்லாதது. இருந்தாலும் அவளை அழைத்தேன். அவள் தன் தோழியை தேடினாள். தோழி கண்களில் படாததால் என்னோடு கிளம்பி வந்தாள்.
"என்ன விசயம்.?" என்றவளை எனது கார் வரை அழைத்துச் சென்றேன். வாட்சை பார்த்தேன். ஐந்தாறு நொடிகள்தான் இருந்தது. அவள் என் கண்களை ஆர்வமாக பார்த்த நொடிகளில் டமார் என்று வெடித்து சிதறியது அந்த ஷாப்பிங் மால்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
சின்ன யூடிக்கு மன்னிக்கவும் நட்புக்களே. தலைவலி.. கொடுமை எனக்கெல்லாம் தலைவலி வருது. இந்த சின்ன யூடிக்கு ஈக்வெல்லா வாய்ப்பு கிடைக்கும்போது பெரிய யூடியா எழுதுறேன்ப்பா. சாரி..😔
2 Comments
உங்களுடைய கதைகள் அனைத்தும் அருமை குறிப்பாக செங்கா புதிய உலகை காண வைத்த வெதின்ஸா தொடர் மிகவும் பிடித்தது கமெண்ட்ஸ் எழுதவே இமெயில் ஒபன் செய்தேன் முகவரி இருந்தால் கடிதம் எழுத இலகுவாயிருக்கும்
ReplyDeletecomment eluthitu email id kuduka maranthuten id
ReplyDeletebbkirubha@gmail.com ennoda jiophonela ellame kastamthan