Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 18

 தனசேகரன் POV


என் முன்னால் கைக் கட்டி அமர்ந்திருந்தான் சக காவலன் ஒருவன். உடம்பில் ரத்த காயங்கள் இருந்தது. தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவனை எட்டி உதைத்தான் என்னுடன் பணி புரியும் விஷால். 


"நீயும் இதே நாட்டுல விளையுற அரிசையைதானே பொங்கி சாப்பிடுற.? இதே நாட்டுக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படிடா மனசு வருது.?" என கேட்டவன் அவனை மீண்டும் உதைத்தான். உதை சற்று பலமானது. அமர்ந்திருந்தவன் தரையில் விழுந்தான்.


நான் மேஜையை விட்டு இறங்கி நின்றேன். சுற்றிலும் பார்த்தேன். என் குழுவில் இருந்த அனைவரும் அந்த அறையில் இருந்தார்கள். 


எங்கள் இருபதில் நால்வர் எங்களின் நாட்டின் துரோகிகள் என அறிந்ததில் இருந்து ஸ்தம்பித்து போய் விட்டது எனது மனம். மூன்று பேர் இன்னமும் எங்களின் இடையேதான் நின்றுக் கொண்டிருந்தார்கள். 


அந்த கருப்பு ஓநாய்களை இன்னும் சற்று நேரத்தில் தோலுரிக்க போகிறோம். ஒருவன் மட்டும் அடிகளை வாங்கிக் கொண்டிருந்தான். மற்ற மூவரின் முக மாற்றத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.


என்னோடு துரோகி இருந்தான் என்று அறிந்ததும் கோபத்தை விட அழுகைதான் அதிகம் வந்தது. 


இது என் நாடு. சுதந்திரமாக விரும்பும் தொழில் செய்ய முடியாத நாடுகள் எத்தனையோ இதே உலகில் உண்டு. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மட்டுமில்லாமல் வாழ்விலும் பல சுதந்திரம் தந்திருக்கும் நாடு என்னுடையது‌. பிறகு ஏன் இவனுக்கு நாட்டின் மீது கோபம்.? 


பொன் விளையும் பூமியென்று யாராவது எந்த மண்ணையாவது காட்டினாலும் நான் அதை என் நாட்டு பாலைவன மணலுக்கு சமமாக கூட நினைக்க மாட்டேன். என்னை முட்டாள் என்று கூட எண்ணுங்கள். எனக்கு அதில் பிரச்சனை இல்லை. 


என் நாடு எனக்கு எவ்வளவோ செய்துள்ளது.


இதே நாட்டில்தான் பிறந்து இரண்டே நாள் ஆன என்னை சாக்கடை ஒன்றில் வீசி சென்றாள் என்னை பெற்றவள். 


என்னை வளர்த்தது நடைபாதைவாசிகள்தான். அவர்களுக்கு என்று இருந்த சிறு சிறு தொழிலில் வந்த வருமானத்தை வைத்துதான் அவர்களின் வயிற்றையும் என்னையும் வளர்த்தார்கள். இரவில் உறங்குகையில் என்னை அணைத்தபடி உறங்கிய அனைவருமே எனது தாய்கள்தான். 


பள்ளியில் சேர்த்து விட்டதும் அவர்களே. அப்போது எனக்கென முன்னெழுத்து தந்ததும் அவர்களில் ஒருவரே.  


ஒரு சில நாட்களில் பசியோடு பள்ளி செல்கையில் இலவச உணவிட்டு, வயது வந்த தருணத்தில் பள்ளி கல்லூரி விடுதிகளில் இடம் தந்து, படிப்பையும் இலவசமாக தந்து, நான் உழைப்போடு படித்து தேர்வு எழுதியபோது எனக்கென வேலையும் தந்து இன்று என் கையில் அதிகாரத்தையும் தந்துள்ளது என் நாடு. 


என் மனைவி ஒரு தொட்டில் குழந்தை. பெண்சிசுக் கொலையிலிருந்து தப்பித்தவளை அரசாங்கம்தான் வளர்த்து படிப்பையும் தந்தது. 


வளர்ந்து நின்றவள் எனக்கு முன்னெழுத்து தந்தவரின் கால் இழந்த தங்கையையும் அவரின் கணவரையும் தனது பெற்றோராக தத்தெடுத்துக் கொண்டாள். 


இன்று அவள் வருவாய் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இவனை பற்றி தெரிந்தால் நேராய் வந்து சங்கில் மிதித்து கொன்று விட்டு போய் விடுவாள்.


ஒரு நாடு என்பது ஒரு குடும்பம் இல்லையா.? அதில் ஒருவரை தாக்கினாலும் அனைவருக்கும் வலிக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடியாதா இவனால்.? 


இதுவரை இறந்தவர்களை பார்த்தும் கூட இப்படி துரோகம் செய்ய இவனுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. எங்கே தவறு நடந்தது.? 


பள்ளியிலும் கல்லூரியிலும் தினம் தினம் கற்றுத்தந்த நாட்டுப்பற்று எவ்விடத்தில் மறந்து போனது.? 


அரசாங்கத்தை அரசாங்கமாக பார்க்காமல் ஒற்றை கட்சியாக பார்த்தபோதா.? 


நண்பனை நண்பனாக பார்க்காமல் அடுத்த மதத்துக்காரன் என்று விலக்கி நிறுத்தியபோதா.?


உடன் பயின்ற அதே தோழனை அடுத்த சாதி என தெரிந்ததும் வாசலோடு மறித்த போதா.?


யாரால் தொலைந்தது நாட்டுப்பற்று.?


எவனோ ஒருவன் தரும் பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்காகவும் நாட்டுக்குள் குழப்பம் விளைவிக்கும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் நல் மனங்களினாலா.?


நாட்டுப்பற்று, எம் மக்கள் மீது கொண்ட நேசம், எம் மண்ணின் மீது கொண்ட தீரா தாகம் இதையெல்லாம் யார் அழிக்கிறார்கள்.? 


பிரித்தாளும் சூழ்ச்சியில் வென்றுக் கொண்டிருக்கும் கட்சிக்களாலா.?


லஞ்சங்களில் வரும் பணம் மட்டும்தான் உயிரை வளர்க்கும் என்று நம்பும் சில நல்லுள்ளங்கள் இன்னும் பணியில் தொடர்ந்துக் கொண்டே இருப்பதாலா.?


நாட்டுப்பற்றையும் மறந்து அடுத்தவன் தரும் பணத்திற்காக சொந்த நாட்டு மக்களை காவு தரும் இவன் போன்றோரும் உயிரோடு இருந்துக் கொண்டிருப்பதாலா.?


ஆனால் யார் பலி.? எம் மக்கள்.. எம் தாய்நாட்டின் குழந்தைகள்.. எம் தேசத்தின் வருங்காலங்கள்.. எம் நாட்டையே தாங்கி பிடிக்கும் தூண்கள்.. 


நாடு எரிகையில் பிடில் வாசித்தவனுக்கும் இவனுக்கும் இடையில் என்ன வித்தியாசம்.? 


விஷால் மீண்டும் அவனை உதைத்தான். "எத்தனை பேர் உள்ளே வந்திருக்காங்க சொல்லு.. நாயா பேயா தேடியலையுறோம் நாங்க.. ஆனா நீ எங்களோடவே இருந்துக்கிட்டு அவனுக்கு உதவி செய்வியா.?" என கேட்டு மீண்டும் உதைத்தான்.


"இவனை என்ன செய்யலாம் சார்.?" என்றார் வயதில் மூத்த ஒருவர். 


"என்கவுண்டர் செஞ்சா உடனே செத்துடுவான் சார்.‌." என்றான் விஷால்.


விஷாலுக்கு உடலில் ரத்தத்திற்கு பதிலாக இப்போது அக்னி குழம்பு ஓடிக் கொண்டிருக்கும். அவனின் கோபம் அந்த அளவிற்கானது.


"விவரத்தை வாங்குங்க விஷால்.." என்று விட்டு எழுந்து அருகே இருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றேன்.


மனதின் அழுகை அதிகமாக இருந்தது. முகத்தை ஈர தண்ணீரில் கழுவினேன். கண்ணீர் கண்களில் திரண்டு நின்றது.


என் மனதின் வலியை என் இடத்தில் இருந்தால்தான் உங்களால் உணர முடியும். இதே நாட்டை காக்க எங்களில் எத்தனை பேர் உயிர் தந்துள்ளனர் என்று உங்களை விட இவனுக்கு நன்றாக தெரியும். 


அங்கங்களை மூடாமல் ஆட்டங்கள் ஆடுகின்ற பெண்களை ரசித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ராணுவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது தெரியாது. அறிந்தாலும் அந்த உயிரின் விலை அவர்களுக்கு புரியாது. ஆனால் இவனுக்கு நன்றாக தெரியும்.


அரசாங்கத்தின் கடைநிலை வேலை ஒன்றிற்கு பரிட்சை எழுதிவிட்டு முதல் முறை தோற்றதுமே நாட்டின் மீது வெறுப்பு கொண்டு இரண்டாவது முயற்சியை செய்யாமல் விடும் படித்த இளைஞர்கள் பலருக்கும் கூட ஐந்து முறை தோற்று, நாட்டின் மீது கொண்ட பற்றில் இரவெல்லாம் படித்து, உடலின் வலிமை பெருக்கி, ஆறாம் வாய்ப்பில் ஜெயித்து, உள்நாட்டில் இரு கிராமத்திற்கு இடையே நடக்கும் சண்டைகளை தடுக்க சென்று, அந்த ஊர் மக்களின் கல்லடியால் இறந்து போன என் சக காவலர்களை பற்றி தெரியாது. ஆனால் இவனுக்கு தெரியுமே!


ஒருநாள் இரவு வீட்டை விட்டு பிரிந்திருப்பதே கடினம் என்று சொல்லும் பாசக்கார பொதுமக்களுக்காகதான் இராணுவ வீரர்கள் வருட கணக்கில் குடும்பத்தை பிரிந்து காவல் காத்து நிற்கிறார்கள். 


இதெல்லாம் இவனுக்கு தெரியும்தானே? பிறகு ஏன் இப்படி செய்தான்.? பணத்திற்காகவா.? அப்பணம் அவனுக்கு சுடுகாடு வரை வருமா.? இல்லை தேசத்தின் வெறுப்பிற்காகவா.? நாடு சுடுகாடு ஆன பிறகு இவனின் வெறுப்பு குறையுமா.? 


இவன் கொண்ட வெறுப்பு நாட்டின் மீது அல்ல.. தன் மக்கள் மீது என்று கூட அறிய மாட்டானா.?


நொந்து போன மனதோடு வெளியே வந்தேன். என்னவோ சரியில்லை. என் கண் முன் வந்த துப்பாக்கியை சட்டென பிடுங்கி அதை கையில் வைத்திருந்தவனின் நெஞ்சில் சுட்டேன். என்னை சுட வந்திருக்கிறான். இரண்டாம் ஓநாய்.


துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு குழுவில் மற்றவர்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே இருந்தவனை பார்த்த விஷால் "உங்களுக்கு ஒன்னும் ஆகலையே சார்.." என்றான்.


இல்லையென தலையசைத்தேன். 


மீதி இரண்டு ஓநாய்களும் அப்பாவி போல எங்களை பார்த்தன. குழுவினர் இருவர் தங்களின் துப்பாக்கியை எடுத்து அவர்களின் பின்னந்தலையில் வைத்தனர்.


"சார்.." என்று பதறினான் அதில் ஒருவன்.


"உங்க தவறு கண்டுபிடிச்சாச்சி.." என்றான் விஷால்.


அந்த இரு ஓநாய்களையும் இழுத்து சென்று ஏற்கனவே அடிப்பட்டு அமர்ந்திருந்தவனின் அருகே தள்ளினோம். 


"நாங்க கஷ்டப்பட்டு குற்றவாளியை தேடுவோமாம்.. ஆனா நீங்க கூடவே இருந்துக்கிட்டு அவனுங்களுக்கு உளவு சொல்விங்களா.? நாட்டு மக்களை கொல்லுறதுல அவ்வளவு சந்தோசமாடா நாய்களா.?" என்ற மூத்த அதிகாரி ஒருவர் சுற்றும் முற்றும் தேடி ஒரு பிரம்பை எடுத்து வந்தார்.


"நீங்க எங்க எல்லோரையும் கொன்னா கூட குண்டு வைக்கிறவனை பத்தி உங்களால கண்டுபிடிக்க முடியாது.."


கோபம் இல்லை. மீண்டும் அழுகைதான் வந்தது எனக்கு. எவனோ ஒருவனின் மூளை சலவைக்கு பலியாகும் அளவிற்கு பலவீனமானவர்களா இவர்கள்.? 


எத்தனை நாள் ஒன்று சேர்ந்து இதே நாட்டிற்காக உழைத்திருப்போம்.! அதையெல்லாம் நினைக்கையில் இதயத்தில் ரத்தம் வழிவதை போலிருந்தது. 


"என் நாட்டுல துரோகி இல்ல.. இருக்க விட மாட்டோம்.." என்ற விஷால் மூத்த அதிகாரி கையில் இருந்த பிரம்பை வாங்கி அவர்கள் இருவரையும் சராமரியாக அடித்தான்.


நேரில் பார்த்து அறியாமல் இருந்திருந்தால் இவர்கள் துரோகிகள் என்பதை செத்தாலும் நம்பியிருக்க மாட்டேன் நான். எனது இந்த நம்பிக்கைதான் இந்த குண்டு வெடிப்புகளை தொடர வைத்தது என நினைக்கையில் என்னையே கொன்றுக் கொள்ள வேண்டும் போல கோபம் வந்தது.


சுற்றி சுற்றி அலசியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. யாரோ பார்வையை மறைக்கிறார்கள் என்று புரிந்தது.


புதிதாய் ஒருவனை குழுவில் சேர்த்தேன் நான். அனைவரோடும் பழக விட்டேன். மிட்டாய்க்காக உயிரை கொல்பவனை போல அவனும் நடித்தான். அவனையும் தங்கள் துரோக கூட்டத்தில் இவர்கள் சேர்க்க முயற்சித்த போதுதான் விசயமே எங்களுக்கு தெரிந்தது.


"உங்க யாரையும் நாங்க கொல்ல போறது கிடையாது.. உங்க குடும்பத்தைதான் கொல்ல போறோம்.." என்றான் விஷால்‌.


அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் விஷாலை முறைத்தான்.


"எங்க குடும்பத்துக்கு இதுல சம்பந்தம் இல்ல.." என்றான் இன்னொருவன்.


மூத்த அதிகாரி அவனின் வாய் மீது உதைத்தார்.


"பாம் வச்சவன் உன் பொண்டாட்டி காய் வாங்க போற மார்கெட்க்கு பாம் வைக்க மாட்டானா.? இல்ல அவன் உன் புள்ளை படிக்கிற ஸ்கூலுக்கு பாம் வைக்க மாட்டானா.? நேர் வானத்தை பார்த்து எச்சில் துப்பியவனை விடவும் முட்டாளா ஏன் இருக்கிங்க‌.?" என்றார் அவர் கோபத்தோடு.


"எல்லாம் நம்பிக்கை சார். பாம் வைக்க வந்த கூட்டம் எப்ப எங்கே பாம் வைக்குதுன்னு சொன்னா போதும், நாம நம்ம குடும்பத்தை மட்டும் காப்பாத்திகலாங்கற ஒரு கேவலமான நம்பிக்கை.." என்ற விஷால் மீண்டும் அவர்களை அடிக்க முயன்றான்.


"விஷால் போதும்.." என்ற என்னை அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தார்கள்.


"கொஞ்சம் தனியா பேசலாம் வாங்க.." என்று விஷாலையும் இன்னும் இரண்டு அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன் நான்.


"தீவிரவாத கும்பலை நாம கண்டிப்பா கண்டுபிடிச்சே ஆகணும்.. மறுபடியும் முதல்ல இருந்து தேடினா கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆகும். அது ஒருபக்கம் நடக்கட்டும். ஆனா இவங்களை யூஸ் பண்ணி ஒன்னு இரண்டு நாள்ல கண்டுபிடிச்சாகணும் நாம.." என்றேன் நான்.


"என்ன பிளான் சார்.?" என்றவர்களிடம் எனக்கு தோன்றிய திட்டங்களை சொன்னேன்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments