Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 27

 புவின் POV


"நீ இப்ப கிளம்பி வந்தாகணும் அண்ணா.." போனில் எதிர் முனையில் கத்தினான் என் தம்பி.


"என்னால முடியாது. அவ இல்லாம வர முடியாது.." என்றேன் நான் அதே கத்தலோடு.


"முட்டாள் ***. அவளை கொல்ல தங்சேயா ஆள் அனுப்பிட்டாரு. அவ இருக்கற இடம் இப்ப நம்ம ஆட்களுக்கு தெரியும். அந்த பில்டிங்க்ல இன்னும் ஒன் ஹவர்ல கன் சூட் நடக்க போகுது. மரியாதையா நீ இப்ப அந்த ஆபிசர்ஸோடு கிளம்பு.." 


"உங்களுக்கு ஏன் என் காதல் புரியல.?" அதீத கோபமெல்லாம் உயர் மன அழுத்தத்தை தந்து தீர்ந்த பிறகு சோகத்தின் விளிம்பில் நின்று கேட்டேன் இதை.


"காதல்.. அப்படி எந்த கருமமும் இல்ல. சும்மா மயங்கி கிடக்காம உன் புத்தியை வச்சி தெளிவா யோசி. நீ ஒரு போராளி. இந்த உலகத்தோட சிவிலிசேசனை அழிச்சி பழைய காலம் போல வனத்துக்கு வாழ போகும் வாழ்க்கைக்கு ஆரம்ப சுழி போட போறவனே நீதான்.. எவளோ ஒருத்திக்காக உன் போராட்டத்தை ஒதுக்கி வைக்காதே.!" என்றான்.


நெஞ்சின் கோபம் என்னை உடைத்தது. குழலி துப்பாக்கியின் தோட்டாக்களை எப்படி பொறுத்துக் கொள்வாள் என்பதை நினைக்கையில் நெஞ்சம் அழுதது.


"இப்ப நீ அந்த ஆபிசஸ்ர்ஸோடு கிளம்பலன்னா அப்புறம் உன்னை அங்கிருந்து திருப்பி கொண்டு வருவது நடக்காத காரியம். அதை புரிஞ்சிக்கோ.!" என்றவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.


தலையை பிடித்தபடி சுவரோடு சுவராக சரிந்து அமர்ந்தேன். இவளை ஏன் பார்த்தேன் என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.


தாமு என் அறையின் வெளியே எனக்காக காத்திருக்கிறான். அவனோடு சேர்ந்து இரண்டு உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். என்னை தப்புவிக்க வேண்டும் என்பதற்காக தன் ஆட்கள் மூலமாக அந்த அதிகாரிகள் வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் கடத்தி எங்கேயோ மறைத்து வைத்திருக்கிறான் தாமு. 


இந்நாட்டின் எல்லையில் கொண்டு போய் என்னை சேர்க்க இருக்கிறார்கள் இவர்கள். எனது பாதுகாப்பில் தங்சேயா அதிக அக்கறை கொண்டுள்ளார். 


ஆனால் எனக்கு குழலியை விட்டுச் செல்ல மனம் இல்லை. 


அறைக்குள் வந்த தாமு "நாம இப்ப கிளம்பணும் சார்.." என்றான்.


எப்படி கிளம்புவேன் நான்‌? உயிரை விட்டுவிட்டவர்கள் சுடுகாடு மட்டும்தான் செல்வார்கள். என் உயிர் குழலியை இங்கே விட்டுவிட்டு நான் எங்கே செல்வேன்.? 


தாமு எனது பொருட்கள் நிரம்பிய பையை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். நான் நிச்சயம் சென்றே ஆகவேண்டும் என்பதன் அர்த்தம் அது. 


வாசற்படியில் நின்றபடி திரும்பி பார்த்தவன் "அந்த பொண்ணை நிச்சயம் நாங்க கொண்டு வந்து உங்ககிட்ட சேர்த்துடுவோம் சார்‌ நம்புங்க.." என்றான்.


இன்னொரு ஒரு மணி நேரத்தில் அவள் இருக்கும் இடம் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாக போகிறது. அவளை யார் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பார்கள். ஒரு மணி நேரம். அவளிடம் நான் செல்லவே இரண்டு மணி நேரங்கள் ஆகலாம். ஒரு மணி நேரத்திற்குள் சென்றாலும் அவளை எப்படி காப்பாற்றுவேன் நான்.? தன சேகரை கொல்ல முடியும். ஆனால் அவளை அழைத்துக் கொண்டு தங்சேயாவிடம் செல்ல முடியுமா என்னால். அவள் என்னை என் எதிரிகளிடம் காட்டி தந்துள்ளாள். எங்கள் குழுவின் விதிப்படி அவளுக்கு கொடூர மரணம் கொடுக்கப்படும். அதற்கு இவளை நான் காப்பாற்றாமலேயே விடலாம்.


"போகலாம் சார்.." மீண்டும் தாமு அழைத்தான்.


பிணம் போல நடந்தேன். வாசலில் நின்றிருந்தது ஒரு ஹெலிகாப்டர். அந்த இரண்டு அதிகாரிகளும் என்னை வெறித்தார்கள். கைகளில் விலங்கோடு இருந்தார் ஒருவர். அவர்களோடு துணைக்கு வந்த இருவர் கைபேசியில் என்னை படம் பிடித்தார்கள். 


"ஒரு நிமிசம்.." என்ற தாமு என் அருகே ஓடி வந்தான். அவனின் கையில் இருந்த சிவப்பு சாயங்களை என் முகத்திலும் கழுத்திலும் சட்டையிலும் தேய்த்தான். 


"இப்ப ஓகே.." என்று விட்டு தூரமாக நகர்ந்து நின்றுக் கொண்டான்.


கைபேசியில் ஒருவன் வீடியோ எடுத்த நிலையில் என் கையில் விலங்கை அணிவித்தார் அந்த உயர் அதிகாரி.  


வீடியோ எடுத்து முடித்ததும் மற்றொரு அதிகாரி போனை வாங்கி தனது மேல் மட்ட அதிகாரிக்கு அழைத்துப் பேசினார்.


"எஸ் சார்.. நாங்க அவனை கண்டுபிடிச்சிட்டோம். அரெஸ்ட் பண்ணிட்டோம்.."


"..."


"இல்ல யாரும் சாகல. வீட்டுல இவன் மட்டும் தனியாதான் இருந்தான்.." 


"..."


"நாங்க ஒரு எட்டு பேர்தான் இந்த ஆபரேசன்ல இருந்தோம். நாங்க யார்கிட்டேயும் சொல்லல.."


"..."


"தன சேகர் சரி கிடையாது சார். நான் ஆரம்பத்தில இருந்தே அதைதான் சொல்றேன். அவன் இருக்கற ஏரியாவுலதான் இந்த தீவிரவாதியை நாங்க அரெஸ்ட் பண்ணி இருக்கோம். அவன் ஒரு வேஸ்ட் பெலோ சார்.."


"..."


"இப்போதைக்கு பிரெஸ்க்கு நியூஸ் போக வேணாம் சார்.. இவனை வச்சிதான் நாம மொத்த கும்பலையும் பிடிக்கணும்.."


"..."


"இல்ல சார், எங்களால அங்கே கொண்டு வர முடியாது. இவனை நம்மோட ரகசிய சிறைச்சாலைக்கு கொண்டு போகலாம்ன்னு இருக்கோம். அதை விட்டா சிறந்த பாதுகாப்பு நமக்கு இல்ல. அங்கே போன உடனே போன் பண்றேன் சார்.." என்றவர் போன் இணைப்பை துண்டித்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.


தாமுவின் போன் ஒலித்தது. போனை பேச சென்றான் அவன்.


அதே நேரத்தில் என் போனும் ஒலித்தது. அந்த அதிகாரி என்னை வெறுப்பாக பார்த்தபடி வந்து கை விலங்கை கழட்டி விட்டார்.


போனில் தம்பியாக இருக்கலாம் என நினைத்து எடுத்தேன். ரூபி அழைத்திருந்தாள்.


"பாஸ்.." அவசரமாக ஒலித்தது அவளின் குரல். 


"சொல்லு ரூபி.." உணர்ச்சிகளற்று ஒலித்தது என் குரல்.


"அந்த பொண்ணை கொடூரமா கொல்ல போறாங்க.." என்றாள்.


அந்த பெண் யாரென்று அவள் சொல்லாமலேயே புரிந்தது‌. அதுதான் ஏற்கனவே தெரிந்த விசயம் ஆயிற்றே என நினைத்தது என் மனம்.


"தெரியும் ரூபி.." என்றேன்.


"உங்க தம்பி சொன்னது இல்ல பாஸ். அவங்க இந்த கன் சூட்ல அங்கிருக்கும் எல்லோரையும் கொல்ல போறாங்க. ஆனா அந்த பொண்ணை கொல்ல போறது கிடையாது. கடத்த போறாங்க. அவளை தினமும் அணுஅணுவா சித்திரவதை செய்ய போறாங்க. கத்தி, துப்பாக்கி, ஊசிகள், மற்ற ஆயுதங்களால அவளை கொஞ்சம் கொஞ்சமா கொல்ல போறாங்க. ஆண்கள் மற்றும் பெண்கள் அவளை ரேப் பண்ண போறாங்க. இருக்கும் எல்லா வித கொடூரமும் அவளுக்கு நடக்க போகுது‌. அவளோட சித்திரவதை நாட்களை தினம் வீடியோ எடுத்து நம்ம குழுவில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி வைக்க போறாங்க. அவ சாகறதை பார்த்த பிறகு நம்ம குழுவுல இருக்கும் யாரும் நீங்க செஞ்ச தப்பை செய்ய மாட்டாங்கன்னு தங்சேயா நினைக்கிறார். அது அவரோட திட்டம்தான். ஆனா நீங்க உங்க சொதப்பலான மனசாலதான் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையை கொண்டு வந்து தந்திருக்கிங்க.." என்றாள்.


நெற்றியில் அடித்தபடி சுவரில் சாய்ந்தேன் நான். தங்சேயா இதற்கு பதிலாக எனக்கு கொடூர மரணத்தை தந்திருக்கலாம். அவளை இனி என்னால் எப்போதும் காப்பாற்ற முடியாது. எனக்கு தெரியும் தங்சேயாவை பற்றி. அவரின் தண்டனை சட்டத்திற்கு உட்பட்ட யாருமே தப்பி பிழைத்ததே கிடையாது. 


ஒரு மணி நேரத்திலும் அவளை என்னால் காப்பாற்ற இயலாது. ஒரு மாதங்கள் கழித்தும் அவளை என்னால் காப்பாற்ற இயலாது‌. தங்சேயாவை நான் கொன்றால் கூட குழலி மீண்டும் எனக்கு கிடைக்க மாட்டாள். 


என்ன செய்வது என்று சுத்தமாக தெரியவில்லை. நான் இறந்தாலும் அவளுக்கான தண்டனைகள் விலக்கப்படாது. தங்சேயாவிடம் கெஞ்சுவதிலும் பிரயோசனம் இல்லை. நானே என்னை கொன்றுக் கொள்வதிலும் பிரயோசனம் இல்லை. அவரின் இடத்தில் நான் இருந்திருந்தாலும் இதேதான் செய்திருப்பேன்‌. எங்கள் குழுவின் விதி உங்களுக்கு தெரியாது. அதனால் என்னை உங்களால் புரிந்துக் கொள்ளவும் முடியாது.


"புவி.." தாமு அவசரமாக என்னிடம் ஓடி வந்தான்.


"அந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு நினைக்கிறேன். டாக்டருக்கு சொல்லி இருக்காங்க. ஆனா டாக்டரை நம்ம பசங்க தூக்கிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு கேட்கிறாங்க. 'நாங்க ஒருத்தர் டாக்டர் வேசம் போட்டுட்டு உள்ளே போய் அந்த பெண்ணை வெளியே கூட்டி வரட்டுங்களா'ன்னு கேட்கிறாங்க.. ஆனா அது சாத்தியம் கிடையாது.. நாம எப்படி.." 


"அவங்களுக்கு போன் பண்ணி கொடு.." என்றேன்.


தாமு அவசரமாக போனை எடுத்து எண்களை பதிந்து என்னிடம் தந்தான்.


"அந்த டாக்டர்க்கிட்ட சொல்லி குழலியை கொல்ல சொல்லுங்க. விஷ ஊசி.. வெறும் காற்று ஊசின்னு ஏதாவது ஒன்னு போட்டு அவளை ஈஸியாக சீக்கிரம் கொல்ல சொல்லுங்க. இல்லன்னா அந்த டாக்டரோட குடும்பம் மொத்தமும் அழிக்கப்படும்ன்னு சொல்லுங்க.." என்றேன் அவசர குரலில்.


"ஆனா சார்.."


"ஜஸ்ட் டூ இட் மேன்.. எனக்கு டைம் இல்ல. அவளுக்கும் டைம் இல்ல.. நீ அந்த டாக்டர்கிட்ட போனை கொடு.." என்றேன் கோபத்தோடு‌.


சில நொடிகளுக்கு பிறகு "ஹலோ.." என்றாள் அந்த பெண் மருத்துவர்.


நான் யாரென்றும் குழலி யாரென்றும் அவளிடம் விளக்கினேன். நிச்சயம் அவள் குழலியை இந்த நொடியிலேயே வெறுத்திருப்பாள்.


"அவளை நீ கொல்லணும். இல்லன்னா உன் பேமிலி மெம்பர்ஸ் யாரும் உயிரோடு இருக்க மாட்டாங்க. வாதம் பண்ண உனக்கு நேரம் கிடையாது. இதை நீ இன்னும் பத்து நிமிசத்துல செஞ்சி முடிக்கலன்னா உன் வீட்டு வாசல்ல இருக்கும் என் ஆளுங்க உன் குழந்தைகளை கொன்னுடுவாங்க.." என்றேன் மிரட்டலாக. 


அவள் வீட்டு வாசலில் யாரும் இல்லை. ஆனால் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க எனக்கு நேரமும் இல்லை.


"நான் இப்ப வீடியோ கால் பண்ண போறேன். நீ தில்லாலங்கடியா நடக்க நினைச்சா இழப்பு உனக்குதான்.. அவ சாவதை நான் என் கண்ணால பார்த்து உறுதி செய்யணும்.." என்றேன்.


"ம்.." என்றாள் அவள். அவளின் குரலில் சிறிது அழுகை இருந்தது‌. அதிகம் பயந்துள்ளாள். 


சாதாரண அழைப்பை வீடியோ அழைப்பாக மாற்றினேன். இளம் பெண்ணாகதான் இருந்தாள் அவள். 


"ப்ளீஸ் என் குழந்தைகளை விட்டுடு.." என்று கெஞ்சினாள்.


"நான் சொன்னதை நீ செய்.." என்றேன். 


அவளை தங்களது காரிலிருந்து கீழே இறக்கி விட்டார்கள் தாமுவின் ஆட்கள். 


கண்ணீரை துடைத்தபடி நடந்தாள் அவள். நான்கடி நடந்ததும் போனை கைகளில் மறைத்துக் கொண்டாள்.


"டைம் ஆச்சி.. கிளம்பணும்.." என்றார் வெளியே இருந்த ஒரு அதிகாரி.


"பத்து நிமிசம்.." என்றேன் நான். துண்டு ஒன்றை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டேன்.


சற்று நேரங்களுக்கு பிறகு குழலியின் முகம் திரையில் வந்தது. சோர்ந்து போய் இருந்தாள். அவளை பார்த்ததும் உயிரே திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. 


மருத்துவர் அவளின் வாயிலும் கைகளிலும் டேப்பால் சீல் செய்தாள். குழலி கத்தி தன்னை மாட்டி விட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் அவள்.


தலை முடியை கோதியபடி அவளை பார்த்தேன்.


"சாரி குழலி! போலிஸ் என்னை நெருங்கிட்டு இருக்கு.! மரணம் உன்னை நெருங்கிட்டு இருக்கு! என்னால உன்னை காப்பாத்த முடியல!" என்றேன். இதை சொல்லுகையில் கையாளாகதனத்தை முழுதாக உணர்ந்தேன். அவளை எவ்வளவு நேசித்தும் என்னால் அவளுக்கான பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியவில்லை.


அவளின் வாய் மீதிருந்த டேப்பை பிரிக்க சொல்லி டாக்டரிடம் கண் சைகை காட்டினேன். டாக்டர் அவள் வாயின் மீதிருந்த டேப்பை கொஞ்சமாக பிரித்தாள்.


"நாம இனி சந்திக்க வாய்ப்பே இல்ல குழலி!"


"எனக்கும் அதுதான் வேணும் புவின்.. உன்னை நான் காதலிச்சது தப்பு!" விம்மியபடி சொன்னாள் அவள். உடனே அவளது வாயின் மீது டேப்பை ஒட்டினாள் அந்த மருத்துவர்.


அவளின் அழுகை மனதை பிசைந்தது.


"நான் இங்கிருந்து கிளம்பறேன். உன்னை கொல்ல நாலாபுறமும் ஆட்கள் வந்துட்டு இருக்காங்க.! உன் மரணம் கொடூரமானதா இருந்தா நிச்சயம் என்னால அதை தாங்க முடியாது.! உன்னை என்னால காப்பாத்த முடியாத சூழல். அதுக்கு காரணம் நீயேதான்.! நீ மட்டும் வீட்டை விட்டு போகாம இருந்திருந்தா இந்த பிரச்சனை எதுவும் வந்திருக்காது.! என் காதலுக்கு நான் செய்ய கூடிய அதிகப்பட்ச உதவியே வலியில்லா மரணத்தை உனக்கு தருவதுதான்!" இதை சொல்கையில் என் உயிரே உடைந்து நொறுங்கி போனது.


அவளின் கையில் ஊசியின் முனை இறங்கியது. என்னையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். பார்வை மங்கலாகியது உணர்ந்தேன் நான். கண்களின் ஈரத்தை துடைத்துக் கொண்டேன்.


"லவ் யூ குழலி.! செத்தாலும் உன்னை மறக்க மாட்டேன்.! நீ எல்லாமும்.! நீ தங்சேயாவை விட எனக்கு முக்கியமானவள்.! உன்னை போன்ற பொக்கிஷம் கிடைச்சது என்னோட வரம்.! ஆனா உன்னோடு காலத்துக்கும் சேர்ந்து வாழ முடியாம போச்சி.! நிச்சயம் உன்னை தவிர வேறு யாருமே என் மனசுல அந்த இடத்தை பிடிக்கவே முடியாது.! இது என் காதலின் மீது சத்தியம்.!" என்றேன். என் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லி விட்டால் பிறகு பாரம் இருக்காது என்று என்னையே பொய்யாய் ஏமாற்றிக் கொண்டேன் நான்.


அந்த மருத்துவர் அவளது கட்டை அவிழ்த்தாள். குழலியின் முகத்தில் மயக்கம் குடி கொண்டது. லேசாக தள்ளாடினாள்.


"நானும் உன்னை லவ் பண்றேன் புவின்.! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் மனசுல நீ ஒருத்தன் மட்டும்தான்.! ஆனா தயவு செஞ்சி போலிஸிடம் சரணடைஞ்சிடு.! என் மக்களை கொல்லாதே! உன் பாவங்களை அதிகமாக்கிட்டே போகாதே.! ப்ளீஸ்.." என்றாள். 


அதை சொல்லி முடித்த நேரத்தில் அமரவும் தெம்பு இல்லாமல் கட்டிலில் சாய்ந்தாள்.


அந்த டாக்டர் குழலியின் முகத்திற்கு நேராக போனை எடுத்துச் சென்றாள். குழலி இறந்துக் கொண்டிருந்தாள். நான் அழுதுக் கொண்டிருந்தேன். எனது எல்லாமும் என்னை விட்டு பறிக்க படுகிற உணர்வு. 


எனது ஜீவனை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தெடுப்பது போலிருந்தது. இவ்வளவு வலியை என் வாழ்நாளில் என்றுமே உணர்ந்தது இல்லை நான். மரணம் இதை விட சற்று குறைவான காயத்தை தந்திருக்கும் என்று தோன்றியது.


குழலி கண்களை மூடினாள். கத்தி கதறி அழ தோன்றியது. கோழையை போல் வாய் மூடி குலுங்கிக் கொண்டிருந்தேன். 


ஏன் இந்த காதல்.? ஏன் இந்த குறுகிய கால சொர்க்கம்.? சபிக்கப்பட்டவன் நான். ஆண்டவன் எனக்கு எதற்காக இப்படி ஒரு பூந்தோட்டத்தை பரிசாக தந்து அதை உடனே நெருப்பிட வேண்டும்.? 


அந்த மருத்துவர் குழலியின் மணிக்கட்டை கையில் எடுத்தாள். பிறகு கீழே விட்டாள். 


"டெட்.." என்றாள். விம்மலோடு போனை கீழே விட்டேன் நான்.


"அழ நேரம் இல்ல புவின்.. நாம உடனே கிளம்பி ஆகணும்.." என்றான் தாமு.


வாசலை நோக்கி நடந்தேன்.


தாமு தடுத்து நிறுத்தினான்.


"இப்படியேவா.? முகமெல்லாம் அசிங்கமா இருக்கு. பேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க.." என்றான்.


அருகே இருந்த பாத்ரூமை நோக்கி நடந்தேன் நான். எந்த தண்ணீரால் என் கண்ணீரை துடைக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு‌.


தன சேகர் POV


விஷால் என் முன் நின்றிருந்தான். குழலியை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருப்பதாக சொன்னான். 


"அவனை சீக்கிரம் பிடிச்சிடணும் சார்.. இந்த பொண்ணுக்கு அவனை பிடிச்ச பிறகுதான் நிம்மதியா தூக்கமே வரும்.." என்றான் விஷால்.


"எனக்கும்.." எனது உரையாடலின் இடையே "டொய்ங்க்.." என்று சத்தமிட்டது எனது கைபேசி.


எடுத்துப் பார்த்தேன். எனது மேலதிகாரிகளில் ஒருவரான வீராச்சாமியிடம் இருந்து வந்திருந்தது அந்த செய்தி. அவருக்கும் எனக்கும் அவ்வளவாக ஒத்து வராதுதான். ஆனால் மிகவும் நேர்மையான அதிகாரி அவர். சாதாரணமாக என்னோடு பேச கூட மாட்டார் அவர். இன்று செய்தி அனுப்பியது அதிசயம்தான்.


"நானும் சர்மாவும் இங்கே ஒரு ஆபரேஷனுக்கு வந்திருக்கோம் சேகர்‌. உடனே நீ எனக்கு தெரியாத ஆபரேஷனான்னு கேட்க வேணாம். உனக்கு தெரியாததுதான். யாருக்குமே தெரியாதது. 


புவின் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும். ஆனா இங்கே விஷயம் வேற. அவனோட ஆளுங்க எங்க பேமிலியை கடத்தி வச்சிருக்காங்க. நானும் சர்மாவும் அவனை நாட்டோட எல்லையில் கொண்டுப்போய் விடணும்ன்னு டிமான்ட் பண்ணியிருக்கான் இவன். பேமிலிக்காக ஒத்துக்கறதா சொல்லிட்டோம் நாங்களும். யாருக்கும் சந்தேகம் வர கூடாதுன்னு நாங்க ஒரு ஆபரேஷனை திட்டமிட்டு இவனை பிடிச்சதாகவும், இவனை ரகசிய சிறைக்கு கூட்டி போறதாகவும் உயர் அதிகாரிங்ககிட்ட சொல்லியிருக்கேன் நான். ஆனா அது பொய். 


நாங்க இவனை நாட்டோட எல்லைக்கு கொண்டுப் போய் விடப்போறதும் இல்ல. ரகசிய சிறைக்கு கூட்டிப் போக போகறதும் இல்ல. நடு வானத்துல ஹெலிகாப்டரை பிளாஸ்ட் பண்ண போறோம். 


எங்களுக்காக நீ ஒன்னும் அழ வேணாம். சீனியர் ஆபிசர்ஸை மதிக்கணும்ன்னு விஷால்கிட்ட சொல்லு. நாங்க உன்னையும் அவனையும் மிஸ் பண்ண போறோம். ஆனா நீ மிஸ் பண்ண தேவையில்லை. அதுக்கு பதிலா எங்க பேமிலியை சட்டுன்னு கண்டுபிடிச்சி காப்பாத்து. ப்ளீஸ்.! அவங்கிட்ட சொல்லு, பணியில் இருக்கும்போதுதான் நான் இறந்தேன்னு.!"


நான் படித்ததை கேட்டு விட்டு போனை என்னிடமிருந்து பிடுங்கினான் விஷால்‌. வீராச்சாமிக்கு அழைத்தான். 


"ஸ்விட்ச் ஆஃப் சார்.." என்றான். 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments