Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 71

 காத்தவராயனும் காந்திமதியும் மகனின் மன்னிப்பை பெற வேண்டுமென்று ஊட்டியை விட்டுவிட்டு இங்கே வந்துதான் தங்கியிருந்தனர். அதனால்தான் சங்கவி அழைத்த உடனே வீட்டிற்கு வந்து விட்டனர்.


ஆனால் அவனோ தன் காயத்துக்கு கட்டுப் போட்டு முடிந்ததும் "நீங்க போகலாம்.." என்றான்.


"சாரி ஆதீ.." என்றாள் காந்திமதி.


"நீங்க சாரி கேட்கறதால் எதுவும் மாறிடாது. தயவு செஞ்சி போங்க.." என்றவன் தனது அறையை நோக்கி நடக்க "நீங்க இருங்க அத்தை.." என்றாள் சங்கவி.


திரும்பிப் பார்த்தான் ஆதீரன்.


'குளிர் விட்டுப் போச்சி இவளுக்கு..' பற்களை கடித்தவனை ஓரக்கண்ணால் பார்த்த சங்கவி "மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு மாமா.. அத்தை இருந்தா நல்லாருக்கும்.." என்றாள் சிறு குரலில்.


ரேகா சொன்ன டிப்ரஸன் என்ற வார்த்தை வேறு அவனை யோசிக்க வைத்தது.


"என்னவோ பண்ணுங்க.." என்றவன் விடுவிடுவென்று சென்று விட்டான்.


காந்திமதி மருமகளை சாப்பிட வைத்து அழைத்துச் சென்றாள். யோசனையில் இருந்த ஆதீரன் இருவரும் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.


சங்கவியை படுக்கையில் விட்டாள். போர்வையை போர்த்தி விட்டவள் "ரெஸ்ட் எடும்மா.. எல்லாம் சரியா போயிடும். கண்டிப்பா நீ ஸ்ட்ராங்காகிடுவ.." என்றாள்.


சங்கவி சரியென தலையசைத்தாள்.


அவளை விட்டுவிட்டு கிளம்பினாள்.


அம்மா சென்றதும் கதவை தாழிட்டுவிட்டு வந்தான் ஆதீரன்.


"உன் மனசுல என்ன குறை.?" எனக் கேட்டான்.


"எதுவும் இல்ல.." என்றவள் அவனின் கட்டுப்போட்ட கையை கண்டுவிட்டு "உங்களுக்குதான் அடிக்கடி பைத்தியம் பிடிச்சிடுது.." என்றாள்.


"மண்ணாங்கட்டி.." திட்டியவன் அவளின் கழுத்தில் கை பதித்து சூட்டை சோதித்தான். காய்ச்சல் இல்லை. அவளருகே தலை சாய்ந்தான்.


"உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் என்கிட்ட மறைக்காம சொல்லு.." என்றவன் அவளை அணைத்தபடி கண்களை மூடினான். 


தனபால் கதவை படபடவென்று தட்டினார்.


"ஒரு மனுசன் எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன்.? கதவை திறக்க என்னடி கேடு.?" எரிச்சலோடு கத்தியவர் கதவை திறந்த இளம்பெண்ணை கண்டு விட்டு கண்களை சுருக்கினார்.


ஷார்ட் டிரவுசரும், வயிறு தெரியும்படியான ஒரு மாடர்ன் பிளவுஸூம் அணிந்திருந்த யவனா "உள்ளே வாங்க மாமா.. அத்தை சமைச்சிட்டு இருக்காங்க. அதனாலதான் உடனே கதவை திறக்க முடியல.." என்றாள்.


அவளின் மாமாவென்ற விளிப்பில் குழம்பியவர் குழம்பியபடியே வந்து சோபாவில் அமர்ந்தார். சமையலறைக்கு ஓடியவள் காப்பியை கொண்டு வந்து அவரின் முன்னால் வைத்து விட்டு மீண்டும் உள்ளே ஓடி விட்டாள்.


"இதை அண்ணன்கிட்ட கொடுத்துட்டு வா தாரணி.." என்று காப்பியை நீட்டினாள் குணவதி.


"நான் கொண்டுப் போய் கொடுத்துட்டு வரேன் அத்தை.." காப்பி கப்பை வாங்கிக் கொண்டு போனாள்.


"நல்ல சுறுசுறுப்பான பொண்ணு.. குணமுள்ள பொண்ணு.." என்றாள் குணவதி.


"ஆமா அம்மா.." என்ற தாரணிக்கு இதயம் வலித்தது. யவனாவை போன்ற நல்ல குணம் தனக்கும் இருந்திருக்கலாம் என்று நினைத்தாள்.


வருணின் அறை கதவை திறந்தாள் யவனா. கவிழ்ந்தடித்து சிறு சத்தத்தில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.


காப்பி கப்பை டேபிளின் மீது வைத்தவள் அவனின் தோளில் தட்டினாள்.


"தூங்க விடுங்கம்மா.." என்றவன் பெட்ஷீட்டை தூக்கி வீசினான். அந்த பெட்ஷீட் அவளின் காலடியில் வந்து விழுந்தது.


"நான் அம்மா இல்ல யவனா.. உங்களுக்கு காப்பியை கொடுக்க வந்தேன்.." இவளின் குரலில் பட்டென்று எழுந்து அமர்ந்தான்.


"இங்கே என்ன ப.." அவளின் உடையை பார்த்தவன் "என்ன எழவு டிரெஸ் இது.?" எனக் கேட்டான் எரிச்சலோடு.


அவனின் முக சுளிப்பில் கண்களே கலங்கி விட்டது அவளுக்கு.


"ரொ.. ரொம்ப அசிங்கமா இருக்கேனா.?" உதட்டை கடித்து அழுகையை அடக்கியபடி அவள் கேட்கவும், தலையை கோதி விட்டுக் கொண்டான்.


"அ.. அப்படி மீன் பண்ணல நான்.." என்றவன் ஈரம் மின்னும் அவளின் விழிகளை கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டான். 


அவளது வீட்டில் இந்த உடை சாதாரணம் என்று அவனால் யூகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்த வீடு அப்படி இல்லையே! 


எப்போதும் அழகாய்தான் இருந்தாள். அவள் அணிந்திருக்கும் கண்ணாடி கூட அழகை எடுத்துக் கொடுத்தது. இப்போது இந்த உடையிலோ அழகை தாண்டி கவர்ச்சி அதிகமாக தெரிந்தது. முகம் சுளிக்க வைக்கவில்லை. ரசிக்கதான் தோன்றியது. ஆனால் அதற்காக அவளை அப்படியே இருக்க அனுமதிக்க முடியுமா?


"ரொம்ப மோசமா இருக்கேனா.? உண்மையை சொல்லுங்க.." சிறு கெஞ்சலாக கேட்டாள்.


"நல்லாதான் இருக்க. ஆனா இந்த வீட்டுல இது மாதிரி டிரெஸ் போடாதே.." 


"சரி நான் மாத்திக்கறேன்.." என்றவள் அங்கிருந்து திரும்ப, "போகும் முன்னாடி அந்த காப்பியை எடுத்துக் கொடுத்துட்டு போ.." என்றான்.


சரியென்று திரும்பியவள் காலில் மாட்டிய பெட்ஷீட்டால் தடுமாறி, அவன் மீது விழுந்தாள்.


ஒற்றை கையை ஊன்றி அரை குறை தூக்கத்தோடு அமர்ந்திருந்தவன் அவள் தன் மீது விழவும் தானும் தடுமாறி பின்னால் சாய்ந்தான்.


கைகள் அனிச்சையாக அவளின் இடையை பற்றி விட்டன. அரை குறை ஆடையில் இருந்தவளை இந்த நிலையில், இந்த கோணத்தில் பார்ப்பது தவறாக தோன்றவும் சட்டென்று கண்களை மூடிக் கொண்டான்.


"ஐய்யய்யோ சாரிங்க. கால் தடுக்கி விட்டிருச்சி.." என்றவளின் வாயிலிருந்து ஏலக்காய் வாசனை மிதந்து வந்தது.


"பாயசம் சாப்பிட்டியா.?" கண்களை திறந்து அவளின் கண்களை மட்டும் பார்த்துக் கேட்டான்.


'இந்த மாதிரி ஒரு பொசிசனில் இந்த கேள்வி அவசியமா?' என நினைத்தவள் "இல்லைங்க. வாய் நமநமன்னு இருக்குன்னு ஏலக்காயை மென்னேன்.." என்றாள்.


"ஓ.." 


"என்னை விடுறிங்களா?" தயங்கி கேட்டாள். சட்டென்று கையை விலக்கிக் கொண்டான்.


அவனின் நெஞ்சில் கையை வைத்து எழுந்தாள். அவளின் கையை பற்றி இழுத்தான். அவன் மீதே வந்து விழுந்தாள்.


"ஏன்ங்க.?" 


"அப்படி எழ முடியாது.." அவளை தன் வலது கை பக்கத்தில் உருட்டி விட்டான்.


"இப்ப எழுந்துக்கோ.." என்றவன் நேராக எழுந்து அமர்ந்த வேளையில் அவளும் எழுந்து விட்டாள்.


காப்பியை எடுத்து அவனிடம் தந்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.


தன்னை தாண்டிச் சென்றவளின் கால்களை வெறித்துக் கொண்டிருந்தார் தனபால். 


"உங்க அண்ணா ஆபிஸ் போக மாட்டாரா அண்ணி.? எப்பவும் வீட்டுலயே இருக்காரு!?" தன் சந்தேகத்தை தாரணியிடம் கேட்டாள் யவனா. அவளின் பின்னாலேயே காப்பி கோப்பையோடு வந்து விட்ட வருண் அவளின் இடுப்பை வெறித்தபடி வாசற்படியிலேயே சாய்ந்து நின்றான்.


"அவன் வெட்டியாதான் இருக்கான். சாப்பிடுவான். தூங்குவான். டீவி பார்ப்பான். இல்லன்னா பிரெண்ட் வீடு போறேன்னு ஓடி போயிடுவான்.." தாரணி சொன்ன விசயம் கேட்டு களுக்கென்று சிரித்தாள் யவனா.


பற்களை அரைத்தான் வருண். சத்தம் கேட்டு திரும்பிய யவனா இவனை கண்டதும் அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.


தன்னை பார்த்தவளின் கழுத்தின் கீழ் விழிகளை பதித்த வருண் குறுகுறுவென்று பார்த்தான். 


யவனாவிற்கு நொடியில் உடம்பு கூசி போய் விட்டது. ரசிப்பது வேறு ரகம். ஆனால் உடம்பை வெறிப்பது தனி ரகம். அவனின் கண்களில் வேட்டை நாயின் பார்வை தென்பட்டது. 


சென்ற நொடி வரை நல்லவனாகதான் இருந்தான். இப்போது என்ன வந்தது என்று புரியாமல் அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள். 


தன்னை கடந்து சென்றவளின் அந்த பக்க இடையிலிருந்து இந்த பக்க இடை வரை இரு விரல்களால் கோடிழுத்தான். 


நொடி நேரம்தான் என்றாலும் முழுதாக நடுங்கி விட்டாள் யவனா. காதலாய் இருந்தால் காரணம் சொல்லலாம். ஆனால் கண்களில் காமம் மட்டுமே கொண்டு பார்ப்பவனை கண்டு பயப்படாமல் இருக்க முடியவில்லை.


வேற்றுடை உடுத்திய பிறகும் கூட அவன் மீதான அபிப்பிராயம் போகவில்லை. 


"யவனா.." தாரணியின் குரலில் வெளியே வந்தாள்.


வருண் முன்பிருந்த இடத்தில் இல்லை. தேடினாள். அவனின் அறை கதவில் சாய்ந்து நின்றிருந்தான். இவளை கண்டதும் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டான்.


செல்லாவின் மடியில் படுத்திருந்தான் சூர்யா. அவனின் தலையை வருடி விட்டபடி இருந்த பாட்டி செல்லா "ஏன்டா கண்ணா உன் காதலி எப்படா திரும்பி வருவா. அவ போட்டாவாவது காட்டுடா.." எனக் கேட்டாள்.


அப்போதுதான் விழிகளை மூடியிருந்தான் அவன். கண்களை திறந்து கடுப்போடு பார்த்தவன் அவளின் அன்பு நிறைந்த முகத்தை கண்டு விட்டு தனது கடுப்பை கை விட்டுவிட்டான்.


"இன்னும் கொஞ்ச நாளுல வந்துடுவா பாட்டி.." 


'குணமான பிறகு கண்ணான்னு கூப்பிட சொல்லணும்..' தன் போனில் குறிப்பெடுத்துக் கொண்டவன் அவளின் மடியிலேயே திரும்பிப் படுத்தான். பின்கொசுவம் வைத்து சேலை கட்டியிருந்தவளின் வயிற்றின் ஓரங்களை கண்டவன் தலையில் அடித்தபடி இந்த பக்கமாக திரும்பினான். 'டார்ச்சர் பண்றாடா சாமி!' 


கணுக்காலுக்கு மேலே இருந்தது கால் நீட்டி அமர்ந்திருந்தவளின் சேலை. கால் காப்பு அணிந்திருந்த கால் அழகாக இருந்தது. கையை நீட்டி அவளின் பாதம் வருடினான். இந்த விரல்களில் மெட்டிகளை அணிவித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தான்.


முதல் நாளில் அவளின் பாதத்தில் மட்டுமே ஐம்பது அறுபது முத்தங்களுக்கும் மேல் தந்திருப்பான்.


"பாவி.. என்னடா பண்ற.. கிழவியை கொன்னுபுடுவான் போல இருக்கே.!" அவனின் தோளில் அடித்தாள் செல்லா.


அந்நாள் நினைவில் தன் கைவிரல் நகங்களை அவளின் கணுக்கால் பகுதியில் இறக்கியிருந்தவன் அவள் தந்த அடியில் சுயநினைவுக்கு வந்தான்.


"சாரி பாட்டி.." என்றவன் எழுந்து அமர்ந்து அவளின் காலை தூக்கி தன் மடி மீது வைத்தான். ஊதி விட்டான். நகங்கள் பதிந்த இடங்கள் சிவந்து பிறை நிலவுகளை போல காட்சியளித்தன. முத்தமிட தோன்றியது. அமைதியாக காலை கீழிறக்கி வைத்தான்.


"நான் குளிக்க போறேன் பாட்டி.." என்றவன் அங்கிருந்து போய் விட்டான்.


"நல்லா அழுக்கு தேச்சி குளிடா.." என்றவள் கையை ஊன்றி எழுந்தாள்.


"அடியேய் பூங்கொடி.. சாப்பாடு ஆச்சாடி.?" 


சாப்பாடு மேஜையில் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பூங்கொடி அவளின் குரலை கேட்டதும் கை நடுங்கினாள். குழம்பு பாத்திரமும் நடுங்கி விட்டது.


"அவ உன் மாமியார் இல்ல. மருமகள்.." என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள். செல்லாவின் மாமியார் வகை குரலை கேட்டதும் அனிச்சையாக நடுங்கியது உடம்பு. 


நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள் செல்லா.


"சாப்பாட்டை போடு.." 


பொறுமையாக பரிமாறினாள். ஒரு வாய் உண்டதும் "என்ன கருமம்டி இது, உப்பும் இல்ல காரமும் இல்ல.?" எனக் கேட்டாள்.


"டாக்டர் உப்பு‌ காரம் கம்மியா கொடுக்க சொல்லி இருக்காங்க அத்தை.." 


"அவனுங்க கிடக்கறானுங்க. நீ உப்பு காரமெல்லாம்‌ நிறையவே போடு.." என்றவள் உணவை ஒரு பிடி‌ பிடித்து விட்டு எழுந்தாள்.


சூர்யா‌‌ தயாராகி வந்தான்.


"இன்னைக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கும்மா. அவளை அங்கே அனுப்பி வைக்காதிங்க. இங்கேயே வச்சி பார்த்துக்கங்க.." என்றான் உணவை உண்டபடி.


"அங்கிள் வேணும்ன்னு அழுவாளே.." பூங்கொடி கவலையோடு சொன்னாள்.


"ஏதாவது சமாளிங்கம்மா.. பொம்மை கொடுங்க. ஐஸ்கிரீம் கொடுங்க. கதை சொல்லுங்க. ஹோம் வொர்க் கொடுங்க.." என்றவன் உணவை முடித்துக் கொண்டு கிளம்பிப் போனான்.


அலெக்ஸின் கால்களுக்கு பவுடர் தடவினாள்‌ செல்லா.


"ஏம்மா ஒரு மாதிரி இருக்கிங்க.?" தயங்கி கேட்டார் அவர்.


"என்னவோ சீக்கிரமே உங்களை விட்டு போயிடுவேங்கற மாதிரியே இருக்கு. அம்மா செத்ததும் அழுதுடாதேடா அலெக்ஸூ.." என்றவள் அவரின் முகம் பார்த்தாள்.


"நீ சீக்கிரம் குணமாகி எழணும். பூங்கொடி அழுவுறா. உனக்கு தெரியல. சோறாக்கும் போது கூட வெப்பு வெப்புன்னே அழுவுது புள்ளை.. ரொம்ப நேசம் வச்சிருக்கா. எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்லடா. ஆனா அவளை உனக்கு கட்டி வச்சது ரொம்ப நல்ல காரியம்ன்னு தோணுது. உன் மேல உயிரையே வச்சிருக்கா. நான் இல்லன்னாலும் சரி.. அவளை எப்பவும் கண் கலங்க வைக்காத.. சூர்யாவுக்கும் இதே மாதிரி பொண்ணா பார்த்து கட்டி வை.. எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா நோன்பு நோன்புக்கு என் போட்டோவுக்கு மாலை போடும்போது மறக்காம ஒரு ரோஜா பூவையும் வை. என்னவோ பிடிச்சிருக்கு.." என்றாள்.


இரவு மணி பதினொன்று கடந்து போனது. 


"அம்மா செல்லா‌ வீட்டுக்கு வந்துட்டாளா.?" சந்தேகத்தோடு கேட்டான் சூர்யா.


"இல்லையேடா.. உன் பக்கத்துல இல்லையா.?" அம்மாவின் கேள்வியில் அவசரமாக அவளை தேடி ஓடினான்.


தன் காலடியில் மயங்கி கிடந்த செல்லாவை தலை சாய்த்து பார்த்தான் ஷேர்கான். "பியூட்டிபுல்.." என்று முணுமுணுத்தபடியே குனிந்து அவளின் கன்னத்தை வருடினான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..  எபி எப்பூடி.?😉



Post a Comment

1 Comments

  1. ஏன் ஜி இப்பிடி tension பண்றீங்க

    ReplyDelete