Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 72

 சூர்யா இயக்குனர்களுடனான மீட்டிங்கில் இருந்தான். இருளாக இருந்த அறையில் திரை மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. நிறுவனத்தை நிர்வகிப்பது பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் தலைமை இயக்குனர் ஒருவர். வேறு வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த செயலாளர்களும் மீட்டிங்கில் கவனமாக இருந்தனர்.


திரையை பார்த்தபடி நடு மத்தியில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான் சூர்யா. அவனின் போன் அதிர்ந்தது. 


அவன் நினைத்தது போலவே அம்மாதான் அழைத்திருந்தார். பாட்டி செல்லா குழந்தை செல்லாவாக மாறி மூன்று மணி நேரங்கள் கடந்திருக்கும் என்று அவனுக்கே தெரியும். மூன்று மணி நேரத்திற்கு அவளை சமாளித்ததே அம்மாவின் மிகப் பெரிய திறமையாக தெரிந்தது அவனுக்கு.


"செல்லா அழுது அழுது ஒரு மாதிரி ஆகிட்டா.. முகம் கூட வீங்கி போச்சி. உன்னை கேட்டுட்டே இருக்கா.." என்று குறுந்தகவல் அனுப்பினாள் பூங்கொடி.


செய்தியை படித்தவன் நெற்றியை தேய்த்துக் கொண்டான். அவளுக்கு அங்கிள் மட்டும்தான் வேண்டும். அது‌ மகிழ்ச்சியைதான் தந்தது அவனுக்கு. குணமான பிறகும் இதே போல அவள் தேடினால் அது சொர்க்கமாக இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது.


"அனுப்பி விடுங்க.." செய்தியை அனுப்பிவிட்டு கூட்டத்தை கவனித்தான்.


அரை மணி நேரம் கடந்தது. மூடியிருந்த ஹாலின் கதவு தட்டப்பட்டது.


"யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லியிருந்தேனே.." என்று எரிச்சலடைந்தான் ஜார்ஜ். 


கதவின் அருகில் நின்றிருந்த செக்யூரிட்டி கதவை திறந்தார்.


கரடி பொம்மையை அணைத்தபடி உள்ளே ஓடி வந்தாள் செல்லா. 


"அங்கிள்.." என்று அழுதபடியே சூர்யாவின் அருகில் சென்றாள். கையை நீட்டினான். அருகில் வந்தவளை அழைத்து மடியில் அமர வைத்துக் கொண்டான். அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு விசும்பினாள்.


"எங்கே போனிங்க நீங்க.? நான் உங்களை ரொம்ப நேரமா தேடினேன்.." என்றாள்.


"அழாம இரு.." அவளின் முதுகை வருடி தந்தவன் தன்னை விசித்திரமாக பார்த்த கூட்டத்தை பார்த்து "சாரி.. நீங்க கன்டினியூ பண்ணுங்க.." என்றான்.


கூட்டம்‌ மீண்டும் நடைபெற்றது.


செக்யூரிட்டியை சைகை காட்டி‌ வர சொன்னான். வந்தவரின் காதில் கிசுகிசுத்தான்.


பத்து நிமிடங்கள் கடந்தது.


"அ.." அழைத்தவளின் வாயை‌ பொத்தினான் சூர்யா. திரையை பார்த்தபடி கண்ணாக இருந்தவன் எதிரே மேஜையின் மீதிருந்த ஐஸ்கிரீமை எடுத்து அவளிடம் நீட்டினான்.


"க்யூட்.." என்று முணுமுணுத்தார் இளம் இயக்குனர்களில் ஒருவர்.


"தே.." செல்லா எதையோ ஆரம்பித்தாள்.


"ஸ்ஸ்." அவளின் வாயின் மீது சுட்டு விரலை வைத்தான் சூர்யா.


அவனின் விரலை தள்ளி விட்டுவிட்டு அவனின் கன்னத்தில் முத்தம் தந்தாள். "தேங்க்ஸ்.." என்றாள் கிசுகிசுப்பாக. அவள் தந்த முத்தத்தின் பாதி இதழ்களிலும் மீதி கன்னத்திலும் பதிந்திருந்தது.


சூர்யா உள் உதட்டை கடித்துக் கொண்டான். நாக்கின் கீழே உருவாகி இருந்த உமிழ்நீர் தொண்டையை தாண்டி செல்ல மறுத்தது. பாட்டிலை எடுத்தான். அரை லிட்டர் தண்ணீரையும் ஒரே மூச்சில் குடித்து விட்டு காலி பாட்டிலை வைத்தான். 


நேரம் கடந்தது. செல்லா நிறைய ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டிருந்தாள். 


நடைப்பெற்ற கூட்டத்திற்கு இடைவேளை விடப்பட்டது. சூர்யா செல்லாவை பார்த்தான். அவனின் கழுத்தை கட்டியபடி உறங்கி விட்டிருந்தாள். 


அவளை தூக்கிக் கொண்டு எழுந்தான்.


"வூ இஸ் திஸ்.?" ஜப்பானிலிருந்து வந்திருந்த ஒருவர் அருகே இருந்தவரிடம் கேட்டார்.


"ஹிஸ் வொய்ப்.." என்றார் அவர்.


சூர்யாவின் இதழ்கள் தானாக விரிந்தது. நெஞ்சுக்குள் சிறு மேக கூட்டம் கூடி நின்று மழையை பொழிந்தது போலிருந்தது.


அலுவலகத்திலிருந்த தனது அறைக்கு வந்ததும் அவளை சோஃபாவில் படுக்க வைத்தான். காலில் மேலேறியிருந்த உடையை சரி செய்தான். காலையில் பதிந்திருந்த நக தடங்களை கண்டவன் மென்மையாக அதன் மீது வருடி விட்டான். உறங்குபவளின் முகத்தை பார்த்து விட்டு அவளின் காலில் முத்தமிட்டான். கணுக்காலில் நெற்றியை பதித்தான்.


"ஐ மிஸ் யூ செல்லா.. தூரத்துல இருந்த வரை இப்படி இல்ல. ஆனா பக்கத்துல வச்சிட்டு என் காதலை உன்கிட்ட சொல்ல முடியாம, உன் காதலை வாங்கிக்க முடியாம ரணமா இருக்கு.." என்று முணுமுணுத்தான்.


எழுந்து கொண்டான். இன்னும் நான்கு மணி நேரத்திற்கு கூட்டம் நடைப்பெற இருந்தது. அது வரை இவள் உறங்கி கொண்டிருந்தால் போதும் என நினைத்தான்.


அறையை சாத்திவிட்டு போனான். 


காத்தவராயன் ஊட்டியிலிருந்த தன் வீட்டிலிருந்தார். மகனின் வீட்டிற்கு நிரந்தரமாக மாறுவதால் தனது தேவையான பொருட்களை எடுத்து செல்லலாம் என்று வந்திருந்தார்.


எதுவெல்லாம் தேவையென்று பார்த்துக் கொண்டிருந்தவரை கவனமீர்த்தது மேல் செல்பில் இருந்த பெட்டிகள் சில. அவையனைத்தும்‌ அவரின் கல்லூரி காலத்து பொக்கிஷங்கள். ஏதோவொரு நினைவில் பெட்டிகளை கீழே இறங்கினார். உள்ளே இருந்ததை சோதித்தார்.


கல்லூரியில் படிக்கையில் அவரோடு ஒரே அறையில் தங்கியிருந்த ஜூனியர் ஒருவரின் பொருட்களும் அதில் இருந்தன. அறையை காலி செய்கையில் அதையெல்லாம் சரியாய் கவனிக்காமல் எடுத்து வந்து விட்டது இப்போது நினைவிற்கு வந்தது. காதலி இல்லாத துக்கத்தில் எந்த பொருள் தனதென்று கூட சரியாய் கவனிக்காமல் போய் விட்டிருந்தார் அவர்.


ஜூனியரின் பொருட்களையும் தனது பொருட்களையும் கலைத்து பார்த்துக் கொண்டிருந்தவர் கையில் கிடைத்ததை கண்டு புருவம் சுருக்கினார். கண்கள் அகல மறுத்தது. மனதுக்குள் என்னவோ செய்தது. புயல் மழை, பெரும் சூறாவளி, நிலநடுக்கம் என்று உணர்வுகள் உண்டானது. நெற்றியிலும் பின்னங்கழுத்திலும் வியர்த்து விட்டது.


மொத்தத்தையும் விட்டுவிட்டு எழுந்து நின்றார். பற்கள் அரைப்பட்டன. கைகளில் மட்டுமல்ல மொத்த உடம்பிலுமே நரம்புகள் முறுக்கேறின.


யவனா யோசனையோடு குளித்துக் கொண்டிருந்தாள். நீரோடிய மேனியை பற்றிய சிந்தனை இல்லாமல் போய் விட்டது. வருணின் பார்வைக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றே யோசித்துக் கொண்டிருந்தாள். 


தலையில் இருந்த ஷேம்பு நுரை மெள்ள கீழிறிங்கி கண்களில் விழுந்தது. அவசரமாக கண்களை தேய்த்து விட்டுக் கொண்டாள். கண்கள் எரிந்தது. ஷவரை திருகினாள். தலையிலிருந்த மொத்த நுரையும் விலகி போனது. கண்களின் எரிச்சல்தான் தீரவில்லை.


சிரமப்பட்டு கண்களை திறந்தாள். எதிரே இருந்த சுவரில் விழுந்த நிழலை கண்டு அதிர்ந்து திரும்பினாள். வென்டிலேட்டரின் அந்த பக்கமிருந்த உருவம் முகத்தை காட்டாமல் திரும்பி போனது. 


தன் மேனியை அணைத்துக் கொண்டவள் நடுங்கும் இதயத்தோடு உடையை மாற்றினாள். 


வெளியே வந்தவள் செம்மண் பூசிய காலோடு வீட்டுக்குள் வந்த வருணை கண்டு அதிர்ந்தாள். அந்த வெண்டிலேட்டர் இருந்த இடத்தில் செம்மண்தான் இருந்தது. வேறு எங்கும் சிவப்பு மண்ணே கிடையாது அந்த வீட்டை சுற்றி. அந்த செம்மண் இருந்த இடத்தில்தான் செடிகள் செழித்து வளருமென்று சில ரோஜா செடிகளை நட்டு வைத்திருந்தாள் தாரணி. 


வாசலில் காலை பரபரவென்று தேய்த்து விட்டு உள்ளே வந்த வருண் தன்னை அதிர்ந்து பார்த்திருந்தவளை கண்டு நாக்கை சுழற்றினான். அவனின் பார்வை கண்டு உடல் கூசி தலையை திருப்பிக் கொண்டாள் யவனா.


"குளியல் சுகமா இருந்ததா.?" அவன் கேட்கவும் சந்தேகம் ஊர்ஜிதமாகி போனது. அவனை வெறித்தாள். தன் அண்ணியின் அண்ணன் இந்த அளவிற்கு கேவலமாக இருப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை. பார்வைக்கு அவனை பிடித்திருந்தது என்னவோ உண்மைதான். பார்த்த முதல் நாளே அவனை ரசித்திருந்தாள். ஆனால் மனதிற்கு தேவை அழகு இல்லையே. குணம்தானே? 


அருகே வந்தவன் அவளை கடந்துப் போகாமல் நேர் நின்றான்.


"ரொம்ப என்ஜாய் பண்ணி குளிச்ச.. சோப்பு நுரை நழுவி போகும்போது மொத்தமும் கிக்காதான் இருந்தது.. அதிலேயும் முக்கியமா இந்த இடம்.." என்றவன் அவளின் கழுத்தின் கீழே பார்வையோடு சேர்த்து கையையும் பதித்தான். அவனின் செயலை எதிர்பார்த்திருக்காத யவனா ஆத்திரத்தோடு சப்பென்று ஒரு அறையை விட்டாள். 


சிரித்தபடியே கையை பின்னிழுத்துக் கொண்டான்.


"இவ்வளவு கேவலமானவரா நீங்க.? உங்க மேல நல்ல மரியாதை வச்சிருந்தேன் நான்.." என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தவன் "நான் உத்தமன்னு உனக்கு எழுதல.  இது என் வீடு. என்னை குறை சொல்லி ஒரு பிரயோசனமும் இல்ல. உனக்கு என்னை சகிச்சிக்க விருப்பம் இல்லன்னா இங்கிருந்து கிளம்பு.." என்றவன் அவளை தாண்டி போனான்.


யவனா சிலையாக நின்றாள். 


துவைத்த துணிகளை அம்மாவோடு சேர்த்து காய வைத்த தாரணி அம்மா வரும் முன்னால் கீழே இறங்கினாள். வீட்டிற்குள் வந்தவள் தன் அண்ணனின் செய்கையை பார்த்து விட்டாள். அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.


யவனா கலங்கும் விழிகளை துடைத்தபடி தாரணியின் அறைக்குள் புகுந்தாள். தாரணி தன் அண்ணனின் அறைக்கு சென்றாள்.


அலமாரியில் ஏதோ வேலையாக இருந்தவன் கதவு திறந்த சத்தத்தில் திரும்பினான். யவனாவைதான் எதிர்பார்த்திருந்தான். 


"நீ என்ன பண்ணிட்டு இருக்க.?" என்றாள் தாரணி கதவை தாழிட்டுவிட்டு.


"போட்டுக்க டிரெஸ் எடுத்துட்டு இருக்கேன். ஏன்.?" என்றவனை முறைத்தவள் "யவனாக்கிட்ட நீ ஏன் அப்படி நடந்துக்கிட்ட.?" எனக் கேட்டாள்.


'பார்த்துட்டாளா?' குழப்பமும் அதிர்ச்சியுமானவன் தன் உணர்ச்சிகளை மறைத்து அவள் பக்கம் திரும்பினான்.


"வயசு பொண்ணு. அழகா இருக்கா.. அப்படி இப்படி செய்யதான் செய்வாங்க.!" என்றவனின் அருகே வந்தவள் பற்களை கடித்தபடி அவனின் வலது கரத்தை எடுத்து தன் இடது நெஞ்சின் மீது வைத்து தேய்த்தாள். 


நொடியில் கையை உருவி கொண்டவன் தங்கையின் கன்னத்தில் பளீரென்று ஒரு அறையை விட்டான்.


"என்ன பண்ற நீ?" எனக் கேட்டான் மறுபடியும் கையை ஓங்கியபடி.


"ஏன் நானும் வயசு பொண்ணு. அழகாதானே இருக்கேன்.? உன் வீடு இது. நீ உத்தமனும் இல்லையே.." என்றாள் கடித்த பற்களை விலக்காமல்.


நெற்றியை பிடித்தான். "மரியாதையா வெளியே போ.. கொலை பண்ற உனக்கு அண்ணனோட ஒழுக்கம்தான் கேடா போச்சா.? உனக்கு காரியம் ஆகணும்ன்னா அவளையே கூட நீ எனக்கு கூட்டி கொடுப்ப.." மேலே பேசும் முன் அறைந்து விட்டாள்.


"என் ஹர்ட் என்னன்னு உனக்கு புரியவே புரியாது. நான் எவ்வளவு பொசசிவ்ன்னு யஷூக்கு நல்லா தெரியும். என்னை திரும்பி கூட பார்க்க‌ மாட்டாரு. ஆனா அந்த பொண்ணுக்கு ஊட்டி விட்டாரு.. அவளோடு மட்டுமே டைம் ஸ்பென்ட் பண்ணாரு. நானும் அவளும் ஒரே இடத்துல இருந்தா கூட அவளை மட்டும்தான் அவரோட கண்கள் பார்க்கும். ஆவூன்னா என்னை காப்பாத்திய தேவதைன்னு சொல்வாரு. நான் உயிரையே தருவேன் அவருக்காக. நான் ஏன் அவர் கண்ணுக்கு தெரியல.? பிரெண்ட்ஷிப், பிரதியுபகாரம் என்ன டேஷ்ஷா வேணாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா காதலிக்கிற எனக்கும் பீலிங்ஸ் இருக்கு. நான் அப்படிதான். நீ என்னவோ நினைச்சிக்க. ஆனா யவனாவை நெருங்காத.. நான் தர்ஷினிக்கு ஹெல்ப் பண்ணது கூட அவரோடு நெருங்கணுங்கற காரணத்துக்காக மட்டும்தான். அப்போதாவது அந்த வீட்டுல எனக்கு நிரந்தர இடம் கிடைக்கும்ன்னுதான். உன்னால யவனாவுக்கு ஏதாவது சேதாரமானா அப்புறம் யஷூ என்னை ஜென்மத்துக்கும் ஏத்துக்க மாட்டாரு. என்னால அதை கற்பனை கூட செய்ய முடியாது. நீ எட்டியே இரு. இது லாஸ்ட் வார்னிங். அப்புறம் நான் எவளோ ஒரு செல்லாவை மட்டுமில்ல உன்னையும் கூட கொல்லுவேன்.. சுயநலவாதி, இடியட் டேஷ் இன்னும் எது வேணாலும் சொல்லிக்க. எனக்கு பீல் கிடையாது.‌ அவளை நெருங்காத.." எச்சரித்து விட்டு வெளியே நடந்தாள்.


சூர்யா தனது மீட்டிங்கை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தான். அறை திறந்திருந்தது. ஆனால் அவனின் செல்லாவை காணவில்லை.


வீடு சென்று விட்டாள் போல என்ற எண்ணத்தோடு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். 


கால் மணி நேரம் நகர்ந்தது.


"சார் காபி.." என்று கோப்பையை மேஜையில் வைத்தார் அவனுக்கு பர்சனல் செக்ரட்டரியாக இருப்பவர்.


"செல்லா எப்ப வீட்டுக்கு போனா.?" காப்பியை அருந்தியபடி கேட்டான்.


"மேம்.." குழப்பத்தோடு சோபாவை பார்த்தவன் "அவங்க போகலன்னு நினைக்கிறேன் சார்.." என்றான்.


"புரியல.." 


"கார் கீ என் டேபிள்லதான் இருக்கு. உங்க டிரைவரை இப்பதான் நான் கேன்டின்ல பார்த்துட்டு வந்தேன்.."


குழப்பம் அதிகரித்தது சூர்யாவுக்கு. போனை எடுத்து அம்மாவுக்கு அழைத்தான்.


"அம்மா செல்லா வீட்டுக்கு வரலையா.?"


"இல்லடா. நீயும் அவளும்தானே வருவிங்க.? இப்ப புதுசா கேட்கற.." என்றாள் பூங்கொடி.


அழைப்பை துண்டித்துக் கொண்டவன் "ஸீ இஸ் மிஸ்ஸிங்.. அவ எந்த பக்கம் போனான்னு தேட சொல்லுங்க.." என்றவன் அவசரமாக கணினி முன் அமர்ந்தான். கட்டிடத்தின் சிசிடிவி பதிவுகளை தேட ஆரம்பித்தவன் தனது அறைக்கு வெளியே பதியப்பட்டிருக்கும் கேமராவின் பதிவை சோதிக்க ஆரம்பித்தான்.


செல்லா‌ உறக்க கலக்கத்தோடு வெளியே செல்வது தெரிந்தது. அவள் செல்லும் வழியிலிருந்த அத்தனை கேமரா காட்சிகளையும் தேடினான்.


கேன்டினின் திசை நோக்கி நடந்தவளை மறித்து ஷேர்கான் ஐஸ்கிரீம் தந்து அழைத்து செல்வது தெரிந்தது. 


போனை எடுத்து வரவேற்பறைக்கு அழைத்தான்.


"ஷேர்கான் கிளம்பிட்டாரா.?"


"ஒரு நிமிசம் சார்.." வரவேற்பறை பெண்மணி கம்ப்யூட்டர் பட்டன்களை தட்டிவிட்டு "இன்னும் இல்ல சார்.." என்றாள்.


கையை முறுக்கிக் கொண்டு வெளியே‌ நடந்தான் சூர்யா.


ஷேர்கான் களைத்து போய் நின்றிருந்தான். 


தலைமுடி முழுமையாக கலைந்து விட்டிருந்தது. வியர்வை ஆறாக ஊற்றிக் கொண்டிருந்தது. காலடியில் மயங்கி கிடந்தவளை கண்டுவிட்டு மண்டியிட்டான்.


ஏழெட்டு கோன் ஐஸ்களை உண்டுவிட்டு, அவனை படாதபாடு படுத்தி‌ விட்டிருந்தாள் அவள்.


நெருங்க முடியவில்லை அவனால். பக்கத்தில் வந்தாலே பூனை போல கீறி வைத்தாள்.


கடுப்பில் அவளை பிடித்து தள்ளி விட்டு விட்டிருந்தான். மேஜையில் தலை மோதி மயங்கி கீழே சரிந்திருந்தாள்.


"பிசாசு.." என்றபடியே அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவளின் பின்னந்தலையிலிருந்து கசிந்த ரத்தம் தரையை நனைத்துக் கொண்டிருந்தது.


அவளின் கவுனை மேலே உயர்த்தினான். "பொண்ணா, ஏஞ்சலா இவ.?" ஆச்சரியத்தோடு உடையை அகற்ற ஆரம்பித்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. வழக்கமான 5 நிமிச யூடிக்கு பதிலா 6 நிமிச யூடி தந்திருக்கேன். அதுக்காகவாவது கமெண்ட் கிடைக்குமா? 




Post a Comment

0 Comments