Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 73

 ஷேர்கானின் அறைக்குள் நுழைந்தான் சூர்யா. அவனை அங்கே காணவில்லை. திரும்பி நடந்தான்.


செல்லாவின் முகத்தை பார்த்தபடியே அவளின் மேலாடையை கழட்டி எறிந்தான் ஷேர்கான். செல்லாவின் உடல் வனப்பு அவனின் எண்ணங்களை மேலும் தூண்டி விட்டது.


"ப்யூட்டிபுல்.." என்றபடியே உள்ளாடைகள் மறைத்த அவளின் உடம்பை ஆராய்ந்தான். இப்படியே கூட ஒரு மணி நேரத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றுதான் தோன்றியது.


ஆனால் மயங்கி இருப்பவள் எழும் முன் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். விவரம் இல்லாமல் இருப்பவள், மயங்கி இருப்பவள் நடந்ததை புரிந்துக் கொள்ள போவதில்லை. சூர்யாவுக்கும் எதுவும் தெரிய போவதில்லை என்ற எண்ணத்தோடு அவளை புரட்டினான். 


அவளின் நெஞ்சோடு அணைத்திருந்த உள்ளாடையினை கழட்ட தொடங்கினான். அவனின் முதுகில் விழுந்தது உதை. நான்கடி தள்ளிப் போய் விழுந்தவன் பதறி திரும்பினான். சூர்யா எமனின் மறு உருவமாக நின்றிருந்தான். ஷேர்கான் தன் அறையில் இல்லை என்பதை கண்ட உடனேயே வேறு எங்கே இருப்பான் என்று யூகித்து அருகிலிருந்த மற்ற அறைகளை தேடி இங்கே வந்து சேர்ந்திருந்தான்.


"சார்.. நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கிங்க.. மேம் தவறி இந்த பக்கம் வந்துட்டாங்க.." என்றவனின் வாயில் ஒரு உதையை விட்டான் சூர்யா.


"பொய் சொல்லாத.." என்றவன் அவனின் காலரை பிடித்து தூக்கினான். அவனின் தாடையில் ஐந்தாறு குத்துகளை ஓங்கி தந்தான். 


"சார் அவரை விடுங்க.." செக்ரட்டரி சொன்னதை காதில் வாங்காதவன் அருகே இருந்த டேபிளில் ஷேர்கானின் தலையை அடித்தான். நொடியில் புறப்பட்டு விட்டது ரத்தம். நெற்றி உடைந்து நின்றவனின் முகத்தில் மேலும் மேலும் குத்து விட்டான். 


ஷேர்கானின் வாயிலிருந்து ரத்தம் வழிந்ததை போலவே சூர்யாவின் கை விரல் முட்டிகளிலிருந்தும் ரத்தம் கொட்டியது. 


"என்னை விடுங்க சார். சாரி.." கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினான் ஷேர்கான்.


"குழந்தையை போல உள்ள ஒருத்திக்கிட்ட நீ இப்படி முயற்சி பண்ணி இருக்க கூடாது. அவ என்னவள்டா.." என்றவன் அவனின் வயிற்றில் ஓங்கி உதைத்தான்‌. ஆறடி தள்ளிப் போய் விழுந்தான் அவன்.


சூர்யா அவனை நோக்கி பாய்ந்தான். ஆனால் செகரட்டரி அவனை பிடித்து கொண்டார்.


"மேமோட தலையிலிருந்து ரத்தம் வருது சார். இவரை நாம அப்புறம் பார்த்துக்கலாம்.." 


சூர்யா பற்களை கடித்தபடி கோபத்தை அடக்கினான். முடியவில்லை. பாய்ந்து சென்று ஷேர்கானின் கழுத்தில் நான்கைந்து உதைகளை தந்தான்.


"எனக்கு சொந்தமான ஒருத்தியை யாரும் தொட கூடாது. அதை என்னால அனுமதிக்க முடியாது.." என்றவன் தன் அருகே இருந்த கண்ணாடி பூந்தொட்டியை எடுத்து ஷேர்கானின் மேல் போட போனான். பூந்தொட்டியை பிடுங்கினார் செகரட்டரி.


"போதும் சார்.." அவனை தூரமாக இழுத்து வந்தார்.


சூர்யா அவரின் பேச்சை கேட்க விரும்பவில்லை. ஆனால் அதற்குள் அலுவலகத்தின் செக்யூரிட்டிகள் சிலர் வந்து விட்டனர். ஷேர்கானை இழுத்துக் கொண்டு போனார்கள்.


சூர்யா செல்லாவின் திசையில் பார்த்தான். செக்ரட்டரி அவளது உடைகளையே மேலாக போட்டு கொஞ்சமாக மறைத்து வைத்திருந்தார்.


தரையில் உறைந்து கிடந்த ரத்தம் கண்டவன் பெருமூச்சை வெளியிட்ட மூக்கை துடைத்தபடி அவளை நெருங்கினான். 


"செ.. செல்லா.." அவளின் கன்னத்தில் கை பதித்து அசைத்தான்.


"சாரி பேபி.. அங்கிள் உன்னை கவனிச்சிக்காம போயிட்டேன்.. எழுந்துடுடா.." தான் அணிந்திருந்த கோட்டை கழட்ட முயன்றான். அதற்குள் பெட்சீட் ஒன்றை எடுத்து வந்திருந்தார் செக்ரட்டரி.


செல்லாவை போர்த்தினான். அவளின் தலையை தொட்டுப் பார்த்தான். ரத்தம் நின்று விட்டிருந்தது. ஆனாலும் உறைந்து கிடந்த ரத்தமே அவனுக்கு பெரும் பயத்தை தந்து விட்டது.


அவளை அள்ளி தூக்கினான். "சாரி பேபி.." முனகியபடியே நடந்தான்.


மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு உணவை மேஜையின் மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தாரணி. யவனா யோசனையோடு சோபாவில் அமர்ந்திருந்தாள்.


"என்னடாம்மா ஆச்சி? வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?" என கேட்டாள் குணவதி டைனிங் ஹாலில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி. அவளின் முகத்தில் கொஞ்சமாக சோர்வு தெரிந்தது.


"இ.. இல்ல அத்தை.. சும்மா யோசனை.." என்றவளை கடந்து போய் அம்மாவின் அருகில் அமர்ந்தான் வருண்.


"பசிக்குது.. சாப்பாட்டை போடுங்க.." என்றான் தட்டை எடுத்து வைத்தபடி. தாரணி முறைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.


"என்னதான் பிறப்போ இரண்டு பேரும்.? அடிக்கடி சண்டை போட்டுகிறிங்க.." என்றபடியே உணவை பரிமாற ஆரம்பித்தாள் குணவதி. "இந்த முறை என்ன சண்டை.? என்ன சொன்னா அவ.? இல்ல அவளை அடிச்சி வச்சிட்டியா நீ ஏதும்.? புள்ளைத்தாச்சி பிள்ளைடா.. அன்பா இருக்கணும் அவகிட்ட.." 


வருண் பதில் சொல்லவில்லை. யவனா ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். ஏதோ உறுத்தலாக இருக்கவும் திரும்பிப் பார்த்தான் அவன். யவனா பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.


அவளை பார்த்தபடியே உணவை அள்ளி உண்டவன் விக்கிக் கொள்ளவும் தண்ணீரை தேடினான். மேஜையில் தண்ணீர் இல்லை.


"தாரணி தண்ணி கொண்டு வா.." குணவதி குரல் தந்தாள். நேரம் நகர்ந்தும் தாரணி வரவேயில்லை.


"தாரணி.. ஏய் தாரணி.." அவளிடமிருந்து ஒரு சத்தமும் வராமல் போகவும் குணவதி எழுந்து சென்றாள். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வருணே தண்ணீரை குடித்துக் கொள்ள நினைத்து சமையலறைக்கு நடந்தான்.


"தாரணி என்ன ஆச்சி உனக்கு.?" குணவதியின் குரலில் எழுந்தோடினாள் யவனா.


தலையை பிடித்தபடி பிரிட்ஜின் அருகே அமர்ந்திருந்தாள் தாரணி.


குணவதி மகளை கண்டு பதறி விட்டாள். வருண் தங்கையை கண்டுவிட்டு நெருங்க இருந்த நேரத்தில் அவனை தள்ளிக் கொண்டு ஓடிய யவனா தண்ணீரை எடுத்து வந்து அண்ணியின் கரங்களில் திணித்தாள்.


"அண்ணி.." கவலையாக இருந்தது யவனாவுக்கு.


தாரணி அரை மயக்கத்தோடு தண்ணீரை பருகினாள்.


குணவதி மகனின் புறம் திரும்பினாள். "ஏன்டா இப்படி சிலையை போல நிக்கற.. வந்து தூக்குடா இவளை.." கத்தி வைத்தாள்.


வருண் கையை சுத்தம் செய்துக் கொண்டு வந்தான். அவளின் மயக்க நிலை கண்டு சற்று பயந்து விட்டிருந்தான்.


அவளை தூக்கிச் சென்று படுக்கையில் விட்டான்.


"என்னடா கண்ணு ஆச்சி.? டாக்டரை வர சொல்லலாமா.?" குணவதி குணமாக விசாரித்தாள்.


"இல்லம்மா.. இது மசக்கை மயக்கம்தான்.." என்ற மகளை பரிதாபமாக பார்த்தவள் "மசக்கை மயக்கமே எனக்கு பதட்டமா தருது.." என புலம்பினாள். 


யவனா டேபிள் பேனின் ஸ்விட்சை தட்டினாள். அண்ணிக்கு காற்று படும்படி திருப்பி வைத்தாள்.


"இதுக்கு மேல மாடி படி ஏறிடாதே.. தனியா எங்கேயும் போகாதே.." எச்சரித்தாள் குணவதி.


ஆள் இல்லாத நேரத்தில் அடி படக் கூடிய தரைத் தளம் உள்ள இடத்தில் இது போல மயங்கி இருந்தால் என்னவாவது என்று பயந்தான் வருணும் கூட.


வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. வருண் சென்று திறந்தான். யஷ்வந்த் நின்றிருந்தான்.


"வாங்க.." என்றவனிடம் "யவனா.?" எனக் கேட்டபடியே உள்ளே வந்தான் அவன்.


"அந்த ரூம்ல.." 


கடுப்பில் பற்களை அரைத்தபடி அறைக்குள் நுழைந்தான் யஷ்வந்த். கணவனை கண்டதும் சிந்தை தெளிந்து எழுந்தாள் தாரணி. உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.


"தாரு.." எதற்கு வந்தோம் என்ற விசயம் மறந்து மனைவியின் அருகே ஓடினான் யஷ்வந்த்.


"என்ன ஆச்சி.?" அவளின் முகத்தை அள்ளியபடி கேட்டான்.‌


மருமகனை கண்டதும் ஓரம் நகர்ந்துக் கொண்டாள் குணவதி.


"மசக்கை மயக்கம் மாப்பிள்ளை.." 


"ஓ.." என்றவனின் கையை பற்றினாள் தாரணி.


"சாரி யஷூ.." சிறு குரலில் கெஞ்சினாள்.


"டாக்டரை வர சொல்லுங்க அத்தை.." மனைவி சொன்னதை கண்டுக் கொள்ளாதவன் குணவதியை பார்த்து சொன்னான்.


"இது சாதாரண மயக்கம்தான் மாப்பிள்ளை. டாக்டர் தேவை கிடையாது.. கொஞ்ச நேரத்துல சரியாகிடுவா.."


சரியென்று தலையசைத்தவன் மனைவியின் முகத்தை சில நொடிகள் பார்த்தான். அவளின் விழிகளில் இருந்த ஏக்கத்தை விட அவனின் கண்களில் அதிக ஏக்கம் இருந்தது. பெருமூச்சை மறைத்தபடி அவளை விட்டு விலகினான்.


"ரெஸ்ட் எடு தாரு.." என்றவன் தங்கையின் புறம் திரும்பினான்.


"உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அப்படி வா.." அழைத்தான்.


மறுப்பாக தலையசைத்தவள் "என்னை கன்வீன்ஸ் பண்ண வந்திருந்தா சாரி. அண்ணி வராம நான் அங்கே வர மாட்டேன்.." நின்ற இடத்தை விட்டு நகராமல் சொன்னாள்.


யவனாவின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வருண். அவளின் பிடிவாதம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.


"ஹஸ்பண்ட் வொய்ப்க்குள்ள ஆயிரம் இஸ்யூஸ் இருக்கும். நீ நடுவுல வராதே. மரியாதையா வீட்டுக்கு கிளம்பு.. அங்கே எல்லோரும் என்னை டார்ச்சர் பண்றாங்க.." என்றான் கடுப்போடு.


அந்த வீட்டில் இருப்போரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறான் அவன். ஆனால் இவளால் அந்த வீட்டில் இருந்த மொத்த பேரும் தேடி வந்து அவனை காய்ந்து விட்டு சென்றனர்.


"நான் வர மாட்டேன்.." 


யஷ்வந்த் தலையை கோதி விட்டுக் கொண்டான். தங்கையின் அருகே வந்தான். அவன் நெருங்குவது கண்டு பின்னால் நகர்ந்தாள் யவனா.


"பக்கத்துல வராத பையா.. அப்புறம் நான் கீறி வச்சிடுவேன்.." தன் நகங்களை காட்டி மிரட்டினாள்.


"வா போகலாம்.." 


"மாட்டேன்னு சொல்றேன் இல்ல.." அங்கிருந்து ஓடினாள். சரியாக கவனிக்காதவள் வழியில் நின்றிருந்த வருணின் மீது பலமாக மோதினாள். 


எதிரில் இருந்தவனை முறைத்தவள் அண்ணன் தொடருவதை கண்டுவிட்டு அங்கிருந்து ஓட முயன்றாள். அவளின் கையை பிடித்து நிறுத்திய வருண் யஷ்வந்திடம் அவளை ஒப்படைத்தான்.


"அண்ணா நோ.." அவள் மறுக்க மறுக்க அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.


"அண்ணி இல்லாம நான் வர மாட்டேன். ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ணாத.. பிரகனென்டா இருக்கும் பெண்ணையெல்லாம் தனிமையில் விடாதே. அந்த பாவமெல்லாம் அப்புறம் எனக்குதான் பிடிக்கும்.." அவனிடமிருந்து தப்பிக்க முயன்றபடியே சொன்னாள்.


யஷ்வந்த் நடப்பதை நிறுத்திவிட்டு தங்கையை முறைத்தான்.


"நான் அவளை அடிச்சி உதைச்சி கொடுமை செய்யல.. அவளை கை விட்டுட்டு வேற எவளையோ தேடி போகல. உயிரா நேசிக்கிறேன். ஆனா இப்போதைக்கு ஏத்துக்க முடியாத சூழல்ல இருக்கேன். செல்லா குணமாகி இவளை மன்னிக்காத வரை நானும் மன்னிக்க மாட்டேன்.." என்றவனை கலங்கும் விழிகளோடு பார்த்தாள் தாரணி.


"ஆக உங்களுக்கு இப்பவும் கூட என்னை விட அவதான் முக்கியம் இல்லையா.?" கேட்டு முடிக்கும் முன்பே தொண்டை அடைத்துக் கொண்டது.


யஷ்வந்த் திரும்பி பார்த்தான். கண்களில் ஏமாற்றம் தென்பட்டது அவனுக்கு.


"இதுதான் பிரச்சனை தாரு. இன்னைக்கு வரைக்கும் நீ திருந்தல. உன்னால ஒரு பொண்ணு பைத்தியமா இருக்கா. சொந்த காதலனை அடையாளம் தெரியாம அங்கிள்ன்னு கூப்பிட்டுட்டு இருக்கா. என் மச்சான் அவன் காதலிக்கும் பொண்ணை பக்கத்துல வச்சிக்கிட்டு எந்த பீலிங்கையுமே காட்ட முடியாம நரக வாழ்க்கை வாழுறான். ஆனா உனக்கு நான் அதையெல்லாம் மறந்துட்டு உன்னை ஏத்துக்கணும் இல்ல.? ஒரு ஜோடியை பிரிச்சி வச்ச நீ. அந்த பாவத்துக்குதான் நானும் சேர்ந்து இப்ப தண்டனையை அனுபவிக்கிறேன்.. உன் தப்பால என் குழந்தையையும் கூட என்கிட்ட இருந்து பிரிச்சி வச்சிட்ட.." என்றவன் கலங்க இருந்த கண்களை சிமிட்டி தடுத்தான்.


யவனா உதட்டை கடித்தாள். அண்ணனின் குற்ற உணர்வு புரிந்துதான் இருந்தது. ஆனால் அதே சமயம் அண்ணியை அனாதை போல விட்டுப் போக முடியவில்லை. ஒரு தவறும் செய்யாத குழந்தையை ஆபத்தில் விட்டுவிட்டு போகவும் மனம் வரவில்லை. வருண் தங்கையை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. அத்தைக்கும் அடிக்கடி உடல் சோர்ந்தது. இந்த நிலையில் விட்டு செல்வது தவறாக தோன்றியது.


"நான் இங்கேயே இருக்கேன்.." என்றாள் தலையை குனிந்தபடி.


"யவனா.." மிரட்டினான். 


"எனக்கு பதினெட்டு முடிஞ்சி பல வருசம் ஆச்சி.. நான் என் இஷ்டபடி இருக்க உரிமை உண்டு. நீங்க போய் உங்க வேலையை பாருங்க.." கையை இழுத்துக் கொண்டாள்.


பற்களை அரைத்தான் யஷ்வந்த்.


அவளுக்கு நான்கு அறைகளை தந்து இழுத்துப் போக வேண்டும் என நினைத்தான். அவனின் எண்ணத்தை கலைக்கும் விதமாக போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். சூர்யா அழைத்திருந்தான்.


"சூர்யா.."


"ம்ம்.." தயங்கினான்.


"செல்லா நல்லாருக்காளா.?" 


"ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். ஹாஸ்பிட்டல்ல இப்பதான் கண் விழிச்சா. ஆனா சின்ன பிரச்சனை. உனக்கு டைம் இருந்தா வந்துட்டு போறியா.?" எனக் கேட்டான்.


"என்ன பிரச்சனை.?" 


"வா சொல்றேன்.." என்றவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.


"யவனா.." நிமிர்ந்துப் பார்த்து அழைத்தான். அவளை அங்கே காணவில்லை.


"வெளியே போனா. அந்த ரூம்ல இருக்கா.." எதிர் அறையை கை காட்டினான் வருண்.


எரிச்சலோடு சென்று கதவை தள்ளினான். கதவை உள்தாழ்பாள் போட்டு வைத்திருந்தாள்.


"யவனா கதவை திற.. வா போகலாம்.." 


"மாட்டேன்.. நான் அண்ணி இல்லாம அந்த வீட்டுக்கு வர மாட்டேன்.. ஒரே முடிவு. ரிபீட்டா சொல்ல வைக்காதிங்க.." 


யஷ்வந்த் நெற்றியை தேய்த்தான். கோபமாக வந்தது.


"நான் போறேன். இனி உன் இஷ்டம். வீட்டுல இருந்து யாராவது வந்து உன்னை கேட்டாங்கன்னா அப்புறம் நான் அவங்களைதான் கத்தி வைப்பேன்.." என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.


யவனா பெரிய தவறாக செய்து விட்டாள். அவனோடு சென்றிருக்கலாம். தனக்கு வர இருந்த ஆபத்தை பற்றி அறியாமல் போய் விட்டாள். அண்ணிக்கு ஈவு இரக்கம் பார்த்தவள் தனக்கே அந்த இரக்கத்தை எதிர்பார்க்க வேண்டி வரும் என்ற எதிர்காலம் அறியாமல் முட்டாள் போல இங்கே நின்று விட்டாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments