யஷ்வந்த் அங்கிருந்து போய் விட்டான். அவனின் பொறுமை எருமையின் மீது ஏறி எப்போதோ போய் விட்டிருந்தது.
"இப்ப கூட அவர் எனக்காக வரல.." மூக்கை உறிஞ்சினாள் தாரணி.
"உன் லட்சண.." அடுத்ததாக வர இருந்த கெட்ட வார்த்தையே அம்மாவிற்காக தடுத்து நிறுத்தினான்.
"எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும் தாரணி. நீ உன் எண்ணங்களை முதல்ல திருத்து. அப்புறம் உன் புருசனை குறை சொல்லு.." என்றவன் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே போனான்.
தன் அறையின் முன்னால் நின்றவன் கதவை தள்ளினான். இன்னமும் பூட்டியிருந்தது.
கதவை தட்டினான்.
'அவசரத்துக்கு தப்பிக்க இவன் ரூம்க்குள்ளயா வந்து ஒளியணும்.?" தன்னிடமே கேட்டபடி சென்று கதவை திறந்தாள்.
வாசலை மறித்து நின்றிருந்தான் வருண்.
"வழி விடுங்க.." என்றவளை உள்ளே தள்ளினான்.
"வாட் ஆர் யூ டூயிங்.?" அவள் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கதவை தாழ்ப்பாளிட்டான்.
"மரியாதையா என்னை வெளியே போக விடுங்க. இல்லன்னா நான் அத்தையை.. அம்மா.." கத்தினாள். அவளை அருகே இருந்த சுவரில் பிடித்து தள்ளியிருந்தான்.
முகம் சுளித்தவள் கண் திறந்தபோது அவளின் அருகில் இருந்தான் அவன். அவனின் மூச்சுக்காற்று முழுக்க அவளின் முகத்தில் வந்து மோதியது.
"எ.." அவளின் தாடையை பற்றினான். ஏனோ உள்ளுக்குள் குளிரெடுத்தது.
"எனக்காகதானே நீ இங்கே நின்னுட்ட.?" புருவம் உயர்த்திக் கேட்டான்.
"ஐயோ இல்லைங்க.." என்றவளின் கன்னத்தில் கரம் பதித்தான்.
"பொய் சொல்லாத.. உன் அண்ணன் அவ்வளவு கூப்பிட்டும் நீ போகல. எனக்காகதானே.? என்னை அவ்வளவு பிடிச்சிருக்கா?" அவளின் இடுப்பில் தன் மறுகரத்தை பதிய வைத்தான்.
"தள்ளி போங்க.." அவனை தள்ளி விட முயன்றாள். கன்னத்தில் பதிந்திருந்த அவனின் கரம் அவளின் கைகள் இரண்டையும் சேர்த்து பிடித்தது.
பயத்தில் பின்னங்கழுத்து வியர்க்க நின்றிருந்தவளின் அருகே வந்தான்.
"நான் உங்க அம்மாவை கூப்பிடுவேன்.."
"கூப்பிடு.." என்றான் அவளின் இதழை தன் இதழ்களால் தீண்டியபடி.
கண்ணீர் கரை தாண்டி விட்டது அவளுக்கு.
"கூப்பிடல நீ இன்னும்.." என்றவன் அவளின் இடையிலிருந்து கரத்தை மேலே உயர்த்தினான். அவளின் மேனியின் நடுக்கத்தை அவனும் உணர்ந்தான்.
"ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.."
"என் வீட்டுல நீ இருந்தா நான் எது வேணாலும் செய்வேன்.." அவளின் கன்னத்தை நாவால் ஈரம் செய்து விட்டு சொன்னான்.
சிறு குரலில் விம்மினாள்.
"அ.. அண்ணிக்கு குழந்தை பிறந்ததும் நான் போயிடுறேன்ங்க. அதுவரைக்கும் என்னை விடுங்க.."
அவ்வளவு சோதனையிலும் அவள் சொன்னது அவனுக்கு வியப்பை தந்தது.
"உன் அண்ணிக்கு குழந்தை பெத்துக்க தெரியும். மரியாதையா நாளைக்கு இங்கிருந்து கிளம்புற.. இல்லன்னா உன் கற்புக்கு நான் கேரண்டி தர முடியாது.." என்றவன் அவளின் நெஞ்சத்தை தொட்டும் தொடாமல் கையை எடுத்துக் கொண்டான்.
நொடி நேரமானாலும் அவனின் கை தீண்டியது உணர்ந்து அழுதது இதயம்.
அவளை விட்டு விலகினான். இவ்வளவு நேரமும் அவனின் கரத்தில் சிக்கியிருந்த கரங்கள் இரண்டும் வலித்தன. கதவை திறந்தான்.
"போ.."
யவனா கண்ணீரை துடைத்தபடி நடந்தாள். கதவை தாண்டாமல் திரும்பினாள். பற்களை கடித்தபடி கையை ஓங்கினாள்.
தன்னை அறைய வந்தவளின் கையை பற்றியவன் "நோ டார்லிங். இது தப்பு.." என்றான். அவளின் கையிலிருந்த நான்கு விரல்களையும் கடித்து வைத்தான்.
"ஐயோ.." கையை பிடுங்கிக் கொண்டு உதறினாள்.
"உனக்கு கறி மேல வெறியா இருந்தா ஆடு கோழின்னு போக வேண்டியதுதானே.? ஏன் என்னை கடிச்சி வைக்கிற.?" அழுதபடி கேட்டாள். கை விரல்கள் வலித்தன.
"நீ இங்கிருந்து போகலன்னா உன்னை வேற இடத்துல கூட கடிச்சி வைப்பேன். மெயின்னா இங்கே.." என்று அவளின் உதட்டை தொட்டு காட்டினான். அவன் தப்பு தப்பாக பேசுவது போலிருந்தது.
"உங்க மேல நான் ரொம்ப நல்ல மரியாதை வச்சிருந்தேன்.." என்றவள் அவனின் கசந்த சிரிப்பை கூட கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்து திரும்பி நடந்தாள்.
சூர்யா அவளிருந்த அறையின் கதவை திறந்தான். தலையில் கட்டுப் போட்டு படுத்திருந்தவள் உள்ளே ஒருவன் நுழைவது கண்டு எழுந்து அமர்ந்தாள்.
அருகே வந்து அமர்ந்தவன் அவளின் கையை பற்றினான். விசித்திரமாக பார்த்தாள்.
"சாரி செல்லா.. அங்கிள் உன்னை பத்திரமா பார்த்துக்காம போயிட்டேன். சாரி.." என்றான் அவளின் கன்னங்கள் பற்றி நெற்றியில் முத்தமிட்டபடி.
பயத்தோடு அவனிடமிருந்து விலகியவள் "அங்கிளா? நீங்களா.? ரொம்ப சின்ன பையனா இருக்கற மாதிரி இருக்கு. என்னை விட நாலஞ்சி வருசம்தான் பெரியவரோன்னு தோணுது. ஒருவேளை உங்களுக்கு ஏதாவது ஜெனிடிக் டிஸ்ஸார்டரா.?" எனக் கேட்டாள் அவள்.
அதிர்ச்சியில் கண்களை விரித்தவன் "செல்லா உனக்கு பழசு ஞாபகம் வந்துடுச்சா.?" எனக் கேட்டபடி அவளை அணைத்தான்.
அவன் அணைத்ததில் அவளுக்கு உடம்பே வலித்தது.
"அப்பா.. உடம்பு வலிக்குது.." வாயை திறந்து சொல்லியே விட்டாள்.
பதறி விலகியவன் "சாரி பேபி.. எனக்கு சந்தோசத்துல என்ன செய்றதுன்னே தெரியல.." என்றான்.
"எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல.. நானும் யோசிச்சி பார்த்தேன்.. ப்ளாங்கா இருக்கு எல்லாம்.." அவள் சொன்னது கேட்டு அதிர்ந்தவன் "வாட்.?" என்றான்.
மருத்துவர் உள்ளே வந்தார்.
"அவங்களோட பிரச்சனை தீர்ந்ததுன்னுதானே சொன்னேன் நான்.? பழசு எல்லாமே ஞாபகம் வந்ததுன்னு சொல்லலையே.!" என்றார் மருத்துவர்.
நெற்றியை பிடித்தபடி எழுந்தவன் "அட போங்க டாக்டர். நான் கூட பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சி. இனிமேலாவது கொஞ்சம் நல்ல லைஃப் வாழலாம்ன்னு இருந்தேன்.." என்றான். மனம் வெறுத்து அங்கிருந்து வெளியே செல்ல இருந்தவனின் கையை பிடித்து தன் அருகே இழுத்து நிறுத்தினார்.
"உங்களுக்கு இதுல ஒரு அட்வான்டேஜ் இருக்கு.." என்றார் ரகசிய குரலில்.
"அது என்ன.? அவளுக்குதான் என்னையே ஞாபகம் இல்லையே.." சோகமாக சொன்னவனை பார்த்து விஷமமாக சிரித்தவர் "அவங்களுக்கு எதுவும் ஞாபகம் இல்ல. நீங்க என்ன சொல்றிங்களோ அதுதான் அவங்க பாஸ்ட். நீங்க என்ன நினைக்கிறிங்களோ அதுதான் அவங்க ப்யூச்சர்.." என்றார். அவனின் இறந்தகால காதலின் சோகம் அறிந்தவராயிற்றே அவர்.
சூர்யாவின் முகத்தில் கோடி சூரியன் பிரகாசித்தது.
"இப்படி ஒரு குறுக்கு வழி இருக்கா.? பழசு ஞாபகம் வந்திருந்தா கூட இவளோட சீனுக்கு லவ் பண்ணி பொண்டாட்டியாக்க ஒன்னு இரண்டு வருசமே ஆகும். நம்மை கஷ்டப்படுத்த கூடாதுன்னுதான் ஆண்டவனே இப்படி ஒரு சான்ஸ் தந்திருக்காரு போல.." என்று சிறு குரலில் முனகியவன் "தேங்க்ஸ் டாக்டர்.." என்றான்.
இருவரும் சேர்ந்து செல்லாவிடம் வந்தனர். தலைவலியோடு அமர்ந்திருந்தவள் நிமிர்ந்தாள்.
"ஹாய் மிஸஸ் சூர்யா.." என்றார் மருத்துவர்.
புருவம் சுருக்கியவள் "நான் மேரிட் கேர்ளா.?" எனக் கேட்டாள்.
மருத்துவர் சூர்யாவை பார்த்தார்.
"உங்க வொய்ப்க்கு உண்மையை நீங்க சொல்றிங்களா? இல்ல நான் சொல்லட்டுமா.?" எனக் கேட்டார்.
"இவர் என் ஹஸ்பண்டா.? ஆனா அங்கிள்ன்னு சொன்னாரே முன்ன.." செல்லா குழப்பத்தோடு கேட்டாள்.
"ஏனா கொஞ்ச நாள் முன்னாடி உங்களுக்கு தலையில் அடிப்பட்டு ஒன்பது வயசு குழந்தையின் மைன்ட் செட்டுக்கு போயிட்டிங்க நீங்க. ஹஸ்பண்டையே அங்கிள்ன்னு கூப்பிட்டு அவரை பாடாப்படுத்திட்டிங்க.. அதனாலதான் அவர் அங்கிள்ன்னு சொல்லிட்டாரு.." மருத்துவர் விளக்கம் சொன்னது கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.
"ஓ.." என்றவள் தயக்கத்தோடு சூர்யாவை பார்த்தாள்.
"தலை வலிக்குது. ரொம்ப யோசிக்க முடியல. நமக்கு மேரேஜ் ஆனதுக்கான ஏதாவது ஒரு ஆதாரத்தை காட்டுறிங்களா.?" எனக் கேட்டாள். உடம்பில் வேறு என்னவோ ஊறுவது போலிருந்தது. யாரோ தீண்டுவது போலிருந்தது.
குறும்பாக அவளை நெருங்கியவன் அவளின் காதில் எதையோ கிசுகிசுத்தான்.
சிலையாக மாறிப் போனாள்.
"என்ன சொன்னிங்க?" மருத்துவர் ஆர்வமாக கேட்டார்.
"உண்மையை சொன்னேன் டாக்டர். உண்மையை சொன்னேன்.."
"ராணுவ ரகசியமா.?" எரிச்சலாக கேட்டவரிடம் இல்லையென தலையசைத்தவன் "அதை விடவும் பர்சனலா சில ரகசியம்.." என்றான் கண்ணடித்து.
"ரூட்டை பிடிச்சிட்டிங்க. இனி என் ஹெல்ப் தேவையில்லன்னு நினைக்கிறேன்.." அவர் சிரித்தபடியே அங்கிருந்து போய் விட்டார்.
முகம் சிவக்க அமர்ந்திருந்த செல்லாவின் அருகில் அமர்ந்தவன் "நம்மை பத்திய விவரங்களை சொல்லட்டா.?" எனக் கேட்டான்.
மெதுவாக தலையசைத்தாள்.
"நமக்கு கல்யாணமாகி ஒரு வருசம் ஆச்சி.. மூனு மாசம் முன்னாடி நடந்த ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல உனக்கு தலையில் அடிப்பட்டு குழந்தை புள்ளையா மாறிட்ட.. அங்கிள் அங்கிள்ன்னு கூப்பிட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்ட. ரொம்ப கஷ்டப்பட்டேன்.." என்றவனை பரிதாபமாக பார்த்தவள் "தமிழ்ல மாமான்னு கூப்பிட சொல்லி இருக்கலாமே.? உங்களுக்கும் கம்பர்டபிளா இருந்திருக்குமே.!" என்றாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்தவன் "நீ அப்படி மாறியதும் என் உலகமே நின்னுடுச்சி செல்லா. எதையும் சரியா யோசிக்க கூட முடியல. இப்படி ஒரு ஐடியா அப்பவே வந்திருக்கலாமேன்னு இப்ப தோணுது.." என்றான்.
அவனை விழி சிமிட்டாமல் பார்த்தவள் "நீங்க நிஜமாவே என் ஹஸ்பண்டா.?" எனக் கேட்டாள்.
சலித்துக் கொண்டவன் "நான் வேணா இப்ப உன் உடம்புல எந்த இடத்துல என்ன தழும்பு இருக்குன்னு சொல்லட்டா.?" எனக் கேட்டான்.
ஏற்கனவே மச்சங்களை பற்றி விவரித்து அவளை முகம் சிவக்க வைத்திருந்தான். இப்போதைய கேள்வியிலும் கருஞ்சிவப்பாக மாறி போனவள் "நா.. நான் அப்படி மீன் பண்ணல. ரொம்ப ஹேண்டசமா இருக்கிங்களே. அதான் நிஜமாவே என் புருசனான்னு கேட்டேன்.." என்றாள்.
அவளின் தாடையை பிடித்து ஆட்டியவன் "நீ கண்ணாடியை பார்த்தியா.?" எனக் கேட்டான்.
இல்லையென தலையசைத்தாள் குழப்பத்தோடு.
தனது போனை எடுத்தான். குழந்தை செல்லாவாக இருக்கும்போது அவளின் கையில் பொம்மை இல்லாத நேரங்களில் நிறைய புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தான். அதில் சில புகைப்படங்களை அவளிடம் காட்டினான்.
"இதுதான் நீ. பார்த்தியா எவ்வளவு அழகா இருக்கன்னு.? இரண்டு பேருக்கும் மேட்சா போச்சா.?" எனக் கேட்டான்.
புகைப்படங்களை பார்த்து வியந்தவள் "ஆனாலும் நான் கொஞ்சம் கலர் கம்மியில்ல.?" என்றாள்.
"உன் பூர்விகம் இந்தியா. அதான் கலரும் அப்படி இருக்கு. ஆனா எனக்கு பிடிச்சிதான் இருக்கு. உனக்கு உன்னை பிடிக்கலன்னா நான் என்ன செய்ய முடியும்.?" எனக் கேட்டான்.
அன்று மாலையில் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். பூங்கொடியிடம் முன்பே விசயத்தை சொல்லி வைத்திருந்தான்.
வீட்டிற்கு வந்தவளை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தாள் பூங்கொடி.
"இது என் அம்மா.."
பொறுப்பாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
"தலையில் கட்டு போட்டுக்கிட்டு கால்ல விழுறியே தங்கம்.." மருமகளை தூக்கி நிறுத்தினாள்.
அலெக்ஸின் அறைக்கு வந்தவன் "இது என் அப்பா.." என்றான்.
"வணக்கம் அங்கிள்.." என்று வணக்கம் வைத்தாள்.
"அங்கிள்ன்னு யாரையும் கூப்பிடாதே நீ.." என்ற சூர்யாவை அனைவரும் கேள்வியாக பார்த்தனர்.
"அவளோட இத்தனை நாள் அங்கிள் அங்கிள் வார்த்தையே காதை விட்டு போகாம இருக்கு.." என்று சொன்னான் புலம்பலாக.
"ஓ சரி.." என்ற செல்லா "வணக்கம் அப்பா.." என்றவள் அவரின் கால் தொட்டாள்
"நல்லா இருங்க அம்மா.." என்றவரை புதிராக பார்த்தாள். அவரால் மருமகளாக பார்க்க முடியவில்லை. வா போவென்று விளிக்க முடியவில்லை. அவரின் மனதை பொருத்தவரை செல்லா அவர் அம்மாவின் மறுபிறவி.
செல்லாவுக்கு உணவு தந்து, மாத்திரை மருந்து தந்து அழைத்து போனான் சூர்யா.
அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்தினான்.
அறையிலிருந்த அவனின் புகைப்படத்தை வாயை திறந்து ரசித்துக் கொண்டிருந்தவளை "செல்லா.." என அழைத்து திசை திருப்பினான் சூர்யா.
திரும்பி பார்த்தவளை பாய்ந்து அணைத்தான்.
"இந்த மூனு மாசமும் வெந்துட்டேன்.." என்றவன் அவளின் முகத்தை அள்ளினான். கன்னங்களிலும் நெற்றியிலும் தன் இதழின் முத்தங்களால் ஈரம் செய்தான். மூச்சு முட்டியது அவளுக்கு. இப்போதுதான் அவளுக்கு இன்னொரு விசயம் புரிந்தது. இவனின் தீண்டலும் தன் மேனி உணர்ந்துக் கொண்டிருக்கும் அந்த ரகசிய தீண்டலும் ஒன்றாக இருப்பதை அறிந்துக் கொண்டாள்.
அவளின் இதழை சிறை பிடிக்க முயன்றான். இடையில் கரம் பதித்தாள் செல்லா.
"ஏன் செல்லா.? நான் உன் ஹஸ்பண்ட்ன்னு உனக்கு நம்பிக்கை வரலையா.?"
"அ.. அது இல்ல.." என்று குழம்பியவள் "நீங்க தூரமா இருக்கும்போது கூட ஏன் உங்க கைகள் என்னை டச் பண்ற மாதிரியே பீலா இருக்கு.?" எனக் கேட்டாள்.
அவளின் மேனியாவது தன்னை நினைவில் வைத்திருக்கிறதே என்று மகிழ்ந்தவன் அவளின் இடுப்பில் கைகளை பதித்து தூக்கினான்.
"என்ன பண்றிங்க.?" கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் அவளின் முகத்தில் தெரிந்தது.
"சந்தோசமா இருக்கேன் செல்லா. உனக்கு எப்பவும் என் டச் பீலாகிட்டேதான் இருக்கும். அதுதான் விதி.." என்று சொல்லி சிரித்தவன் அவளை கீழே விட்டான். அவள் கீழே நின்ற வேகத்தில் அவளின் இதழில் தன் இதழை பொருத்தினான்.
செல்லாவுக்கு தன்னை சுற்றி இருக்கும் சூழலே மாறுவது போலிருந்தது. இமைகள் தானாக மூடிக் கொண்டது. தன் இதழ் மேல் தாண்டவமாடிய அவனின் இதழ்கள் சற்று நேரத்தில் ருத்ர தாண்டவம் ஆடுவது கண்டும் எதுவும் செய்ய முடியாமல் இருந்தாள். எதற்காக இவ்வளவு வலி மிகுந்த முத்தம் என்று அவளுக்கு தெரியவில்லை. அவனை விலக்க தோன்றவில்லை. முழு மனதோடு அவன் தந்த முத்தத்தை ஏற்றுக் கொண்டாள்.
அவளுக்கு தன் இதழில் ரத்தம் கசிவது போலிருந்தது. லேசாக எரிந்தது. விழிகளை திறந்தாள். விழி மூடியிருந்தவனின் இமைகளில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் முத்தத்தில் அவன் காட்டிக் கொண்டிருந்த அழுத்தம் அதிகரிப்பது போலிருந்தது.
மயங்கி கிடந்த யவனாவை வெறித்துப் பார்த்தான் வருண். அவளின் உடைகள் அனைத்தும் கட்டிலின் ஓரத்தில் இருந்தன. கதவை இரட்டை தாழ்ப்பாள் போட்டுவிட்டு திரும்பி வந்தான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (எபி எப்படின்னு சொல்லுவிங்களா.?🥰)
0 Comments