Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 75

 அணைத்திருந்தான் சூர்யா. செல்லாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெகுநேரம் தந்த முத்தத்தை இப்போதுதான் முடித்திருந்தான். முத்தம் முடிந்ததும் அணைத்துக் கொண்டவன் எதுவுமே பேசவில்லை.


அமைதியாக நின்றிருந்தான். அவளின் முதுகில் இருந்த அவனின் கரங்கள் இம்மியும் நகரவில்லை. அவளின் கூந்தலில் பாதியும் கழுத்தில் பாதியுமாக முகம் புதைந்திருந்தவன் நேரம் காலத்தை மறந்து விட்டதை போல நின்றிருந்தான்.


"சூ.. சூர்யா.." அவனின் தோளில் தட்டி அழைத்தாள்.


விலகி பார்த்தவன் என்னவென்பது போல புருவம் உயர்த்தினான்.


"ரொம்ப நேரமா அமைதியா இருக்கிங்க.. அதான் கூப்பிட்டேன்.."


"நீ உயிரோடு கிடைச்சது ஒரு வரம். நீ குணமாகி கிடைச்சது மறு வரம்.. சந்தோசத்துல வேற என்ன செய்றதுன்னு தெரியல.." என்றவனின் ஈர விழிகளை துடைத்து விட்டாள்.


"ரொம்ப லவ் பண்றிங்களா என்னை.?" ஏக்கமாக கேட்டாள். புதிதாக‌ இருந்தது அத்தனையும். நடந்த எதுவும் நினைவில் இல்லாவிட்டாலும் கூட காதல் என்றால் என்னவென்று மூளை உணர்ந்து வைத்திருந்தது. அவனின் கண்கள் காட்டிய காதலின் பாரம் தாங்காமல் அவனுக்குள்ளேயே புதைந்து விடுவோமோ என்று இருந்தது.


"ரொம்ப ரொம்ப.." அவளின் கன்னத்தை வருடியவன் அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.


"ரெஸ்ட் எடு.." 


அவளுக்கு உணவு எடுத்து வர கிளம்பினான். கையை பிடித்து நிறுத்தினாள். "எனக்கு ஏன் தலையில் அடிப்பட்டுச்சி.?" தன் காயத்தை தொட்டுக் காட்டியபடி கேட்டாள்.


"ஆபிஸ்ல ஒருத்தன் உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான். குழந்தையோட மைன்ட் செட்ல இருந்த நீ. உன்னை ஈசியா கவுத்துடலாம்ன்னு நினைச்சி ரேப் பண்ண பார்த்தான். அந்த டைம்லதான் தலையில் அடிப்பட்டுடுச்சி.‌." 


முகம் கறுத்துப் போனது அவளுக்கு.


"ஏதாவது பண்ணிட்டானா என்னை.?" தயங்கி கேட்டாள்.


"ஒன்னும் ஆகல. நான் ஆக விடல.. பயப்படாதே.." அவளின் தலையில் வருடி‌ தந்து விட்டு போனான்.


அன்றைய நாள் முழுக்க அவனே அவளை கவனித்துக் கொண்டான். பூங்கொடியை கூட அருகே நெருங்க விடவில்லை.


"நாம எங்கே மீட் பண்ணோம்.? எப்படி லவ் பண்ணோம்.?" சந்தேகமாக கேட்டாள் செல்லா.


"நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது தாஜ்மகால் நிழல்ல நீ நின்னுட்டு இருந்த. பார்த்த செகண்ட் லவ்வு. ப்ரபோஸ் பண்ணேன். ஒரு வாரம் கழிச்சி நீ ஓகே சொன்ன. உன் அண்ணன் சம்மதத்தோடு நமக்கு கல்யாணம் ஆச்சி. இந்த ஒரு வருசமா காதல் காதல் காதலை தவிர வேற எதுவும் இல்ல.." என்றான். (பயபுள்ள எதிர்கால கதாசிரியர் போல)


செல்லாவுக்கு அவன் சொன்னதில் எந்த சந்தேகமும் வரவில்லை. முழுமையாக நம்பிக் கொண்டாள். வீட்டில் அவனும் அவளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிறைய இருந்தன.


"என் அப்பா அம்மா எங்கே?" யோசித்து விட்டுக் கேட்டாள்.


"உனக்கு அண்ணன் மட்டும்தான். இந்தியாவுல இருந்து வந்துட்டு இருக்கான்.." என்று அடுத்த பொய்யை சொன்னான்.


"என் பேர்.."


"செல்லா.."


"பழங்காலத்து பேரா இருக்கு.." என்றவளை கண்டு வர இருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். அவளின் உண்மையான பெயரை சொல்லி இருந்தால் இன்னும் எத்தனை கால பழைய பெயர் என்று நினைத்திருப்பாளோ என்று தோன்றியது.


இரவில் அவளின் தோள் தட்டி உறங்க சொன்னான்.


அவனின் அருகாமை எந்தவித சந்தேகத்தையோ, நெருடலையோ தரவில்லை. அவன் விலகி அமர்ந்திருந்ததுதான் மனதுக்கு ஏமாற்றமாக இருந்தது. 


"நீங்க தூங்கலையா.?" 


"உன்னை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு.." 


"பக்கத்துல படுத்துட்டு பாருங்களேன்.." 


ஆச்சரியத்தோடு அவளை பார்த்தவன் "உனக்கு ஓகேவா? நான் உனக்கு பக்கத்துல தூங்கலாமா.? நான் கூட பர்ஸ்ட்ல இருந்து உன்னை லவ் பண்ணணுமோன்னு நினைச்சேன்.." என்றான் சோகத்தோடு.


"இல்ல.. இங்கே பீலாகுது.." தன் இதயத்தின் மீது கை வைத்து சொன்னாள்.


கண்கள் பனித்தது அவனுக்கு. "உன் இதயத்துக்கு தெரிஞ்சிதான் இருக்கும். உன் உடம்புக்கும் கூட தெரிஞ்சிதான் இருக்கும். ஆனா உன் பிடிவாதம், திமிருக்கு தெரியணுமே.!" அவளின் காதுகளுக்கு தன் வார்த்தைகள் எட்டாத மாதிரி முனகியவன் தலையணையில் விழுந்தான். அவளை அணைத்தான்.


"சாரி என்னால ஹக் பண்ண முடியல. அந்த பக்கம் திரும்பினா காயம் வலிக்கும்.." தலையை தொட்டுக் காட்டினாள்.


"நோ பேபி.. பீல் பண்ணாத.. உனக்கும் சேர்த்து ஹக் பண்ணதானே அங்கிள் இருக்கேன்.." என்றவன் வார்த்தையை விட்ட பிறகே நெற்றியில் அடித்துக் கொண்டான்.


கலகலவென நகைத்தாள் செல்லா. "அங்கிள் கேரக்டராவே மாறிட்டிங்க போல.." 


"என்ன செய்ய.? இத்தனை மாசமா நீ பண்ண டார்ச்சர் அப்படி.. ஒருநாளைக்கு மூனு கிலோ ஐஸ்கிரீம் சாப்பிடுவ.." அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தவள் அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.


"என்னாச்சி செல்லா.?" பதில் சொல்லாமல் இறங்கி ஓடினாள். 


நிலை கண்ணாடியின் முன் நின்றாள். புகைப்படத்தில் இருந்ததை விட அழகாகதான் இருந்தாள். ஆனால் இந்த உடம்பு அவளுக்கு பிடிக்கவில்லை.


"நான் குண்டா இருக்கேன் இல்லையா.?" அவன் புறம் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.


"லைட்டா.. பரவால்ல.. இனி ஐஸ்கிரீம் சாப்பிட மாட்ட. அதனால நார்மலுக்கு வந்துடுவ.. எனக்கும் தூக்கும்போது கை வலிக்காது.." கையை மடக்கி நிமிர்த்தியபடி சொன்னான்.


"ஒரு வாரத்துல ஸ்லிம் ஆகிடணும்.." என்று சொல்லியபடி திரும்பி வந்தாள்.


வெகு நாட்களுக்கு பிறகு பூரண திருப்தியாக உறங்கினான் சூர்யா. 


காலையில் செல்லா கண் விழித்தபோது எதிரில் நின்று அவளையே வெறித்துக் கொண்டிருந்தான் சூர்யா. அவனின் பார்வையில் முகம் சிவந்தவள் "ஏன் இப்படி பார்க்கறிங்க.?" எனக் கேட்டாள்.


"காரணத்தை நேத்தே சொல்லிட்டேன்.." 


அவள் குளித்து விட்டு டவலோடு வெளியே வந்தபோது சூர்யா அலுவலகம் செல்ல தன் தலையை வாரிக் கொண்டிருந்தான். குளியலறையிலிருந்து வந்தவளை கண்டு சீப்பு கை நழுவி போனது. 


"டிரெஸ் எடுத்துக்காம போயிட்டேன். என் டிரெஸ்ஸெல்லாம் எங்கே இருக்கு.?" 


அலமாரியை கை காட்டினான்.


"த..தலை நனைச்சதா.?"


தொட்டுப் பார்த்தாள். "இல்ல சூர்யா.." 


அலமாரியில் இருந்தது அத்தனையும் மாடர்ன் உடைகளாகவே இருந்தன. கொஞ்சமாக குழந்தைதனமான உடைகளும், சில கண்டாங்கி சேலைகளும் இருந்தன.


"மாடர்ன் சேரி ஒன்னு கூட காணம்.." 


அவளருகே வந்தவன் "சாரி.. இதெல்லாம் நானே ஆர்டர் பண்ணது.. உனக்கு சேலைதான் பிடிக்கும்ன்னு தெரியாது. நான் ஆர்டர் பண்ணிடுறேன். ஒருநாளைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க.." என்றான்.


அவளின் தோளில் இருந்த நீர் திவலைகள் அவனை உஷ்ணமாக்கிக் கொண்டிருந்தன.


சூர்யா பெருமூச்சோடு ஒரு செட் உடையை எடுத்து தந்தான். அங்கிருந்து சென்றவனை கைப்பிடித்து நிறுத்தினாள். "மார்னிங் கிஸ் கேட்க நினைச்சேன். ஆனா நீங்க ஏதாவது நினைப்பிங்களோன்னு விட்டுட்டேன். இப்ப பல் விளக்கிட்டேன். இப்ப கிஸ்.." தன் இதழ் மேல் வந்து மோதிய அவனின் இதழ்களால் மேலே பேசுவதை நிறுத்தி விட்டாள்.


'மண்டையில் அடிப்பட்டதுல பயப்புள்ளைக்கு என் மேல ஸ்பெஷல் லவ் வந்துடுச்சி போல.. தேங்க்ஸ் ஆண்டவா..' முன் எப்போதையும் விட அதிகமாக இனித்தது இந்த முத்தம். அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பதே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.


முத்தமிட்டுக் கொண்டிருந்தவனின் கரம் அவளின் டவலை கழட்ட இருந்த நேரத்தில் "ஏஞ்சல்.." என்ற குரல் ஒன்றுக் கேட்டது. 


இருவரும் பதறி விலகினர். சூர்யா எரிச்சல் மறைத்து திரும்பினான். ஆனால் அவன் முகத்தில் இருந்த எரிச்சல் அறை வாசலில் நின்றிருந்த யஷ்வந்தின் பார்வைக்கு தெளிவாக விழுந்து விட்டது.


"சாரி சாரி.. நான் டிஸ்டர்ப் பண்ண நினைக்கல.." அங்கிருந்து திரும்பி ஓடினான் யஷ்வந்த்.


"அது.."


"உன் அண்ணன்.." பற்களை கடித்தபடி சொன்னவன் "சரியான கரடி.." என்றபடியே வெளியே நடந்தான்.


செல்லா ஹாலுக்கு வந்ததும் எழுந்தோடி வந்து அணைத்துக் கொண்டான் யஷ்வந்த்.


"எங்கே பழசை மறந்து பாப்பாவாவே இருந்துடுவியோன்னு பயந்துட்டேன்.." 


"இப்பவும் பழசை மறந்துட்டா யஷூ.. ஆனா வயசுக்கேத்த மாதிரி மூளை வேலை செய்ய ஆரம்பிச்சி இருக்கு.." பூங்கொடி விளக்கினாள்.


"ஓ.." என்றவனின் அருகே வந்த சூர்யா "நீ அவளோட அண்ணன்னு சொல்லி வச்சிருக்கேன்.." என்று காதோடு கிசுகிசுத்தான்.


நண்பனை திரும்பிப் பார்த்து முறைத்தான்.


"டேய் பாவி.. இவ்வளவு நேரம் பக்கத்துலதானே உட்கார்ந்திருந்த. அப்ப சொல்லி இருக்க‌ வேண்டியதுதானே.?" 


"ஜாரி. மறந்துட்டேன்.." என்றபடியே நகர்ந்துக் கொண்டான்.


"அண்ணா.. நல்லா இருக்கிங்களா.?" எனக் கேட்டவளை கண்டு பல் இளித்தான்.


"யஷூன்னே கூப்பிடு.." என்றான்.


"ஓகே யஷூ.."


"ஆத்தி.. சொன்ன உடனே கேட்டுக்கிட்டா.? என் ஏஞ்சல்தானா இது.?" நண்பனை திரும்பிப் பார்த்து கேட்டான்.


"அவளேதான். இப்பதான் கரெக்டா இருக்கா. நீ குட்டையை குழப்பி விடாதே.. இவளுக்காக ரொம்ப பீல் பண்றியேன்னுதான் நேர்லயே வர சொன்னேன். இனியாவது உன் லைப் நல்ல பாதையில் போனா சரி.." என்றான் சூர்யா. தன் காதலியின் காதல் அவதாரம் மட்டுமே கண்டவன் இப்படி சொல்லி‌ விட்டான். அவளை பற்றி எப்போது முழுதாக அறிந்துக் கொள்வானோ?


"ஹாஸ்பிட்டல் செக்கப் போகலாம். வரியா யவனா.?" அழைத்தாள் தாரணி.


"இதோ கிளம்புறேன்.." தயாராக சென்றாள்.


தாரணி சமையலறைக்கு சென்றாள். யவனா உடைகளை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளியலறைக்கு நடந்தாள்.


"ஏய்.." வருணின் அதட்டலில் பயந்து நின்றாள்.


திரும்பியவளின் அருகே வந்தவன் "எனக்கு வேலை இருக்கு. நான் சிட்டிக்கு போறேன். நான் திரும்பி வரும் முன்னாடி நீ இங்கிருந்து கிளம்பிடணும். நான் திரும்பி வரும்போது நீ இங்கே இருந்தா உன்னை‌ கொன்னுடுவேன்.." என்று மிரட்டி விட்டு போனான்.


யவனாவுக்கு கை கால்கள் நடுங்கியது. அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள். அவன் ஏன் மிரட்டி சென்றான் என்று புரியவேயில்லை.


"யவனா ரெடியாகிட்டியா.?" தாரணியின் குரல் கேட்ட பிறகே தனது எண்ண சிறையிலிருந்து வெளியே வந்தாள்.


"டைம் ஆகிடுச்சி யவனா.." என்றாள் சோகமாக.


நிமிர்ந்த யவனா "நீங்க போய்ட்டு வாங்க அண்ணி.‌ நான் இங்கேயே இருக்கேன். லேசா தலைவலி.."


யவனாவின் தலையை தொட்டுப் பார்த்தாள்.


"சரி நீ ரெஸ்ட் எடு.. நான் வரும்போது டேப்ளட் வாங்கிட்டு வரேன்.. கிச்சன்ல சாப்பாடு இருக்கு. மாதுளை ஜூஸ் ப்ரிட்ஜ்ல இருக்கு.."  தாரணி தன் அம்மாவோடு கிளம்பிப் போனாள்.


யவனா தலையை பிடித்தபடியே எழுந்து நின்றாள். என்ன செய்வதென்று ஒன்றுமே புரியவில்லை. வருணுக்கு தன் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு என்றும் புரியவில்லை.


வீட்டை கவனித்துக் கொண்டிருந்த பாடிகார்ட் சுரேஷ் தாரணியை தொடர்ந்து கிளம்பி விட்டான்.


தனியாக இருந்த வீட்டில் கொஞ்சம் பயத்தோடுதான் இருந்தாள் யவனா. தர்ஷினிக்கு பேசலாம் என்று அழைத்தாள்.


நலம் விசாரிப்பு முடிந்த பிறகு "அந்த வீட்டுல ஏன் இருக்க யவனா? அவன் என் கூட பிறந்தவன். ஆனா நானே அசால்டா விட்டுட்டேன். நீ ஏன் அவங்களை சேர்த்து வைக்க டிரை பண்ணிட்டு இருக்க.?" என்று புரியாமல் கேட்டாள்.


"கூட பிறந்ததால மட்டுமே எல்லோருமே சகோதரத்துவத்தை உணர்ந்துடறது கிடையாது. யஷூவை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பர்ஸ்ட் ஹீரோ அவன். அவன் என் லைஃப்ல எத்தனை விசயங்களை கத்து தந்திருக்கான்னு உனக்கு தெரியாது. என்னோட கஷ்டமான சூழல்ல துணை இருந்திருக்கான். அவனுக்காக நான் இதை கூட செய்யலன்னாதான் ஆச்சரியம்.." 


தர்ஷினி சிரித்தாள். "என்னவோ பண்ணு.." என்றுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.


யவனா தலையை பிடித்தபடி எழுந்தாள். சுரேஷை அழைத்து தன் பிரச்சனையை பற்றி சொல்லலாம் என்று நினைத்து வெளியே நடந்தாள். சுரேஷ் வருணை மிரட்டி விட்டானென்றால் அதன்பிறகு வருணின் தொந்தரவு தனக்கு இருக்காது என்று நினைத்தாள். வாசலுக்கு வந்து நின்றாள். மூங்கில் காட்டின் திசை பார்த்தாள். சுரேஷ் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லை.


"யவனா.." 


அழைத்தவரின்‌ குரலில் திரும்பினாள்.


"இங்கே வெயில்ல என்னம்மா பண்ற.?" எனக் கேட்டார் தனபால்.


"சும்மாதான் அங்கிள்.." உள்ளே நடந்தவரின் துணையாக நடந்தாள்.


அவருக்கான மதிய உணவை பரிமாறினாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். அவரின் கண்கள் போக கூடாத இடத்திலெல்லாம்‌ போய் கொண்டிருந்ததை கவனிக்க தவறி‌ விட்டாள். அவளின் மனம் முழுக்க வருணின் நினைவாகவே இருந்தது.


அவர் உண்டு முடித்ததும் இரண்டு டம்ளர்களில் குளிர்பானத்தை எடுத்து வந்தாள்.


"மாதுளை ஜூஸ் அங்கிள்.." 


"எல்லோரும் எங்கே.?" தாமதமாக கேட்டார்.


"ஆன்டியும் அண்ணியும்‌ ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க. வருண் எங்கோ வெளியே போயிருக்காரு.." அவனின் பெயரை சொல்லவே பிடிக்கவில்லை அவளுக்கு.


"கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வரியா.?" 


சரியென தலையசைத்து விட்டு உள்ளே போனாள். தனது பாக்கெட்டிலிருந்த மாத்திரை அட்டையை எடுத்த தனபால் குளிர்பானத்தில் ஒற்றை மாத்திரையை மட்டும் கலக்கினார்.


அவருக்கு சுடு தண்ணீரை தந்து விட்டு குளிர்பானத்தை அருந்தியது மட்டும்தான் யவனாவின் நினைவில் இருந்தது.


அவள் மறுபடியும் கண் விழித்தபோது அவளின் உடைகளோடு அவளை நெருங்கிக் கொண்டிருந்தான் வருண். தன் வெற்று மேனி கண்டு பயந்தவள் அருகே இருந்த போர்வையை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள்.


வருண் முகத்தில் சோர்வு இருந்தது.


"ஹவ் டேர் யூ.." பற்களை கடித்தபடி அவனை முறைத்தாள். கண்ணீர் கொட்டியது.


ஏதோ சொல்ல வந்தான்.


"எதுவும் பேசாதிங்க. என் பக்கத்துல வராதிங்க.." என்றவள் அருகே இருந்த மேஜையின் மேலிருந்த கிண்ணத்தை எடுத்து அவன் மீது வீசினாள். காரம் அதிகம் சேர்க்கப்பட்ட தூள் மிக்சர் அவனின் முகம் முழுக்க சிதறியது.


"என்னை என்ன பண்ண நீ?" அழுகையோடு கேட்டாள். உடம்பு மொத்தமும் வலித்தது அவளுக்கு.


"நான் எதுவும் பண்ணல.." என்றவன் முகத்தை துடைத்தான். அவளின் உடைகளை அவளிடமே வீசினான்.


"என் அம்மாவும் தாரணியும் வரும் முன்னாடி டிரெஸ்ஸை போட்டுட்டு வெளியே வா.." என்றவன் வெளியே நடந்தான்.


தனபால் தன் முன் நின்றிருந்தவனை பயத்தோடு பார்த்தார். "என்னை விட்டுடு.." கெஞ்சினார். ஆனாலும் துப்பாக்கி குண்டு நேராக வந்து அவரின் நெற்றியில் துளைத்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (எபி க்யூட்டா இருந்தது இல்ல?😜)






Post a Comment

1 Comments

  1. ஐயோ என்ன இப்பிடி ??? யவனா பாவம்

    ReplyDelete