புவின் பல நாடுகளில் தேடப்படும் தீவிரவாதி. வெடிக்குண்டுகள் வெடிக்கையில் வரும் பேரிரைச்சல் அவனுக்கு மெல்லிசை. பல நாட்டு மக்களின் அழு குரல்களும் அவனுக்கான சங்கீதம். உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாத கும்பலில் முக்கிய உறுப்பினன் அவன்.
உலகத்தின் மற்ற நாட்டு மக்களை சுட்டு கொல்லுகையில் அவர்களின் உயிரை பறித்து ஆனந்த தாண்டவம் ஆடியவன் தன் சொந்த நாட்டு மக்களையே கொல்ல சொல்லி பணி தந்தபோது அதை திட்டமிட்டது போலவே முடித்தானா.?
குழலி வாழ ஆசைப்பட்டது அமைதியான ஒரு வாழ்க்கை. மௌனங்களை விரும்புவள் அவள். தென்றல் வீசுகையில் புது ராகம் அறிபவள். பூக்கடை ஒன்றை நடத்தி வந்தவளுக்கு அந்த பூக்களை விடவும் மென்மையான மனம். அவளின் ஒரே குறை.. கற்பனை கதைகளை நிஜத்தில் நம்பியது. ராஜ குமாரன் வந்து தன் கை பிடிப்பான் என நம்பியிருந்தவள் புவினையே அந்த ராஜகுமாரனாய் நம்பியது சரியா.?
காதல் போர்க்களத்திலும் உருவாகும். ஆனால் கொடூர குணம் கொண்ட புவினின் மனதில் தோன்றுமா.? அப்படி தோன்றினாலும் லாபம் என்ன.?
வாழ்க்கை எப்போதும் கற்பனை அல்ல. அந்த நிதர்சனம் குழலிக்கு எப்போது தெரிய வரும்.? அவளின் நேசமும் பாசமும் ஒரு கொலைக்காரனுக்கானது என்பதை அறிய வந்தால் என்ன செய்வாள் அவள்.?
குழலி நம்புவதை போல காதல் அனைத்தையும் மாற்றுமா.? தலை கீழாக உலகத்தையே புரட்டுமா.? குழலியின் வாழ்வும் புவினின் வாழ்வும் காதலால் மாறுமா.? இல்லை தீரா பசிக் கொண்ட எமக்கிராதர்கள் மத்தியில் இறப்பு வந்து அணைக்குமா.?
கதையின் முதல் எபிசோட் விரைவில் பதிவிடப்படும் நட்புக்களே..
சோக செய்தி என்னன்னா இது ஒரு டிராஜடி டைப். டிராஜடி பிடிக்காதவங்க இந்த பாகத்தை மட்டும் ஸ்கிப் பண்ணிக்கும்படி கேட்டுக்கறேன்.
இந்த கதை மூன்று பாகங்களை உள்ளடக்கியது. முதல் பாகம் டிராஜடி. இரண்டாம் பாகம் த்ரில்லர் அன்ட் காமெடி. மூன்றாம் பாகம் சஸ்பென்ஸ் அன்ட் ஆக்சன். மூன்று பாகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததுதான். அதனால இதை படிச்சாதான் இரண்டாம் பாகம் புரியுமோன்னு கவலைப்பட வேண்டாம்.
ஏன் இதை சொல்றேன்னா எனக்கும் டிராஜடி சுத்தமா பிடிக்காது. காசு தந்து படிக்க சொன்னா கூட படிக்க மாட்டேன். ஆனாலும் நிறைய டிராஜடி ஸ்டோரிஸை நானும் கடந்துதான் வந்திருக்கேன். கதை முடிஞ்சிடும். ஆனா கதாபாத்திரங்கள் நம்மை தூங்கவே விடாது. நிறைய அழ வைக்கும். ஒரு கதையால எனக்கு காய்ச்சல் கூட வந்துடுச்சி. ஏன்டா கதையை படிச்சோம் பார்த்தோம்ன்னு கடுப்பா இருக்கும். கதை எழுதியவங்களுக்கு சாபம் வைக்க தோணும். ஆனா இந்த இடத்துலதான் நான் வாசகர் இல்லையே. அது மட்டுமில்லாம இந்த பாகத்தை நான் எழுதினாதான் என்னால அடுத்த பாகத்துக்குள்ள போக முடியும். அதனாலதான் எழுதுறேன். திடீர்ன்னு மனசு மாறி டிராஜடி டிராக்கை மாத்தினாலும் மாத்திடலாம். ஏனா என் எழுத்தை வழி நடத்துவது நீங்கதானே. பார்க்கலாம் கதை எப்படி போகுதுன்னு.?
மறக்காம உங்க ஆதரவை இந்த கதைக்கும் கொடுங்க.. வோட் கமெண்டெல்லாம் வாரி வழங்குங்க.
0 Comments