Advertisement

Responsive Advertisement

என் வாழ்வின் பாதி நீ! உன் மரணத்தின் மீதி நான்!!

 



சத்யா இறந்துப் போனாள்ன்னு உங்களுக்கு தெரியும். ஆனா அவ அடுத்து என்ன செஞ்சான்னு உங்களுக்குத் தெரியாது. அவ எத்தனை முறை இறந்தாள்ன்னும் உங்களுக்கு தெரியாது.

சத்யா நல்லவள்தான். ஆனால் சயா நல்லவள் அல்ல. 

வினீத் நூறு சதவீதம் நல்லவன்தான். ஆனால் வினீ நல்லவன் அல்ல. 

நீங்கள் நினைப்பீர்கள் சத்யா நல் வாழ்வு வாழ்வாள் என்று. வினீத்தின் வாழ்வில் நடப்பத்தெல்லாம் நல்லதே என்று. ஆனால் அவர்கள் வாழ்க்கை ரங்க ராட்டினம் போல. எப்போது எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. 

சத்யா பெண்ணாய் சில ஜென்மம் எடுத்தாள். ஆணாய் சில ஜென்மம் எடுத்தான். வினீயும் கூட அதையேதான் செய்தான். ஆனால் ஏன் இவர்கள் ஜென்மம் எடுக்க வேண்டும் என்று நமக்கல்லவா கடுப்பாகிறது!!?

ஆம்.. இது சில குட்டி கதைகள் சேர்ந்தது. ஒருவேளை நீண்ட நெடும் நாவலாகவும் இருக்கலாம். 

ஆறேழு பாகங்கள் இருக்குமோ!? "இருக்கலாம்.. ஒரே பாகமாக நீண்டும் செல்லலாம்."

திகில் கதையா? "ஆமாம்."

பேய் கதை.. "ம்ம்.. அதே!"

மறுபிறப்பு.. "நிச்சயம் உண்டு."

கொலை, கொள்ளை.. "உண்டு"

காதல்.. "அது ஏராளம்!"

மோதல்.. "அதுவும் தாராளம்!"

சஸ்பென்ஸ் அன்ட் த்ரில்லர்.. "நிறைய உண்டு"

மிஸ்ட்ரி, அட்வென்ஜர்.. "அனைத்தும் உண்டப்பா!"

அழகான வாழ்வியல் கதையா? "..அப்படிதான் நினைக்கிறேன்."

மரணங்கள் எத்தனை? "அதன் கணக்கை எண்ணவில்லை இன்னும்!"

கண்ணீர்.. "கொஞ்சம் உண்டு."

கோபங்கள்.. "எக்கச்சக்கம் உண்டு."

இக்கதை படிக்க ஏதும் விதி உண்டா!? "..இருக்கிறது. அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்க கூடாது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க கூடாது. வாழ்க்கையை நேசிக்க வேண்டும். அடுத்த நொடியை பற்றி கவலைப்பட கூடாது. இது கதையா இல்லை.. எனது.. உனது.. நமது.. வாழ்க்கையா என்ற கேள்வியை எப்போதும் கேட்கவே கூடாது. சயா நானா நீயா என்றும் கேட்க கூடாது. வினீ நீயா நானா என்றும் யோசிக்கவே கூடாது." 

இதை படித்தால் பைத்தியம் பிடிக்குமா? "..அப்படியும் கூட நடக்கலாம். ஆனால் எழுதும் எனக்கு பைத்தியம் பிடிக்காவிட்டால் படிப்போருக்கும் பைத்தியம் பிடிக்காது என்று மட்டும் நம்புகிறேன்."

நான்தான் வினீ, நான்தான் சயா என்று யாராவது வந்தால்..?? "ஒரு பூங்கொத்தும், விஷம் கலந்த தேனீர் ஒரு கோப்பையும் பரிசென தரப்படும்." 

இவன் நாயகனா வில்லனா? "இரண்டும்."

நாயகியா தேவதையா இவள்? "ஹாஹாஹா.. நிச்சயம் தேவதை அல்ல. சாத்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்."

கதை எப்போது‌ பதிவிடப்படும். "எனது மனநிலையை பொறுத்து."

தினசரி அப்டேட் வருமா? "இல்லை. கதையும் கிரேஸினெஸ் நிரம்பியது. கதையின் அப்டேட்டும் கிரேஸினெஸ் நிரம்பியது." 

எந்த யூடியிலாவது போரடிக்குமா? "நோ. கடுப்பும், எரிச்சலும், கோபமும், காதலும், சிரிப்பும், அழுகையும் வரலாம். ஆனால் என் கிரேஸி ரீடர்ஸ்க்கு இதைப் படிக்கையில் சலிப்பு வராது."

யாருக்கு இந்த கதை!? "யாருக்கு தெரியும்!? எனது வாசகர்களுக்காக.. எனது வருங்கால எதிரிகளுக்காக.. எனது காதலன் காதலிகளுக்காக.. எனது சயா, வினீக்காக.. உனக்காகவும் கூட இருக்கலாம்."

இதை நம்பி பிரதிலிபி சப்ஸ்கிரைப் செய்யலாமா?  "வேண்டாம். சப்ஸ்கிரிப்சனில் சேர்த்து வைப்பேன். ஆனால் யூடி எப்போது வருமென்று தெரியாது. அதனால் இதை நம்பி சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்."

கதை எங்கெல்லாம் பதிவிடப்படும்?  "நான் எழுதும் அனைத்து தளங்களிலும். பிரதிலிபியில் மட்டும் ஐந்து நாட்கள் முன்னால்" 

இக்கதை முடிகையில் என்னாகும்? "அதை படிப்போர்தான் சொல்ல வேண்டும்!"

என் வாழ்வின் பாதி நீ. உன் மரணத்தின் மீதி நான். இக்கதையை மழைநிலா மின்னிதழில் எழுதலாமென்றுதான் இருந்தேன். முடித்த பிறகு இங்கே முழுநாவலாக பதிப்பிக்க இருந்தேன். ஆனால் அங்கே டிராப் ஆயிடுச்சி. அதனால இப்போது இங்கே எழுதப் போறேன். இக்கதைக்காக காத்திருந்தவர்களுக்கு எனது நன்றிகள். 

இக்கதையில் உங்கள் மனம் புண்பட்டால் நீங்கள் தாராளமாக என்னைத் திட்டலாம். கடுப்பு ஓவராகினால் கமெண்டில் பொங்கல் வைக்கலாம். யாரையேனும் நேசிக்க கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு ஹார்ட் எமோஜியை அனுப்பி வைக்கலாம். தப்பி தவறி நீங்கள் வினீயையோ சயாவையோ காதலித்து விட்டால் என்னிடம் வந்து அழுது வைக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.. 

நன்றிகளுடன் உங்கள் CRAZY WRITER..  

வாழ்வு 1.1

வாழ்வு 1.2

வாழ்வு 1.3

வாழ்வு 1.4

வாழ்வு 1.5

வாழ்வு 1.6

வாழ்வு 1.7

வாழ்வு 1.8

வாழ்வு 1.9

வாழ்வு 2.0

வாழ்வு 2.1

வாழ்வு 2.2

வாழ்வு 2.3

வாழ்வு 2.4

வாழ்வு 2.5

வாழ்வு 2.6

வாழ்வு 2.7

வாழ்வு 2.8

வாழ்வு 2.9

வாழ்வு 3.0

வாழ்வு 3.1














Post a Comment

1 Comments

  1. தங்களின் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது

    ReplyDelete